All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Vasathiyai Thedi Odathe – வசதியை தேடி ஓடாதே

Vasathiyai Thedi Odathe
வதியை தேடி ஓடாதே – அது
தொடு வானம்
வசதிகள் நிறைவு தருவதில்லை
வானத்தை எவரும் தொடுவதில்லை
1. வசதி வந்தால் பயன்படுத்து
சுவிசேஷம் சொல்வதற்கு
ஆளுகை செய்ய ழே ழே
அடிமைப்படுத்த ழே ழே
2. அழகெல்லாம் அற்றுப்போகும்
எழில் ஏமாற்றும்
கவர்ச்சி எல்லாம் கானல் நீர்
கரைந்து போகும் சீக்கிரத்தில்
3. வெட்டுக்கிளி காட்டுத்தேன்
உண்டு வந்தார் யோவான்
உலகத்தை கலக்கிய மனிதர் அவர்
உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல்
4. பணமயக்கம் எல்லாவித
தீமைகளின் தொடக்கம்
சிற்றின்பம் எச்சரிக்கை-உன்னை
நடைபிணமாக்கிவிடும்

Appa Ummai Nesikkiren – அப்பா உம்மை நேசிக்கிறேன்

Appa Ummai Nesikkiren
அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்

1. எப்போதும் உம் புகழ்தானே
எந்நேரமும் ஏக்கம் தானே
எல்லாம் நீர்தானே – ஐயா

2. பலியாகி என்னை மீட்டிரையா
பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா
ஒளியாய் வந்தீரையா – ஐயா

3. உந்தன் அன்பு போதுமையா
உறவோ பொருளோ பிரிக்காதையா
என் நேகர் நீர்தானையா – ஐயா

4. கண்ணீர் துடைக்கும் காருண்யமே
மன்னித்து மறக்கும் தாயுள்ளமே
விண்ணக பேரின்பமே – அப்பா

5. அனுதின உணவு நீர்தானைய -என்
அன்றாட வெளிச்சம் நீர்தானையா
அருட்கடல் நீர்தானையா – எனக்கு

6. ஒரு குறைவின்றி நடத்துகின்றீர்
ஊழியம் தந்து மகிழ்கின்றீர்
அருகதை இல்லையையா – ஐயா

7. ஜெபமே எனது ஜீவனாகணும்
ஜெயக்கொடி எனது இலக்காகணும்
ஊழியம் உணவாகணும்

Appa Ummai Nesikkiren
Aarvamudan Nesikkiren

1. Eppoadhum um pugazhdhaane
Ennaeramum eakkam dhaane
Ellaam neerdhane – Aiyaa

2. Baliyaagi ennai meetteeraiyaa
Paavangal sumandhu theerththeeraiya
Oliyaai vandheeraiyaa – Aiyaa

3. Undhan anbu poadhumaiyaa
Uravoa poruloa pirikkaadhaiyaa
En naesar neerdhaanaiyaa – Aiyaa

4. Kanneer thudaikkum kaarunyame
Manniththu marakkum thaayullame
Vinnaga paerinbame – Appaa

5. Anudhina unavu neerdhaanaiyaa – en
Andraada velichcham neerdhaanaiyaa
Arutkadal neerdhaanaiyaa – Enakku

6. Oru kuraiyindri nadaththukindreer
Oozhiyam thandhu magizhgindreer
Arugadhai illaiyaiyaa – Aiyaa

7. Jebame enadhu jeevanaaganum
Jeyakkodi enadhu ilakkaaganum
Oozhiyam unavaaganum

Andavar Padaitha – ஆண்டவர் படைத்த வெற்றியின்

Andavar Padaitha

ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா தோல்வி இல்லை.. அல்லேலூயா வெற்றி உண்டு

1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர் என் பக்கம் இருக்கிறார்
உலக மனிதர்கள் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்

தோல்வி இல்லை எனக்கு.. வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு.. வெற்றி பவனி செல்வோம்

2. எனது ஆற்றலும் எனது பாடலும் எனது மீட்புமானார்
நீதிமான்களின் கூடாரத்தில் (சபைகளிலே) வெற்றி குரல் ஒலிக்கட்டும் – தோல்வி

3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும் மூலைக்கல்லாயிற்று
கர்த்தர் செயல் இது அதிசயம் இது கைதட்டி பாடுங்களேன் – தோல்வி

4. என்றுமுள்ளது உமது பேரன்பு என்று பறை சாற்றுவேன்
துன்பவேளையில் நோக்கி கூப்பிட்டேன் துணையாய் வந்தீரய்யா – தோல்வி

Aandavar Padaiththa vettriyin naalidhu
Indru agamagizhvom akkalippom Alleluyaa paaduvom
Alleluyaa tholvi illai.. Alleluyaa vettri undu

1. Enakku udhavidum enadhu Aandavar en pakkam irukkiraar
Ulaga manidhargal enakku edhiraaga Enna seiya mudiyum

Tholvi illai enakku.. Vettri bavani selven
Tholvi illai namakku.. Vetri bavani selvom

2. Enadhu aattralum enadhu paadalum Enadhu meetpumaanaar
Neethimaangalin koodaarathil (sabaigalile) Vettri kural olikkattum – Tholvi

3. Thallappatta kal kattidam thaangidum Moolaikkalaayittru
Karththar seyal idhu adhisayam idhu Kaithatti paadungalen – Tholvi

4. Endrum ulladhu umadhu peranbu Endru paraisaattruven
Thunba velaiyil nokki kooppitten Thunaiyaai vandheeraiyaa – Tholvi

 

Thallanthu Pona Kaigalai – தளர்ந்து போன

Thallanthu Pona Kaigalai
தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்
தள்ளாடும் முழங்கால்களை உறுதிபடுத்துங்கள்
1. உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள்
அஞ்சாதிருங்கள்
அநீதிக்கு பழிவாங்கும் தெய்வம் வருகிறார்
விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார்
அஞ்சாதிருங்கள் திடன்கொள்ளுங்கள்
ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார்
2. அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும்
அது தூய வழி
தீட்டுபட்டோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லை
மீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து செல்வார்கள்
3. ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடி
சீயோன் வருவார்கள்
நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்
4. பார்வைற்றோர் கண்களெல்லாம்
பார்வை அடையும் செவிகள் கேட்கும்
ஊனமுற்றோர் மான்கள்போல துள்ளிக்குதிப்பர்கள்
ஊமையர்கள் பாடிப்பாடி மகிழ்ந்திருப்பார்கள்
5. வறண்ட நிலம் நீருற்றால்
நிறைந்திருக்கும் நதிகள் ஓடும்
நரிகள் தங்கும் வளைகள் எங்கும்
கோரை முளைக்கும்
நாணலும் புல்லும் நிலைத்து நிற்கும்

Thai Madiyil – தாய்மடியில் தவழுகின்ற

Thai Madiyil
தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்
1. கவலையில்லையே கலக்கமில்லையே
கர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன்
எதைக் குறித்தும் பயமில்லையே
என் நேசர் நடத்துகிறீர்
2. செய்த நன்மைகள் நினக்கின்றேன்
நன்றியோடு துதிக்கிறேன் – நான்
கைவிடாத என் ஆயனே
கல்வாரி நாயகனே
3. துணையாளரே துணையாளரே
இணையில்லா மணவாளரே – என்
உணவாக வந்தீரையா
உயிரோடு கலந்தீரையா -என்
4. உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்
உம்தோளில் அமர்ந்துவிட்டேன்-நான்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
உலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த
5. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன
உயிர்வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்வேனையா – நான்
6. அதிசயமே அதிசயமே ஆறுதல் நாயகனே – என்
ஆலோசனைக் கர்த்தரே – என்
அடைக்கலப் பட்டணமே

Nandri Pali Nandri Pali – நன்றிபலி நன்றிபலி

Nandri Pali Nandri Pali
நன்றிபலி நன்றிபலி நல்லவரே உமக்குத்தான்
ஆனந்தம் ஆனந்தமே அப்பா உம் திருப்பாதமே
1. நேற்றைய துயரமெல்லாம் இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்தையா நிரந்தரமானதையா
கோடி கோடி நன்றி டாடி (3)
2. இரவெல்லாம் காத்தீர் இன்னும் ஓர்நாள் தந்தீர்
மறவாத என் நேசரே உறவாடி மகிழ்ந்திடுவேன்
3. ஊழியப் பாதையிலே உற்சாகம் தந்தீரையா
ஓடிஓடி உழைப்பதற்கு உடல்சுகம் தந்தீரையா
4. வேதனை துன்பமெல்லாம்
ஒரு நாளும் பிரிக்காதையா
நாதனே உம் நிழலில்
நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு
5. ஜெபத்தைக் கேட்டீரையா
ஜெயத்தைத் தந்தீரையா
பாவம் அணுகாமலே பாதுகாத்து வந்தீரையா
6. புதிய நாள் தந்தீரையா
புது கிருபை தந்தீரையா
அதிசயமானவரே ஆறுதல் நாயகனே
7. என்நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ்தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமைதானே

Naanum En Veetarum – நானும் என் வீட்டாரும்

Naanum En Veetarum
நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்
1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமே
முழந்தாழ்படியிட்டு
முழுவதும் தருகிறேன் – நான்
2. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்
யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்;
3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்ரோயீ எல்ரோயீ என்னைக் காண்பவரே
4. யேகோவாஷம்மா கூடவே இருக்கிறீர்
யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறிர்
5. யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பரே
யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே
6. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே இனிமேல் வருபவரே

Jeba Aavi Ootrumaiya – ஜெப ஆவி ஊற்றுமையா

Jeba Aavi Ootrumaiya
ஜெப ஆவி ஊற்றுமையா
ஜெபிக்கணுமே ஜெபிக்கணுமே
1. ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி
எந்நேரமும் நான் ஏறெடுக்கணும்
2. உபவாசித்து, உடலை ஒறுத்து
ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே
3. திறப்பின் வாசலில் நிற்கணுமே
தேசத்திற்காய் கதறணுமே
4. முழங்கால்கள் முடங்கணுமே
கண்கள் எல்லாம் குளமாகணும் -என்
5. தானியேல் போல மூன்றுவேளையும்
தவறாமல் நான் ஜெபிக்கணுமே..
6. உலகை மறந்து சுயம் வெறுத்து
உம் பாதத்தில் கிடக்கணுமே..

Karthave Ummai Potrugiren – கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்

Karthave Ummai Potrugiren
கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
கை தூக்கி எடுத்தீரே
உம்மை கூப்பிட்டேன் என்னை குணமாக்கினீர்
1. எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
உமது அன்பு என்னைத் தாங்குதையா
என் கவலைகள் பெருகும்போது
உம் கரங்கள் அணைக்குதையா
2. உந்தன் தயவால் மலைபோல் நிற்கசெய்தீர்
உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கிபோனேன்
சாக்கு ஆடை நீக்கி, என்னை
சந்தோஷத்தால் மூடினீர்
3. உம்மாலே ஒருசேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே ஒரு மதிலை தாண்டிடுவேன்
பெலத்தால் இடைகட்டினீர்
மான் கால்கள் போலாக்கினீர்
4. உம் திரு பாதத்தில்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
உம்திரு நாமத்தில் வெற்றிக் கொடி ஏந்துவேன்
கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே
5. உமது கோபம் ஒரு நிமிடம் தான்
உமது தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும்
மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு

Eluputhal En Desathilae – எழுப்புதல் என் தேசத்திலே

Eluputhal En Desathilae
எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)
என் கண்கள் காண வேண்டும்
தேவ கதறுகிறேன்
தேசத்தின் மேல் மனமிரங்கும்
1. சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சியாக வாழணுமே
2. தெரு தெருவாய் இயேசுவின் நாமம்
முழங்கணுமே முழங்கணுமே
3. கோடி மக்கள் சிலுவையை தேடி
ஓடி வந்து சுகம் பெறணும்
4. ஒருமனமாய் சகைளெல்லாம்
ஒன்று கூடி ஜெபிக்கணுமே
5. தேசமெல்லாம் மனம் திரும்பி
நேசரையே நேசிக்கணும்
6. ஆதி சபை அதிசயங்கள்
அன்றாடம் நடக்கணுமே
7. துதிசேனை எழும்பணுமே
துரத்தணுமே எதிரிகளை
8. இருளில் வாழும் மனிதரெல்லாம்
பேரொளியை காணணுமே
9. அதிசயங்கள் அற்புதங்கள்
அனுதினமும் நடக்கணுமே
10. மோசேக்கள் கரம் விரித்து
ஜனங்களுக்காய் கதறணுமே