All Songs by Prabhu Isaac

Kirubai Kirubai Endrumullathu – கிருபை கிருபை

Kirubai Kirubai Endrumullathu

கிருபை கிருபை…
என்றென்றும் உள்ள தேவ கிருபை-2

1.கஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
நஷ்டத்தின் நேரத்திலும் கிருபை-2
கண்ணீரை துடைக்கும் உம் கிருபை
கரம் பிடித்து நடத்தும் உம் கிருபை-2-கிருபை

2.பெலவீன நேரத்திலும் கிருபை
(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை-2
சோர்ந்து போன நேரத்திலும் கிருபை
நம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை-2-கிருபை

3.தாழ்மையுள்ளவருக்கு கிருபை
தாராளமாய் கிடைக்குமே கிருபை-2
தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபை
அவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை-2-கிருபை

Ummai Padava Iyya – உமை பாடவா அய்யா

Ummai Padava Iyya
உமை பாடவா – அய்யா உமை பாடவா
என்னை அழைத்தீரய்யா
உத்தமனே உன்னதனே
உயர்ந்த அடைக்கலமே
ஒன்றுக்கும் உதவா எனக்கு
உம் அருளை தந்தீரே — உமை

தாயின் அய்யா தாயின் கர்பத்திலே
தெரிந்திடுத்தீரோ — அய்யா -தாயின் !
தாயின் (அய்யாதாயின்) கர்பத்திலே
தெரிந்திடுத்தீரோ

காணாத வென்காசை கண்டெடுத்தீரே அய்யா
கடல் போன்ற மணலிலே
துரும்பாக கிடந்த என்னை
கடல் போன்ற ..
கசப்பான இருதயத்தை கரும்பாக மாற்றினீரே – உமை

மரண ..அய்யா மரண பள்ளத்தாக்கில்
நான் நடந்த போதேல்லாம் – மரண
அய்யா மரண ..மரண பள்ளத்தாக்கில்
நான் நடந்த போதேல்லாம்

கரம் பிடித்து வழி நடத்தி கண்மணிபோல் காத்தீரே
அலை போன்ற சோதனைகள்
அழிக்க வந்த வேளையெல்லாம்
அலை போன்ற சோதனைகள்
அழிக்க வந்த வேளையெல்லாம்
கனமலையின் வெடிப்பினிலே மறைத்து என்னை உயர்த்தினீரே – உமை

Nandri Yesu Nandri – நன்றி ஏசுவே நன்றி

Nandri Yesu Nandri
நன்றி ஏசுவே நன்றி
உள்ளம் நிறைவுடன்
எங்கள் நன்றி – 2 நன்றி

அழுகுரல் கேட்டீர் அற்புதம் செய்தீர்
அதிசயத்தை நீர் காணவும் செய்தீர்
அழுகுரல் கேட்டீர் அற்புதம் செய்தீர்
அதிசயமாய் எங்கள் ஜுதாவை தந்தீர் – நன்றி

எண்ணங்கள் எல்லாம் .. ஏக்கங்கள் எல்லாம்
நிறைவேற்றி முடித்தீரே உமக்கே எம் நன்றி – 2 – நன்றி

எத்தனை நாவுகள் எத்தனை வார்த்தைகள்
சொல்லி துதித்தாலும் போதாதய்யா – 2 – நன்றி

Thanneerai Kadakumpoothu – தண்ணீரை கடக்கும்போதும்

Thanneerai Kadakumpoothu
தண்ணீரை கடக்கும்போதும்
என்னோடு இருப்பவரே
வெள்ளங்கள் புரளாமல்
என்னை என்றும் காப்பவரே – 2

அக்கினியில் நடந்தாலும்
சோதனைகள் சூழ்ந்தாலும்
தப்புவித்து காப்பவரே – என்னை
அன்பால் அணைப்பவரே – அக்கினியில்.. தண்ணீரை

எரிகோவின் மதில்களெல்லாம்
உடைத்தவரே – எங்கள்
வாழ்விலும் எதிர்த்து நிற்கும்
தடைகளை உடைப்பீரே – 2
கானானை சொந்தமாய்
தேவ ஜனம் பெற்றனரே
பரலோக கானானை
எங்களுக்கும் தருவீரே –(கானானை) தண்ணீரை

பார்வோனின் சேனையெல்லாம்
தொடர்ந்த போதும் – பெரும்
செங்கடலை பிளந்து
உம் ஜனத்தை நடத்தினீரே – 2
பகலிலே மேகஸ்தம்பம்
இரவிலே அக்கினிஸ்தம்பம்
அற்புதமாய் நடத்தினதே
எங்களையும் நடத்துவீரே – (பகலிலே) தண்ணீரை

Thai Maranthallum – தாய் மறந்தாலும் அவர் உன்னை

Thai Maranthallum
தாய் மறந்தாலும் அவர் உன்னை
ஒரு போதும் மறப்பதில்லை
உள்ளங்கையில் உன்னை வரைந்தவர்
ஒரு போதும் விடுவதில்லை.- 2 — ஆஹ் ஆஹ் அல்லேலூயா

பெற்றோர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை கைவிட்டாலும் – 2
உள்ளங் கையில் உன்னை வரைந்தவர்
உன்னை ஒரு போதும் மறப்பதில்லை – 2 – தாய்

நம்பினோர் கைவிட்டாலும்
நண்பர்கள் விலகிட்டாலும் – 2
நல்ல நண்பர் நம் ஏசுவே
உன்னை ஒரு போதும் கை விடாரே – 2
உண்மை நண்பர் நம் ஏசுவே
உன்னை ஒரு போதும் கை விடாரே –(தாய்)
அன்பானவர் மறைந்தரோ
ஆதரவை இழந்தாயோ – 2

ஆறுதலின் தேவன் யேசுவே
உன்னை தேற்றி ஆற்றி நடத்திடுவார் – 2 – தாய்

Ullagam Unnai Verutha Nilayillum – உலகம் உன்னை வெறுத்த நிலையிலும்

Ullagam Unnai Verutha Nilayillum
உலகம் உன்னை வெறுத்த நிலையிலும்
உற்றாரும் உன்னை கைவிட்ட வேளையிலும்
நண்பர்கல் உன்னை பிரிந்த நிலையிலும்
நம்பின உன் பிள்ளையும் மறந்தாலும் – 2
உண்மையாய் நேசிக்கும் அன்பொன்றுண்டு!
அழியாத, நிலையான அன்பொன்றுண்டு – ஆமென் – உண்மையாய்
அந்த அன்பு – இயேசு அன்பு!
உண்மை அன்பு – அது உயர்ந்த அன்பு! – 2

பாவத்தை போக்கிட்ட அன்பு
நம் சாபத்தை முறித்திட்ட அன்பு
நம்மையே மீட்டிட்ட அன்பு
மரணத்தை ஜெயித்திட்ட அன்பு (பாவத்தை)
Chorus – அந்த அன்பு . . .
(உலகம்) அழியாத — அந்த அன்பு

உம்மையே நேசிப்பேன் ஏசுவே
முழு மனதோடு ஏசுவே
என் முழு பெலத்தோடு ஏசுவே

என் முழு ஆத்மாவோடு(ஆன்மாவோடு) ஏசுவே – உம்மையே – நேசிப்பேன் – – – –
உந்தன் அன்பு அது மாறாதது
அழியாதது .. அது நிலையானது ஆமென் ..

Enthan Aathumave – எந்தன் ஆத்துமாவே

Enthan Aathumave
எந்தன் ஆத்துமாவே
ஏன் இன்னும் கலங்குகின்றாய்
உந்தன் நேசர் இயேசு
உன்னோடு இருக்கின்றாரே – (2)

கண்ணீர் கவலை நேரம்
நீ கலங்கி தவிக்கின்றாயோ – 2
கண்ணீரை துடைக்கும் இயேசு
உன்னோடு இருக்கின்றாரே – 2 – எந்தன்

முடிந்து போனதென்று
நீ முடிவு செய்திட்டாயோ – 2
விரைவில் நல்ல முடிவு
நிச்சயமாய் இயேசு தருவார் – 2 – எந்தன்

பாவ பாரம் சுமந்து நீ
தள்ளாடி தவிக்கின்றாயோ – 2
உனக்காக சிலுவை சுமந்த (நமக்காக)
இயேசு உன்னை(நம்மை) சுமப்பார் – 2 – எந்தன்

நம்மோடு இறக்கின்றாரே

Kirubai Kirubai – கிருபை கிருபை

Kirubai Kirubai

கிருபை கிருபை
என்றுமுள்ள தேவ கிருபை – 2

கஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
நஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
கண்ணீரை துடைக்கும் உம் கிருபை
கரம் பிடித்து நடத்தும் கிருபை – கண்ணீரை – கிருபை (2)

பெலவீன நேரத்திலும் உம கிருபை
(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை
சோர்ந்து போன நேரத்திலும் கிருபை
என்னை(நம்மை) சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை சோர்ந்து — கிருபை

தாழ்மை உள்ளவருக்கு கிருபை
தாராளமாய் கிடைக்குமே கிருபை – தாழ்மை
தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபை
அவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை – தெய்வ –– கிருபை

Aarathanai Thuthi Arathanai – ஆராதனை துதி ஆராதனை

Aarathanai Thuthi Arathanai
ஆராதனை துதி ஆராதனை
என்றென்றும் யேசுவுக்கே -2
எல்லா துதிக்கும் கனத்திற்கும்
நீர் பாத்திரரே
எல்லா மகிமைக்கும் மாட்சிமைக்கும்
பாத்திரரே – 2 – ஆராதனை

1. நீரே கர்த்தர் – நீரே தேவன்
ராஜாதி ராஜா நீரே – 2 – எல்லா துதிக்கும்

2. வல்லவரே – நீர் நல்லவரே
மகத்துவமானவரே – 2 – எல்லா துதிக்கும்

3. நீரே வழி .. நீரே சத்தியம்
நீரே என் ஜீவனுமே – 2 – எல்லா
என்றென்றும் யேசுவுக்கே (3)

Aaradhanai Aaradhanai Aaradhanai – ஆராதனை ஆராதனை ஆராதனை

Aaradhanai Aaradhanai
ஆராதனை (ங) ஆராதனை (க)
ஆராதனை (ங) ஆராதனை (க)
ஆராதனை (ங) ஆராதனை (க)
ஆராதனை செய்வோமே அல்லேலூயா (4)
1. ஆராதனை செய்வோமே!
உன்னத தேவனுக்கே!
2. ஆராதனை செய்வோமே!
உத்தமர் இயேசுவுக்கே!
3. ஆராதனை செய்வோமே!
அக்கினியானவர்க்கே!
4. ஆராதனை செய்வோமே!
ஆருயிர் தேவனுக்கே!
5. ஆராதனை செய்வோமே!
அபிஷேக நாதனுக்கே! – ஆராதனை

1. ஆராதனை செய்வோமே!
மாட்சிமை தேவனுக்கே!
2. ஆராதனை செய்வோமே!
மன்னாதி மன்னனுக்கே!
3. ஆராதனை செய்வோமே!
பரிசுத்த தேவனுக்கே!
4. ஆராதனை செய்வோமே!
ராஜாதி ராஜனுக்கே!
5. தேவாதி தேவனுக்கே
உயிருள்ள நாளெல்லாமே! – ஆராதனை (5)
அல்லேலூயா (4)