Song Tags: Durai Jasper Song Lyrics

Yellam Um Kirubaiye – எல்லாம் உம் கிருபையே

Yellam Um Kirubaiye

எல்லாம் உம் கிருபையே
உந்தனின் கிருபையே
கிருப கிருப கிருப கிருபையே

நிற்பதும் கிருபையே
உந்தனின் கிருபையே
நிர்மூலம் ஆகாததும் கிருபையே – நான்

எனக்கு போதுமே
உந்தனின் கிருபையே
பெலவீனத்தில் போதும் கிருபையே – என்

கைவிடா கிருபையே
உந்தனின் கிருபையே
வழுவாமல் காத்ததும் உம் கிருபையே – என்னை

நாள்தோறும் புதியதே
உந்தனின் கிருபையே
நாளெல்லாம் காப்பதும் உம் கிருபையே – என்னை

Seitrilirunthu Thuki Yeduthar – சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்

Seitrilirunthu Thuki Yeduthar

சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார்
கன்மலைமேல் என்னை நிறுத்தினார்
எந்தன் இயேசு என் ஆண்டவர்

பாவத்திலே நான் கிடந்தேன்
இயேசுவையோ நான் அறியேன்
இருளில் குளிரில் தனியாய் அலைந்தேன்
என்னை தேடி என் நேசர் வந்தார்

என் பாவங்கள் நீங்கினதே
ரத்தத்தாலே மீட்டெடுத்தார்
நீதியின் வஸ்திரம் எனக்கும் அளித்தார்
ஆலேலுயா நான் சுத்தமானேன்

Enthan Aathumave Kartharaiye – எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே

Enthan Aathumave Kartharaiye

எந்தன் ஆத்துமாவே கர்த்தரையே
என்றென்றும் ஸ்தோத்தரி
முழு உள்ளத்தோடு
கர்த்தரையே
உயர்த்தி பாடிடு

புதிய நாளிது ஸ்தோத்திரம் செய்வேன்
ஆராதிப்பேன் நான் உம்மையே
என்ன நடந்தாலும் ,எது நேரிட்டாலும்
நாளெல்லாம் பாடி உம்மை உயர்த்திடுவேன்

நித்திய தேவனே என் அருள் நாதா
உம் நாமத்தை நான் போற்றுவேன்
உந்தன் அன்பினை போற்றியே பாடி
வாழ்நாளெல்லாம் நான் உயர்த்திடுவேன்

மரண வாசலில் நின்றிடும் நேரம்
பரலோக வாசலில் சேர்ந்து நான்
உமது துதியை பாடுவேன் என்றும்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

Vali Thirapaare Devan – வழி திறப்பாரே தேவன்

Vali Thirapaare Devan

வழி திறப்பாரே
தேவன் வழி திறப்பாரே
நான் அறிந்திராத வழிகளில்
எனக்காக புது பாதைகள்
என்றும் நடத்திடுவார்
நம்மை அனைத்து காத்திடுவார்
நாள் தோறும் என்னை தெற்றியே
நடத்துவார் நம்மை, வழி திறப்பாரே

வனாந்தரத்தில் வழிபிறக்க செய்வாரே
வறண்ட பூமியில் ஆறுகள் காண்பேன்
இப்புவி ஒழிந்தாலும்
தேவ வார்த்தை அழியாதே
புதியதோர் காரியம் செய்வார்

Um Setaigalin Kel – உம் செட்டைகளின் கீழ்

Um Setaigalin Kel

உம் செட்டைகளின் கீழ்
மறைத்திடுமே
உம் கரங்களால்
எனை மறைத்திடுமே

கடல் கொந்தளித்தெழுந்தாலும்
புயல்களை நான் மேற்கொள்வேனே
ஜலத்தின் மேல் ஆளும் தேவன் நீர்
அமர்ந்திருது நீர் தேவன் என்பேன் – 2

ஆத்துமாவே
இளைப்பாறிடு
அமர்ந்திருந்து
அவர் வல்லமை உணர்ந்திடு

Enthan Meipare – எந்தன் மேய்ப்பரே என்னை

Enthan Meipare

எந்தன் மேய்ப்பரே
என்னை ஆண்டு நடத்துமே
நீர் நடத்தும் இடமெல்லாம்
பின் சென்றிடுவேன்
உம் சத்தம் கேட்கவே
செவிசாய்த்திடுவேனே
நீர் நடத்துமிடமெல்லாம் பின் செல்வேன்

பசுமையான மேய்ச்சலண்டை
அமர்ந்த தண்ணீர்கள்
என் மேய்ப்பர் என்னோடென்றும் தங்குவார்
தடைகள் மலையைப்போல நின்று
பள்ளத்தாக்குகள் நேர்ந்தாலும்
என் மேய்ப்பர் என்னை நடத்தி சென்றிடுவார்

Yaarum Illai Rajah – யாரும் இல்லை ராஜா

Yaarum Illai Rajah

யாரும் இல்லை ராஜா
உம்மை போல என்னை தொட்டவர்கள்
வாழ்நாள் எல்லாம் எங்கு தேடினாலும், காணேன்
யாரும் இல்லை ராஜா

உம் இரக்கங்கள் பெரும் நதியை போல்
நீர் தொட்டால் சுகம் உண்டு
உம் செட்டையின் கீழ் பாதுகாவலுண்டு
உம்மை போல் யாருண்டு

யாரும் இல்லை ராஜா
உம்மை போல என்னை தொட்டவர்கள்
வாழ்நாள் எல்லாம் எங்கு தேடினாலும், காணேன்
யாரும் இல்லை ராஜா

Karthare Nallavar – கர்த்தரே நல்லவர்

Karthare Nallavar

கர்த்தரே நல்லவர்
துதிப்பாடல்கள் பாடிட செய்திட்டார்
எந்நாளுமே அவர் நல்லவர்
அந்தகாரத்திலும் அவர் ஒளி வீசும்
நல்லவர் என்றுமே
என்றும் நல்லவரே

பள்ளத்தாக்கின் வழி நடந்து
எங்கும் இருளாய் தோன்றினால்
திகையாதே நடத்துவாரே
தீங்கு அனுகாமல் காத்திடுவார்
விலக மாட்டேன் கைவிடமாட்டேன்
என்றுரைத்தார்
இயேசு மாறிடார்

பாவ சேற்றில் மூழ்கி கிடந்தேன்
எனக்காக ஜீவன் ஈந்தார்
அவர் அன்பை என்றும் பாடி
அவர் கிருபையை சொல்லிட
அபிஷேகம் தந்து என்னை
பெலப்படுத்தி என்னை பாட செய்தார்

உந்தன் வழிகளை நாங்கள் என்றும்
உணராமற்போனாலும்
விசுவாச கண்களினால்
உந்தன் கரத்தினில் எந்தனின் வாழ்வை கண்டேன்

Ullam Udaithu Sogathil – உள்ளம் உடைந்து சோகத்தில்

Ullam Udaithu Sogathil

உள்ளம் உடைந்து சோகத்தில் அமிழ்ந்து
பாரங்களால் நான் சோர்ந்து நிற்கையில்
உம்முகத்தை நான் தேடும் ஜெபவேளை
உம் பிரசன்னம் நான் வாஞ்சித்திருப்பேன்

உயர்த்துவீர் கன்மலைகள்மேல் நிற்க
உயர்த்துவீர் அலைகள் கடந்தே
ஏந்திசுமப்பேன் தப்புவிப்பேன் உன்னை
என்றுரைத்தீர் நான் உம்மை நம்புவேன்

களையப்படைந்து சோறுவோர் அநேகர்
வாலிபரும் இடறி போவாரே
கர்த்தருக்கு காத்திருந்து நிற்பவர்
கழுகை போல் பெலன் அடைவாரே

மரண பள்ளத்தாக்கினில் நடந்து
பொல்லாப்பை கண்டு அஞ்சாதிருப்பேன்
எனக்கு ஜீவன் உள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை என்றும் தொடரும்

Ummai Pola Yaarum Illaye – உம்மை போல யாரும் இல்லையே

Ummai Pola Yaarum Illaye

உம்மை போல
யாரும் இல்லையே இயேசு ராஜா
வான தூதர்கள்
துதி முழங்க
நாமும் சேர்ந்து உயர்த்திடுவோம்

பாடுவேன் ஓசன்னா
சர்வ வல்ல மாராஜனிவர்
உமக்கே மகிமை உண்டாகட்டும்
அப்பா உம் நாமம் உயர்த்திடுவேன்

என் நேசரே
எண்ணில் எத்தனை அன்பு கூர்ந்தீர்
எந்தன் பாவத்தை நீக்கிடவே
உம்மை பலியாக ஈந்தீரய்யா