All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Alugai Seiyum Aaviyanavare – ஆளுகை செய்யும் ஆவியானவரே

Alugai Seiyum Aaviyanavare
ஆளுகை செய்யும் ஆவியானவரே
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
ஆவியானவரே-என் ஆற்றலானவரே

1. நினைவெல்லாம் உமதாகணும்
பேச்செல்லாம் உமதாகணும்
நாள் முழுதும் வழிநடத்தும்
உம் விருப்பம் செயல்படுத்தும்

2. அதிசயம் செய்பவரே
ஆறுதல் நாயகனே
காயம் கட்டும் கர்த்தாவே
கண்ணீரெல்லாம் துடைப்பவரே – என்

3. புதிதாக்கும் பரிசுத்தரே
புதுபடைப்பாய் மாற்றுமையா
உடைத்துவிடும் உருமாற்றும்
பண்படுத்தும் பயன்படுத்தும்

4. சங்கீதம் கிர்த்தனையால்
பிறரோடு பேசணுமே
எந்நேரமும் எப்போதுமே
நன்றிப் பலி செலுத்தணுமே

Aalugai seiyum Aaviyaanavarae
Baliyaai thandhaen Parisuthamaanavarae
Aaviyaanavarae en aatralaanavarae

1. Ninaivellaam umadhaaganum
Paechellaam umadhaaganum
Naal muzhudhum vazhinadathum
Um virupam seyalpaduthum

2. Adhisayam seibavarae
Aarudhal naayaganae
Kaayam kattum Karththaavae
kanneerellaam thudaipavarae – en

3. Puthidhaakkum Parisutharae
Puthupadaipaai maatrumaiyaa
Udaithuvidum urumaatrum
Panpaduthum payanpaduthum

4. Appaavai arindhidanum
Velippaadu thaarumaiyaa
Manakkannaal oli peranum
Magimaiyin achaaramae

5. Ullaana manidhanai
Vallamaiyaai balappaduthum
Anbu ondrae aanivaeraai
Adithalamaai amaindhidanum

Ungal Thukkam – உங்கள் துக்கம் சந்தோஷமாய்

Ungal Thukkam
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்
கலங்காதே மகனே, கலங்காதே மகளே
என் இயேசு கைவிடமாட்டார்

1. கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்துவிடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய் – கலங்கிடவே வேண்டாம்
2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைக்கிறார் – உன்
3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
ஒருநாளும் விடமாட்டார்
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பிச் செல்ல வழி செய்வார்
4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக்கொள்வோம்
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார் – நாம்

Pallangal Ellam Nirambida – பள்ளங்களெல்லாம் நிரம்பிட

Pallangal Ellam Nirambida
பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலகள் குன்றுகள்தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்
ராஜா வருகிறார் ஆயத்தமாவோம்(2)
இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம்

1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியல் போடப்படும்
2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே
3. அந்நாளில் வானம் வெந்து அழியும்
பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும்
4. கரையில்லாமலே குற்றமில்லாமலே
காத்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம்
5. அநுதினமும் ஜெபத்தில் விழித்தீருப்போம்
அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம்

Um Naamam Uyaranume – உம்நாமம் உயரணுமே

Um Naamam Uyaranume
உம் நாமம் உயரணுமே
உம் அரசு வரணுமே
உம் விருப்பம் நடக்கணுமே
அப்பா பிதாவே அப்பா (4)

1. அன்றாட உணவை, ஒவ்வொரு நாளும்
எனக்குத் தாரும் ஐயா..
2. பிறர்குற்றம் மன்னித்தோம், ஆதலால் எங்கள்
குறைகளை மன்னியுமே..
3. சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து
விடுதலை தாருமையா..
4. ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை
என்றென்றும் உமக்கே சொந்தம்..
5. ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும்
சமாதானம் வரணுமே..
6. ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும்
உம் வசனம் சொல்லணுமே..
7. உமக்காய் வாழணும், உம்குரல் கேட்கணும்
உம்மோடு இணையணுமே..
8. அனுதின சிலுவையை, ஆர்வமாய் சுமந்திட
கிருபை தாருமையா..
9. ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க
ஆர்வம் தாருமையா
10. என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்
இரட்சிப்பு அடையணுமே
11. அரசியல் தலைவர்கள் M.L.A., M.P.க்கள்
உம்மை அறியணுமே, உம் நாமம் சொல்லணுமே

Senaigalai Elumbiduvom – சேனைகளாய் எழும்பிடுவோம்

Senaigalai Elumbiduvom
சேனைகளாய் எழும்பிடுவோம்
தேசத்தை கலக்கிவோம் – புறப்படு
இந்தியாவின் எல்லையெங்கும்
இயேச நாமம் சொல்லிடுவோம் – புறப்படு
புறப்படு புறப்படு தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு

1.பாதாளம் சென்றிடும்
பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா
பட்டணங்கள், கிராமங்களில்
கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா
2. உலக இன்பம் போதுமென்று
பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்
பாவசேற்றிலே மூழ்கி பணத்திற்காக
வாழ்பவர்கள் மனந்திரும்பணும்
3. அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு
அறியாயோ மகனே..
பயிர்கள் முற்றி அறுவடைக்கு
தயாராக உள்ளது தெரியாதா மகளே..
4. இயேசு நாமம் தெரியாத எத்தனையோ
கோடிகள் இந்தியாவிலே
இன்னும் சும்மா இருப்பது நியாயம்
இல்லையே தம்பி இன்றே புறப்படு
5. வழிதெரியா ஆடுகள் தொய்ந்து போன
இதயங்கள் லட்சங்கள் உண்டு
உண்மை தெய்வம் அறியாது குருடர்களாய்
வாழ்பவர்கள் கோடிகள் உண்டு

புறப்பட்டோம் புறப்பட்டோம்
தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம்
சேனைகளாய் எழும்பிடுவோம்
தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம் (2)
இந்தியாவின் எல்லையெங்கும்
இயேசு நாமம் சொல்லிடவே புறப்பட்டோம் (2)

Poradum En Nenjame – போராடும் என் நெஞ்சமே

Poradum En Nenjame

போராடும் என் நெஞ்சமே
புகலிடம் மறந்தாயோ
பாராளும் இயேசு உண்டு
பதறாதே மனமே – 2

1. அலைகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ – 2
கரம் நீட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே – 2

ஆ ஆ…. ஆனந்தம் பேரானந்தம்
என் (நம்) அருள்நாதர் சமூகத்திலே – 2 (…போராடும்)

2. கடந்ததை நினைத்து தினம்
கண்ணீர் வடிக்கின்றாயோ – 2
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி நன்றி சொல்லு – 2 (…ஆ ஆ…. ஆனந்தம்)

3. வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும் – 2
அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு – 2 (…ஆ ஆ…. ஆனந்தம்)

4. நண்பன் கைவிட்டானோ
(நீ) நம்பினோர் எதிர்த்தனரோ – உன் – 2
கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடந்திடு – 2 (…ஆ ஆ…. ஆனந்தம்)

Poraadum En Nenjame
Pugalidam Maranthaayo
Paaraalum Yesu Undu
Patharaathe Maname – 2

1. Alaikadal Naduvinile
Amizhnthu Pogindraayo – 2
Karam Neettum Yesuvaip Paar
Karai Serkkum Thunai Avare – 2

Aah Aah.. Aanandham Peraanantham
En (Nam) Arulnaathar Samoogaththile – 2 (…Poraadum)

2. Kadanthathai Ninaiththu Thinam
Kanneer Vadikkindraayo – 2
Nadanthathellaam Nanmaikke
Nandri Nandri Sollu – 2 (…Aah Aah.. Aanandham)

3. Varungkaala Bayangalellaam
Vaatutho Anuthinamum – 2
Arulnaathar Yesuvidam
Anaiththaiyum Koduththuvidu – 2 (…Aah Aah.. Aanandham)

4. Nanban Kaivittaano
(Nee) Nambinor Ethirththanaro – Un – 2
Kaividaa Nam Devanin
Karam Pattri Nadanthidu – 2 (…Aah Aah.. Aanandham)

Jeevanai Vida Devanai – ஜீவனை விட தேவனை

Jeevanai Vida Devanai
ஜீவனை விட தேவனை நேசிக்கணும்
இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பி
அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்
அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்

போராடு…தைரியமாய் போராடு..
வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்

ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன்
இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் நான்
அதனால்.. சாத்தானை ஓட ஓட தொரத்துவேன்
அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன்

போராடுவேன்..தைரியமாய் போராடுவேன்
வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்

Katti Pidithen Unthan – கட்டிப் பிடித்தேன் உந்தன்

Katti Pidithen Unthan
கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை
கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே
இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே
இளைரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும்
இரங்கும் ஐயா மனம் இரங்குமையா

1. துப்பாக்கி ஏந்தும் கைகள்
உம் வேதம் ஏந்த வேண்டும்
தப்பாமல் உம் விருப்பம்
எப்போதும் செய்ய வேண்டும்
2. பழிக்கு பழி வாங்கும்
பகைமை ஒழிய வேண்டும்
மன்னிக்கும் மனப்பான்மை
தேசத்தில் மலர வேண்டும்
3. பிரிந்த குடும்பமெல்லாம்
மறுபடி இணைய வேண்டும்
பெற்றோரின் கண்ணீர் எல்லாம்
களிப்பாய் மாற வேண்டும்
4. வீடு இழந்தவர்கள்
இடங்கள் பெயர்ந்தவர்கள்
மறுவாழ்வு பெற வேண்டும்
மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும்

Idukamana Vasal – இடுக்கமான வாசல்

Idukamana Vasal
இடுக்கமான வாசல் வழியே
வருந்தி நுழைய முயன்றிடுவோம்
சிலுவை சுமந்து இயேசுவின் பின்
சிரித்த முகமாய் சென்றிடுவோம்

1. வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது..
பரலோகம் செல்லும் பாதை குறுகலானது..
2. நாம் காணும் இந்த உலகம்
ஒரு நாள் மறைந்திடும்
புது வானம் பூமி நோக்கி
பயணம் செய்கின்றோம்
3. இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்
சிலகாலம் தான் நீடிக்கும்
இணையில்லாத மகிமை
இனிமேல் நமக்குண்டு
4. அழிவுக்கு செல்லும் வாயில்
மிகவும் அகன்றது
பாதாளம் செல்லும் பாதை
மிகவும் விரிந்தது

Ummai Ninaikkum – உம்மை நினைக்கும்

Ummai Ninaikkum
உம்மை நினைக்கும் போதெல்லாம்
நெஞ்சம் மகிழுதையா நன்றி பெருகுதையா
நன்றி நன்றி ராஜா நன்றி இயேசுராஜா
1. தள்ளப்ட்ட கல்நான் எடுத்து நிறுத்தினீரே
உண்மை உள்ளவன் என்று கருதி
ஊழியம் தந்தீரையா
2. பாலை நிலத்தில் கிடந்தேன்
தேடி கண்டுபிடித்தீர்
கண்ணின் மணிபோல காத்து வந்தீர்
கழுகு போல் சுமக்கின்றீர்
3. பேரன்பினாலே என்னை
இழுத்துக் கொண்டீர்
பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர்
பிள்ளையாய் தெரிந்துகொண்டீர்
4. இரவும் பகலும் கூட
இருந்து நடத்துகின்றீர்
கலங்கும் நேரமெல்லாம் கரம்நீட்டி
கண்ணிர் துடைக்கின்றீர்
5. உந்தன் துதியைச் சொல்ல
என்னை தெரிந்து கொண்டீர்
உதடுகளைத் தினம் திறந்தருளும்
புது ராகம் தந்தருளும்