Azhaithavar Unnai Nadathiduvar
அழைத்தவர் உன்னை நடத்திடுவார்
கைவிடாமல் (புதிய ஆண்டில்) உன்னை உயர்த்திடுவார்
உன் குறைகளை கண்டு கைவிடுவதில்லை
உன் மீறுதலை கண்டு உன்னை
வெறுக்க வில்லை
தடுமாறும் நேரம் தாங்கினாரே
அழைத்தவர் உன்னை மறக்கவில்லை
அழைத்தவர் என்றும் மறப்பதில்லை – அழைத்தவர் உன்னை
1. சாம்பலை சிங்காரமாய்
மாற்றிடும் தெய்வம் உன்னையும்
புது ஆண்டில் நிச்சயம் உயர்த்திடுவார் – 2
கண்ணீரும் போதும்
உன் கவலையும் போதும்
என் இயேசு இருக்கின்றார்
உன்னை கரை சேர்த்திடுவார் – அழைத்தவர் உன்னை
2. துன்பத்தை கண்ட வருடத்திற்கு ( நாட்களுக்கு )நிகராக
ஷேமத்தை தந்து நிச்சயம் நடத்திடுவார்
அழுதது போதும் உன் புலம்பலும் போதும்
என் இயேசு இருக்கிறார்
உன்னை கரை சேர்த்திடுவார் – அழைத்தவர் உன்னை