All Songs by david

Karunai Pithaave – கருணைப் பிதாவே கல்வாரி அன்பே

Karunai Pithaave
கருணைப் பிதாவே.. கல்வாரி அன்பே ஆ..ஆ..ஆ..ஆ..
உம்மை அல்லால் எனக்காருமில்லை – ஆ..ஆ..ஆ..ஆ.. (2) – 2

1. ஆ.. இன்ப நாதா.. ஆத்தும நேசா
ஆத்தும நேசா.. ஆத்தும நேசா – 2
அன்பின் கடலே.. அன்பின் கடலே.. ஆ..ஆ..ஆ..ஆ..
அன்பினால் என்னை உருவாக்கினீரே – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)

2. கிருபை தாருமே.. கிருபாநிதியே
கிருபாநிதியே.. கிருபாநிதியே – 2
அன்பின் வடிவே.. அன்பின் வடிவே.. ஆ..ஆ..ஆ..ஆ..
ஏழைக்கிறங்கும் இயேசய்யா – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)

3. தேவனின் சித்தம்.. செய்திட செய்யும்
செய்திட செய்யும்.. செய்திட செய்யும் – 2
தியாகமானீரே.. தியாகமானீரே.. ஆ..ஆ..ஆ..ஆ..
தேடிட உள்ளம் களித்திடு்தே – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)

4. கஷ்டங்கள் விலக.. கைகொடுத்தீரே
கைகொடுத்தீரே.. கைகொடுத்தீரே – 2
நேசர் முகம் காண.. நேசர் முகம் காண.. ஆ..ஆ..ஆ..ஆ..
ஏங்கிடுதே ஆசை என் உள்ளிலே – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)

5. எந்தன் கண்ணீரை.. போக்கிடும் காலம்
போக்கிடும் காலம்.. போக்கிடும் காலம் – 2
வேகம் வரும் என்று.. வேகம் வரும் என்று.. ஆ..ஆ..ஆ..ஆ..
காத்திருந்து நான் வாடுகிறேன் – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)

6. யாத்திரை முடிந்து.. இயேசு ராஜனை
இயேசு ராஜனை.. இயேசு ராஜனை – 2
மேகத்தில் சந்தித்து.. மேகத்தில் சந்தித்து ஆ..ஆ..ஆ..ஆ..
நித்திய காலமாய் வாழ்ந்திடுவேன் – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)

Karunai Pithaave.. Kalvaari Anbe Aa…Aa…Aa…Aa…
Ummai allaal Enakkaarumillai – Aa… Aa… Aa… (2) – 2

1. Aa… Inba Naathaa.. Athuma Nesaa
Athuma Nesaa.. Athuma Nesaa – 2
Anbin Kadale.. Anbin Kadale.. Aa…Aa…Aa…Aa…
Anbinaal Ennai Uruvaakkineere – Aa…Aa…Aa…Aa… (2)

2. Kirubai Thaarume.. Kirubaa Nithiye
Kirubaa Nithiye.. Kirubaa Nithiye – 2
Anbin Vadive.. Anbin Vadive.. Aa…Aa…Aa…Aa…
Yezhaikkirangum Yesaiyaa – Aa…Aa…Aa…Aa… (2)

3. Dhevanin Siththam.. Seithida Seiyum
Seithida Seiyum.. Seithida Seiyum – 2
Thyagamaaneere.. Thyagamaneerey.. Aa…Aa…Aa…Aa…
Thedida Ullam Kaliththiduthe – Aa…Aa…Aa…Aa… (2)

4. kashtangal vilaga.. kaikoduththeere
kaikoduththeere.. kaikoduththeere – 2
nesar mugam kaana.. nesar mugam kaana.. Aa…Aa…Aa…Aa…
yengiduthe aasai en ullile – Aa…Aa…Aa…Aa… (2)

5. Enthan Kaneerai.. Pokkidum Kaalam
Pokkidum Kaalam.. Pokkidum Kaalam – 2
Vegam Varum Endru.. Vegam Varum Endru.. Aa…Aa…Aa…Aa…
Kaathirunthu Naan Vaadukiren Aa…Aa…Aa…Aa…

6. Yaathirai Mudinthu.. Yesu Raajanai
Yesu Raajanai.. Yesu Raajanai – 2
Megathil Santhiththu.. Megathil Santhiththu Aa…Aa…Aa…Aa…
Niththiya kaalamaai Vaazhnthiduven – Aa…Aa…Aa…Aa… (2)

Unakkulle Irukkindra – உனக்குள்ளே இருக்கின்ற

Unakkulle Irukkindra
உனக்குள்ளே இருக்கின்ற
உன் இயேசு என்றும் பெரியவரே – 2
நீ அறியாததும் உனக்கெட்டாததுமான
பெரிய காரியங்கள் செய்திடுவார் – 2

1. பெருவெள்ளம் மோதி அடிக்கின்றதோ
பெருங்காற்றில் படகு தவிக்கின்றதோ – 2
பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்
பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே (2)

2. நம்பிக்கை இல்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ – 2
அற்புதர் உனக்குள்ளே இருக்கின்றார்
அதிசயம் செய்வார் கலங்காதே (2)

3. சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையானாரோ – 2
வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
வலக்கரம் தாங்குவார் கலங்காதே (2)

4. மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளி வரும் நேரம் இருளானதோ – 2
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
யாவையும் செய்வார் கலங்காதே (2)

5. செங்கடல் உனக்கு முன்னானதோ
சேனைகளெல்லாம் பின்னானதோ – 2
சேனையின் கர்த்தர் இருக்கின்றார்
சேதமின்றி காப்பார் கலங்காதே (2)

Unakkulle Irukkindra
Un Yesu Endrum Periyavare – 2
Nee Ariyathathum Unakkettaathathumaana
Periya Kaariyangal Seithiduvaar – 2

1. Peruvellam Mothi Adikkindratho
Perunkaattril Padagu Thavikkindratho – 2
Periyavar Unakkulle Irukkindraar
Paarthukkolvaar Nee Kalangaathe (2)

2. Nambikkai Illaa Nilaiyaanatho
Visuvaasam Unnil Kuraivaanatho – 2
Arputhar Unakkulle Irukkindraar
Athisayam Seivaar Kalangaathe (2)

3. Soozhnilai Ellaam Ethiraanatho
Suttraththaar Unnil Pagaiyaanaaro – 2
Vallavar Unakkulle Irukkindraar
Valakkaram Thaanguvaar Kalangaathe (2)

4. Mathuramaana Vaazhvu Kasappaanatho
Oli Varum Neram Irulaanatho – 2
Jeevanulla Devan Irukkindraar
Yaavaiyum Seivaar Kalangaathe (2)

5. Senkadal Unakku Munnaanatho
Senaigalellaam Pinnaanatho – 2
Senaiyin Karththar Irukkindraar
Sethamindri Kaappaar Kalangaathe (2)

Thaangattume Um Kirubai – தாங்கட்டுமே உம் கிருபை தேவனே

Thaangattume Um Kirubai Devane
தாங்கட்டுமே உம் கிருபை தேவனே
தனிமையில் நடக்கும் போதெல்லாம் – என்
பெலவீனத்தில் உம் கிருபை பூரணம்
என் மேல் இறங்க வேண்டுமே (2)

தனிமையை நினைத்து அழும் நேரமெல்லாம்
தகப்பனே உம் கிருபை தாங்கணுமே (2)

1. உமது சேவைக்காக அழைத்தீரையா
எந்தன் சேவையை நீர் நினைக்கணும்
உமது தரிசனங்கள் என் வாழ்விலே
நீங்க நிறைவேற்றி முடிக்கணும் (2)

கிருபையே (2) மாறாத தேவ கிருபையே
கிருபையே (2) நாள் தோறும் தாங்கும் கிருபையே

2. உலகில் உபத்திரவம் வரும் போதெல்லாம்
உந்தன் கிருபை என்னைத் தாங்கணும்
ஊழிய பாதையில் நான் சோர்ந்து போனால்
உந்தன் கிருபை என்னை நிரப்பணும் (2)

கிருபையே (2) மாறாத தேவ கிருபையே
கிருபையே (2) நாள் தோறும் நடத்தும் கிருபையே

Thaangattume Um Kirubai Devane
Thanimaiyil Nadakkum Podhellaam – En
Belaveenatthil Um Kirubai Pooranam
En Mel Iranga Vendume (2)

Thanimaiyai Ninaitthu Azhum Neramellaam
Thagappane Um Kirubai Thaanganume (2)

1. Umathu Sevaikkaaga Azhaittheeraiyaa
Endhan Sevaiyai Neer Ninaikkanum
Umathu Dharisanangal En Vaazhvile
Neenga Niraivettri Mudikkanum (2)

Kirubayye (2) Maaraatha Deva Kirubayye
Kirubayye (2) Naal Thorum Thaangum Kirubayye

2. Ulagil Ubatthiravam Varum Podhellaam
Undhan Kirubai Ennaith Thaanganum
Ooliya Paadhaiyil Naan Sornthu Ponaal
Undhan Kirubai Ennai Nirappanum (2)

Kirubayye (2) Maaraatha Deva Kirubayye
Kirubayye (2) Naal Thorum Nadatthum Kirubayye

Siragugalin Nizhalthanile Naan – சிறகுகளின் நிழல்தனிலே

Siragugalin Nizhalthanile Naan

சிறகுகளின் நிழல்தனிலே நான்
நம்பி இளைப்பாறுவேன்
நீர் துணையாய் இருப்பதனால் நான்
என்றும் இளைப்பாறுவேன் – 2

கண்மணி போல என்னை காப்பவரை நான்
நம்பி இளைப்பாறுவேன்
கண் உறங்காமல் காப்பவரை நான்
நம்பி இளைப்பாறுவேன்

மறைவிடமே.. ஆராதனை..
உறைவிடமே உமக்கு ஆராதனை
அடைக்கலமே.. ஆராதனை..
புகலிடமே உமக்கு ஆராதனை

ஆராதனை உமக்கு ஆராதனை
என்னை நேசிக்கும் (ஆதரிக்கும்) இயேசுவே ஆராதனை – 2

1. பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும்
என்னை அணுகாமல் காப்பவரே
வலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும்
என்னை அணுகாமல் காப்பவரே – 2

அடைக்கலமான என் தாபரமே
(என்னை) அணுகாமல் காப்பவரே – 2 (…மறைவிடமே)

2. இச்சகம் பேசிடும் நாவுகள் முன்னிலே
என்னை காப்பவரே
நன்மைக்கு கைமாறாய் தீமை செய்வோர் மத்தியில்
என்னை காப்பவரே – 2

துரோகங்கள் நிறைந்த பூமியிலே
துணை நின்று காப்பவரே
தெவிட்டாமல் நேசிக்கும் என் நேசரே
என்னை என்றும் காப்பவரே (…மறைவிடமே)

Siragugalin Nizhalthanile Naan
Nambi Ilaippaaruven
Neer Thunayaai Iruppathanaal Naan
Endrum Ilaippaaruven – 2

Kanmani Pola Ennai Kaappavarai Naan
Nambi Ilaippaaruven
Kan Urangaamal Kaappavarai Naan
Nambi Ilaippaaruven

Maraividame.. Aaraathanai..
Uraividame Umakku Aaraathanai
Adaikkalame.. Aaraathanai..
Pugalidame Umakku Aaraathanai

Aaraathanai Umakku Aaraathanai
Ennai Nesikkum (Aatharikkum) Yesuve Aaraathanai – 2

1. Pakkathil Aayiram Per Vizhunthaalum
Ennai Anugaamal Kaappavare
Valapakkathil Pathinaayiram Vizhunthaalum
Ennai Anugaamal Kaappavare – 2

Adaikalame En Thaabarame
(Ennai) Anugaamal Kaappavare – 2 (…Maraividame)

2. Ichagam Pesidum Naavugal Munnile
Ennai Kaappavare
Nanmaikku Kaimaaraai Theemai Seivor Mathiyil
Ennai Kaappavare – 2

Throgangal Niraintha Boomiyile
Thunai Nindru Kaappavare
Thevittaamal Nesikkum En Nesare
Ennai Endrum Kaappavare (…Maraividame)

Yesuve Ennakiragidume – இயேசுவே எனக்கிறங்கிடுமே

Yesuve Ennakiragidume
இயேசுவே எனக்கிறங்கிடுமே
அழுதிடும் எந்தன் சத்தம் கேழுமே
வடியும் எந்தன் கண்ணீர் துடைக்க
ஒருமுறை என்னை நோக்கிப் பாருமே – 2

அவரே என்னை திரும்பி பார்த்தார்
அவரே என்னை தூக்கி எடுத்தார் – 2
அவர் மடியில் போட்டு கண்ணீரை துடைத்து
என் சமாதானம் போதும் என்றார் – 2

1. எந்தன் வீட்டில் உம் பாதபடி
சாகும் அனைத்தையும் எழுப்பிடுமே
முடிந்தது என்று நகைத்தனரே
ஒருமுறை என்னை நோக்கிப் பாருமே – 2 (…அவரே)

2. அந்த தாயின் அன்பை மறந்தேன்
பாவத்தால் உம் பெலன் இழந்தேன்
இப்போதும் உந்தன் ஆவி ஊற்ற
ஒருமுறை என்னை நினைத்திடுமே – 2 (…அவரே)

En Ninaivugal Indru Azhinthaalum – என் நினைவுகள் இன்று அழிந்தாலும்

En Ninaivugal Indru Azhinthaalum
என் நினைவுகள் இன்று அழிந்தாலும்
நினைவிருக்கும் உம் பிரசன்னமே – 2
போகையிலும் வருகையிலும்
என் துணையாயிருக்கிறீர்
நான் சோர்ந்தாலும் மனம் தளர்ந்தாலும்
உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் – 2

பிரசன்னராய் கூட இருப்பவரே
அற்புதராய் கூட வருபவரே
என்னை விட்டு எடுபடாத
நல்லப் பங்கே – 2
என்னை விட்டு எடுபடாத நல்லப் பங்கே – நீர் (2)

என் உறவுகள் இன்றென்னை மறந்தாலும்
நிரந்தரமே உம் பிரசன்னமே – 2
(நான்) வாழ்ந்தாலும் (நான்) தாழ்ந்தாலும்
என் துணையாயிருக்கிறீர்
என் தனிமையிலும் வெறுமையிலும்
உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் – 2 (…பிரசன்னராய்)

எனக்குள் இருப்பவர்.. நீர் மிகவும் பெரியவர்
என் பட்சமாய் இருப்பவர்.. நீர் உலகத்தை ஜெயித்தவர்
என் நடுவினில் இருப்பவர்.. நீர் சர்வ வல்லவர்
எனக்காய் இருப்பவர்.. நீர் நம்பத்தக்கவர் – 2 (…பிரசன்னராய்)

En Ninaivugal Indru Azhinthaalum
Ninaivirukkum Um Prasanname – 2
Pogaiyilum Varugaiyilum
En Thunaiyaayirukireer
Nan Sornthaalum Manam Thalarnthaalum
Um Vaarthaiyaal Ennai Thettrukireer – 2

Prasannaraai Kooda Iruppavare
Arputharaai Kooda Varubavare
Ennai Vittu Edupadaatha
Nalla Pange – 2
Ennai Vittu Edupadaatha Nalla Pange – Neer (2)

En Uravugal Indrennai Maranthaalum
Nirantharame Um Prasanname – 2
(Naan) Vaazhnthaalum (Naan) Thaazhnthaalum
En Thunaiyaayirukireer
En Thanimaiyilum Verumaiyilum
Um Vaarththaiyaal Ennai Thettrukireer – 2 (…Prasannaraai)

Enakkul Iruppavar.. Neer Migavum Periyavar
En Patchamaai Iruppavar.. Neer Ulagathai Jeyiththavar
En Naduvinil Iruppavar.. Neer Sarva Vallavar
Enakkaai Iruppavar.. Neer Nambaththakkavar – 2 (…Prasannaraai)

Devan Namakku Adaikkalamum – தேவன் நமக்கு அடைக்கலமும்

Devan Namakku Adaikkalamum
தேவன் நமக்கு அடைக்கலமும்
ஆபத்துக் காலத்தில் துணையுமானவர் – 2

பூமி நிலை மாறினாலும் (2)
மலைகள் நிலை சாய்ந்து போனாலும் (2)

1. ஒர் நதியுண்டு அதின் நீர்க்கால்கள் (2)
தேவனுடைய நகரத்தைச் சந்தோஷிப்பிக்கும் (2)
அதின் நடுவில் அது அசையாது
அதிகாலையில் அவர் சகாயம் பண்ணுவார் – 2 (…தேவன்)

2. சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார் (2)
யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்தடைக்கலம் (2)
பூமியிலே நடப்பிக்கின்ற
தேவனுடைய செயல்களை வந்து பாருங்கள் – 2 (…தேவன்)

3. பூமியின் கடைமுனை மட்டும் (2)
யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார் (2)
வில்லை ஒடித்து ஈட்டியை முறித்து
ரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார் – 2 (…தேவன்)

4. அமர்ந்திருந்து அறிந்து கொள்ளுங்கள் (2)
நானே தேவன் ஜாதிகளுக்குள்ளே (2)
உயா்ந்திருப்பேன் உயா்ந்திருப்பேன்
உயா்ந்திருப்பேன் நான் பூமியிலே – 2 (…தேவன்)

Devan Namakku Adaikkalamum
Aabathu Kaalathil Thunaiyumaanavar – 2

Boomi Nilai Maarinaalum (2)
Malaigal Nilai Saaindhu Ponaalum (2)

1. Or Nadhi Undu Adhin Neerkkaalgal (2)
Devanudaiya Nagarathai Sandhoshippikkum (2)
Adhin Naduvil Adhu Asaiyaadhu
Adhikaalaiyil Avar Sagaayam Pannuvaar – 2 (…devan)

2. Senaigalin Karthar Nammodirukkiraar (2)
Yaakkobin Devan Namakku Uyarnthadaikalam (2)
Boomiyile Nadappikkindra
Devanudaiya Seyalgalai Vandhu Paarungal – 2 (…devan)

3. Boomiyin Kadai Munai Mattum (2)
Yuththangalai Oyappanugiraar (2)
Villai Odithu Eettiyai Muritthu
Radhangalai Neruppinaal Sutterikkiraar – 2 (…devan)

4. Amarndhirundhu Arindhu Kollungal (2)
Naane Devan Jaadhigalukkulle (2)
Uyarnthiruppen Uyarnthiruppen
Uyarnthiruppen Naan Boomiyile – 2 (…devan)

Thaayin Vayittril Thondrina Naal Mudhal – தாயின் வயிற்றில் தோன்றின நாள்முதல்

Thaayin Vayittril Thondrina Naal Mudhal
தாயின் வயிற்றில் தோன்றின நாள்முதல்
என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனே
உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து
உன்தன் கண்மணி போலென்னை காக்கின்றீர் – 2

மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள்
துதிப்பேன் துதிப்பேன் என் முழு இதயத்தோடு – 2
என் கர்த்தர் நல்லவர்.. மிக மிக நல்லவர்
என்னை விசாரிக்கும் நல் தகப்பனவர் – 2

1. வெள்ளம் போல் சத்ரு எதிர்த்து வந்தாலும்
(தேவ)(ஆவி)யானவர் எனக்காய் கொடியேற்றுவீர்
இதுவரை உதவி செய்த நேசரே
இனியும் உதவி செய்ய வல்லவரே – 2 (…மறவேன்)

2. பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்தி
ஆயத்தம் செய்த சர்வ வல்லவரே
எண்ணையால் என்னை அபிஷேகம் செய்து
என் பாத்திரம் நிரம்பி வழிய செய்கின்றீர் – 2 (…மறவேன்)

Thaayin Vayittril Thondrina Naal Mudhal
Ennai Yendhi Sumandhu Kaattha Dhevane
Um Ullangkaigalil Ennai Varaindhu
Undhan Kanmani Polennai Kaakkindreer – 2

Maraven Maraven Neer Seidha Nanmaigal
Thuthippen Thuthippen En Muzhu Idhayatthodu – 2
En Kartthar Nallavar Miga Miga Nallavar
Ennai Visaarikkum Nal Thagappanavar – 2

1. Vellam Pol Sathru Edhirtthu Vandhaalum
(Dheva) (Aavi)yaanavar Enakkaay Kodiyettruveer
Idhuvarai Udhavi Seidha Nesare
Iniyum Udhavi Seiya Vallavare – 2 (…Maraven)

2. Pagaignar Edhire Enakku Or Pandhi
Aayattham Seidha Sarva Vallavare
Yennaiyaal Ennai Abishegam Seidhu
En Paatthiram Nirambi Vazhiya Seigindreer – 2 (…Maraven)

Aaviyaanavare.. Aaviyaanavare.. – ஆவியானவரே.. ஆவியானவரே..

Aaviyaanavare.. Aaviyaanavare..
ஆவியானவரே.. ஆவியானவரே..
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
ஆவியானவரே.. ஆவியானவரே..
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா

1. பரிசுத்தத்தோடு ஆராதித்திட
சுத்திகரியும் தூய ஆவியே – 2 (…ஆவியானவரே)

2. ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவா
எந்தன் உதடுகள் இன்று தொடுமே – 2 (…ஆவியானவரே)

3. அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமே
வல்லமையாய் ஊழியம் நான் செய்திட – 2 (…ஆவியானவரே)

ரூஹா காற்றே.. ரூஹா காற்றே..
சுவாசக் காற்றே என்னை உயர்ப்பியுமே – 2 (…ஆவியானவரே)

Aaviyaanavare.. Aaviyaanavare..
Unthan Vallamaiyai Oottrumaiyaa
Aaviyaanavare.. Aaviyaanavare..
Unthan Abishekaththaal Nirappumaiyaa

1. Parisuththaththodu Aaraathiththida
Suththikariyum Thooya Aaviye – 2 (…Aaviyaanavare)

2. Aesaayaavin Uthadukal Thotta Dhevaa
Enthan Uthadukal Intru Thodume – 2 (…Aaviyaanavare)

3. Akkiniyin Naavukal Irangattume
Vallamaiyaay Ooliyam Naan Seythida – 2 (…Aaviyaanavare)

4. Ruhaa Kaatre.. Ruhaa Kaatre..
Suvaasak Kaatre Ennai Uyarppiyume – 2 (…Aaviyaanavare)

Aashrayudaa Abhishekthudaa – ఆశ్రయుడ అభిశక్తుడా

Aashrayudaa Abhishekthudaa

ఆశ్రయుడ అభిశక్తుడా
ఆరాధ్యదైవము నీవేనయ్యా (2)

అప: స్వరమెత్తినే పాడనా
గలమెత్తి కీర్తించనా (2)
ఆరాధించెద యేసయ్యా
నిన్నే స్తుతియించెదనయ్యా
నిన్నే పూజించెదనయ్యా
నిత్యము ఘనపరిచెద నయ్యా (2)

1. మంటి ఘటమును మనిషిగా మార్చి
మహిమతో నింపినది నీవే కదా (2)
నీ చిత్తము నాలో నెరవేర్చుటకై
మహిమను విడిచి దిగివచ్చితివి (2)

2. సింహాల బోనులో దానియేలును
ధైర్యపరచినది నీవే కదా (2)
సింహాలనోళ్లను కట్టివేసి
సింహాసనముపై ఎక్కించితివి (2)

3. పౌలు శీలలు ఆరాధించగా
సంకెళ్లు తెంచినది నీవే కదా (2)
అలసిపోనివ్వక ఆత్మతో నింపి
జయ జీవితమును దర్శింపజేసితివి (2)

Aashrayudaa Abhishekthudaa
Aaradhyadaivamu Neevenayya (2)

Swaramethi Ne Padana
Galamethi Keerthinchana (2)
Aaradhinchedha Yesayya
Ninne Sthuthinchedhanayya
Ninne Poojinchedhanayya
Nithyamu Ganaparachedhanayya (2)

1. Matti Gatamunu Manishi Ga Marchi
Ma
Himatho Nimpinadhi Neeve Kadha (2)
Ne Chithamu Naalo Neraverchutakai
Mahimanu Vidachi Dhigivachithivi (2)

2. Simhala Bonulo Daniyelunu
Dhairyaparachinadhi Neeve Kadha (2)
Simhala Noolanu Kattivesi
Simhasanamupai Ekkinchithivi (2)

3. Paulu Silalu Aaradhinchaga
Sankellu Thenchinadhi Neeve Kadha (2)
Alasiponivaka Aathmatho Nimpi
Jaya Jeevithamunu Dharshimpa Jesithivi (2)

ஆஸ்ரயுடா அபிஷேகத்துடா
ஆராத்ய தைவமு நீவேனைய்யா-(2)
ஸ்வரமேத்தி நே பாடனா
கலமேத்திக் கீர்த்திஞ்சனா-(2)
ஆராதிஞ்சேத இயேசய்யா
நின்னே ஸ்துதியின்சேதனைய்யா
நின்னே பூஜிஞ்சேதனைய்யா
நித்யமு கணபரச்சேதனைய்யா-(2)

1. மட்டி கட்டமுனு மனிஷிகா மார்ச்சி
மஹிமதோ நிம்பினதி நீவேகதா-(2)
நீ சித்திமு நாலோ நேரவேர்ச்சுடகை
மஹிமனு விடச்சி திகிவச்சிதிவி-(2)

2. சிம்ஹாலா போனுலோ தானியேலுனு
தைரிய பரசினதி நீவேகதா-(2)
சிம்ஹாலா நோலனு
கட்டிவேசி
சிம்ஹாசனமுபை எக்கிஞ்சிதிவி-(2)

3. பவுலு சீலலு ஆராதிஞ்சகா
சங்கெல்லு தெஞ்சினதி நீவேகதா-(2)
அலசிபோனிவ்வகா ஆத்மதோனிம்பி
ஜெயஜீவிதமுனு தர்ஷிம்ப சேசிதிவி-(2)