All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Neenga Pothum Yesappa – நீங்க போதும்

Neenga Pothum Yesappa
நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா

1. எத்தனை இன்பமே
உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே
உமக்காய் ஏங்குதே

2. புதுபெலன் தருகிறீர்
புது எண்ணெ; பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய்
செழித்தோங்கச் செய்கிறீர் – நான்

3. அப்பா உம் சந்நிதியில்
எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான்
திருப்தியில் மூழ்குவேன்

4. தேனிலும் இனிமையே
தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத
ஒப்பற்ற செல்வமே – நான்

Neenga poadhum yaesappaa
Unga samoogam enakkappaa (2)

1. Eththanai inbamae
Undhan samookamae (2)
Ullamum udalumae
Umakkaai yaengudhqe (2)- en

2. Pudhubelan tharugireer
Pudhu ennei pozhigireer (2)
Kanitharum marangalaai
Sezhiththoanga seigireer (2)  Naan

3. Appaa um sannidhiyil
Eppoa naan vandhu nirppaen (2)
Thirumugam kandu naan
Thirupthiyil moozhguvaen (2) Um

4. Thaenilum inimaiyae
Thevittaadha amudhamae (2)
Theadiyum kidaikkaadha
Oppatra selvamae (2)  Naan

Malai Mel Earuvom – மலைமேல் ஏறி

Malai Mel Earuvom
மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே
மறுரூபம் ஆகணுமே தகப்பனே – ஜெ
உலகை மறக்கணுமே தகப்பனே
உம்குரல் கேட்கணும் நாள்முழுதும்
1. காலையும் மாலையும் மதிய வேளையும்
கைகள் உமை நோக்கி உயரணுமே
அழியும் உலகத்திற்காய் கதறணுமே
அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே
2. உமது வார்த்தைகள் உணவாண் மாறணும்
ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்
வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்
வெற்றிக் கீதங்கள் நான் பாடணும்
3. ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி
தீர்க்கதரிசனம் சொல்லணும்
ஆவிகள் பகுத்திறயும் வரம் வேண்டும்
வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்
4. ஆவியில் நிரம்பணும் அயல்மொழி பேசணும்
அதிசயம் காணணுமே தகப்பனே
ஊழியம் செய்யணுமே தகப்பனே
ஓடி ஓடி உழைக்கணுமே

Nadantha Thellam Nanmaike – நடந்ததெல்லாம் நன்மைக்கே

Nadantha Thellam Nanmaike
நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி செல்லி மகிழ்வேன் இன்றைக்கே
நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே
நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கு
நன்றி(2) எல்லாம் நன்மைக்கே நன்றி
1. தீமைகளை நன்மையாக மாற்றினீர்
துன்ப்களை இன்பமாக மாற்றினீர்;
2. சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி
சிந்தைதனை மாற்றினீர் நன்றி
3. உள்ளான மனிதனை புதிதாக்கி
உடைத்து உருமாற்றி நடத்துகிறீர்
4. என் கிருபை உனக்குப் போதும் என்றீர்
உன் பெலவீனத்தில் என் பெலன் என்றீர்
5. தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி
தப்பிச் செல்ல வழிசெய்தீர் நன்றி
6. விசுவாசப்புடமிட்டீர் நன்றி
பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி
7. கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றி
மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி

Ethai Ninaithum – எதை நினைத்தும்

Ethai Ninaithum

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே(ளே)
யேகோவா தேவன் உன்னை நடத்தி செல்வார் – 2

1. இதுவரை உதவின எபிநேசர் உண்டு
இனியும் உதவி செய்வார் – 2

2. சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா உண்டு
பூரண சுகம் தருவார் – 2

3. புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயர பறந்திடுவாய் மடிந்து போவதில்லை – 2

4. பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்
அன்பிலே பயமில்லை – 2

5. கர்த்தரை நினைத்து மகிழ்ந்து களிகூர்ந்தால்
உனது விருப்பம் செய்வார் – 2

6. வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
உன் சார்பில் செயலாற்றுவார் – 2

7. வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின் துணையால்
எதையும் செய்திடுவாய் – 2

Ethai Ninaiththum Nee Kalangaathe Magane(Le)
Yegovaa Devan Unnai Naththi Selvaar – 2

1. Ithuvarai Uthavina Ebinesar Undu
Iniyum Udhavi Seivaar – 2

2. Sugam Tharum Deivam Yehovaa Raffaa Undu
Poorana Sugam Tharuvaar – 2

3. Puthubelan Adainthu Siragugalai Viriththu
Uyara Paranthiduvaai Madinthu Povathillai – 2

4. Poorana Anbu Bayaththai Purambe Thallum
Anbile Bayamillai – 2

5. Karththarai Ninaiththu Magizhnthu Kalikoornthaal
Unathu Viruppam Seivaar – 2

6. Vazhigalilellaam Avaraiye Nambiyiru
Un Saarbil Seyalaattruvaar – 2

7. Vazhuvoottum Yesu Kiristhuvin Thunaiyaal
Ethaiyum Seithiduvaai – 2

Neethiman Nan Neethiman Nan – நீதிமான் நான்

Neethiman Nan Neethiman Nan
நீதிமான் நான் நீதிமான் நான்
இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் – இயேசுவின்
1. பனைமரம்போல் நான் செழிதோங்குவேன்
கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன்
கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டு
முதிர்வயதிலும் நான் கனிதருவேன்
2. காலயிலே உம் கிருபையையும்
இரவினிலே உம் சத்தியத்தையும்
பத்துநரம்புகள் இசையோடு
பாடிப்பாடி மகிழ்ந்திருப்பேன்
3. ஆண்டவனே என் கற்பாறை
அவரிடம் அநீதியே இல்லை
என்றே முழக்கம் செய்திடுவேன்
செழுமையும் பசுமையுமாய் வளர்வேன்
4. ராஜாவின் ஆட்சி வருகையிலே
கதிரவனைப் போல் பிரகாசிப்பேன்
ஆகாயமண்டல விண்மீனாய்
முடிவில்லா காலமும் ஒளி வீசுவேன்
5. எதிரியின் வலிமையை மேற்கொள்ள
அதிகாரம் எனக்குத் தந்துள்ளார்
புது எண்ணை அபிஷேகம் என்தலை மேல்
பொழிந்து பொழிந்து மகிழ்கின்றீர்
6. கர்த்தரின் கண்கள் என் மேலே
என் வேண்டுதல் கேட்கின்றார்
மன்றாடும் போது செவிசாய்த்து
மாபெரும் விடுதலை தருகின்றார்

Raja Um Maligaiyil – இராஜா உம் மாளிகையில்

Raja Um Maligaiyil
இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்-இயேச
துதித்து மகிழ்ந்திருப்பேன்
துயரம் மறந்திருப்பேன் – உம்மை
ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான்

1. என் பெலனே என்கோட்டையே
ஆராதனை உமக்கே
மறைவிடமே என் உறைவிடமே
ஆராதனை உமக்கே

2. எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்
ஆராதனை உமக்கே
எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு
ஆராதனை உமக்கே

3. பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
ஆராதனை உமக்கே
உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு
ஆராதனை உமக்கே

4. உன்னதரே உயர்ந்தவரே
ஆராதனை உமக்கே
பரிகாரியே பலியானீரே
ஆராதனை உமக்கே

5. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஆராதனை உமக்கே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
ஆராதனை உமக்கே

6. தாழ்மையிலே நினைத்தவரே
ஆராதனை உமக்கே
ஏழ்மையை மாற்றினீரே
ஆராதனை உமக்கே

Raajaa um maaligaiyil
Raapagalaai amarndhiruppean-Yaesu (2)
Thudhiththu magizhndhirupaen
Thuyaram marandhirupaen – ummai (2)

En belanae enkoattaiyae
Aaraadhanai umakkae
Maraividamae en uraividamae
Aaraadhanai umakkae

Aaraadhanai aaraadhanai
Appaa appaa ungalukuththaan

1. Engum niraindha Yehoavaa Aeloahim
Aaraadhanai umakkae
Engal needhiyae Yehoavaa Sidkaenu
Aaraadhanai umakkae

2. Parisuththamaakkum Yehoavaa Mekkaathees
Aaraadhanai umakkae
Uruvaakkum Dheivam Yehoavaa Oasaenu
Aaraadhanai umakkae – Aaraadhanai

3. Unnadharae uyarndhavarae
Aaraadhanai umakkae
Parigaariyae baliyaaneerae
Aaraadhanai umakkae – Aaraadhanai

4. Seerpadutthum sirushtigarae
Aaraadhanai umakkae
Sthirappadutthum thunaiyaalarae
Aaraadhanai umakkae – Aaraadhanai

5. Thaazhmaiyilae ninaithavarae
Aaraadhanai umakkae
Aezhmaiyai maatrineerae
Aaraadhanai umakkae – Aaraadhanai

Yesuvin Pillaigal Nangal – இயேசுவின் பிள்ளைகள்

Yesuvin Pillaigal Nangal
இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்
எப்போதும் மகிழ்ந்திருப்போம்
இயேசுவின் பிள்ளைகளே
எப்போதும் மகிழ்ந்திருங்கள்

1. எந்நேரமும் எவ்வேளையும்
இயேசுவில் களிகூறுவோம்
நம் நேசரில் களிகூறுவோம்

2. எதை நினைத்தும் கலங்காமல்
இப்போதும் ஸ்தோத்தரிப்போம்
நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம்

3. இன்று காணும் எகிப்தியரை
இனிமேலும் காணமாட்டோம்
நமக்காய் யுத்தம் செய்வார் – இயேசு

4. நமக்கு எதிராய் மந்திரம் இல்லை
குறிசொல்லல் எதுவும் இல்லை
சாத்தான் நம் காலின் கீழே – இன்று

5. காற்றை நாம் காணமாட்டோம்
மழையையும் பார்க்கமாட்டோம்
வாய்கால்கள் நிரப்பப்படும்

6. நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் செய்திடுவார்
அதிசயம் செய்திடுவார்

7. வாலாக்காமல் தலையாக்குவார்
கீழாகாமல் மேலாக்குவார்
குறையெல்லாம் நிறைவாக்குவார் – நம்

Yaesuvin pillaigal naangal
Eppoadhum magizhndhiruppoam
Yaesuvin pillaigalae
Eppoadhum magizhndhirungal

1. Ennaeramum evvaelaiyilum
Yaesuvil kalikooruvoam
Nam naesaril kalikooruvoam

2. Edhai ninaithum Kalangaamal
Ippoadhum sthoaththarippoam
Naam eppoadhum sthoatharippoam

3. Indru kaanum egipthiyarai
Inimaelum kaanamaattoam
Namakkaai yudham seivaar – yaesu

4. Namakku edhiraai mandhiram illai
Kurisollal edhuvum illai
Satthaan nam kaalin keezhae – indru

5. Kaatrai naam kaanamaattoam
Mazhaiyaiyum paarkkamaattoam
Vaaikaalgal nirappappadum

6. Ninaippatharkum vaenduvatharkum
Adhigamaai seidhiduvaar
Adhisayam seidhiduvaar

7. Vaalaakkaamal thalaiyaakkuvaar
Keezhaakaamal maelaakuvaar
Kuraiyellaam niraivaakkuvaar – nam

Ummai Uyarthi Uyarthi – உம்மை உயர்த்தி

Ummai Uyarthi Uyarthi
உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம்மனிழுதையா
உம்மை நோக்கிப்பார்த்து
இதயம் துள்ளுதையா
1. கரம் பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்
நன்றி நன்றி (4) – உம்மை
2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறிர்;
3. நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே
4. இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே
5. வலுவூட்டும் திரு உணவே
வாழவைக்கும் நல்மருந்தே
6. சகாயரே தயாபரரே
சிருஷ்டிகரே சிநேகிதரே
7. வருடங்களை நன்மைகளினால்
முடிசூட்டி மகிழ்பவரே

Kartharai Nambinor – கர்த்தரை நம்பினோர்

Kartharai Nambinor
கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்
சீயோன் மலைபோல் உறுதியுடன்
அசையாமல் இருப்பார்கள்
1. எருசலேம் நகரம் மலைகளால்
எப்போதும் சூழ்ந்து இருப்பதுபோல்
இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை
சூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார்
2. வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டு
கனிதரும் மரமாய் வளர்வார்கள்
கோடை காலத்தில் பயமில்லை
வறட்சி வந்தாலும் கவலையில்லை
3. மனைவி கனிதரும் திராட்சைச் செடி
பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல்
இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள்
இடைவிடாமல் ஜெபிப்பார்கள்
4. கர்த்தரை நேசித்து அவர் வழியில்
நடக்கும் மனிதர் பேறுபெற்றோர்
உழைப்பின் பயனை உண்பார்கள்
நன்மையும் நலமும் பெறுவார்கள்

Aaviyanavare Anbu Nesare – ஆவியானவரே அன்பு

Aaviyanavare Anbu Nesare
ஆவியானவரே அன்பு நேசரே
ஆட்கொண்டு நடத்துமையா
1. உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்
உம் வழிகள் கற்றுத் தாரும்
உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே
தினந்தினம் நடத்துமையா
2. கண்ணின்மனி போல காத்தருளும்
கழுகு போல சமந்தருளும்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
எந்நாளும் மூடிக் கொள்ளும்
3. வெயில் நேரத்தில் குளிர் நிழலே
புயல்காற்றில் புகலிடமே
கடுமழையில் காப்பகமே
நான் தங்கும் கூடாரமே
4. நியாயத் தீர்;ப்பின் ஆவியானவரே
சுட்டெரிக்கும் ஆவியானவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும்
பரிசுத்த ஆவியானவரே
5. வியத்தகு உம் பேரன்பை
எனக்கு விளங்கப்பண்ணும்
என் இதயம் ஆய்ந்தறியும்
புடமிட்டு பரிசோதியும்