Pugazhkindrom Ummaiye
புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்
போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம்
உயர்த்துகிறோம் உன்னதரே உயர்த்தி மகிழ்கின்றோம்
புகழ்கின்றோம் புண்ணியரே புகழ்ந்து பாடுகின்றோம்
உம்மைப் புகழ்ந்து பாடுகின்றோம்
உயர்த்தி மகிழ்கின்றோம் (2)
1. நூற்றுவத் தலைவனை தேற்றினீரே
வார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர்
விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர்
விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர்
2. கல்லறை லேகியோனை தேடிச்சென்றீர்
ஆறாயிரம் பேய்களை ஓடச்செய்தீர்
ஆடை அணிந்து அமரச் செய்தீர்
ஆர்வமாய் சாட்சி பகரச்செய்தீர்
3. பெதஸ்தா குளத்து முடவனையே
படுக்கை எடுத்து நடக்கச் செய்தீர்
இனியும் பாவம் செய்யாதே என்று
எச்சரித்தீரே தேடிச் சென்று
4. தோல்வியில் துவண்ட பேதுருவின்
படகில் ஏறி போதித்தீரே
படகு நிறைய மீன்கள் தந்தீர்
பாவநிலையை உணர வைத்தீர்
5. மரத்தில் அமர்ந்த சகேயுவை
மனமிரங்கி நோக்கினீரே
இறங்கி வாரும் என்று அழைத்து
இரட்சிப்பு தந்து மகிழச் செய்தீர்
6. பர்த்திமேயு குருடனை பார்த்தீரே
பரிசுத்தர் உம்மையே பார்க்க வைத்தீர்
உந்தன் பின்னே நடக்க வைத்தீர்
உம்மை போற்றி புகழச்செய்தீர்