All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Pothumaravare Puthumaianavare – போதுமானவரே

Pothumaravare Puthumaianavare
போதுமானவரே புதுமையானவரே
பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே
ஆராதனை(2) ஆயுளெல்லாம் ஆராதனை
1. எனக்காக தண்டிக்கப்பட்டடீரே
அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
எனக்காக காயப்பட்டீரே
அதனால் நான் சுகம் பெற்றுக்கொண்டேன்
2. பாவங்கள் சுமந்ததனால் – நான்
நீதிமானாய் மாற்றப்பட்டேன்
மரணத்தை ஏற்றுக் கொண்டதால்-நித்திய
ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா
3. எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
அதனால் நான் ஏற்றுக்கொள்ளப்பட்டேன்
எனக்காக அவமானமடைந்து – உம்
மகிமையிலே பங்குபெறச் செய்தீர்
4. சிலுவையிலே ஏழ்மையானதால் – என்னை
செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே-நீர்
சாபங்களை சுமந்து கொண்டதால்-நான்
ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன்

Nanmaigalin Nayagane – நன்மைகளின் நாயகனே

Nanmaigalin Nayagane
நன்மைகளின் நாயகனே
நன்றி சொல்லி மகிழ்கிறேன்
உண்மையுள்ள தெய்வமே, உயிரோடு கலந்தவரே
நன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயா
உண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே

1. கடந்த ஆண்டெல்லாம்
கண்மணி போல் காத்தீரே
புதிய (ஆண்டு) நாள் தந்து
புதியன (புதுமைகள்) செய்பவரே

2. உமக்காய் காத்திருந்து
புதுபெலன் அடைகின்றேன்
உம்மையே பற்றிக் கொண்டு
புதிய மனுஷனானேன்

3. கர்த்தர் கரம் என்னோடு
இருப்பதை உணர வைத்தீர்
அநேகர் அறிக்கையிட
அப்பா நீர் கிருபை செய்தீர்

4. எனக்கு எதிரானோர்
என் சார்பில் வரவைத்தீர்
சமாதானம் செய்ய வைத்தீர் சர்வ வல்லவரே

5. எப்சிபா என்றழைத்து
என்மேலே பிரியமானீர்
பியூலா என்றழைத்து மணமகளாக்கிவிட்டீர்

6. ஏசேக்கு, சித்னா இன்றோடு முடிந்தது
ரெகோபோத் தொடங்கியது தடைகளும் விலகியது

En Uyirae Andavarai – என் உயிரே

En Uyirae Andavarai
என் உயிரே ஆண்டவரைப் போற்று
முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று
அவர் செய்த சகல உபகாரங்களை நீ
ஒருநாளும் மறவாதே – ஒருபோதும் மறவாதே
1. குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்
நோய்களை குணமாக்கி நடத்துகிறார்
2. படுகுழியினின்று விடுவிக்கிறார்
இரக்கத்தை முடியாக சூட்டுகிறார்
3. வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
நிறைவாக்க நம்மைநடத்திச் செல்வார்
4. கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார்
காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார்
5. மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காணச் செய்வார்
6. இரக்கமும் உருக்கமும் நீடியசாந்தமும்
மிகுந்த கிருபையும் உள்ளவரே
7. எப்போதும் கடிந்து கொள்பவரல்ல
என்றென்றும் கோபம் கொள்பவரல்ல
8. பாவங்களுக்கேற்ப நம்மை நடத்துவதில்லை
குற்றங்களுக்கேற்ப நம்மை தண்டிப்பதில்லை

Nan Unaku Pothithu Nadakum – நான் உனக்கு போதித்து

Nan Unaku Pothithu Nadakum
நான் உனக்கு போதித்து
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே
உன்மேல் கண் வைத்து
ஆலோசனை சொல்லுவேன்
அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு
1. ஈசாக்கு விதை விதைத்து
நூறுமடங்கு அறுவடை செய்தான்
உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அதுபோல
2. ஏசேக்கு சித்னா
இன்றோடு முடிந்தது மகனே(ளே)
ரெகோபோத் தொடங்கிவிட்டது -உனக்கு
3. தேசத்தில் பலுகும்படி
உனக்கு இடம் உண்டாக்கினேன்
ரெகோபோத் உனக்கு உண்டு – இதுமுதல்
4. கர்த்தர் நிச்சயமாய்
உன்னோடு இருக்கிறார் என்று
அநேகர் அறிந்து கொள்வார்கள்-இதுமுதல்
(அறிக்கை செய்வார்கள்)
5. கலங்காதே நான்
உன்னோடு இருக்கிறேன் மகனே
பலுகிப் பெருகிடுவார் – தேசத்தில்
6. உனக்கு எதிரானோர்
உன் சார்பில் வருவார்கள்
சமாதானம் செய்வார்கள் – உன்னோடு

Thanirgal Kadakum Pothu – தண்ணீர்கள்

Thanirgal Kadakum Pothu
தண்ணீர்கள் கடக்கும்போது என்னோடு இருக்கிறீர்
அக்கினியில் நடக்கும்போது கூடவே வருகின்றீர்…
மூழ்கிப் போவதில்லை நான் எரிந்து போவதில்லை
1. என்மேல் அன்புகூர்ந்து
எனக்காய் இரத்தம் சிந்தி
என் பாவம் கழுவி விட்டீரே
எனக்கு விடுதலை தந்து விட்டீரே
நன்றி ஐயா, நன்றி ஐயா
2. உமது பார்வையிலே
விலையேற பெற்றவன் நான்
மதிப்பிற்கு உரியவன் நானே – இன்று
மகிழ்வுடன் நடனமாடுவேன்
3. பாலைவன வாழ்க்கையிலே
பாதைகள் காணச் செய்தீர்
ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம்
ஆபத்திலே பாடி மகிழச் செய்தீரே
4. பெற்ற தாய் தனது பிள்ளையை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லையே – உமது
உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர்
5. என்னை படைத்தவரே உருவாக்கி மகிழ்ந்தவரே
பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே
உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே
6. என்னை மீட்கும்படி தன்னை பலியாக்கினீர்
எனக்குள் வந்து விட்டீரே
(என்னை) ஆட்கொண்டு நடத்திச் செல்வீரே

Ennai Kakavum – என்னைக் காக்கவும்

Ennai Kakavum
என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்
எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்
எனக்காய் யுத்தம் செய்து
இரட்சித்து வழி நடத்தி
என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்
1. ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்
ஏழு வழியாக துரத்திடுவீர்
2. வறட்சி காலங்களில் திருப்தியாக்கி
எலும்புகளை வலிமை ஆக்குகிறீர்
3. போரிட கைகளுக்கு பயிற்சி தந்து
விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர்
4. நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க
கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே
5. காலை தோறும் என்னை எழுப்புகிறீர்
கர்த்தர் உம் குரல் கேட்க பேசுகிறீர்
6. வற்றாத நீருற்றாய் ஓடச்செய்தீர்
வளமான தோட்டமாக மாற்றுகிறீர்

Ennai Nadathum Yesu Natha – என்னை நடத்தும்

Ennai Nadathum Yesu Natha
என்னை நடத்தும் இயேசு நாதா
உமக்கு நன்றி ஐயா
எனக்குள் வாழும் எந்தன் நேசா
உமக்கு நன்றி ஐயா
1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
அழிவில் நின்று பாதுகாத்தீர் உமக்கு நன்றி ஐயா
2. தேடி வந்தீர் பாட வைத்தீர் உமக்கு நன்றி ஐயா
ஓடி ஓடி உழைக்கச் செய்தீர் உமக்கு நன்றி ஐயா
3. பாவமில்லா தூயவாழ்வு வாழச் செய்பவரே
பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி
மலரச் செய்பவரே
4. துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர் உமக்கு நன்றி ஐயா
புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
5. கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
6. உலகம் மாயை எல்லாம் மாயை
உணர்ந்தேன் உணர்ந்துக் கொண்டேன்
உறவு பாசம் குப்பையென்றறிந்து
உம்மையே பின் தொடர்ந்தேன்

Vallamaiyin Aaviyanavar – வல்லமையின் ஆவியானவர்

Vallamaiyin Aaviyanavar

வல்லமையின் ஆவியானவர்
என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்
பொல்லாத சாத்தானை
ஒரு சொல்லாலே விரட்டி விட்டேன் – 2

1. பவர் ஆவி எனக்குள்ளே
அந்த பய ஆவி அணுகுவதில்லை – 2
அன்பின் ஆவி எனக்குள்ளே
நான் அகற்றிவிட்டேன் கசப்புகளை – 2 (…வல்லமையின்)

2. கட்டுப்பாட்டின் ஆவியானவர்
என்னை கன்ட்ரோல் பண்ணி நடத்துகிறார் – 2
இஷ்டம் போல அலைவதில்லை
அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான் – 2 (…வல்லமையின்)

3. கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
தெருத்தெருவா மணம் வீசுவேன் – 2
மீட்புபெறும் அனைவருக்கும்
நான் வாழ்வளிக்கும் வாசனையானேன் – 2 (…வல்லமையின்)

4. உலகத்திற்கு வெளிச்சம் நான்
ஊரெல்லாம் டார்ச் அடிப்பேன் – 2
உப்பாக பரவிடுவேன்
நான் எப்போதும் சுவை தருவேன் – 2 (…வல்லமையின்)

5. கர்த்தரின் முத்திரை என் மேல்
நான் முற்றிலும் அவருக்குச் சொந்தம் – 2
அச்சாரமாய் ஆவியானவர்
நான் நிச்சயமாய் மீட்பு பெறுவேன் – 2 (…வல்லமையின்)

6. தேவனாலே பிறந்தவன் நான்
எந்த பாவமும் செய்வதில்லை – 2
கர்த்தரே பாதுகாக்கிறார்
தீயோன் என்னை தீண்டுவதில்லை – 2 (…வல்லமையின்)

7. கடவுள் எனக்கு வாக்களித்ததை
நிறைவேற்ற வல்லவரென்று – 2
நிச்சயமாய் நம்பினதாலே
நான் நம்பிக்கையில் வல்லவனானேன் (வளர்கின்றேன்) – 2 (…வல்லமையின்)

Vallamaiyin Aaviyaanavar
Ennul Vanthuvitta Kaaranaththinaal
Pollaatha Saaththaanai
Oru Sollaale Viratti Vitten – 2

1. Power Aavi Enakkulle
Andha Baya Aavi Anukuvathillai – 2
Anbin Aavi Enakkulle
Naan Akattrivitten Kasappukalai – 2 (…Vallamaiyin)

2. Kattuppaattin Aaviyaanavar
Ennai Control Panni Nadaththukiraar – 2
Ishtam Pola Alaivathillai
Avar Siththam Seithu Vaazhbavan Naan – 2 (…Vallamaiyin)

3. Kristhuvukkul Narumanam Naan
Theruththeruvaa Manam Veesuven – 2
Meetpu Perum Anaivarukkum
Naan Vaazhvalikkum Vaasanaiyaanen – 2 (…Vallamaiyin)

4. Ulakaththirku Velichcham Naan
Oorellaam Torch Adippen – 2
Uppaaga Paraviduven
Naan Eppothum Suvai Tharuven – 2 (…Vallamaiyin)

5. Karththarin Muththirai En Mel
Naan Muttrilum Avarukkuch Sontham – 2
Achchaaramaai Aaviyaanavar
Naan Nichchayamaay Meetpu Peruven – 2 (…Vallamaiyin)

6. Thevanaale Piranthavan Naan
Entha Paavamum Seyvathillai – 2
Karththare Paathukaakkiraar
Theeyon Ennai Theenduvathillai – 2 (…Vallamaiyin)

7. Kadavul Enakku Vaakkaliththathai
Niraivettra Vallavarendru – 2
Nichchayamaai Nambinathaale
Naan Nambikkaiyil Vallavanaanen (Valarkindren) – 2 (…Vallamaiyin)

Unnai Kaangiraar – உன்னைக் காண்கிறார்

Unnai Kaangiraar
உன்னைக் காண்கிறார் – உன்
கண்ணீர் துடைக்கின்றார் – இயேசு
நீ அழவேண்டாம்…அழ வேண்டாம்
அதிசயம் செய்திடுவார் -உன்னை
1. நோய்நொடியில் வாடுகின்ற
உன்னைக் காண்கிறார்
நொடிப்பொழுது சுகம் தந்து
உன்னைத் தேற்றுவார்
2. கடன் தொல்லையால் கதறுகின்ற
உன்னைக் காண்கிறார்
உடன் இருந்த நடத்திடுவார்
ஒருபோதும் கைவிடார்
3. எதிர்காற்றோடு போராட்டமா
உன்னைக் காண்கிறார்
உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார்
4. உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
உன்னை எதிர்த்து வழக்காடுவோர்
உன் சார்பில் வருவார்கள்
5. கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்கு
வெற்றி உண்டு
நறுமணம் போல் பரவிடுவோம்
நற்செய்தி முழங்குவோம்

Maranatha Yesu Natha – மாரநாதா இயேசு நாதா

Maranatha Yesu Natha
மாரநாதா…இயேசு நாதா
சீக்கிரம் வாரும் ஐயா
வாரும் நாதா இயேசு நாதா (2)
1. மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம் ஆகணுமே
விண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே
2. குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன்
சண்டைகள் பொறாமைகள்
என்றோ வெறுத்து விட்டேன்-நான்
3. பெருமை பாராட்;டுகள்
ஒரு நாளும் வேண்டாம் ஐயா
சிற்றின்பம் பணமயக்கம்
சிறிதளவும் வேண்டாம் ஐயா
4. நியமித்த ஓட்டத்திலே
நித்திய கிரீடம்தான் நிச்சயமாய்ப் பெற்றுக்
கொள்வேன்
5. ஆவியில் நிரம்பிடுவேன் அயராது ஜெபித்திடுவேன்
அப்பாவின் சுவிசேஷம் எப்போதும் முழங்கிவேன்
6. உம் முகம் பார்க்கணுமே உம் அருகில்
இருக்கணுமே
உம்பாதம் அமரணுமே உம்குரல் கேட்கணுமே