All Songs by Prabhu Isaac

Anbe Thooya Anbe – அன்பே தூய அன்பே

Anbe Thooya Anbe

அன்பே தூய அன்பே
உந்தன் மறுபெயர் இயேசுவோ
உந்தன் நீளம், உந்தன் அகலம்
உந்தன் ஆழம், உந்தன் உயரம்
அதை அளவிட முடியாதய்யா
அதை இயேசுவே தருவாரய்யா – அன்பே

1. உலகம் உன்னை வெறுத்திட்டாலும்
உற்றார் உன்னை பகைத்திட்டாலும்
அவர் அன்பென்றும் வெறுக்காதையா
அந்த அன்பொன்றே அழியாதைய்யா – அன்பே

2. சகலமும் அன்பு சகிக்கும்
சகலமும் அந்த அன்பு தாங்கும்
அந்த அன்பொன்றே மேலானது
அந்த அன்பையே நாடிடுவோம் (வாய்) – அன்பே

Thuthippen Thuthippen – துதிப்பேன் துதிப்பேன்

Thuthippen Thuthippen

துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டிருப்பேன்
போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் வணங்குவேன்
வல்லவர் இயேசுவே – துதிப்பேன்

1. சூரியனே சந்திரனே
வான்வெளி நட்சத்திரமே
இயேசுவை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அவர் அன்பு என்றும் மாறாதது – துதிப்பேன்

2. மலைகளே குன்றுகளே
மலர்களே மச்சங்களே
இயேசுவைத் துதியுங்கள்
அற்புதர் அற்புதரே அவர்
அதிசயமானவரே – துதிப்பேன்

3. வாலிபரே கன்னியரே
பிள்ளைகளே பெரியவரே
இயேசுவைத் துதியுங்கள்
கர்த்தாதி கர்த்தர் இவரே – இவர்
ராஜாதி ராஜன் தானே – துதிப்பேன்

Kanmalaiyin Kural Ithuve – கன்மலையின் குரல் இதுவே

Kanmalaiyin Kural Ithuve

கன்மலையின் குரல் இதுவே
ஆண்டவர் இயேசுவின்
அருள்மொழி கூறிடுவேன் – நற்செய்தி

1. இயேசென்று சொன்னாலே
யார் என்று கேட்டிடும்-2
எண்ணற்ற மாந்தர்க்கு
நற்செய்தி யார் சொல்லுவார்?
என்னை நான் தருகின்றேன்
ஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ…
பார்புகழ் போற்றும் எங்கள் இயேசு
தேவன் அன்பினையே – நற்செய்தி

2. அறிந்தும் அறியாமல்
தெரிந்தும் தெரியாமல்-2
வாழும் மாந்தர்க்கு
சத்தியத்தை யார் சொல்வார்
உன்னையே தந்திடுவாய்
எழும்பி நீ புறப்படுவாய்
பார் புகழ் போற்றும் இயேசுநாதன்
அன்பை என்றும் சொல் – நற்செய்தி

Neethiman Selithu Vaalvan – நீதிமான் செழித்து வாழ்வான்

Neethiman Selithu Vaalvan
நீதிமான் செழித்து வாழ்வான்
நீதிமான் பனையைப் போல
செழித்து வாழ்வான்
லீபனோனின் கேதுருவாய்
வளருவான் (2)

1. தீமையை வெறுத்திடுங்கள்
நன்மையே செய்திடுங்கள்
கர்த்தர் நம்மோடிருப்பார் – நம்மை
செழிப்படைய செய்வார் – நீதி

2. கலங்கிடாதிருங்கள்
கண்ணீர் விடாதிருங்கள்
கர்த்தரின் சாட்சிகளாய் – நம்மை
செழிப்படைய செய்வார் – நீதி

3. சிறுமைப்பட்ட நாட்கள்
துன்பத்தின் வருடங்கள்
சரியாய் மகிழ்ச்சியாக்குவார் – நம்மை
செழிப்படையச் செய்வார் – நீதி

4. ஆகாரத்தை தண்ணீரில் போடு
அநேக நாள் பிறகு அதின் பலனை
களிகூர்ந்து காணச் செய்வார் – நம்மை
செழிப்படையச் செய்வார் – நீதி

Karthar Periyavar – கர்த்தர் பெரியவர்

Karthar Periyavar

கர்த்தர் பெரியவர் – நம் அப்பா பெரியவர்
தேவன் பெரியவர் நம் இயேசு பெரியவர்

1. அன்னாளைப் போல கர்த்தரிடம்
இருதயத்தை ஊற்றிவிடுங்கள்
அன்னாளை நினைத்த பெரியவர்
நம்மையும் நினைத்திடுவார்

2. சாலமோனைப் போல கர்த்தரிடம்
ஞானத்தை(யே) கேளுங்கள்
அந்த ஞானத்தை தந்த பெரியவர்
நமக்கு நிச்சமாய் தந்திடுவார்

3. எலியாவைப் போல கர்த்தருக்காய்
பெருங்காரியம் செய்திடுங்கள் – அன்று
எலிசாவை நடத்திய தேவனே
இன்று நம்மையும் நடத்துவார்

Siragoditha Paravai – சிறகொடித்த பறவை

Siragoditha Paravai

சிறகொடித்த பறவைப்போல
சிறையினிலே வாடினேன் நான்
விடுதலை நான் எப்போது
கலங்கியே நான் துடித்தேன் நான் – சிறகொடிந்த

1. உன் தகப்பன் மரித்திடுவான்
உன் மனைவி தவித்திடுவாள் (2)
உன் பிள்ளைகள் அநாதையாவார் – உன்
குடும்பம் சிதைந்துவிடும்
என்று சொல்லி சாத்தானே
குலைத்திடுவான் உன் அமைதியினை – சிறகொடிந்த

2. குழப்பங்களும் திகில் பயமும்
சூழ்ந்திடவே திகைத்தேன் நான்
என் தேவனே என் இயேசுவே
ஏன் என்னைக் கைவிட்டீர்
கதறினேன் நான் புலம்பினேன் நான்
ஆற்றிடவோ ஒருவரில்லை – சிறகொடிந்த

Yen Intha Sothanai – ஏன் இந்த சோதனை?

Yen Intha Sothanai

ஏன் ஏன் ஏன் இந்த சோதனை?
ஏன் ஏன் ஏன் இந்த வேதனை?
என்று கலங்கி தவித்து நிற்கும்
சூழ்நிலையோ?
எபிநேசர் இயேசு உன்னை தாங்கிடுவார்
உன் துக்கமெல்லாம் மாற்றிடுவார்
திகைத்திடுவார் (ய்)
உன் கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கலங்கிடாதே (2) – ஏன் ஏன் (2)

1. உலகத்திலே உபத்திரவம் வந்திடலாம்
ஆனாலும் நீ பலங்கொண்டு திடனாயிரு (2)
இந்த உலகத்தையே ஜெயித்துவிட்டார் சிலுவையிலே
அந்த நித்திய வாழ்வை உனக்காக தருவதற்காய் (2) – ஏன் ஏன் (2)

2. இமைப்பொழுது அவர் உன்னை கைவிடலாம்
ஆனாலும் நீ மனந்தளர்ந்து சோர்ந்திடாதே
உருக்கமான இரக்கத்தினால் இரங்கிடுவார்
தம் அரவணைக்கும் கரங்களினால் சேர்த்துக் கொள்வார் – ஏன் ஏன் (2)