All Songs by david

Kartharaiyum Avar Vasanaththaiyum – கர்த்தரையும் அவர் வசனத்தையும்

Kartharaiyum Avar Vasanaththaiyum
கர்த்தரையும் அவர் வசனத்தையும்
ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா – 2

1. வானமும் பூமியும் ஒழிந்துபோகும் வார்த்தை ஒழியுமோ (2)
பூக்களும் உலரும் புல்லும் அழியும் வசனம் அழியுமோ (2)
ஆண்டவரின் வசனம் அது நிலைத்து நின்றிடுமே (2)
கட்டளையும் கற்பனைகளும் நித்தியம் நித்தியமே (2)

2. காலுக்கு தீபம் பாதைக்கு வெளிச்சம் வசனமல்லவோ (2)
தங்கத்தை விட தேனையும் விட ஒசந்ததல்லவோ (2)
ஆண்டவரின் வசனம் அதில் மனது மகிழுமே (2)
கீழ்படிஞ்சு நடந்தா என்றும் நன்மை நிகழுமே (2)

3. குற்றங்கள் இல்லா குறையும் இல்லா வசனப் புத்தகமே (2)
ஆத்துமாவுக்கு இரட்சிப்பை தரும் பொக்கிஷ பெட்டகமே (2)
பேதைகளுக்கெல்லாம் அது ஞானம் கொடுக்குமே (2)
சத்தியத்தை விரும்புவோர்க்கு அழைப்பு விடுக்குமே (2)

Kartharaiyum Avar Vasanaththaiyum
Rasippoma Konjam Rusippoma – 2

1. Vaanamum Boomiyum Ozhinthupogum Vaarthai Ozhiyumo (2)
Pookkalum Ularum Pullum Azhiyum Vasanam Azhiyumo (2)
Aandavarin Vasanam Athu Nilaiththu Nindridume (2)
Kattalaiyum Karpanaigalum Niththiyam Niththiyame (2)

2. Kaalukku Theebam Paathaikku Velichcham Vasanamallavo (2)
Thangaththai Vida Thenaiyum Vida Osanthathallavo (2)
Aandavarin Vasanam Athil Manathu Magizhume (2)
Keezhpadinju Nadanthaa Endrum Nanmai Nigazhume (2)

3. Kuttrangal Illaa Kuraiyum Illaa Vasana Puththagame (2)
Aathumaavukku Ratchippai Tharum Pokkisha Pettagame (2)
Pethaigalukkellaam Athu Gnaanam Kodukkume (2)
Saththiyaththai Virumbuvorkku Azhaippu Vidukkume (2)

Kartharaiyum Avar Vasanathaiyum – கர்த்தரையும் அவர் வசனத்தையும்

Kartharaiyum Avar Vasanathaiyum
கர்த்தரையும் அவர் வசனத்தையும் – 2
ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா – 2

1. வானமும் பூமியும் ஒழிந்துபோகும் – 2
வார்த்தை ஒழியுமோ – 2
பூக்களும் உலரும் – 2
புல்லும் அழியும் – 2
வசனம் அழியுமோ – 2
ஆண்டவரின் வசனம் – 2
அது நிலைத்து நின்றிடுமே – 2
கட்டளைகளும் கற்பனைகளும் – 2
நித்தியம் நித்தியமே – 2
கர்த்தரையும் அவர் வசனத்தையும் – 2
ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா – 2

2. காலுக்கு தீபம் – 2
பாதைக்கு வெளிச்சம் வசமல்லவோ – 2
தங்கத்தை விட தேனையும் விட உசந்ததல்லவோ – 2
ஆண்டவரின் வசனம் மனது மகிழுமே – 2
கீழ்ப்படிந்து நடந்தா
என்றும் நன்மை நிகழுமே – 2
கர்த்தரையும் அவர் வசனத்தையும் – 2
ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா – 2

3. குற்றங்கள் இல்லா குறையும் இல்லா வசனப் புத்தகமே -2 ஆத்துமாவுக்கு இரட்சிப்பை தரும் பொக்கிஷ பெட்டகமே – 2 பேதைகளுக்கு எல்லாம் அது ஞானம் கொடுக்குமே – 2 சத்தியத்தை விரும்புவோர்க்கு அழைப்பு கொடுக்குமே – 2 கர்த்தரையும் அவர் வசனத்தையும் – 4 ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா – 4

Appa En Appa – அப்பா என் அப்பா

Appa En Appa
அப்பா என் அப்பா…
வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா
அப்பா என் அப்பா…
வேண்டுதலே நீங்கதானே அப்பா

1. அன்பு வைக்கனும் உங்க மேலே
கீழ்ப்படியனும் உங்க வசனத்திற்கு
நான் நடக்கனும் உங்களுக்குள்ள
முக்கியத்துவம் உங்க பிரசன்னத்திற்கு

ஆராதிக்கனும் ஆவியோட
உள்ளத்துக்குள்ள உண்மையோட
நன்றி சொல்லனும் முழு இதயத்தோட
நித்தம் நித்தம் பரலோக நினைப்போட

இதுவரை கேட்காத விஷயங்களை
இன்னைக்கு கேட்டுப்புட்டேன்
இதுவரை பார்க்காத விதங்களில
என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா

2. நம்பிக்கையில வளர்ந்திடனும்
என் சிலுவையை நான் சுமந்திடனும்
உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும்
நீங்க எச்சிரிக்கும் போது பயந்திடனும்

வீட்டுக்குள்ளயும் ஊருக்குள்ளயும்
அன்பு காட்டனும் உங்களைப்போல
என்னை வெறுத்து சுயம் மறுத்து
சித்தம் செய்யனும் உங்க மகனைப்போல

இதுவரை கேட்காத விஷயங்களை
இன்னைக்கு கேட்டுப்புட்டேன்
இதுவரை பார்க்காத விதங்களில
என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன் -2 -அப்பா

Appa En Appa…
Venduthal Seiyuren Kelungappa…
Appa En Appa…
Venduthalae Neenga Thaanae Appa…

1. Anbu Vaikkanum Unga Mela
Keezhppadiyanum Unga Vasanathirku
Naan Nadakkanum Ungalukklla
Mukkiyaththuvam Unga Prasannathirku

Aarathikkanum Aaviyoda
Ullathukkulla Unmayoda
Nandri Sollanum Muzhu Ithayathoda
Niththam Niththam Paraloga Ninaippoda

Ithuvarai Ketkatha Vishayangala
Innaikku Kettupputtaen
Ithuvarai Parkkatha Vithangalila
En Vaazhkkaya Parthupputtaen -2 -Appa

2. Nambikkayila Valarnthidanum
En Siluvaya Naan Sumanthidanum
Ungalukkulla Magizhnthidanum
Neenga Echcharikkum bothu Bayanthidanum

Veettukkullayum Oorukkullayum
Anbu kattanum Ungalappola
Ennai Veruththu Suyam Maruthu
Sitham Seiyanum Unga Magana pola

Ithuvarai Ketkatha Vishayangala
Innaikku Kettupputtaen
Ithuvarai Parkkatha Vithangalila
En Vaazhkkaya Parthupputtaen -2 -Appa

Christmas Endraal

Christmas Endraal
Christmas endraal ennavendru ungalukku theriyumaa
Christhuvaaga vandhavarai ungalukku theriyumaa
Merry Christmas O Merry Christmas (2)

Kannigaikku pirandhavar thooymaiyaanavar
Thozhuvathil pirandhavar thaazhmaiyaanavar
Dheva sitham niraivera manidhanaanavar
Undhan endhan paavam neeka baliyaai aanavar

Kattapatta manidharai viduvithaalavae
Kutrapatta makkal ellaam thirundhi vaazhavae
Baarapatta manidharin baarangal thaangavae
Paavapatta manidharin paavangal neengavae

Ummai Aaraadhikka – உம்மை ஆராதிக்கத்தான்

Ummai Aaraadhikka E min 86 4/4

உம்மை ஆராதிக்கத்தான் என்னை அறிந்தீர்
உம்மை ஆர்ப்பரிக்கத்தான் என்னை அழைத்தீர்
உந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர்
உம்மை பற்றிக்கொள்ளத்தான் என்னை படைத்தீர்

ஏழு விண்மீன் கைதனில் பொன்விளக்கு மத்தியில்
உலாவிடும் உன்னதர் நீரே உமக்கு நிகர்
முந்தினவரும் நீர்தான் பிந்தினவரும் நீர்தான்
மரித்தவரும் நீர்தான் மூன்றாம் நாளில் உயிர்பெற்று
வாழ்கின்ற வேந்தன்

எப்பக்கமும் கூர்மையோ பட்டயம் பற்றினீரோ
கண்கள் அக்னி ஜூவாலையோ பாதங்கள் வெண்கலமோ
தேவ அவி ஏழுண்டு விண்மீன்களும் ஏழுண்டு
எல்லாம் இயேசுவில் உண்டு அப்பேர்ப்பட்ட அழகுள்ள
ஆண்டவர் மைந்தன்

பரிசுத்தர் நீர்தானே சத்தியரும் நீர்தானே
தாவீதின் திறவுகோல் கொண்டவரும் நீர்தானே
நீர் பூட்டிய வாசலை மானிடன் திறப்பானோ
நீர் திறந்த வாசலை பூட்டிவைக்க கூடுமோ
நீர் ஆள்கின்றீர் என்றும்

உண்மையும் சத்தியமும் உள்ளடங்கும் சாட்சியே
தேவனின் சிருஷ்டிக்கு ஆதியே ஆமென் நீரே
நீதியுள்ள நாதனே நீர் என்றும் நித்தியரே
ஆலயத்தின் ஆண்டவா ஆராதனை நாயகா
நீர் வாழ்க வாழ்க என்று

அப்பா பிதாவே நான் உம்மை துதிப்பேன்- எந்தன்
ஆத்ம நேசரே நான் உம்மை துதிப்பேன்
பரிசுத்த ஆவியே என்றும் உம்மை துதிப்பேன்
மூன்றில் ஒன்றாய் விளங்கும் என் தேவ தேவனே

Ummai aaraadhikka thaan ennai arindheer
Ummai aarparikka thaan ennai azhaitheer
Undhan naamam uyarthavae ennil jeevan kodutheer
Ummai patrikolla thaan ennai padaitheer

Yezhu vinmeen kaithanil ponvilakku mathiyil
Ulaavidum unnadhar neerae umakku nigar
Mundhinavarum neerthaan pindhinavarum neerthaan
Marithavarum neerthaan moondraam naalil
Uyir petru vaalgindra vendhan

Eppakkamum koormaiyo pattayam patrineero
Kangal akkni jwaalaiyo paadhangal vengalamo
Dheva aavi yezhundu vinmeengalum yezhundu
Ellaam yesuvil undu apperpatta azhagulla
Aandavar mainthan

Parisuthar neerthaanae sathiyarum neerthaanae
Dhaaveedhin thiravukol kondavarum neerthaanae
Neer pootiya vaasalai maanidan thirappaano
Neer thirandha vaasalai pooti vaikka koodumo
Neer aalgindeer endrum

Unmaiyum sathiyamum ulladangum saatchiyae
Dhevanin sirushtikku aadhiyae amen neerae
Needhiyulla naadhanae neer endrum nithiyarae
Aalayathin aandavaa aaraadhanai naayagaa
Neer vaazhga vaazhga endru

Appa pidhavay naan ummai thuthipaen – endhan
Aathma naesarae naan ummai thuthipaen – pari
Sutha aaviyae endrum ummai thuthipaen
Moondril ondraai vilangum en dheva dhevanae

Manamae O Manamae – மனமே ஓ மனமே

Manamae O Manamae Dmin 96 4/4
மனமே ஓ மனமே
நீ ஏன் அழுகிறாய்
தினமே அனுதினமே
துயரில் விழுகிறாய்

சுமக்க முடியாத சுமையை
நீ ஏன் சுமக்கிறாய்
சகிக்க முடியாத வலியில்
நீ ஏன் தவிக்கிறாய்
உன் பாரங்களை தந்துவிடு
இயேசுவிடம் வந்துவிடு
மற்றவை மறந்துவிடு

எவரும் அறியா ரகசியம்
உனக்குள் இருக்குதோ
மறக்க முடியா அவ்விஷயம்
உன் மனதை உருத்துதோ
நம் தேவனிடம் தயவுண்டு – நீ
வேண்டிக்கொண்டால் விடையுண்டு
விடுதலை உனக்குண்டு

உலகம் தரமுடியா அமைதி
தருபவர் இயேசுதான்
கலகம் வழிந்தோடும் உலகில் –
உன் புகலிடம் இயேசுதான்
நீ தேடுகின்ற ஆதரவும்
நாடுகின்ற உண்மை அன்பும்
இயேசு ஒருவரில் தான்.

Manamae O Manamae
Nee yen azhugiraai
Thinamae anu dhinamae
Thuyaril vizhugiraai

Sumakka mudiyaadha sumaiyai
Nee yen sumakkiraai
Sagikka mudiyaadha valiyil
Nee yen thavikkiraai
Un baarangalai thandhuvidu
Yesuvidam vandhuvidu
Matravai marandhuvidu

Yevarum ariyaa ragasiyam
Unakkul irukkudho
Marakka mudiyaa avvishayam
Un manadhai uruthutho
Nam dhevanidam dhayavundu
Nee vendikondaal vidai undu
Vidudhalai unakkundu

Ulagam thara mudiyaa amaidhi
Tharubavar yesu thaan
Kalagam vazhindhodum ulagil
Un pugalidam yesudhaan
Nee thedugindra nimmadhiyum
Naadugindra unmai anbum
Yesu oruvaril thaan

Neerillaa Aaraadhanai – நீரில்லா ஆராதனை

Neerillaa Aaraadhanai Emin 153 6/8
நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல
நீரில்லா என் வாழ்க்கை ஒரு நல்வாழ்க்கையும் அல்ல

ஆராதிக்கும்போது உம் அங்கீகாரம் வேண்டும் – நான்
பாடல் பாடும்போது உம் பிரசன்னமும் வேண்டும்
உம்மை பார்க்கும்போது நீர் என்னை பார்க்க வேண்டும்
நான் மன்றாடிடும்போது நீர் மனதுருகி மனமிரங்க வேண்டும்
என் இதயமதின் இன்னல் மாற வேண்டும்

வைடூரியம் வேண்டாம் உம் வார்த்தை ஒன்றே போதும்
கோடா கோடி வேண்டாம் உம் கிருபை மட்டும் போதும்
சொந்தம் பந்தம் வேண்டாம் உம் சந்நிதானம் போதும்
நீர் மீண்டும் வரும்போது உந்தன் திருமுகத்தை தரிசிக்கவே
வேண்டும்
நான் உமதருகில் என்றும் வாழ வேண்டும்
Neerillaa aaradhanai aaraadhanaialla
Neerillaa en vaalkai oru nal vaazhkaiyumalla

Aaraadhikkum bodhu um angeegaaram vendum
Naan paadal paadum podhu um prasannanum vendum
Ummai paarkum podhu neer ennai parka vendum
Naan mandraadidum podhu neer manadhurugi
Manamiranga vendum
En idhayamadhin innal maara vendum

Vaidooriyam vendaam um vaarthai ondrae podhum
Kodaa kodi vendaam um kirubai mattum podhum
Sondham bandham vaendaam um sannidhaanam podhum
Neer meendum varum podhu undhan thirumugathai
Dharisikkavae vendum
Naan umadharugil endrum vaazha vendum

Kaalaiyila Maraiyira – காலையில மறையிற

Kaalaiyila Maraiyira Dmin 83 4/4
காலையில மறையிற மேகத்தப் போல என் பக்தி இருக்கு
எந்த வேளையிலும் பாவத்துக்கு ஆசைப்பட்டுத்தான் என் புத்தி இருக்கு
ஏமாத்துறேன் நான் ஏமாத்துறேன் – அட
எல்லா ஜனத்தையும் ஏமாத்துறேன்

ஏமாந்துட்டேன் நான் ஏமாந்துட்டேன் – அட
கடைசியில் நான்தானே ஏமாந்துட்டேன்
மந்தைகள பத்தி என்ன கவல – அட

மாசா மாசம் காணிக்கதான் என்னோட mindல
ஆத்துமாவை பத்தி என்ன கவல
இந்த உலகமே மயங்குது என்னோட Styleல
என்னென்னமோ நான் அளக்குறேன் – என்
எண்ணம்போல வேதத்த வெளக்குறேன் – அட
கற்பனையில் பிரசங்கிச்சேன்
விற்பனையில் கண்ண வெச்சேன்

அற்புதங்கள் கர்த்தரோட poweru
அது என்னாலதான் ஆகுதுன்னு சொல்றது Over
தரிசனம் கொடுப்பது கர்த்தரு
அத சொல்லி சொல்லி ஓட்டுரேனே அன்றாடம் Traileru
சத்தியத்த நான் வித்துபுட்டேன்
சொத்து சுகம் நான் சேத்துபுட்டேன்
அட நான் மட்டும்தான் மேடையில
மக்களெல்லாம் பாடையில

காச கொட்டி பட்டம் எல்லாம் வாங்குறேன் – அட
கண்ட நேரம் என்னபத்தி பேசத்தான் ஏங்குறேன்
ஏனோ தானோ ஊழியத்த செய்யுறேன் – அத
கேள்வி கேட்டா மக்கள் மேல சிங்கம்போல் பாயுறேன்
Procedureஆ எல்லாம் மாறிப்போச்சு – என்
பிரசங்கமோ வெறும் வெட்டி பேச்சு
அட தற்பெருமை ஜாஸ்தி ஆச்சு
ஊழியங்கள் நாஸ்தி ஆச்சு

ஆரம்பத்தில் உத்தமமா நடந்தேன் – இப்ப
ஆடம்பர வாழ்கையில அன்றாடம் ஆடுறேன்
ஆண்டவரே கெதியின்னு கிடந்தேன் – இப்ப
ஆனா ஊனா பங்காளரின் வீட்டுக்கு ஓடுறேன்
மொத்தத்துல எல்லாம் நல்ல வேஷம்
என் மேலேயே எனக்கு கள்ள நேசம்
அட ஊருக்குத்தான் உபதேசம்
உள்ளுக்குள்ள ரொம்ப மோசம்

Kaalaiyila maraiyira megathai pola en bakthi irukku
Endha velaiyilum paavathukku aasapattu thaan
En buthi irukku

Yemaathuren naan yemaathuren – ada
Ellaa janathaiyum yemaathuren
Yemaandhuten naan yemaandhuten – ada
Kadaisiyil naan dhaanae yemaandhuten

Mandhaigalai pathi enna kavala – ada
Maasa maasam kaanikkaithaan ennoda mind la
Aathumaavai pathi ennai kavala
Indha ulagamae mayangudhu ennoda style la
Ennanamo naan alakkuren – en
Ennam pola vedhatha velakkuren – ada
Karpanaiyil prasangichen
Virpanaiyil kanna vechen

Arpudhangal kartharoda poweru
Adhu ennalathaan aagudhunnu solradhu over
Dharisanam kodupathu kartharu
Adha solli solli oeturennae andraadam traileru
Sathiyathai naan vithu putten
Sothu sugam naan sethuputten
Ada naan mattum thaan maedaiyila
Makkal ellaam paadaiyila

Kaasa kotti pattam ellaam vaanguren – ada
Kanda naeram enna pathi paesathaan yenguren
Yeno thaano ooliyathai seyyuren – atha
Kaelvi kaettaa makkal mela singam pola
paayuren
Proceduraa ellaam maaripochu
En prasangamo verum vetti paechu
Ada tharperumai jaasthi aachu
Ooliyangal naasthi aachu

Aarambathil uththamamaa nadanthen – ippa
Aadambara vaalkaiyila andraadam aaduren
Aandavarae kedhiyinnu kedandhaen – ippa
Aanaa oonaa pangaalarin veetukku oeduren
Mothathula ellaam nalla vesham
Enmelayae enakku kalla nesam
Ada oorukkuthaan ubathesam
Ullukulla romba mosam

Suththa Irudhayathai – சுத்த இருதயத்தை

Suththa Irudhayathai Dmin 112 4/4
சுத்த இருதயத்தை சிருஷ்டியுமே
செத்த மனிதனை உயிர்ப்பியுமே
சிக்குண்டு தவிக்கிறேன் உலகினிலே
சீக்கிரம் வந்து என்னை தப்புவியுமே

பாவங்கள் நீங்க என்னை சுத்திகரியும்
அக்கிரமம் நீங்க என்னை கழுவிவிடும்
மீறுதல் அறிந்தேன் பாவங்கள் தெரிந்தேன்
கண்முன்னே பொல்லாங்கினை நடத்திவிட்டேன்
உம்முன்னே பாவங்களை உடுத்திவிட்டேன்

உள்ளத்தில் உண்மைதனை விரும்புகிறீர்
ஞானத்தை என்னிடத்தில் விளம்புகிறீர்
சுத்திகரித்திடும் குற்றம் எரித்திடும்
வெண்மழைபோல என்னை வெண்மையாக்கிடும்
கன்மலை நீரென்னை நல்தன்மையாக்கிடும்

நல் இதயத்தை என்னில் சிருஷ்டியுமே
உள் இதயத்தில் ஆவி புதுப்பியுமே
பாவியை தள்ளாதீர் ஆவியை அள்ளாதீர்
ரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்கு தாரீர்
உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்குவீர்

வெட்டுண்ட ஆவிதனை ஏற்றுக்கொள்கிறீர்
கட்டுண்ட பாவிதனை தேற்றிச்செல்கிறீர்
பாவப்பழிகளை நீக்கிடும் ஐயனே
பொய்யனை மாற்றும் பரலோக மெய்யனே
கெம்பீரித்தும்மை பாடி போற்றிடுவேனே

Suththa irudhayathai sirushtiyumae
Seththa manidhanai uyirpiyumae
Sikkundu thavikkiren ulaginilae
Seekiram vandhu ennai thappuviyumae

Paavangal neenga ennai suththigariyum
Akkramam neenga ennai kazhuvividum
Meerudhal arindhen paavangal therindhen
Kanmunnae pollaanginai nadathi vittaen
Um munnae paavangalai uduthi vittaen

Ullathil unmai thanai virumbugireer
Nyaanathai ennidathil vilambugireer
Suthigarithidum kutram erithidum
Ven mazhaipola ennai venmai aakidum
Kanmalai neerennnai nal thanmai aakidum

Nal idhayathai ennil sirushtiyumae
Ul idhayathil aavi pudhupiyumae
Paaviyai thallaadheer aaviyai allaadheer
Ratchippin sandhoshathai enakku thaareer
Urchaaga aavi ennai thaanga seiguveer

Vettunda aavidhanai yetru kolgireer
Kattunda paavidhanai thetri chelgireer
Paava pazhigalai neekidum ayyanae
Poyyanai maatrum paraloga meyyanae
Kembeerithummai paadi potriduvaenae

Ummaithaan Ummai – உம்மைத்தான் உம்மை

Ummaithaan Ummai D min 106 4/4
உம்மைத்தான் உம்மை மட்டும் தான்
என் கண்கள் தேடுதே
என் உள்ளம் நாடுதே

மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் – அதுபோல்
என்னுள்ளம் உம்மை வாஞ்சிக்கும் – தேவா
உம் அன்பை எண்ணும்போது பூலோகம் ஒன்றுமில்லை
எல்லாமே நஷ்டம் என்கிறேன்

வேதம் சொல் சித்தம் செய்கிறேன் – உந்தன்
பாதம் நல் முத்தம் செய்கிறேன் – தேவா
உம்மைபோல் என்ன காக்க மேலோகில் என்னை சேர்க்க
பூலோகில் யாருமில்லையே

Ummaithaan Ummai Mattum Thaan
En kangal thedudhae en ullam naadudhae

Maangal neerodai vaanjikkum
Adhupol en ullam ummai vaanjikkum – deva
Um anbai ennumbodhu boologam ondrum illai
Ellaamae nashtam engiren

Vedham sol sitham seigiren
Undhan paadham nal mutham seigiren – deva
Ummaipol ennai kaaka melogil ennai serka
Boologil yaarum illaiyae