All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Yesu Sumanthu Kondare – இயேசு சுமந்து கொண்டாரே

Yesu Sumanthu Kondare
1. இயேசு சுமந்து கொண்டாரே
நான் சுமக்க தேவையில்லை

இயேசுவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்

2. பெலவீனம் சுமந்து கொண்டார்
பெலவானாய் மாற்றிவிட்டார் – இயேசுவின்

3. என் நோய்கள் சுமந்து கொண்டார்
என் துக்கம் ஏற்றுக் கொண்டார்

Puthiya Paadal Paadi – புதிய பாடல் பாடி

Puthiya Paadal Paadi
புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்

1. கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே
திடன்தந்தார் ஆவியாலே – எனக்கு
2. உறுதியாய் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பூரண சமாதானம்
புவிதனில் தருபவரே – தினமும்
3. அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமை உள்ள தேவா
வரங்களின் மன்னவனே – தேவா
4. கூப்பிட்டேன் பதில் வந்தது
குறைவெல்லாம் நிறைவானது
மகிமையின் ராஜா அவர்
மகத்துவமானவரே – இயேசு
5. மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு
கோபமோ ஒரு நிமிடம்
கிருபையோ நித்தம் நித்தம் – அவர்

En Kirubai Unakku Podhum – என் கிருபை

En Kirubai Unakku Podhum
என் கிருபை உனக்குப் போதும் – 2
பலவீனத்தில் என் பெலமோ
பூரணமாய் விளங்கும் – 2 (…என் கிருபை)

1. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
எனக்கே நீ சொந்தம் – 2
பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்
எனக்கே நீ சொந்தம் – 2 (…என் கிருபை)

2. உலகத்திலே துயரம் உண்டு
திடன்கொள் என் மகனே – 2
கல்வாரி சிலுவையினால்
உலகத்தை நான் ஜெயித்தேன் – 2 (…என் கிருபை)

3. உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே போகும் – 2
இருக்கின்ற பெலத்தோடு
தொடர்ந்து போராடு – 2 (…என் கிருபை)

4. எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நீ போவதில்லை – 2
கலங்கினாலும் மனம் முறிவதில்லை
கைவிடப்படுவதில்லை – 2 (…என் கிருபை)

En Kirubai Unakku Podhum – 2
Balaveenaththil En Belamo
Pooranamaai Vilangum – 2 (…En Kirubai)

1. Bayappadaathe Unnai Meettuk Konden
Enakke Nee Sontham – 2
Peyarittu Naan Unnai Azhaiththen
Enakke Nee Sontham – 2 (…En Kirubai)

2. Ulakaththile Thuyaram Undu
Dhidankol En Magane – 2
Kalvaari Siluvaiyinaal
Ulakaththai Naan Jeyiththen – 2 (…En Kirubai)

3. Unakkethiraana Aayuthangal
Vaaykkaathe Pokum – 2
Irukkindra Belaththodu
Thodarnthu Poraadu – 2 (…En Kirubai)

4. Ellaa Vagaiyilum Nerukkappattum
Odungi Nee Povathillai – 2
Kalanginaalum Manam Murivathillai
Kaividappaduvathillai – 2 (…En Kirubai)

Yesu Patham Enaku – இயேசு பாதம் எனக்குப் போதும்

Yesu Patham Enaku
இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே (2)
1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் – நான்
2. இரவும் பகலும் வேதவசனம்
தியானம் செய்திடுவேன் – நான்
3. காத்திருந்த பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் – நான்
4. கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடுமே – கொடிய
5. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு இது – எனக்கு
6. எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் – நான்

Ummai Nambi Unthan – உம்மை நம்பி உந்தன்

Ummai Nambi Unthan
உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
ஒருபோதும் கைவிடமாட்டீர் – 2

1. கண்ணீரைத் துடைத்து
கரங்களைப் பிடித்து
காலமெல்லம் காத்துக் கொண்டீர்
2. மகனாக மகளாக
அப்பா என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தீர்
3. அச்சாரமாய் முத்திரையாய்
அபிஷேக வல்லமையை
அடிமைக்குத் தந்தீரே
4. குருடர்கள் பார்த்தார்கள்
செவிடர்கள் கேட்டார்கள்
முடவர்கள் நடந்தார்கள்

Magimai Umakkandro – மகிமை உமக்கன்றோ

Magimai Umakkandro
மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கன்றோ
ஆராதனை ஆராதனை – என்
அன்பர் இயேசுவுக்கே
1. விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலை கொடுத்தீர்
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்
2. வழிகாட்டும் தீபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே
3. எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக
4. உம் வல்ல செயல்கள்
மிகவும் பெரிய அதிசயமன்றோ
உம் தூய வழிகள் நேர்மையான
சத்திய தீபமன்றோ

In English

Magimai Umakkandro
Maatchimai Umakkandro
Thuthiyum pugalum sthothiramum
Thooyavar umakkandro – en
Ambar yesuvuke

1. Vilaiyerappetta um raththathal
Viduthalai kodutheer
Rajakkalaaga leviyaaraga
Umakkena therinthu kondeer

2. Valikattum theepam thunaiyaalare
Thettrum theivame
Anbaal belaththal
Anal moottum iyaa abisheka naathare

3. Eppothum irukindra
Inimelum varugindra engal rajave
Um naamam vaalga um arase varuga
Um siththam niraiveruga

4. Um valla seyalgal
Migavum periyaa adhisayamandro
Um thooya valigal nermayaana
Saththiyaa theepamandro

Naan Yesuvin Pillai – நான் இயேசுவின் பிள்ளை

Naan Yesuvin Pillai
நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லை
எந்நாளும் சந்தோஷமே

1. தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்
மகனாக மகளாக தெரிந்து கொண்டார்

2. கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்
இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன்

3. வென்றுவிட்டேன் வென்றுவிட்டேன்
எதிரியின் தடைகளை வென்றுவிட்டேன்

4. நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன்
ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன்

5. சுகமானேன் சுகமானேன்
இயேசுவின் காயங்களால் சுகமானேன்

6. முறியடிப்பேன் முறியடிப்பேன்
எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன்

Pothagar Vanthu Vittar – போதகர் வந்து விட்டார்

Pothagar Vanthu Vittar
போதகர் வந்துவிட்டார்
உன்னைத் தான் அழைக்கிறார்
எழுந்து வா (4)
1. கண்ணீர் கடலில் மூழ்கி
கலங்கி தவிக்கிறாயோ
கலங்காதே திகையாதே
கர்த்தர் உன் அடைக்கலம் – மகனே
2. பாவச்சேற்றில் மூழ்கி
பயந்து சாகிறாயோ
தேவமைந்தன் தேடுகிறார்
தேற்றிட அழைக்கிறார் மகனே
3. கல்வாரி சிலுவையைப் பார்
கதறும் இயேசுவைப் பார்
உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
உன் துக்க சுமந்து கொண்டார்
4. துன்பம் துயரம் உன்னை
சோர்வுக்குள் ஆக்கியதோ
அன்பர் இயேசு அழைக்கிறார்
அணைக்கத் துடிக்கிறார்

Kartharaiye Thuthippen – கர்த்தரையே துதிப்பேன்

Kartharaiye Thuthippen
கர்த்தரையே துதிப்பேன்
காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்
என்றே பாடுவேன் – நான்
1. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி
கதறி கூப்பிட்டேன்
நெருங்கி வந்து குரலைக் கேட்டு
விடுதலை கொடுத்தார்
2. எனக்குதவும் கர்த்தர் எனது
நடுவில் இருக்கிறார்
எதிரியான அலகையை நான்
எதிர்த்து வென்றிடுவேன்
3. எனது பெலனும் எனது மீட்பும்
கீதமுமானார்
நம்பியிருக்கும் கேடயமும்
கோட்டையுமானார்
4. கர்த்தர் எனது பக்கம் இருக்க
எதற்கும் பயமில்லை
கடுகளவும் பாவம் என்னை
அணுகமுடியாது
5. வல்லமை மிக்கவர் செயல்கள் பல
எனக்குச் செய்தாரே
உயிரோடிருந்து உலகத்திற்கு
எடுத்துச் சொல்லுவேன்

Ethanai Nanmaigal Enakku – எத்தனை நன்மைகள்

Ethanai Nanmaigal Enakku
எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன் நான்

நன்றி ராஜா… நன்றி ராஜா…

1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
தேவனே உம்மை துதிப்பேன்

2. பெலவீனன் என்று தள்ளி விடாமல்
பெலத்தால் இடை கட்டினீர்

3. பாவத்தினாலே மரித்துப் போய் இருந்தேன்
கிருபையால் இரட்சித்தீரே

4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
எனக்காய் மீண்டும் வருவீர்

5. கரங்களைப் பிடித்து கண்மணி போல
காலமெல்லாம் காத்தீர்

6. பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி
பூரண சுகமாக்கினீர்

7. முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி
சாத்தானை ஜெயித்து விட்டீர்

8. நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
விவரிக்க முடியாதையா

Etthanai nanmaigal enakku seidheer
Eppadi nandri solvaen – naan

Nandri raajaa nandri raajaa

1. Thaazhmaiyil irundhaen
Dhayavaai ninaitheer
Dhaevane ummai thudhippaen

2. Belaveenan endru
Thalli vidaamal
Belathaal idai kattineer

3. Paavathinaalae marithu
Poai irundhaen
Kirubaiyaal ratchitheerae

4. Enakkaaga maritheer
Enakkaaga uyirtheer
Enakkaai meendum varuveer

5. Karangalai pidithu
Kanmani poala
Kaalamellaam kaatheer

6. Paavangal poakki
Saabangal neekki
Poorana sugamaakkineer

7. Mulmudi thaangi
Thiru rattham sindhi
Saathaanai jeyithu vitteer

8. Neer seidha adhisayam
Aayiram undu
Vivarikka mudiyaadhaiyaa