All Songs by david

Unga Namam Uyaranum – உங்க நாமம் உயரணும்

Unga Namam Uyaranum
உங்க நாமம் உயரணும்
இன்று மேன்மை அடையனும்
பாடுவேன் பாடுவோம் அல்லேலூயா – 2

அல்லேலூயா -4
யாவே அலேல் அல்லேலூயா -2

1. பெருங்காற்றும் அடங்கிப்போகும்
எக்கடலும் வழிதிறக்கும்
உங்க நாமம் உயர்த்தும்போது
கன்மலையும் கரைந்து போகும் – 2

இயேசுவே உம் நாமமே
உயரனும் அல்லேலூயா
இயேசுவே உம் நாமமே
பெருகனும் அல்லேலூயா-2

2. சிங்கத்தின் கெபியிலும்
தீச்சூலை நடுவிலும்
உங்க நாமம் உயர்த்தும்போது
சேதங்கள் அணுகிடாது – 2 – இயேசுவே

3. சிறைச்சாலை அடைப்பதில்லை
சங்கிலிகள் நிரந்தரமில்லை
உங்க நாமம் உயர்த்தும்போது
அஸ்திபாரம் நிலைப்பதில்லை – 2 – இயேசுவே

Unga Namam Uyaranum
Indru Maenmai Adaiyanum
Paaduvaen Paaduvom Halleluiah – 2

Halleluiah – 4
Yaavae Allel Halleluiah – 2

1. Perunkatrum Adangipogum
Ekkaldalum Valithirakkum
Unga Namam Uyarthumpothu
Kanmalaiyum Karainthu Pogum – 2

Yesuvae Um Namamae
Uyaranum Halleluiah
Yesuvae Um Namamae
Peruganum Halleluiah – 2

2. Singathin Kebiyilum
Theechoolai Naduvilum
Unga Namam Uyarthum Pothu
Sethangal Anugidathu – 2 – Yesuvae

3. Siraichalai Adaipathillai
Sangiligal Nirantharamillai
Unga Namam Uyarthum Pothu
Asthiparam Nilaipathillai – 2 – Yesuvae

Belan Illa Nerathilae – பெலன் இல்லா நேரத்திலே

Belan Illa Nerathilae
பெலன் இல்லா நேரத்திலே பெலன் தந்து தாங்கிடும்
திடன் இல்லா நேரத்திலே திடன் தந்து தாங்கிடும் – 2
சோர்வுற்ற வேளைகளில் சோர்ந்திடமால் தாங்கிடும்
உம் பெலன் தந்து தினம் தாங்கிடும் – 2

உம் பெலன் வேண்டுமே உம் பெலன் வேண்டுமே
உம் பெலன் தந்து தினம் தாங்க வேண்டுமே – 2

1. தாவீதை போல் கோலியாத்தை
முறியடிக்கும் பெலன் தாருமே – 2
யோசுவாவை போல் யோர்தானை
கடந்திடும் பெலனை தினம் தந்திடும் – 2

2. மோசையை போல் வழி நடத்தும்
உம்முடைய பெலன் தாருமே – 2
எலிசாவை போல் இருமடங்கு
வல்லமை தந்து தினம் நடந்திடும் – 2

3. ஆபிராகாமை போல் விசுவாசத்தில்
நிலைத்திருக்கும் பெலன் தாருமே – 2
பவுலை போல் உம் வார்த்தை சொல்ல
பெலனை தந்து தினம் நடந்திடும் – 2

Belan Illa Nerathilae Belan Thanthu Thaangidum
Thidan Illa Nerathilae Thidan Thanthu Thaangidum – 2
Sorvutra Velaigalil Sorthidaamal Thaangidum
Um Belan Thanthu Thinam Thaangidum – 2

Um Belan Vendumae Um Nelan Vendumae
Um Belan Thanthu Thinam Thaanga Vendumae – 2

1. Thaaveethai Pol Goliyaathai
Muriadikum Belan Thaarumae – 2
Yosuvavai Pol Yorthaanai
Kadanthidum Belanai Thinam Thanthidum – 2

2. Mosaiyaai Pol Vazhi Nadathum
Ummudaiya Belan Thaarumae – 2
Elishavai Pol Irumadangu
Vallamai Thanthu Thinam Nadathidum – 2

3. Abrahamai Pol Visuvasathil
Nilaithirukum Belan Thaarumae – 2
Pavulai Pol Um Varthai Solla
Belanai Thanthu Thinam Nadathidum – 2

Asirvatham Thanthiduvar Yesu – ஆசிர்வாதம் தந்திடுவார் இயேசு

Asirvatham Thanthiduvar Yesu
ஆசிர்வாதம் தந்திடுவார் இயேசு
அற்புதங்கள் செய்பவரும் இயேசு – 2

ஊற்றிடுமே தேவா ஊற்றிடுமே
தேவ ஆசிர்வாதம் எங்கள் மீதிலே – 2

1. வானத்தை திறந்தவர் நீர்
மன்னாவையும் தந்தவர் நீர் – 2
செங்கடலை இரண்டாக பிரித்தீர்
இந்த நாளில் எம்மை ஆசிர்வதியும் – 2

2. கன்மலையை பிளந்தவர் நீர்
தண்ணீரையும் தந்தவர் நீர் – 2
இஸ்ரவேலரை பெருக செய்தவர்
இந்த நாளில் எம்மை பெருக செய்திடும் – 2

அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா

Asirvatham Thanthiduvar Yesu
Arputhangal Seiypavarum Yesu – 2

Ootridumae Deva Ootridumae
Deva Asirvatham Engal Meethilae – 2

1. Vaanathai Thiranthavar Neer
Mannaavaiyum Thanthavar Neer – 2
Sengadalai Irandaga Piritheer
Intha Naalil Emmai Asirvathiyum – 2

2. Kanmalaiyai Pilanthavar Neer
Thanneeraiyum Thanthavar Neer – 2
Isravelarai Peruga Seithavar
Intha Naalil Emmai Peruga Seithidum – 2

Alleluyah Amen Alleluyah Amen Alleluyah Alleluyah

Uyaramum Unnathamum Aanavarae – உயரமும் உன்னதமும் ஆனவரே

Uyaramum Unnathamum Aanavarae
உயரமும் உன்னதமும் ஆனவரே
துதிகளின் மத்தியில் வசிபரே -2

ஒருவராய் சாவாமை உள்ளவரே
இந்நாளில் எம்மீது இறங்கிடுமே -2
ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
அபிஷேகம் தந்து எம்மை நடத்துமே -2

1. வரங்களினாலே என்னை நிரப்புமே
வல்லமை தந்து தினமும் நடத்துமே -2
அற்புத அபிஷேகம் எனக்கு தாருமே
குணமாகும் வரத்தாலே என்னை நிரப்புமே -2

2. கிருபையாலே என்னை நிரப்புமே
பரிசுத்தமாக தினமும் நடத்துமே -2
அந்நிய பாஷையால் என்னை நிரப்புமே
தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டுமே -2

3. பரிசுத்த அக்கினி எனக்கு தாருமே
ஆயுதமாக மாற்றிடுமே -2
ஆவியின் பட்டயம் எனக்கு தாருமே
விசுவாச கேடகம் தினமும் வேண்டுமே -2

Uyaramum Unnathamum Aanavarae
Thuthikalin Matiyil Vasipavarae -2
Oruvaraai Saavamai Ullavarae
Innalil Emmithu Irangidumae -2

Aaviyana Engal Anbu Dheivamae
Abisegam Thanthu Emmai Nadatthumae -2

1. Varangalinalae Ennai Nirappumae Vallamai
Thanthu Thinamum Nadatthumae -2
Arrputha Abisegam Enaku Thaarumae
Kunamakum Varatthaalae Ennai Nirappumae -2

2. Kirubaiyalae Ennai Nirappumae
Parsuthamaga Thinamum Nadatthumae -2
Anniya Baasaiyal Ennai Nirappumae
Theerkagatharisanam Solla Vendumae -2

3. Parisutha Akkini Enaku Thaarumae
Aayuthamaga Maatridumae -2
Aaviyivin Pattayam Enaku Thaarumae
Visuvasa Kaedagam Thinamum Vendumae -2

Thoolin Siluvai Sumanthukondu – தோளில் சிலுவை சுமந்துகொண்டு

Thoolin Siluvai Sumanthukondu
தோளில் சிலுவை சுமந்துகொண்டு தள்ளாடிப் போகிறீர் -2
தள்ளாடும் என் கால்களை திடப்படுத்திடவே தள்ளாடும்
என் வாழ்வை பலப்படுத்திடவே பார சிலுவை சமந்து கொண்டு போகிறீர்
தள்ளாடி போகிறீர் கடும் பார சிலுவை
சுமந்துகொண்டு போகிறீர் தள்ளாடி போகிறீர் – தோளில் சிலுவை

1. கருணை உந்தன் வடிவே இரக்கம் உந்தன் அழகே
அன்பு உந்தன் உருவே தம் ஜீவன் தந்தீர் அருளே-2
சிலுவை இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
உம் சித்தம் செய்ய அரவணைத்துக் கொண்டிரே -2
முற்றும் முடிய என்னைத் தெரிந்து கொண்டீரே -2 தோளில் …

2. கிருபை உந்தன் குரலே சத்தியம் உந்தன் நிறைவே
பரிசுத்தம் உந்தன் வழியே பாவ இருளை நீக்கும் ஒளியே -2
உம்மைப் போல என்னை என்றும் மாற்றுமே
மாயலோக ஆசை என்னில் ஒழியுமே -2 (உந்தன்)
நித்திய வாழ்வில் என்னைக் கொண்டுச் சேர்ப்பீரே -2 தோளில்…

En Kanneerin Madhippai Arinthavarae – என் கண்ணீரின் மதிப்பை அறிந்தவரே

En Kanneerin Madhippai Arinthavarae

என் கண்ணீரின் மதிப்பை அறிந்தவரே என் அலைச்சலை அறிந்து இருப்பவரே -2
நான் போகும் வழியை அறிந்தவரே – 2
தினம் என்னை காத்திடும் தெய்வம் நீரே

உமக்கே ஆராதணை
தினம் கனிவுடன் செலித்திடுவேன்- 2
-என் கண்ணீரின்

1. வரட்சியான விளை நிலம் போல வாழ்க்கையில் வறண்ட நிலை வந்தாலும் -2 கண்ணீரை துடைத்து கரம்பற்றி பிடித்து காக்கும் தெய்வம் என்னோடுண்டு -2

2. உள்ளத்தை உடைக்கும் மனிதர்கள் முன்பு உருவாக்கி உயர்த்தும் கர்த்தர் உண்டு -2 ” இழந்துப்போன வாழ்க்கையை மாற்றி கணப்படுத்திடும் நம் கர்த்தர் உண்டு -2

3. நான் உம்மை நோக்கி கூப்பிடும் நாளில் எதிரிகள் இல்லாமல் போவார்கள்-2 நீர் எந்தன் பட்சத்தில் இருப்பதினாலே நம்பிக்கையோடு வாழ்ந்திடுவேன்.

En Aathuma Kartharai Magimaipaduthukirathu – என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது

En Aathuma Kartharai Magimaipaduthukirathu
என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது
என் ஆவி என் தேவனில் களிகூர்கிறது (2)

வல்லமையுடையவர் மகிமையாய் செய்தார்
அவரின் நாமம் பரிசுத்தம் உள்ளதே (2)

என் தாழ்மையை நோக்கி பார்த்தாரே
என் கண்ணீர் அவர் துருத்தியில் அல்லோ

பலவானை கீழே தள்ளினார்
தாழ்மையுள்ளோரை உயர்த்தினார்

தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்
செழிப்பான இடங்களில் கொண்டுவந்து சேர்த்தீர்

இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதாகாலமும் நமது தேவன்

En Aathuma Kartharai Magimaipaduthukirathu
En Aavi En Devanil Kalikoorkirathu

Vallamaiyudaiyavar Magimaiyaay Seithaar
Avarin Naamam Parisutham Ullathae

En Thaazhmaiyay nokki paarthaarae
En Kanneer Avar Thuruthiyil Allo

Balavaanai Keezhae Thallinaar
Thaalmaiyullorai Uyarthinaar

Theeyayum Thanneerayum Kadanthu Vanthom
Sezhippaana Idangalil Konduvanthu Sertheer

Intha Devan Endrendrummulla
Sathaakaalamum namathu Devan

Vaanaathi Vaanangal – வானாதி வானங்கள் கொள்ளாதவரே

Vaanaathi Vaanangal | வானாதி வானங்கள் கொள்ளாதவரே | r. | .

அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (4)

வானாதி வானங்கள் கொள்ளாதவரே
வார்த்தையால் வர்ணிக்க கூடாதவரே
ஓயாமல் உம் புகழ் நான் பாடுவேன்
இன்றுமே என்றுமே என்றென்றுமே (2)

அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (4)

பரலோக கவனத்தை ஈர்க்க வேண்டுமே
அப்பா உம் கண்களில் கிருபை வேண்டுமே
எப்போதும் என் ஆருகே நீர் வேண்டுமே
நீர் வேண்டும் நீர் வேண்டும் நீர் வேண்டுமே_(2)

அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

விலகாதா பிரியாத உம் சமூகமே
அது தானே நிரந்தர சுதந்திரமே
வேறொன்றும் வேண்டாம் நீர் போதுமே
நீர் போதும் எப்போதும் நீர் போதுமே_(2)

அல்லேலூயா அல்லேலூயா ஆமென் (16)

Hallelujah Hallelujah Amen (4)

Vaanaathi Vaanangal Kollathavarea
Vaarthaiyal Varnikka Koodathavarea
Ooyamal Um Pughal Naan Paaduvean
Indrumea Endrumea Endrendrumea

Hallelujah Hallelujah Amen (4)

Paraloga Gavanathai Eerkaveandumea
Appa Um Kangalil Kirubai Veandumea
Eppothum En Arugea Veandumea
Neer Veandum Neer Veandum Neer Veandumea

Hallelujah Hallelujah Amen (4)

Vilagatha Piriyatha Um Samugamea
Athuthaanea Niranthara Suthanthiramea
Vearondrum Veandam Neer Pothumea
Neer Pothum Eppothum Neer Pothumea

Hallelujah Hallelujah Amen (16)


░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

Mudinthathu Ellam Mudinthathu – முடிந்தது எல்லாம் முடிந்தது

Mudinthathu Ellam Mudinthathu
முடிந்தது எல்லாம் முடிந்தது
என் இயேசு சிலுவையில் சொன்னார்
எல்லாம் முடிந்தது

முடிந்தது எல்லாம் முடிந்தது
என் பாவம் சாபம் தரித்திரம்
எல்லாம் முடிந்தது

முடிந்தது (எல்லாம்) முடிந்தது
இயேசு எல்லாம் எனக்காய்
செய்து முடித்ததால்

அவர் சிலுவையை எடுத்தார்
நம் எதிரியை அடித்தார்
நம் கரத்தை பிடித்தார்
தன் (நித்திய) ஜீவனைக் கொடுத்தார்

நம் விலையை கொடுத்தார்
நம் இடத்தை எடுத்தார்
மரித்து மீண்டும் உயிர்த்தார்
புதிய துவக்கம் அளித்;தார்

முடிந்தது நேரம் முடிந்தது
என் சாபம் தரித்திரம் வியாதிக்கு
நேரம் முடிந்தது

Kaaladi Theriyaamal Ponalum – காலடி தெரியாமல் போனாலும்

Kaaladi Theriyaamal Ponalum
1. காலடி தெரியாமல் போனாலும்
கர்த்தர் என் முன்னே உண்டு
சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்
நம்பி நான் முன் சொல்லுவேன்

இயேசுவை நம்புவேன்
நாளெல்லாம் நான் பின்பற்றுவேன்
என்னை அவரிடம் ஒப்படைத்தேன்
வெட்கப்பட்டு போக மாட்டேன்

2. வனாந்திரமே வாழ்க்கை ஆனாலும்
கர்த்தர் என் பக்கம் உண்டு
வேண்டியதை அவர் பார்த்துக்கொள்வார்
நம்பி நான் முன்செல்லுவேன்

3. இங்கே நான் பரதேசி ஆனாலும்
அங்கே ஓர் இடம் உண்டு
ஆயத்தமாகி அழைத்துச்செல்வார்
நம்பி நான் காத்திருப்பேன்

Kaaladi Theriyaamal Ponalum
Karthar En Munne Undu – 2
Samuthiram Othukki Vazhikaadduvar
Nambi Naan Mun Selluven – 2

Yesuvai Nambuven
Naalellam Naan Pinpatruven
Ennai Avaridam Oppadaithaen
Vedkapattu Poga Mattaen – 2

Vanaanthirame Vaazhkai Anaalum
Karthar En Pakkam Undu – 2
Vendiyathai Avar Paarthukolvaar
Nambi Naan Munselluven – 2 (Yesuvai Nambuven)

Ingae Naan Parathesi Anaalum
Ankae Oar Idam Undu – 2
Aayathamakki Azaithu Selvaar
Nambi Naan Kaaththiruppen – 2 (Yesuvai Nambuven)