All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Magizhnthu Kalikooru – மகிழ்ந்து களிகூரு

Magizhnthu Kalikooru
மகிழ்ந்து களிகூரு மகனே (ளே)
பயம் வேண்டாம்
மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்

1. தேவையை நினைத்து கலங்காதே
தெய்வத்தைப் பார்த்து நன்றிசொல்லு
கொஞ்சத்தைக் கண்டு புலம்பாதே
கொடுப்பவர் உண்டு கொண்டாடு

2. அப்பாவின் புகழை நீ பாடு
அதுவே உனக்கு Safeguard டு
தப்பாமல் மகிழ்ந்து உறவாடு
எப்போதும் வாழ்வாய் சுகத்தோடு

3. மீனின் வயிற்றில் யோனா போல்
கூனி குறுகி போனாயோ
பலியிடு துதியை சப்தத்தோடு
விலகிடும் எல்லாம் வெட்கத்தோடு

4. நிலையான நகரம் நமக்கில்லை
வரப்போகும் நகரையே நாடுகிறோம்
இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரபலி
இப்போதும் எப்போதும் செலுத்திடுவோம்

5. துதிக்கும் போது நம் நடுவில்
உட்கார நாற்காலி போடுகிறோம்
துதிகளை அரியணைக்கிடுவார்
வந்து அமர்ந்து மகிழ்ந்திடுவார்

Magizhnthu Kalikooru
Makilnthu Kalikooru Makanae(Lae)
Bayam Vaendaam
Mannavan Yesu Un (Nam) Naduvil
Periyakaariyam Seythiduvaar

1. Thaevaiyai Ninaiththu Kalangaathae
Theyvathai Paarththu Nandrisollu
Konjathai Kandu Pulambaathae
Koduppavar Undu Kondaadu

2. Appaavin Pugalai Nee Paadu
Athuvae Unakku Safeguardu
Thappaamal Magkilnthu Uravaadu
Eppothum Vaalvaai Sukathodu

3. Meenin Vayatril Yonaa Pol
Kooni Kuruki Ponaayo
Paliyidu Thuthiyai Sapthathodu
Vilakidum Ellaam Vetkathodu

4. Nilaiyaana Nakaram Namakkillai
Varappokum Nakaraiyae Naadukirom
Yesuvai Uyarthum Sthothirapali
Ippothum Eppothum Seluthiduvom

5. Thuthikum Pothu Nam Naduvil
Utkaara Naarkaali Podukirom
Thuthikalai Ariyannaikiduvaar
Vanthu Amarnthu Makilnthiduvaar

Isravaelae Unnai – இஸ்ரவேலே உன்னை

Isravaelae Unnai
இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்
எப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன்
என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது
என் இரக்கம் பொங்கிபொங்கி வழிகின்றது
எப்படி கைவிடுவேன்
எப்படி கைநெகிழ்வேன் – உன்னை
2. நானே தான் உன்னை குணமாக்கினேன்
ஏனோ நீ அறியாமல் போனாயோ
3. கையிலே ஏந்தி நடத்துகிறேன்
கரம்பிடித்து நடக்க உன்னைப் பழக்குகிறேன்
4. பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக் கொண்டேன்
பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன்
5. முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன்;
பேரன்பால் உன்னை ஈர்த்துக் கொண்டேன்

Iranthorai – இறந்தோரை வாழவைக்கும்

Iranthorai
இறந்தோரை வாழவைக்கும் வல்லவர்
எனக்குள் வந்து தங்கிவிட்டார்
இல்லாதவரை இருக்கசெய்யும் நல்லவர்
மனக்கண் திறந்துவிட்டார்
அல்லேலூயா ஆனந்தமே
1. செடியான கிறிஸ்துவோடு இணைந்து விட்டேன்
கொடியாக அவருக்காய் படர்ந்திடுவேன்
2. பாவம் சாவு இவற்றினின்று மீட்கப்பட்டவன்
இனி எனக்கு தண்டனை தீர்ப்பே இல்லை
3. இயேசுகிறிஸ்து பெயராலும் ஆவியாலும்
நீதிமானாய் கழுவப்பட்டு தூய்மையானேன்
4. மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டவன்
ஆவி தங்கும் ஆலயமாய் வளர்கின்றவன்
5. கர்த்தரின் கைவேலைப்பாடு நான் அல்லவா
அவர் சாயல் காட்டும் கண்ணாடி நான் அல்லவா
6. புதிதாய் பிசைந்து புளிப்பில்லா மாவு நானே
துர்க்குணங்களை தீமைகள் தவிர்த்துவிட்டேன்
7. பழைய மனிதன் சிலுவையிலே அறையப்பட்டதால்
பாவத்திற்கு அடிமையாக வாழ்வதில்லை
8. தூய ஆவி துணையாலே வாழ்கின்றவன்
ஆவிகாட்டும் நெறியிலே நடக்கின்றவன்

Githiyon Nee – கிதியோன் நீ

Githiyon Nee
கிதியோன் நீ கிதியோன் நீ
தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ
வாலிபனே வாலிபனே
ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா
1. உணவுக்கு போராடும் தேசத்திலே
உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே
விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை
விரட்;டணுமே இயேசு நாமம் சொல்லி
2. தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே
விக்கிரக ஆவிகளை விரட்டணுமே
கர்த்தர் மனம் இறங்க கதறணுமே
நாடு நலம்பெற ஜெபிக்கணுமே
3. சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு
பயமின்றி திருவசனம் அறிக்கையிடு
மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொட
புளியாத அப்பாமாக மாறிவிடு
4. இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுபோ
எதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய்
படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்
பராக்கிரமசாலியே பயமே வேண்டாம்

Vaikaraiyil Umakkaga – வைகரையில்

Vaikaraiyil Umakkaga
வைகரையில் (காலை நேரம்) உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா
என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும்
1. உம்இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
நிறைவான மகிழ்ச்சி உம்சமூகத்தில்
குறைவில்லாத பேரின்பம் உம்பாதத்தில்
2. ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா
உம்மையன்றி வேறுஒரு செல்வம இல்லையே
நீர்தானே எனது உரிமைச் சொத்து
எனக்குரிய பங்கு நீர்தானய்யா
3. படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்
அழிந்துபோக அனுமதியும் தரமாட்டீர்
என்இதயம் பூரித்து துள்ளுகின்றது
என்உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது
4. உம் கிருபையால் காலைதோறும் திருப்தியாக்கும்
நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
எப்போதும் என்முன்னே நீர்தானய்யா
ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்

Ennai Belapaduthum – என்னைப் பெலப்படுத்தும்

Ennai Belapaduthum
என்னைப் பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான் முடித்திடுவேன்
1. கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார்
அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார்
2. தீயோர் என் உடலை விழுங்க நெருங்கையில்
இடறிவிழுந்தார்கள் இல்லாமல் போனார்கள்
3. படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும்
என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது
4. கேடுவரும் நாளிலே கூடாரமறைவினிலே
மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார்;
5. எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில்
என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காண செய்வார்
6. அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
பாடல் பாடிடுவேன் நடனமாடிடுவேன்
7. நாட்கள் கூட கூட பெலனும் பெருகிவிடும்
இரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ் இருக்கும்

Engal Jebangal – எங்கள் ஜெபங்கள்

Engal Jebangal
எங்கள் ஜெபங்கள் தூபம் போல
உம் முன் எழ வேண்டுமே
1. ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும்
எழவேண்டும்
உடைந்த பலிபீடம் சரிசெய்யப்பட வேண்டும்
தகப்பனே ஜெபிக்கிறோம் (2)
2. பரலோக அக்கினி எங்கும் பற்றியெரிய
வேண்டும்
பாவச்செயல்கள் சுட்டெரிக்கப்பட
வேண்டும்
3. தூரம் போன ஜனங்கள் உம் அருகே
வரவேண்டும்
கர்த்தரே தெய்வமென்று காலடியில்
விழவேண்டும்
4. பாகால்கள் இந்தியாவில் இல்லாமல்
போக வேண்டும்
பிசாசின் கிரியைகள் முற்றிலும் அழிய வேண்டும்
5. பாரததேசத்தை ஜெபமேகம் ரூட வேண்டும்
பெரிய காற்று அடித்து பெருமழை பெய்ய
வேண்டும்

Vinnilum Mannilum – விண்ணிலும்

Vinnilum Mannilum
விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர
எனக்கு யாருண்டு ? – இந்த
மண்ணுலகில் உம்மையன்றி வேற
விருப்பம் எதுவுண்டு?
நீர்தானே என் வாஞ்சையெல்லாம்
உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்
1. உம்மோடு தான் எப்போதும் நான்
வாழ்கிறேன்
அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்
நன்றி ஐயா நாள் முழுதும்
நல்லவரே, வல்லவரே
2. உம்சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்
முடிவிலே என்னை மகிமையில்
ஏற்றுக்கொள்வீர்
3. என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா
எனக்குரிய பங்கும் என்றும் நீர்தானய்யா
4. உம்மைத்தானே நான் அடைக்கலமாய்
கொண்டுள்ளேன்
உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியமே
5. எனக்குள்ளே நீர், செயலாற்றி, மகிழ்கின்றீர்
உம் சித்தம் செய்ய, ஆற்றல் தருகின்றீர்

Pugazhkindrom Ummaiye – புகழ்கின்றோம்

Pugazhkindrom Ummaiye
புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்
போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம்
உயர்த்துகிறோம் உன்னதரே உயர்த்தி மகிழ்கின்றோம்
புகழ்கின்றோம் புண்ணியரே புகழ்ந்து பாடுகின்றோம்
உம்மைப் புகழ்ந்து பாடுகின்றோம்
உயர்த்தி மகிழ்கின்றோம் (2)
1. நூற்றுவத் தலைவனை தேற்றினீரே
வார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர்
விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர்
விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர்
2. கல்லறை லேகியோனை தேடிச்சென்றீர்
ஆறாயிரம் பேய்களை ஓடச்செய்தீர்
ஆடை அணிந்து அமரச் செய்தீர்
ஆர்வமாய் சாட்சி பகரச்செய்தீர்
3. பெதஸ்தா குளத்து முடவனையே
படுக்கை எடுத்து நடக்கச் செய்தீர்
இனியும் பாவம் செய்யாதே என்று
எச்சரித்தீரே தேடிச் சென்று
4. தோல்வியில் துவண்ட பேதுருவின்
படகில் ஏறி போதித்தீரே
படகு நிறைய மீன்கள் தந்தீர்
பாவநிலையை உணர வைத்தீர்
5. மரத்தில் அமர்ந்த சகேயுவை
மனமிரங்கி நோக்கினீரே
இறங்கி வாரும் என்று அழைத்து
இரட்சிப்பு தந்து மகிழச் செய்தீர்
6. பர்த்திமேயு குருடனை பார்த்தீரே
பரிசுத்தர் உம்மையே பார்க்க வைத்தீர்
உந்தன் பின்னே நடக்க வைத்தீர்
உம்மை போற்றி புகழச்செய்தீர்

En Ullamae Ellaiparidu – என் உள்ளமே

En Ullamae Ellaiparidu
என் உள்ளமே இளைப்பாறிடு
இயேசப்பா உனக்கு நன்மை செய்தார்
1. கால்கள் இடராமல் காப்பாற்றினார்
சாவிலிருந்த விடுவித்தார்
2. நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார்
ஊழியன் என்னையும் உயிர்த்துவிட்டார்
3. எளிய உள்ளத்தை பாதுகாத்தார்
தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார்
4. மன்றாடும்போது செவி சாய்த்தார்
மறவாமல் உறவாடி மகிழச்செய்தார்
5. விண்ணப்பம் கேட்டதால் அன்புகூர்வேன்
விடுதலை தந்ததால் நன்றி சொல்வேன்
6. இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகர் நாமம் உயர்த்திடுவேன்