All Songs by Bro. Raju

Ummai Nesikka – உம்மை நேசிக்க கற்று தாரும்

Ummai Nesikka
உம்மை நேசிக்க கற்று தாரும்
உள்ளத்தால் முழு பெலத்தால்
உம்மை நேசிக்க கற்று தாரும்

உலகை மறந்து உம்மை நேசிக்க
என்னை மறந்து உம்மை நேசிக்க
சிலுவை சுமக்கையில் நேசிக்க
மரணம் சந்திக்கையில் நேசிக்க

துன்பமான நேரத்தில் நேசிக்க
இன்பமான நேரத்தில் நேசிக்க
கண்ணீரின் மத்தியில் நேசிக்க
தனிமையான நேரத்தில் நேசிக்க

Abishegam Petravan Simsoon – அபிஷேகம் பெற்றவன் சிம்சோன்

Abishegam Petravan Simsoon
அபிஷேகம் பெற்றவன் சிம்சோன்(3)
விழுந்து போனானே எப்படி?
Something Somewhere Wrong…(4)

அழைக்கபட்டவன் யூதாஸ் (3)
விழுந்து போனானே எப்படி?
Something Somewhere Wrong…(4)

Iife என்னும் track ல
ஓடுகின்ற race ல
Cycle Gap ல
பாவம் வந்தது காத்துல
அப்பாலே போனு சொல்லல
கர்த்தர் பயமும் தோணல
இப்போ நீ சிக்கிகிட்ட பாவத்தின் சேத்துல
Life ல இருந்த Peace போச்சு
Face ல இருந்த Color போச்சு
இப்போ Total ல உன் Life காஞ்சி போன கருவடாச்சி
இப்போவே உனக்கு Choice இருக்கு
இயேசு என்னும் Guide இருக்கு
பாட்டு கேட்டு மனம் திரும்பலன்னா
உன்ன பாத்து பாடுவேன்
Something Somewhere Wrong… (4)

Yaar Ennai Pirikakoodum – யார் என்னை பிரிக்க கூடும்

Yaar Ennai Pirikakoodum
யார் என்னை பிரிக்க கூடும்(2)
பொன்னோ பொருளோ
உயர்வோ தாழ்வோ
பசியோ பட்டினியோ
எது தான் பிரிக்க கூடும்(2)

1. உந்தன் அன்பை ருசிக்கும் முன்னே
உலக அன்புக்காய் ஏங்கினேன்
உந்தன் அன்பை ருசித்த பிறகு
உமக்காய் பைத்தியமாய் மாறினேன் (3)

2. சிலுவை சுமந்து சுயத்தை வெறுத்து
உமக்காய் ஊழியம் செய்திடுவேன்
என்ன ஆனாலும் எது நடந்தாலும்
உமக்காய் என்றும் நான் வாழுவேன் (3)

Parisutharai Parkanum – பரிசுத்தரை பார்க்கணும்

Parisutharai Parkanum
பரிசுத்தரை பார்க்கணும்
நான் உம்மை பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உம் பாதம் அமர்ந்து
உம்மை போல் மாறணும்

1. பலப்பல பாவங்கள் எனை சூழும் போது
எனை பாதுகாத்து நடத்துமையா
உம்மை விட்டு விலகி போக கொஞ்சம் கூட மனசு இல்ல
மார்பில் என்னை மூடும்மையா

2. குற்றமற்ற வாழ்கையாய் இவ்வுலகில் சாட்சியாய்
என்னை மாற்றும் எந்தன் சுத்த தெய்வமே
என் வாழ்வின் மூலமாய்
உங்க நாமம் கனமடைய
என்னை பயன்படுத்தும் திவ்ய நாதனே -2

Sunabu Adicha Kalarai – சுண்ணாம்பு அடிச்ச கல்லறை

Sunabu Adicha Kalarai
சுண்ணாம்பு அடிச்ச கல்லறை
ஏன் கேட்குற சில்லறை
பணத்துக்காக ஏங்குற
அதுக்குத்தான் பல்ல காட்டுற
Money is your teaching
Money is your preaching
Stop this Preaching
Where is the Reaching

பணம் பேர சொன்னாலே பொணம் கூட எந்திச்சிகுஈயா
உலகில் எல்லா பாவத்துக்கு பணம் தானே ரூட்டு ஐயா
இந்த பாழா பணத்தினாலே நல்ல குணம் போச்சிய்யா-2

பொருள நம்பி போன அந்த லோத்து கதி பாருமைய்யா
சுத்தத்தை நம்பி வந்த யோசேப்போல மாறும்மைய்யா
பரிசுத்தம் தானே உன்ன பரலோகம் சேர்க்குமைய்யா

Ulagile Uravile Engum – உலகிலே உறவிலே எங்குமே

Ulagile Uravile Engum
உலகிலே உறவிலே எங்குமே நான் பாக்கல
உம்மை போல அன்பு எங்குமே கிடைக்கல
தாயை போல அல்ல அதை காட்டிலும் மேல
தந்தை போல அதை காட்டிலும் மேல

1. காலம் காலமாய் மனிதன் மாறுறான்
எந்த காலமானாலும் நீங்க மாறல-2
முகத்தை பாத்துதான் மனிதன் எடை போடுறான் என்னை
முகத்தை பாத்துதான் உலகம் எடை போடுது
உள்ளத்தை பாத்து என்னை நேசித்தீரய்யா -2

2. செல்வ ஞானமோ என்னில் இல்லையே
பதவி பட்டமோ எதுவும் இல்லையே -2
ஏழைகளை ஒதுக்கினதோ இந்த உலகம் -2
ஏழைகளை அழைத்ததோ இயேசு தெய்வம்-2

Maname Maname Nee – மனமே மனமே நீ

Maname Maname Nee
மனமே மனமே நீ ஏன் கலங்குகிறாய்
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
நீ ஏன் பதறுகிறாய்

மரணத்தை ஜெயித்தவர் உயிரோடு எழுந்தவர்
நீர் வல்லமையுள்ளவரே
உனக்குள்ளே இருப்பவர் என்றும் பெரியவர்
நீர் நல்லவர் நல்லவரே

1. யகோவா எல்ஷடாய் சர்வ வல்லவரே
யகோவா எல்ரோயி என்னை காண்பவரே -2
யகோவா நிசியே வெற்றி தரும் தெய்வமே
நீர் என்றும் உயர்ந்தவரே
யகோவா ஷம்மா சமாதான தெய்வமே
நீர் என்றும் பெரியவரே-2

2. என்னுயிர் நேசமே லீலி புஷ்பமே
உந்தன் பாசமே எனக்கு போதுமே-2
அழகில் சிறந்தவர் மென்மையானவர்
என்னை ஆளுகை செய்பவரே
என் ஆத்தும நேசரே எந்தன் இரட்சகரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே -2

O Mister Kollaikaraa – ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா

O Mister Kollaikaran
ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா
ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா
ஓ மிஸ்டர் சண்டைக்காரா
ஓ மிஸ்டர் பொண்ணு பைத்தியம்
ஓ மிஸ்டர் பண பைத்தியம்
இயேசப்பா வர போறாரு
நியாயந்தீர்க்க வர போறாரு
இன்றைக்கே மனம் திரும்பு
இயேசுவை நீ விரும்பு

ஒளி ஒரு பக்கம் இழுக்கிறது
இருள் ஒரு பக்கம் தடுக்கிறது
நாளை நாளை என்று சொல்லாதே
நாளை என்ன ஆகும் தெரியாதே

வீட்டில் ஒரு வேஷம் தான்
வெளிய ஒரு வேஷம் தான்
இனி வேஷம் போட முடியாதே
மாட்டிகிட்டு நீ முழிக்காதே

Ummai Pola Theivam Illai – உம்மைப் போல தெய்வம்

Ummai Pola Theivam Illai

உம்மைப் போல தெய்வம் இல்லை
நீர் இல்லை என்றால் நானும் இல்லை – 2
கண்ணில் கண்ணால் வாழும் முல்லை (2)
உம் அன்பிற்கு அளவே இல்லை (2)
1. முள்ளில் பாதையில் நடந்தேன் நான்
எந்தன் வாழ்க்கையை இழந்தேன் நான் – 2
நீர் இல்லா மீனைப்போல் துடித்தேன் நான்
தாய் இல்லா பிள்ளைபோல் அழுதேன் நான் – 2
மார்போடு அணைத்தீரே
ஒரு தாயைப் போல் காத்தீரே – 2 (…உம்மை)

2. உந்தன் வார்த்தையை வெறுத்தேன் நான்
உந்தன் பாதையை மறந்தேன் நான் – 2
நீரே வாழ்வு என்று உணர்ந்தேன் நான்
உம்மில் ஜீவனை தந்தேன் நான் – 2
வழிகாட்டும் தெய்வமே
என்னைக் காக்கும் கர்த்தரே – 2 (…உம்மை)

Ummai Pola Theivam Illai
Neer illai Entraal Naanum Illai – 2
Kannil Kannaal Vaazhum Mullai (2)
Um Anpirku Alave Illai (2)
1. Mullil Paathaiyil Nadanthen Naan
Enthan Vaazhkkaiyai Izhanthen Naan – 2
Neer Illaa Meenaippol Thudiththen Naan
Thaai Illaa Pillaippola Azhuthen Naan – 2
Maarbodu Annaiththeere
Oru Thaayaip Pol Kaaththeere – 2 (…Ummai)

2. Unthan Vaarththaiyai Veruththen Naan
Unthan Paathaiyai Maranthen Naan – 2
Neere Vaazhvu Entru Unarnthen Naan
Ummil Jeevanai thanthen Naan – 2
Vazhikaattum Theivame
Ennaik Kaakkum Karththare – 2 (…Ummai)

Um Kirubai Thaan – உம் கிருபை தான்

Um Kirubai Thaan
உம் கிருபை தான் ஐயா ………..
மரித்துப் போன எனக்கு உயிர் தந்த கிருபை
பாவியாய் இருந்தவனை உயர்த்தி வைத்த கிருபை
உம் கிருபை தான் ஐயா ……….

1. சாம்பலை சிங்காரமாய் மாற்றின அந்த கிருபை
தீமையை நன்மையாய் மாற்றி வைத்த கிருபை
உம் கிருபை தான் ஐயா ………..

2. பெலவீன நேரத்தில் பெலன் தந்த கிருபை
சோர்ந்து போன நேரத்தில் சூழ்ந்து கொண்ட கிருபை
உம் கிருபை தான் ஐயா………..