Song Tags: Justin Samuel Song Lyrics

Kalaiyil Pookum Poo – காலையில் பூக்கும் பூ

Kalaiyil Pookum Poo
காலையில் பூக்கும் பூ
மாலையில் வாடிடுதே
ஓடிப்போகும் நிழல் போன்றதுதான்
மனித வாழ்க்கையுமே

சிந்திப்பாயா? ஓ மனிதா!
உன்னை சந்திக்கும் வேளை இதுதான்
சிந்திப்பாயா? ஓ மனிதா!
தேவனை சந்திக்கும் வேளை இதுதான்

1. இன்று மரித்தால் நீ எங்கே போவாய்
பொன்னும், பொருளும் கூட வராதே
சந்திக்கும் வேளை அறியாவிட்டால்
உன் ஆத்துமா இழந்திடுவாய்
(சிந்திப்பாயா? ….)
2. உலகமெல்லாம் வெறும் மாயை தானே
அழிகின்ற குப்பை தானே
மனந்திரும்பி மறுபடியும் பிறவாவிட்டால்
உன் மகிமையை இழந்திடுவாய்
(சிந்திப்பாயா? ….)
3. தினம் சற்றுநேரம் உன்னை ஒப்புக்கொடு
உண்மை தேவனை தேடிடவே
உத்தம இதயத்தால் தேடும்போது
அவரை நீ கண்டடைவாய்
(சிந்திப்பாயா? ….)

Kalayil Pookum Poo
Malayil Vadiduthey
Odi Pogum Nizlal Pontrathuthaan
Manitha Vazlkaiyumey

Sinthipaayaa Oo Manithaa !
Unnai Santhikkum Vezlai Ithuthaan
Sinthipaayaa Oo Manithaa !
Devanai Santhikkum Vezlai Ithuthaan

1. Intru Marithaal Nee Engey Povaay
Ponnum Porulum Kooda Varaathey
Santhikkum Vezlai Ariyaavittaal
Unless Aathuma Izlanthiduvaay
(Sinthipaayaa …)
2. Ulagamellam Verum Maayaithaaney
Azikintra Kuppaithaaney
Mananthirumbi Marubadium Piravaavittaal
Un Magimaiyaai Izanthiduvaai
(Sinthipaayaa …)
3. Satru Neram Unnai Oppukodu
Unmai Devanai Thedidavey
Utthama Idayathaal Thedumbothu
Avarai Nee Kandadaivaai
(Sinthipaayaa …)

Unga Kirubai Pothume – உங்க கிருபை போதுமே

Unga Kirubai Pothume
உங்க கிருபை போதுமே
அது எனக்கு போதுமே
என் பெலவீனத்தில் உம்
பெலன் விளங்குமே

கிருபை எல்லாம் கிருபை நான் நிற்பதும் நடப்பதும் கிருபை – அல்லேலூயா

1. நான் சாகாமல் பிழைத்திருப்பது கிருபை
கர்த்தரின் செயல்களெல்லாம் சொல்ல வைப்பது கிருபை
(கிருபை……)

2. எல்லா பொல்லாப்புக்கும் விலக்கி காப்பது கிருபை
இக்கட்டு காலத்திலும் உதவி பெற்றது கிருபை
(கிருபை……)

3. பஞ்ச காலத்திலும் காப்பது உங்க கிருபை
கொள்ளை நோய்களுக்கும் விலக்கி மீட்பது கிருபை
(கிருபை……)

Unga Kirubai Pothume
Athu Enakku Pothume
En Belaveenathil Um Belan Vilangume

Kirubai Ellam Kirubai
Naan Nirbathum Nadapathum Kirubai – Hallelujah

1. Naan Saahamal Bilaithiruppathu Kirubai
Kartharin Seyalgalellam Solla Vaippathu Kirubai
(Kirubai….)

2. Ella Pollappukkum Vilakki Kaappathu Kirubai
Ikkatu Kaalathilum Uthavi Betrathu Kirubai
(Kirubai….)

3. Banja Kaalathilum Kaappathu Unga Kirubai
Kollai Noigalukkum Vilakki Kaappathu Kirubai
(Kirubai)

Thuthigal Mathiyil Vaasam – துதிகள் மத்தியில் வாசம்

Thuthigal Mathiyil Vaasam
துதிகள் மத்தியில் வாசம் செய்கிறீர் ஸ்தோத்திரம்
தூயாதி தூயவரே ஸ்தோத்திரம்

1. எனக்குள்ளே இருப்பவரே ஸ்தோத்திரம்
என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்
காயப்படுத்தும் கள்வர் நடுவில்
காயங்கட்டும் கர்த்தர் உண்டு
கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம்
(துதிகள் மத்தியில்…….)

2. பயப்படாதே என்றவரே ஸ்தோத்திரம்
நீ திகையாதே என்றவரே ஸ்தோத்திரம்
அக்கினி நடுவே நடந்தாலும்
சிங்கக்கெபியில் விழுந்தாலும்
நான் உன்னோடு என்றவரே ஸ்தோத்திரம்
(துதிகள் மத்தியில்…….)

3. வாக்குத்தத்தம் தந்தவரே ஸ்தோத்திரம்
வார்த்தையாலே நடத்துகிறீர் ஸ்தோத்திரம்
வாதை நோயும் வந்தாலும்
Lock down ஆகி நின்றாலும்
வழி நடத்திய தேவனே ஸ்தோத்திரம்
(துதிகள் மத்தியில்…….)

Yehovah Devane Aarathanai- யெகோவா தேவனே ஆராதனை

Yehovah Devane Aarathanai

யெகோவா தேவனே ஆராதனை
யெகோவா நிசியே ஆராதனை
யெகோவா யீரே ஆராதனை
யெகோவா ஷம்மா ஆராதனை

எல்ஷடாய், எல்ஷடாய்
சர்வவல்லவரே நன்றி ஐயா

1. யெகோவா ரூவா ஆராதனை
யெகோவா ஏலோஹிம் ஆராதனை
யெகோவா ஸிட்கேனு ஆராதனை
யெகோவா மெக்காதீஸ் ஆராதனை

எல்ரோயீ, எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா

2. யெகோவா ஏலியோன் ஆராதனை
யெகோவா ஓசேனு ஆராதனை
யெகோவா ஏலோகே ஆராதனை
யெகோவா ரொஃபேக்கா ஆராதனை

அடோனாய், அடோனாய்
ஆளுகை செய்பவரே நன்றி ஐயா

Kalangidum Nerathile – கலங்கிடும் நேரத்திலே உன் கண்ணீரை

Kalangidum Nerathile
கலங்கிடும் நேரத்திலே,
உன் கண்ணீரைத் துடைத்திடுவார்
திக்கற்ற பிள்ளையை விசாரிப்பவர்,
உன்னையும் விசாரிப்பாரே

காப்பார் உன்னை காப்பார்
கண்ணின் மணிபோல் உன்னை காப்பார்

1. உலகத்தின் செல்வங்கள் நிலைநிற்குமோ
உன்னதரின் அன்புக்கு ஈடாகுமோ
திரண்ட ஆஸ்தியும், உயர் கல்வியும்
நிலையான சமாதானம் தந்திடுமோ

வருவாயா, இதயம் தருவாயா?
இயேசு உன்னை அழைக்கிறார்

2. நீ நம்பும் சொந்தம் உன் கூட வருமோ?
நம்பிக்கைக்கு உரியவர் இயேசு தானே
மேலான பதவியும், அதிகாரம் இருப்பினும்
அவையெல்லாம் நிரந்தரமாகிடுமோ?

நம்பி வா, தேடி ஓடி வா,
நிரந்தரம் அவரே, நிம்மதியும் அவரே

3. நிலையான நகரம் இங்கில்லையே
நிரந்தரம் நமக்கு பரலோகமே
நீ காணும் யாவும் நிலையானதல்ல
நித்திய ஜீவனை நாடிடுவாய்

இயேசுவே வழி, சத்தியம்
ஜீவனும் அவரே, சமாதானம் அவரே

Unnathangalil Ummodu Ulaavida – உன்னதங்களில் உம்மோடு உலாவிட

Unnathangalil Ummodu Ulaavida
உன்னதங்களில் உம்மோடு உலாவிட

நீர் என்னோடு வந்து எனக்குள் வசிக்கின்றீரே
நீர் உன்னதமானவரே,
உம் அன்புக்கு நிகர் இல்லையே

அல்லேலூயா (4)

1. எனக்காக ஜீவன் தந்து,
என்னையும் தேடி வந்து
அன்போடு அணைத்தவரே
என்னை உமக்காக தெரிந்து கொண்டீரே
(உன்னதங்களில் …)

2. ஆவியான தெய்வம்,
ஆலோசனை கர்த்தர்
அதிசயம் செய்கின்றீர்
என்னை அனுதினம் நடத்துகிறீர்
(உன்னதங்களில் …)

3. உம்மை நேசித்து,
உம் சித்தம் செய்து
உம்மோடு நடக்கணுமே
நானும் உம்மைப்போல் மாறணுமே
(உன்னதங்களில் …)

4. பாவியான என்னை பரிசுத்தமாக்கிட
பரலோகம் விட்டு வந்தீர்
எந்தன் பரிகார பலியானீர்
எந்தன் பரிகாரியாய் மாறினீர்
(உன்னதங்களில் …)

Maasillaatha Anbu Nesarey – மாசில்லாத அன்பு நேசரே

Maasillaatha Anbu Nesarey
மாசில்லாத அன்பு நேசரே,
மகிமை என்றும் உமக்கே (2)
அன்பின் ஆவியினால் என்னை நிறைத்தவரே,
உம்மை ஆராதிப்பேன் என்றுமே (2)

{இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (2)

1. செடியே, உம்மில் நிலைத்திட,
கொடியாய் உம்மில் படர (2)
உந்தன் ஜீவத்தண்ணீர் என்னில் ஊற்றிடுமே
நானும் மிகுந்த கனி தந்திட (2)
{இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (2)

2. உம்மையே என்றும் சேவிக்க,
உந்தன் அன்பை இன்னும் ருசிக்க (2)
நேச ஆவியினால் என்னை அனல்மூட்டுமே,
நேச மணவாட்டியாய் மாறிட (2)
{இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே }(2)

3. சித்தமே, நான் செய்திட,
தத்தமே செய்தேன் என்னையே (2)
கொஞ்ச காலமேதான் பாடு சகிப்பதினால்,
நானும் பொன்னாக துலங்கிடுவேன் (2)
{இயேசையா (2) மாசில்லாத அன்பு நேசரே} (2)

Alaiyalaiyay Alaiyalaiyay – அலையலையாய்அலையலையாய்

Alaiyalaiyay Alaiyalaiyay
அலையலையாய், அலையலையாய்
எழுப்புதல் அலை என் தேசத்தின்மேல்
கடலின் மேல் நடந்தவர் இயேசு
என் தேசத்தின் மேலே நிற்கிறார்
எழுப்புதல் அலையை அனுப்பிட
இந்திய தேசத்தின்மேலே நிற்கிறார்

ஆயத்தப்படு, ஆயத்தப்படு
சீயோனே, வல்லமையை தரித்துக்கொள்

1. பாரம் கொண்ட ஜனமே, வீறு கொண்டு எழு
கையளவு மேகத்தை தேசத்தின் மேல் பாரு
வல்லவர் இயேசு வாசலண்டையில்
வல்லமையாய் எழுந்து நீ ஒளி வீசு
(ஆயத்தப்படு…)

2. கூடாதது உன்னால் ஒன்றுமில்லையென்றார்
உனக்கு ஒப்பானவன் இல்லை என்று சொன்னார்
மரித்தவர் உயிர்த்து சத்தியத்தை சொல்ல
ஆவியின் வல்லமையால் நிரப்பப்படு
(ஆயத்தப்படு…)

3. வனாந்திரத்தில் வழியை உண்டாக்குவேன் என்றார்
அவாந்திரவெளி ஆறு ஓடச்செய்வேன் என்றார்
ஜீவத்தண்ணீர் நதிகள் தேசத்திலே பாய
சபைகளே எழும்புவோம் ஒருமனமாய்
(ஆயத்தப்படு…)

Vinni Oliye Kannin Maniyay – விண்ணின் ஒளியே கண்ணின் மணியாய்

Vinni Oliye Kannin Maniyay
விண்ணின் ஒளியே கண்ணின் மணியாய்
மண்ணில் வந்து உதித்தார்
மண்ணில் மாளும் மாந்தரை மீட்கும்
கோதுமை மணியாய் பிறந்தார்

Happy Christmas, Merry Christmas
Happy Happy Christmas,
Wish you, Merry Merry Christmas

1. விண்மீன் ஜொலிக்க மேய்ப்பர் கண்டு
இயேசு பிறந்ததை அறிந்தார்
நமக்குள் இயேசு பிறந்ததை அறிய
சாட்சியாய் வாழ்ந்து ஜொலிப்போம்

(Happy …)
2. பாவ உலகை பரிசுத்தமாக்க
பரமன் இயேசு பிறந்தார்
பாவி நீயும் தேடி வந்தால்
பரலோகை அறிய செய்வார்
(Happy …)

3. பழையதை கழித்து புதியன தரவே
புதுமைப்பாலகன் பிறந்தார்
புண்ணியரை அறிவிக்கும் புதிய மனிதராய்
புத்தாண்டுக்குள் செல்வோம்
(Happy …)

4. ஏழையை மீட்கும் ஏவலனாக
மாட்டுக்குடிலில் பிறந்தார்
ஏழையின் சிரிப்பில் இயேசுவை காண
சிறந்ததை நாமும் கொடுப்போம்
(Happy …)

Aarathanaiyin Devan – ஆராதனையின் தேவன்

Aarathanaiyin Devan
ஆராதனையின் தேவன், அபிஷேகிக்கும் தேவன்,
அற்புதங்களின் தேவன், ஆறுதலின் தேவன்
அவர் சிலுவையில் நமக்காய் ஜீவனை தந்தவர்
தம்மை நம்பும் மனிதரை வாழ வைப்பவர்

1. அவர் ஆபிரகாமின் தேவன்,
ஈசாக்கின் தேவன்,
அவர் யாக்கோபின் தேவன்,
ஜீவனுள்ளோரின் தேவன்
நான் இருக்கிறேன் என்றவர்
என்றும் நம்மோடிருக்கிறார்
(அவர் சிலுவையில் . . .)

2. அவர் வாக்கு மாறா வல்லவர்,
நன்மைகள் என்றும் செய்பவர்,
அவர் சர்வ வல்லமையுள்ளவர்,
மகிமையின் தேவனானவர்
சாத்தானின் தலையை நசுக்கினவர்
நம் தலையை உயர்த்திடுவார்
(அவர் சிலுவையில் . . .)

3. அவர் நீதியுள்ள தேவன்,
நியாயத்தீர்ப்பை செய்யும் தேவன்,
பாவத்தை கண்டித்து உணர்த்தும்
பரிசுத்த ஆவியானவர்
வானமும், பூமியும் படைத்தவர்
தம் பரிசுத்த இரத்தத்தை சிந்தினார்
(அவர் சிலுவையில் . . .)