All Songs by Prabhu Isaac

Paraloga Rajave – பரலோக ராஜாவே

Paraloga Rajave
பரலோக ராஜாவே
சிலுவையின் நாயகனே
பூவுலகின் மன்னவனே-2
படைக்கின்றோம் – எங்களது
ஆவி ஆத்மா சரீரத்தை
உம் திரு பாதத்திலே-2

1. கல்வாரி ரத்தத்தால் கழுவியே – எம்மை
கன்மலையின்மேல் நிறுத்தினீரே
கனிவுடனே கரம்பிடித்து – காலமெல்லாம்
எங்களையே பாதுகாத்து நடத்தினீரே! – பரலோக

2. கருவில் எம்மை கண்டீரே
கண்மணி போல் காத்தீரே
கண்ணீர் யாவும் துடைத்திட்டீரே
நொறுங்கிப் போன நிலைமையிலே
எங்களையே உருவாக்கி உயர்த்தினீரே! – பரலோக

3. சோதனையின் பாதைகளில்
சோர்ந்த வேளை எல்லாம்
சுமந்து வந்தீர் தகப்பனைப் போல்
பெற்ற அன்னை மறந்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை
என்று அற்றி தேற்றினீரே! – பரலோக

Saronin Rojave – சாரோனின் ரோஜாவே

Saronin Rojave

சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே-2
பதினாயிரம் பேர்களில் சிறந்தவரே
பணிகின்றோம் உம் பாதத்தில்-2

ஆதியும் அந்தமானவரே!
எந்தன் ஆருயிரின் நாயகரே!
அதிசயமானவரே! – என்னை
ஆட்கொண்ட ஆண்டவரே! – சாரோனின்

பரிசுத்தர் பரிசுத்தரே! – எங்கள்
பரலோக ராஜாவே!
கர்த்தாதி கர்த்தர் நீரே!
என்னை காத்திடும் கேடகமே – சாரோனின்

பொன்னகர் உயர்ந்தவரே! – எங்கள்
உத்தமர் இயேசு ஐயரே!
உயர்த்தி மகிழுவேன் – என்று (உம்மை)
பாடி போற்றுவேன்! – சாரோனின்

Isravelin Devane – இஸ்ரவேலின் தேவனே எங்கள்

Isravelin Devane

இஸ்ரவேலின் தேவனே எங்கள்
ஈசாக்கின் தேவனே
ஆபிரகாமின் தேவனே எங்கள்
ஆருயிர் நண்பனே

1. உளையான சேற்றினின்று
என்னை விடுவித்த தேவனே
கன்மலைமேல் நிறுத்தி என்னை
உயர்த்திய தேவனே – இஸ்ரவேலின்

2. என்னை பிழைக்க வைத்தீர்
உந்தன் சாட்சியாய் மாற்றினீர்
கவலையிலும் கண்ணீரிலும் (எந்தன்)
உதவின எபிநேசரே – இஸ்ரவேலின்

3. புதுவாழ்வு அளித்தவரே
புதிய பெலனால் நிரப்பிடுமே
உயிருள்ள நாட்களெல்லாம் (எந்தன்)
உயர்த்தியே பாடுவேன் – இஸ்ரவேலின்

Yesuvai Pol Oru Nesar – இயேசுவைப் போல் ஒரு நேசர்

Yesuvai Pol Oru Nesar

இயேசுவைப் போல் ஒரு நேசர் இல்லை
இயேசுவைப் போல் ஒரு நண்பண் இல்லை
இயேசுவே உந்தன் நேசரே
இயேசுவே உந்தன் மீட்பரே-2

வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றாயே
ஓடிவா நீ இயேசுவிடம்
நானே உனக்கு சமாதானம்
நானே உனக்கு ஆறுதல்
நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்
இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல்

உந்தன் தந்தை தாயும் கைவிட்டாலும்
ஓடிவா நீ இயேசுவிடம்-2
நானே உன்னை சேர்த்துக் கொள்வேன்
நானே உன்னை ஆதரிப்பேன்
கலங்காதே திகையாதே என்றாரே
இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல்

உன் வாழ்வில் கசப்புகள் கலந்திட்டாலும்
ஓடிவா நீ இயேசுவிடம்
மாராவின் நீரை மதுரமாக
மாற்றின தேவன் நான் என்றார்
மாறாதவர் உன்னை அழைக்கிறார்
இயேசுவைப்போல் ஒரு தெய்வம் இல்லை-2 – இயேசுவைப் போல்

Aananthame Aananthame – ஆனந்தமே! ஆனந்தமே!

Aananthame Aananthame

ஆனந்தமே! ஆனந்தமே! ஆனந்தமே!
அப்பா உந்தன்
சமூகத்திலே அனந்தமே!

1. எனக்காக மரித்தீரே நன்றி ஐயா!
எனக்காக உயிர்த்தீரே நன்றி ஐயா!
பாவமெல்லாம் மன்னித்தீரே நன்றி ஐயா!
புதுவாழ்வு எனக்குத் தந்தீர் நன்றி ஐயா! – ஆனந்தமே

2. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ஐயா!
அரவணைத்து தேற்றினீரே நன்றி ஐயா!
ஆறுதலை தந்தீரே நன்றி ஐயா!
உம்மை ஆராதிக்க வைத்தீரே நன்றி ஐயா! – ஆனந்தமே

3. அன்பு காட்டி அரவணைத்தீர் நன்றி ஐயா!
அரவணைத்து தேற்றினீரே நன்றி ஐயா!
ஆறுதலை தந்தீரே நன்றி ஐயா!
உம்மை ஆராதிக்க வைத்தீரே நன்றி ஐயா! – அனந்தமே

Aananthamae! Aananthamae! Aananthamae!
Appaa Unthan
Samookaththilae Ananthamae!

1. Enakkaaka Mariththeerae Nanti Aiyaa!
Enakkaaka Uyirththeerae Nanti Aiyaa!
Paavamellaam Manniththeerae Nanti Aiyaa!
Puthuvaalvu Enakkuth Thantheer Nanti Aiyaa! – Aananthamae

2. Kadantha Naatkal Kaaththeerae Nanti Aiyaa!
Aravannaiththu Thaettineerae Nanti Aiyaa!
Aaruthalai Thantheerae Nanti Aiyaa!
Ummai Aaraathikka Vaiththeerae Nanti Aiyaa! – Aananthamae

3. Anpu Kaatti Aravannaiththeer Nanti Aiyaa!
Aravannaiththu Thaettineerae Nanti Aiyaa!
Aaruthalai Thantheerae Nanti Aiyaa!
Ummai Aaraathikka Vaiththeerae Nanti Aiyaa! – Ananthamae

Anbaai Nadathum Aaviye – அன்பாய் நடத்தும் ஆவியே

Anbaai Nadathum Aaviye

அன்பாய் நடத்தும் ஆவியே
ஆதி அப்போஸ்தலர் மேல் பொழிந்த
வல்லமையின் ஆவியே
விடுதலையின் ஆவியே
வந்து எம்மை அபிஷேகியும்

1. அற்புதங்கள் நடக்கணும்
அதிசயத்த பாக்கணும்
ஆத்துமாக்கள் பெருகிடணும்
அஸ்திபாரம் அசையணும்
அந்தகாரம் ஒழியணும்
இயேசுவையே அறியவேண்டும் – அரவணைக்கும்

2. யோசுவாக்கள் எழும்பணும்
எலியாக்கள் பெருகணும்
கிதியோன்கள் புறப்படணும்
எஸ்தர்கள் எழும்பணும்
எரிகோக்கள் உடையணும்
ஏசு தேவன் என்று முழங்கணும் – அரவணைக்கும்

Agilathai Aalum Deivam – அகிலத்தை ஆளும் தெய்வம்

Agilathai Aalum Deivam

அகிலத்தை ஆளும் தெய்வம்
ஆண்டவர் இயேசுவையே
ஆர்வமுடன் தொழுவோம்-2

வானமும் பூமியை
வார்த்தையால் படைத்தவரை
வாருங்கள் நாம் தொழுவோம்-2

1. பாவத்தை சாபத்தை
நோய் பிணியை அகற்ற
பாரினில் வந்துதித்தாரே
பரலோக மைந்தன் அவர்
பரிசுத்த தேவன் அவர்
ஆர்வமுடன் தொழுவோம் – அகிலத்தை

2. வழிதப்பி போன நம்மை
வழிகாட்டும் மேய்ப்பனாக
பாரினில் வந்துதித்தாரே
அவரே நம் இருள் நீக்கும்
ஒளியாக வந்த தெய்வம்
ஆர்வமுடன் தொழுவோம் – அகிலத்தை

Intha Naal Varaiyil – இந்த நாள் வரையில் என்னை

Innaal Varaiyil

இந்த நாள் வரையில் என்னை நடத்தினார்
இனிமேலும் என்னை நடத்துவார்
ஒன்றுமில்லாத வேளையில் – அவர்
உதவிக்கரம் நீட்டியே உயர்த்தினாரே,
எந்தன் அன்பு இயேசுவே – இந்த

1. தனிமையில் அன்று நாள் தவிக்கையில்
தேடிவந்து அணைத்த எந்தன் தெய்வமே
துன்பம், துக்கம், துயரம் என்னை
சூழ்ந்து கொண்ட வேளையில்
துக்கமெல்லாம் மகிழ்ச்சியாக மாற்றினீர் – இந்த

2. என்னை விட்டு விலகி நீர் போனீரோ?
என்னை மறந்து மறைந்து நீர் போனீரோ?
என்று நான் குழம்பி,
அலைந்து துடித்த வேளையில்
உன்னைவிட்டு விலகவில்லை என்றீரே – இந்த

3. தூற்றுவோரின் நிந்தை அவமானமும்
எங்களை வாட்டின வேளையில்
இனியும் இந்த நிந்தைகள்
பூமியில் இராதபடி
முற்றிலும் நான் நீக்கிடுவேன் என்றீரே – இந்த

Vazhi Nadathum Valla Devan Undu – வழிநடத்தும் வல்ல தேவன் உண்டு

Vazhi Nadathum Valla Devan

வழிநடத்தும் வல்ல தேவன்
உண்டு மகனே(ளே)
உன் வாழ்நாளெல்லாம் நடத்திடுவார்
கலங்கிடாதே

1. கல்லானாலும் முள்ளானாலும்
கர்த்தர் இயேசு நடத்திடுவார்
காடானாலும் மேடானாலும்
கர்த்தர் இயேசு சுமந்திடுவார்
அவர் கரம்பற்றிப் பிடிப்பாய்
அவரையே பின்பற்றி செல்வாய் – வழி

2. வியாதி வியாகுலமோ?
பசியோ நிர்வாணமோ?
நிந்தைகளோ? அவமானமோ?
நாயகன் இயேசு நடத்திடுவார்
அவர் கரம் பற்றிப் பிடிப்பாய்
அவரையே பின்பற்றி செல்வாய் – வழி

Ummaiyandri Yaarundu – உம்மையன்றி யாருண்டு

Ummaiyandri Yaarundu

உம்மையன்றி யாருண்டு
உலகினில் எனக்கு
உயிருள்ள இயேசுவே
உதவிட வாருமே – உம்மையன்றி

உலகமும் மாயை ஐயா
உற்றாரும் மாயை ஐயா
செல்வமும் மாயை ஐயா
செல்வாக்கும் மாயை ஐயா-2

நீரே என் கோட்டையே
நீரே என் துருகமே
நீரே என் தஞ்சமே
நீரே என் கன்மலையே – உம்மையன்றி

பணமும், பதவிகளும்
படிப்பும், பட்டங்களும்
பதவியும், பந்தங்களும்
நிலையற்ற தல்லவே-2

நீரே என் கோட்டையே
நீரே என் துருகமே
நீரே என் தஞ்சமே
நீரே என் கன்மலை – உம்மையன்றி