Song Tags: DGS Dhinakaran Songs Online

Baktharudan Paaduvaen – பக்தருடன் பாடுவேன்

Baktharudan Paaduvaen

பல்லவி

பக்தருடன் பாடுவேன் – பரமசபை
முக்தர்குழாம் கூடுவேன்

அனுபல்லவி

அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்
இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் – பக்தருடன்

சரணங்கள்

1. அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
அன்பர் என் இன்பர்களும்,
பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்
என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் – பக்தருடன்

2. இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க் – கு
அகமும் ஆண்டவன் அடியே,
சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,
இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே – பக்தருடன்

3. தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்
சேயன் கண் மூடுகையில்,
பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி,
தூயா, திருப்பாதத் தரிசனம் தந்தருள் – பக்தருடன்

Thuthipaen Yesuvin Patham – துதிப்பேன் இயேசுவின் பாதம்

Thuthipaen Yesuvin Patham

துதிப்பேன் இயேசுவின் பாதம்
துதிக்கப் பெறும் அற்புதர் ஆனதால் – 2
வணங்குவேன் வணங்குவேன் (2)
வணங்குவேன் அவர் பாதம் வீழ்ந்து நான் – 2

1. பேயின் தலை மிதித்தவர்
நோயின் பெலன் அழித்தவர் – 2
போற்றுவேன் போற்றுவேன் (2)
போற்றுவேன் இயேசு தேவசுதனை – 2 (…துதிப்பேன்)

2. வானம் பூமியும் அடங்கா
வல்ல அற்புதர் ஆனதால் – 2
அற்புதர் அற்புதர் (2)
அற்புதர் அவர் நாமமே அதை – 2 (…துதிப்பேன்)

3. ஜே ஜே ஜெயக்குமாரனும்
ஜெயம் பெற்று விளங்கினார் – 2
ஜொலிப்பரே ஜொலிப்பரே (2)
ஜொலிப்பரே அவர் தாசர் என்றைக்கும் – 2 (…துதிப்பேன்)

4. தூதர் கூட்டங்கள் போற்றும்
தூய சுந்தரராம் இவர் – 2
மகத்வமே மகத்வமே (2)
மகத்வமே அவர் ராஜ்யம் என்றைக்கும் – 2 (…துதிப்பேன்)

5. செல்வேன் இயேசுவின் பாதம்
சொல்வேன் உள்ளத்தின் பாரம் – 2
மகிழுவேன் மகிழுவேன் (2)
மகிழுவேன் அவர் வார்த்தையில் என்றும் – 2 (…துதிப்பேன்)

Thuthippen Yesuvin Paatham
Thuthikka Perum Arputhar Aanathaal – 2
Vananguven Vananguven (2)
Vananguven Avar Paatham Veezhnthu Naan – 2

1. Peyin Thalai Mithiththavar
Noiyin Belan Azhiththavar – 2
Pottruven Pottruven (2)
Pottruven Yesu Devasuthanai – 2 (…Thuthippen)

2. Vaanam Boomiyum Adangaa
Valla Arputhar Aanathaal – 2
Arputhar Arputhar (2)
Arputhar Avar Naamame Athai – 2 (…Thuthippen)

3. Jae Jae Jeyakumaaranum
Jeyam Pettru Vilanginaar – 2
Jolippare Jolippare (2)
Jolippare Avar Thaasar Endraikkum – 2 (…Thuthippen)

4. Thoothar Koottangal Pottrum
Thooya Sunthararaam Ivar – 2
Magathvame Magathvame (2)
Magathvame Avar Raajyam Endraikkum – 2 (…Thuthippen)

5. Selven Yesuvin Paatham
Solven Ullaththin Baaram – 2
Magizhuven Magizhuven (2)
Magizhuven Avar Vaarththaiyil Endrum – 2 (…Thuthippen)

Yesu Azhaikiraar – இயேசு அழைக்கிறார்

Yesu Azhaikiraar
இயேசு அழைக்கிறார் – 2
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் – 2

1. எத்துன்ப நேரத்திலும்
ஆறுதல் உனக்களிப்பார் – 2
என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் – 2 (இயேசு அழைக்கிறார்)

2. கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணிபோல் காப்பார் – 2
கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
கனிவோடே உன்னைக் காத்திடவே – 2 (இயேசு அழைக்கிறார்)

3. சோர்வடையும் நேரத்தில்
ஆறுதல் உனக்களிப்பார் – 2
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய் – 2 (இயேசு அழைக்கிறார்)

4. சகல வியாதியையும்
குணமாக்க வல்லவராம் – 2
யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
கிருபையாய் அன்பை அளித்திடவே – 2 (இயேசு அழைக்கிறார்)

Yesu Azhaikiraar – 2
Aavalaai Unnai Tham Karangal Neetiye
Yesu Azhaikiraar – 2

1. Yeththumba Nerathilum
Aaruthal Unakkalippaar – 2
Endrunarnthu Neeyum Yesuvai Nokkinaal
Yellai Illaa Inbam Pettriduvai – 2 (Yesu Azhaikiraar)

2. Kaneerellam Thudaipaar
Kanmanipol Kaappaar – 2
Kaarmegam Pondra Kashtangal Vandhaalum
Kanivode Unnai Kaathidave – 2 (Yesu Azhaikiraar)

3. Sorvadaiyum Neraththil
Aaruthal Unakkalippaar – 2
Avar Un Velichcham Ratchippumaanathaal
Thaamathamindri Nee Vanthiduvaay – 2 (Yesu Azhaikiraar)

4. Sagala Vyathiyaium
Kunamaakka Vallavaraam – 2
Yaarayirunthaalum Pethangal Indriye
Kirubaiyaai Anbai Alithidave – 2 (Yesu Azhaikiraar)

Anbe Anbe Anbe Aaruyir Urave – அன்பே அன்பே அன்பே

Anbe Anbe Anbe Aaruyir Urave

அன்பே.. அன்பே..
அன்பே ஆருயிர் உறவே
ஆனந்தம் ஆனந்தமே (2)

1 . ஒரு நாள் உம் தயை கண்டேனையா
அந்நாளென்னை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா – என்மேல் (2)

2. அலைந்தேன் பலநாள் உமையும் அறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே – எனையும் (2)

3. பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப்போல்
வாடாதே ஐயா – அன்பு (2)

4. பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோ கரிலன்பேனையா?
ஆழம் அறிவேனோ – அன்பின் (2)

5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற் கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ – பரத்தில் (2)

Anbe Anbe
Anbe Aaruyir Urave
Aanandham Aanandhame (2)

1. Oru Naal Um Dhayai Kandenaiyaa
Annaal Ennai Veruththen Aiyaa
Um Dhayai Peridhaiyaa – En Mel (2)

2. Alaindhen Palanaal Umaiyum Ariyaa
Marandhe Thirindha Throgiyai
Anaiththeer Anbaale – Enaiyum (2)

3. Poologaththin Porulin Magimai
Azhiyum Pullin Poovai Pol
Vaadaadhe Aiyaa – Anbu (2)

4. Paralogaththin Arumai Porule
Naralo Garilanbenaiyaa
Aazham Ariveno – Anbin (2)

5. Ippaarinil Um Anbin Inimai
Iyambar Kiyalaathaagil Yaan
Isaikkavum Elidhaamo – Paraththil (2)