Song Category: Tamil

Oru Varthai Sollum – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

Oru Varthai Sollum

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே

உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்

1. மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே

2. இருளான வாழ்க்கை எல்லாம்
செழிப்பாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே

3. எரிகோவின் தடைகள் எல்லாம்
துதிகளாலே மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே

4. வியாதிகள் வறுமையெல்லாம்
விசுவாசத்தால் மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே

5. தீராத நோய்கள் எல்லாம்
வாராதே நீங்கிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே

Oru Vaarthai Sollum Karthaave
Engal Vaazhkkai Ellaam Sezhipaagume

Um Vaarthaiyile Sugam
Um Vaarthaiyile Madhuram
Um Vaarthaiyile Ellaam Santhosham

1. Maaraavin Thanneerellaam
Madhuramaaga Maaripogum
Kanneer Maaridum Thukkam Maaridum
Oru Vaarthai Sonnaal Podhume

2. Irulaana Vaazhkkai Ellaam
Sezhipaaga Maaripogum
Kanneer Maaridum Thukkam Maaridum
Oru Vaarthai Sonnaal Podhume

3. Erigovin Thadaigal Ellaam
Thuthigalaale Maaripogum
Kanneer Maaridum Thukkam Maaridum
Oru Vaarthai Sonnaal Podhume

4. Vyathigal Varumaiyellaam
Visuvaasathaal Maaripogum
Kanneer Maaridum Thukkam Maaridum
Oru Vaarthai Sonnaal Podhume

5. Theeraatha Noygal Ellam
Vaaraathe Neengipogum
Kanneer Maaridum Thukkam Maaridum
Oru Vaarthai Sonnaal Podhume

Athuma Nesare – ஆத்தூம நேசரே

Athuma Nesare
ஆத்தூம நேசரே அழகின் சிகரமே ஆயிரங்களிலும் ஆயிரங்களிலும் (2)

Yeshua (2)

My beloved is the most beautiful
Among thousands and thousands (2)

Yeshua (3)

ராஜ்ஜியமும் வல்லமையும் மகிமையும் உமதென்றும் ஆமென்(2)

Yours is the kingdom Yours is the power
Yours in the glory forever Amen (2)

Yeshua (4)

ராஜ்ஜியமும் வல்லமையும் மகிமையும் உமதென்றும் ஆமென்(2)

Yours is the kingdom Yours is the power
Yours in the glory forever Amen (2)

Yeshua (2)

Uyirodu Oor Uyiraga – உயிரோடு ஓர் உயிராக

Uyirodu Oor Uyiraga

உயிரோடு ஓர் உயிராக
ஒன்றில் ஒன்றாக
கலந்தவனே ….
என்னில் கரைந்தவனே …

எலும்போடு எலும்பாக என்
சதையோடு சதையாக என்
நரம்போடு நரம்பாக என்
ரத்தத்தில் ரத்தமாக என்
உடல் முழுதும் கலந்தவனே என்
உயிரிலும் கரைந்தவனே

நினைவோடு நினைவாக என்
கனவோடு கனவாய் என்
பேச்சோடு பேச்சாய் என்
மூச்சோடு மூச்சாய்
என்னிலே என்னை தேடினாலும்
உனைத்தான் காண கூடும்

நீ இன்றி ஒரு நொடியும்
நான் வாழ்த்திட கூடுமோ ?
நீ இல்லா வாழ்வுதனை
நான் வாழ்த்திட வேண்டுமோ ?
வாழ்வில் எதை இழந்தாலும்
உன்னை இழந்திடுவேனோ ?

எனக்காக வாழ்பவன் நீ
உன் அன்பிலே விழ்ந்தவள் நான்
வருவேன் என்று கூறி
தூர திசையில் நின்று
என் நெஞ்சை ஏங்க வைத்தாயே
எப்போது நீ வருவாயோ
எப்போது உன்னை நான் காண்பேனோ

Udainthu Poona Paathiram Naan – உடைந்து போன பாத்திரம் நான்

Udainthu Poona Paathiram Naan
உடைந்து போன பாத்திரம் நான்
காயங்களோடு நிட்கின்றேனே
நீரில்லா உலகில் யாருண்டு ?
என்னை ஆற்றிட தேற்றிட யாருண்டு ?

மாமிச எண்ணங்கள் ஈரத்ததால்
உம் கிருபை அன்பை இழந்தேனே
இன்று என் குறைகளை உணர்ந்துள்ளேன்
தயவாய் என்னை ஏற்றுக்கொள்ளும்
இரவு முழுதும் அழுகின்றேன்
செய்த தவறை உணர்ந்துள்ளேன்
உன் பெலத்தால் என்னை இடைக்கட்டும் பாதை நடக்க தயை செய்யும் .

வியாதியின் பயங்கள் மேற்கொள்ளுதே
மரண இருளோ ஆட்கொள்ளுதே
வேதத்தில் காணும் அற்புதங்கள்
என் ஜெபம் மூலமும் நடக்குமோ?
என் ஜீவன் உள்ள நாட்களெல்லாம்
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் என்பேன்
நிச்சயம் சாட்சியாய் வாழுவேன்
உம் , அன்பின் சின்னமாய் மாறுவேன்

முயற்சி தோல்வியில் முடிந்தாத்தால்
கணுவுகள் எல்லாம் கலைந்ததால்
உறவுகள் என்னை வெறுத்ததே
தனிமையில் நான் நிட்கின்றேனே
சோர்ந்து போய் நான் அழுகின்றேன்
பெலன் இல்லாமல் தவிக்கின்றேன்
நான் எதிர்பார்க்கும் முடிவை நீர்
என்னக்காய் துவங்கி வைப்பீரே.

Raja Neer Seitha Nanmaigalai – இராஜா நீர் செய்த நன்மைகளை

Raja Neer Seitha Nanmaigalai
இராஜா நீர் செய்த நன்மைகளை
என்றென்றும் நினைத்து துதித்திடுவேன்
இராஜா நீர் செய்த நன்மைகளை
என்றென்றும் நினைத்து மகிழ்ந்திடுவேன்

நீர் நல்லவரே, சர்வ வல்லவரே,
என்றென்றும் பெரியவரே
அல்லேலூயா (8)

1. என் வாழ்வில் நீர் செய்த நன்மைகளை
எண்ணியே என்றென்றும் துதித்திடுவேன்
நல்லவரே, நன்மை செய்பவரே
நாள்தோறும் உம்மை துதிப்பேன்
அல்லேலூயா (8)

2. தோல்விகளை ஜெயமாக மாற்றினீரே
ஸ்தோத்திர பலியிட்டு துதித்திடுவேன்
எனக்காக யாவும் செய்து முடிப்பவரே
ஜீவனுள்ளவரை துதிப்பேன்
அல்லேலூயா (8)

3. திக்கற்று அறியாமல் திகைத்தபோது
கரம் பிடித்து நடத்தியதால் துதித்திடுவேன்
பாதைக்கு தீபமாக வந்தவரே
பணிவுடன் தொழுதிடுவேன்
அல்லேலூயா (8)

Lyrics and Sung by : Dr. S. Justin Samuel

Neengaatha Perinbame – நீங்காத பேரின்பமே

Neengaatha Perinbame

நீங்காத பேரின்பமே நிலையற்ற வாழ்வினிலே
நிம்மதி தருபவரே நீரே என் இயேசு ராஜா

1. பாவியாய் அலைந்தேன் தேடியே வந்தீர்
துரோகியாய் திரிந்தேன் என்னை கண்டுபிடித்தீர்
பாசம் வைத்து என்னை இரட்சித்தீரே
உம் நேச அன்பால் என்னை மூடினீரே

2. உம் சத்தம் கேட்பேன் உம் சித்தம் செய்வேன்
உருமாற்றம் அடைவேன் உம் ஆவியினால்
எனக்காக ஜீவனை தந்தீரேசுவே
அதை என்றும் என் வாழ்வில் மறப்பேனோ

3. பரலோக வாஞ்சை பரிசுத்தர் சிநேகம்
தந்தீரே உம் கிருபையினால்
நித்திய ஜீவனை (நான்) பெற்றிடவே
(உம்) நிலைவர ஆவியால் நிரப்பிடுமே
Lyrics and Sung by : Dr. S. Justin Samuel

Nantri Solven Naan – நன்றி சொல்வேன் நான்

Nantri Solven Naan
நன்றி சொல்வேன் நான் நன்றி சொல்வேன்
எந்தன் இயேசுவே நான் உமக்கு நன்றி சொல்வேன்

நன்றி ராஜா எந்தன் இயேசு ராஜா (8)

1. இரட்சகரே உமக்கு நன்றி சொல்வேன்
என்னை இரட்சித்தீரே உமக்கு நன்றி சொல்வேன்
(நன்றி ராஜா …)

2. ராஜாதி ராஜனுக்கு நன்றி சொல்வேன்
எங்கள் தேவாதி தேவனுக்கு நன்றி சொல்வேன்
(நன்றி ராஜா …)

3. வரங்களை தருபவர்க்கு நன்றி சொல்வேன்
வல்லமை தருபவர்க்கு நன்றி சொல்வேன்
(நன்றி ராஜா …)
Lyrics and Sung by : Dr. S. Justin Samuel

Maatridum Ennai Maatridum – மாற்றிடும் என்னை மாற்றிடும்

Maatridum Ennai Maatridum
மாற்றிடும் என்னை மாற்றிடும்
உமக்கு உகந்த பாத்திரமாக

1. என்னை நானே இது வரை ஆளுகை செய்தது போதுமையா
என் ஆவி, ஆத்மா, சரீரம் யாவும் உமக்கு சொந்தமையா
என் ஆவி, ஆத்மா, சரீரம் யாவையும் நீரே ஆளுமையா

ஆட்கொள்ளும் என்னை ஆட்கொள்ளும்
உமக்கு உகந்த பாத்திரமாக

2. கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரரே உம்மை துதித்திடுவேன்
உம் மகிமைக்குரிய பாத்திரமாக என்னை வனைந்திடுமே

வனைந்திடும் என்னை வனைந்திடும்
உமக்கு உகந்த பாத்திரமாக

3. உம்மாலன்றி என்னால் எதுவும் செய்ய முடியாதையா
உம் வல்லமை வரங்கள் தந்து என்னை பயன்படுத்துமையா

பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
உமக்கு உகந்த பாத்திரமாக
Lyrics and Sung by : Dr. S. Justin Samuel

Enakkaga Yavaiyum Seithu Mudippar – எனக்காக யாவையும் செய்து முடிப்பார்

Enakkaga Yavaiyum Seithu Mudippar
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
அவரே என்னை அழைத்ததால்
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
அவரே எனக்குள் இருப்பதால்

பயமில்லை, பயமில்லை
இயேசு என்னோடு இருப்பதால்

1. என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
வாக்கு மாறிடா நல்ல கர்த்தர்
வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
கீழாக்காமல் என்னை மேலாக்குவார்

2. யாக்கோபைப்போல் பயந்திருந்தேன்
எலியாவைப்போல் சோர்ந்து போனேன்
நல்லவராம் இயேசு நாடி வந்தார்
வெற்றி மேல் வெற்றியை எனக்கு தந்தார்

3. எதிரிகள் என்னை சூழ்ந்திட்டாலும்
நண்பர்கள் என்னை கைவிட்டாலும்
பயமில்லை, பயமில்லை
அவரே எனக்காய் யுத்தம் செய்வார்

Lyrics and Sung by : Dr. S. Justin Samuel

Kadugalau Visuvaasam Irundhaal Poadhum – கடுகளவு விசுவாசம் இருந்தால் போதும்

Kadugalau Visuvaasam Irundhaal Poadhum
கடுகளவு விசுவாசம் இருந்தால் போதும்
கலக்கு கலக்குன்னு உலகை கலக்கிடலாமே
கர்த்தர் மேல நம்பிக்கை இருந்தா போதும்
கர்த்தர் உன்னை மென்மேலும் உயர்த்திடுவாரே (2)

ஒரு அன்புள்ள தெய்வம் உனக்கும் எனக்கும் உண்டு
மறந்து போகாதே என்றும் மறந்து போகாதே (2)

தாய் தன் பாலகனை மறந்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை என்று சொன்னார் (2)
ஒரு அன்புள்ள தெய்வம் உனக்கும் எனக்கும் உண்டு
மறந்து போகாதே என்றும் மறந்து போகாதே (2)
– கடுகளவு

நானே நல்ல மேய்ப்பன் என்று சொன்னார்
நம்பி வந்தால் நித்ய வாழ்வு உனக்கு உண்டு (2)
ஒரு அன்புள்ள தெய்வம் உனக்கும் எனக்கும் உண்டு
மறந்து போகாதே என்றும் மறந்து போகாதே (2)
– கடுகளவு

Kadugalau Visuvaasam Irundhaal Poadhum
Kalakku Kalakunu Ulagai Kalakkidalaamae
Karthar Maelae Nambikkai Irundhaa Poadhum
Karthar Unnai Menmaelum Uyarthiduvaarae (2)

Oru Anbulla Dheivam Unakkum Enakkum Undu
Marandhu Poagaadhae Endrum Marandhu Poagaadhae (2)

Thai Than Paalaganai Marandhaalum
Naan Unnai Marappadhillai Endru Sonnaar (2)
Oru Anbulla Dheivam Unakkum Enakkum Undu
Marandhu Poagaadhae Endrum Marandhu Poagaadhae (2)
– Kadugalavu

Naanae Nalla Maeippan Endru Sonnaar
Nambi Vandhaal Nithya Vaazhvu Unakku Undu (2)
Oru Anbulla Dheivam Unakkum Enakkum Undu
Marandhu Poagaadhae Endrum Marandhu Poagaadhae (2)
– Kadugalavu