Song Tags: கீர்த்தனை பாடல்கள்

Baktharudan Paaduvaen – பக்தருடன் பாடுவேன்

Baktharudan Paaduvaen

பல்லவி

பக்தருடன் பாடுவேன் – பரமசபை
முக்தர்குழாம் கூடுவேன்

அனுபல்லவி

அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்
இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் – பக்தருடன்

சரணங்கள்

1. அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
அன்பர் என் இன்பர்களும்,
பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்
என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் – பக்தருடன்

2. இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க் – கு
அகமும் ஆண்டவன் அடியே,
சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,
இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே – பக்தருடன்

3. தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்
சேயன் கண் மூடுகையில்,
பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி,
தூயா, திருப்பாதத் தரிசனம் தந்தருள் – பக்தருடன்

Ivare Peruman – இவரே பெருமான்

Ivare Peruman

பல்லவி
இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான் – இவரே பெருமான்

சரணங்கள்

1. கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறு
பவவினை யாதுமே தெரியார் – இப்
புவனமீது நமக்குரியார் – இவரே

2. குருடர்களுக் குதவும் விழியாம் – பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம்
இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் – இவரே

3. பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும்
வலமையில் மிக்க விபகாரி – எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி – இவரே

4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் – கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன் – இங்கே
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் – இவரே

5. அலகை தனை ஜெயித்த வீரன் – பவ
உலகை ரட்சித்த எழிற்பேரன் – விண்
ணுலகு வாழ் தேவ குமாரன் – இவரே

6. பொன்னுலகத் தனில்வாழ் யோகன் – அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் – நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன் – இவரே

Neer Illatha Naalellam – நீ இல்லாத நாளெல்லாம்

Neer Illatha Naalellam
நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்
உண்மையின் வழியே நீ ஆவாய்
உறவின் பிறப்பே நீ ஆவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்

2. எனது ஆற்றலும் நீ ஆவாய்
எனது வலிமையும் நீ ஆவாய்
எனது அரணும் நீ ஆவாய்
எனது கோட்டையும் நீ ஆவாய்

3. எனது நினைவும் நீ ஆவாய்
எனது மொழியும் நீ ஆவாய்
எனது மீட்பும் நீ ஆவாய்
எனது உயிர்ப்பும் நீ ஆவாய்

Neer Illatha Naalellam Naalaguma
Nee illatha vaalvuellam vaalva aguma

1. Uyirin uttrae nee aavai
Unmaiyin valiye nee aavai
Uravin pirape nee aavai
Ulathil magilve nee aavai

2. Yenathu aatralum nee aavai
Yenathu valimaiyum nee aavai
Yenathu aranum nee aavai
Yenathu kottaiyum nee aavai

3. Yenathu ninaivum nee aavai
Yenathu mozhiyum nee aavai
Yenathu meetpum nee aavai
Yenathu uyirupum nee aavai

Enge Oduven – எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்

Enge Oduven
எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ, நிலவிற்கோ
எங்கே ஓடுவேன்

1. மலைகளே குன்றுகளே
மறைத்துக் கொள்ளுங்களே
நீதிபரர் வருகின்றார்
ஐயோ நான் அதமானேன் – எங்கே ஓடுவேன்

2. என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்
உந்தன் தஞ்சம் நானே
அழைக்கின்றார் இயேசு ராஜன்
வந்தேன் அடிமை இதோ – எங்கே ஓடுவேன்

ஓடி வந்தேன் இதோ
உம் காயம் என் தஞ்சமே
அடைக்கலம் புகுந்தேன்

Anbin Devan Yesu Unnai Azhaikirar – அன்பின் தேவன் இயேசு

Anbin Devan Yesu Unnai Azhaikirar
அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார்
அவரின் குரலைக் கேட்ட பின்னும் தயக்கமேன்
கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
கவலையேன் கலக்கமேன் கர்த்தர் இயேசு அழைக்கிறார்
உன்னை எண்ணி உள்ளம் நொந்து அணைக்க இயேசு துடிக்கிறார்

1. மனிதர்கள் அன்பு மாறலாம்
மறைவாக தீது பேசலாம்
அன்பு காணா இதயமே
அன்பின் தேவனை அண்டிக்கொள்

2. வியாதிகள் தொல்லைகள் தோல்வியோ
வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
கலங்காதே – மன்னன் இயேசு பார்

3. வேலை வசதிகள் இல்லையோ
வீட்டினில் வறுமை தொல்லையோ
மரண பயமும் நெருங்குதே
மரணம் வென்ற இயேசு பார்