Song Category: Tamil

Arputhar Arputhar Yesu Arputhar – அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்

Arputhar Arputhar Yesu Arputhar
அற்புதர், அற்புதர், அற்புதர், அற்புதர்
இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய் மாற்றும்
இயேசு அற்புதர்
எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் – அற்புதர்

1. என்னென்ன துன்பங்கள் நம்மில் வந்தபோதும்
தீர்த்த இயேசு அற்புதர்
எத்தனை தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும்
காத்த இயேசு அற்புதர்
உலகத்தில் இருப்போனிலும் – எங்கள்
இயேசு பெரியவர் அற்புதரே
உண்மையாய் அவரைத் தேடும் யாவருக்கும்
இயேசு அற்புதரே – எல்லோரும்

2. அலைகடல் மேலே நடந்தவர்
எங்கள் இயேசு அற்புதர்
அகோர காற்றையும் அமைதிப்படுத்திய
இயேசு அற்புதர்
அறைந்தனர் சிலுவையிலே
ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே
ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த
இயேசு அற்புதரே – எல்லோரும்

Arputhar, Arputhar, Arputhar Arputhar Yesu Arputhar
Andinoar vaazhvai inbamaai maatrum
Yesu Arputhar
Elloarum paadungal
Kaithaalam poadungal
Sandhoashathudanae sangeedham paadungal – Arpudhar

1. Ennenna thubangal nammil vandhapoadhum
Theertha Yesu arpudhar
Ethanai thollaigal nammai soozhntha poadhum
Kaatha Yesu arpudhar
Ulagathil iruppoanilum – engal
Yesu periyavar arpudharae
Unmaiyaai avarai thaedum yaavarukkum
Yesu arpudharae – Elloarum

2. Alaikadal maelae nadandhavar
Engal Yesu arpudhar
Agoara kaatraiyum amaidhippaduthiya
Yesu arpudhar
Araindhanar siluvaiyilae
Aandavar marithaar annaalinilae
Aagilum moondraam naal uyirudan ezhundha
Yesu arpudhar – Elloarum

Sthothirame Sthothirame Appa Appa – ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே

Sthothirame Sthothirame Appa Appa

ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா
உம் கிருபை எனக்கு போது அப்பா அப்பா
நல்லவரே வல்லவரே

1. கர்த்தரே என் கன்மலையும் கோட்டையுமானார்
ரட்சகரும் தேவனுமானார் – நான்
நம்பின என் துருகமும் கேடகமானார்
ரட்சணிய கொம்புமானார்

2. தேவரீர் என் இருளையெல்லாம் வெளிச்சமாக்கினீர்
எனது விளக்கை ஏற்றி வைத்தீர் – ஒரு
சேனைக்குள்ளே பாயச்செய்து போரிடச் செய்தீர்
மதிலையெல்லாம் தாண்டிடச் செய்தீர்

3. உம்முடைய வலக்கரத்தால் என்னை தாங்கினீர் – உம்
காருணியத்தால் பெரியவனானேன்
நான் செல்லுகின்ற பாதையெல்லாம் அகலமாக்கினீர்
வழுவாமல் நடந்து செல்கிறேன்

Sthothirame Sthothirame Appa Appa
Um kirubai enakku podhum appa appa
Nallavaray vallavaray

1. Kartharay en kanmalaiyum kottayumaanaar
Ratchagarum dhevanumaanaar – naan
Nambina en thurugamum kedagamaanaar
Ratchaniya kombumaanaar

2. Dhevareer en irulai ellaam velichamaakineer
Enadhu vilakkai yetri vaitheer – oru
Senaikullay paayacheidhu porida cheidheer
Madhilai ellaam thaandida cheidheer

3. Ummudaiya valakarathaal ennai thaangineer – um
Kaarunyathaal periyavanaanen
Naan sellugindra paadhai ellaam agalamaakineer
Vazhuvaamail nadandhu selgiren

Egypthilirindhu Kaanaanukku – எகிப்திலிருந்து கானானுக்கு

Egypthilirindhu Kaanaanukku

எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா
அல்லேலூயா அல்லேலூயா

1. கடலும் பிரிந்தது
மனமும் மகிழ்ந்தது
கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்தரித்தது
அல்லேலூயா அல்லேலூயா

2. பாறையினின்று
தண்ணீர் சுரந்தது
தாகம் தீர்த்தது தேவனை துதித்து பாடியது
அல்லேலூயா அல்லேலூயா

3. வெண்கல சர்ப்பம்
ஆனாரே நமக்காய்
உயிர் கொடுத்தாரே நாமும் உயர்த்திடுவோமே
அல்லேலூயா அல்லேலூயா

4. யோர்தானை கடந்தோம்
எரிகோவை சூழ்ந்தோம்
ஜெயங்கொடுத்தாரே அவரை துதித்திடுவோமே
அல்லேலூயா அல்லேலூயா

Egypthilirindhu Kaanaanukku Kootichendreeray
Umakku kodi nandri ayya
Alleluyaa alleluyaa

1. Kadalum pirindhadhu
Manamum magizhndhadhu
Kartharai endrum
Manadhu sthotharithadhu

2. Paarayinindru
Thanneer surandhadhu
Thaagam theerthadhu
Dhevanai thudhithu paadiyathu

3. Vengala sarpam
Aanaaray namakkaay
Uyir koduthaaray
Avarai uyarthiduvomay

4. Yordhaanai kadandhom
Yerigovai soolndhom
Jeyam koduthaaray
Avarai thudhithiduvomay

Endhan Aaththumaave – எந்தன் ஆத்துமாவே கர்த்தரை

Endhan Aaththumaave
எந்தன் ஆத்துமாவே கர்த்தரை துதி கர்த்தரையே துதி
எந்தன் முழு உள்ளமே அவர் நாமத்தையே என்றென்றும் ஸ்தோத்தரி

அன்பின் கரத்தாலே தூக்கி எடுத்தீரே
கன்மலைமேல் என்னை நிறுத்தினிரே
உம்மைத் துதித்திடும் புதுப் பாடல் தந்தீரே
ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்

நன்மை கிருபையினால் முடிசூட்டினீர் என்னையே
தூதரிலும் மேலாய் உயர்த்தினீரே
உம் நன்மையை நினைத்து நானென்றும் துதிப்பேன்
ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்

நாட்கள் நகர்ந்திட்டாலும் காலம் கடந்திட்டாலும்
கர்த்தரே நீர் என்றும் மாறாதவர்
உம் கிருபையை என்றும் எண்ணி நான் துதிப்பேனே
ஆயிரம் நாவுகள் போதாதே – எந்தன்

And on that day when my strength is failing
The end draws near and my time has come
Still my soul will sing Your praise unending
Ten thousand years and then forever more

Bless the Lord, O my soul
O my soul
Worship His holy name
Sing like never before
O my soul
I worship His holy name

*********************

Endhan aaththumaave karththarai thudhi karththaraiyae thudhi
Endhan muzhu ullamae avar naamaththaiyae endrendrum sthoaththari

Anbin karaththaalae thookki eduththeerae
Kanmalaimael ennai niruththinirae
Ummaith thuthiththidum puthu paadal thandheerae
Aayiram naavugal poadhaadhae – Endhan

Nanmai kirubaiyinaal mudisoottineer enaiyae
Thoodharilum maelaai uyarththineerae
Um nanmaiyai ninaiththu naan endrum thudhippaen
Aayiram naavugal poadhaadhae – Endhan

Naatkal nagarndhittaalum kaalam kadandhittaalum
Karththarae neer endrum maaraadhavar
Un kirubaiyai endrum enni naan thudhippeanae
Aayiram naavugal poadhaadhae – Endhan

Kalappaiyin Mael – கலப்பையின் மேல்

Kalappaiyin Mael Kaivaiththitaen
கலப்பையின் மேல் கைவைத்திட்டேன்
திரும்பி பார்கமாட்டேன்
முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன்
இயேசு முன் செல்கிறார் (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)

1. எண்ணிமுடியா நன்மைகளாலே
என்னை நிரப்பினார்
சொல்லிமுடியா அதிசயத்தாலே
என்னை நடத்தினார் (2)

நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)
இயேசு இயேசு இயேசு போதுமே (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)
கலப்பையின் மேல் …..

2. துன்பங்கள் துயரங்கள் வருமைகள் வியாதிகள்
வந்தால் எனக்கென்ன
துங்கவர் இயேசு துணையாய் இருக்க
ஜெயித்து வாழ்ந்திடுவேன் (2)

நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)
இயேசு இயேசு இயேசு போதுமே (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)
கலப்பையின் மேல் …..

3. சத்தியம் சொல்லி சாத்தானை வென்று
சபைகள் கட்டிடுவேன்
கிராமங்கள் தோறும் கிறிஸ்துவின் தேவ
சங்கங்கள் எழுப்பிடுவேன் (2)

நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)
இயேசு இயேசு இயேசு போதுமே (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)
கலப்பையின் மேல் …..

4. இதுவரை என்னை நடத்தின தேவன்
இனியும் நடத்திடுவார்
எல்-ஷடாய் தேவன் வலக்கரதாலே
எல்லாம் செய்திடுவார் (2)

நான் என் சொல்வேன் நான் என் சொல்வேன் (2)
இயேசு இயேசு இயேசு போதுமே (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லே-லூயா அல்லேலூயா (4)
கலப்பையின் மேல் …..

Kalappaiyin Mael Kaivaiththitaen
Thirumbi paarkamaataen
Mun vaiththa Kaallai pin vaikkamaataen
Yaesu mun selgiraar (2)

Halleluia Halleluia Alle-luia Halleluia (4)

1. Ennimudiyaa Nanmaigalaalae
Ennai nirappinaar
Sollimudiyaa adhisayathaalae
Ennai nadathinaar (2)

Naan en solvaen Naan en solvaen (2)
Yaesu yaesu yaesu poadhumae (2)
Halleluia Halleluia Alle-luia Halleluia (4)
Kalappaiyin mael….

2. Thunbangal thuyarangal varumaigal vyaadhigal
Vandhaal enakkenna
Thungavar yaesu thunaiyaai irukka
Jeyiththu vaazhndhiduvaen (2)

Naan en solvaen Naan en solvaen (2)
Yaesu yaesu yaesu poadhumae (2)
Halleluia Halleluia Alle-luia Halleluia (4)
Kalappaiyin mael….

2. Saththiyam solli saaththaanai vendru
Sabaigal kattiduvaen
Graamangal thoarum kristhuvin dhaeva
Sangangal ezhuppiduvaen (2)

Naan en solvaen Naan en solvaen (2)
Yaesu yaesu yaesu poadhumae (2)
Halleluia Halleluia Alle-luia Halleluia (4)
Kalappaiyin mael….

3. Idhuvarai ennai nadathina dhaevan
Iniyum nadaththiduvaar
El-Shaddai dhaevan valakarathaallae
Yellaam Seithiduvaar (2)

Naan en solvaen Naan en solvaen (2)
Yaesu yaesu yaesu poadhumae (2)
Halleluia Halleluia Alle-luia Halleluia (4)
Kalappaiyin mael….

Parama Jerusalemae – பரம எருசலேமே

Parama Jerusalemae
பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மனவாட்டியாய்

ஆமென் அல்லேலூயா (4)

1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே

2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே

3. சர்வ சங்க சபையின் அங்கமானேன்
சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் – ஆஹா என் எருசலேமே

4. விடுதலையே விடுதலை விடுதலையே
லோகமதின் மோகத்தில் விடுதலையே
நானேயெனும் சுயவாழ்வில் விடுதலையே
நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே – சுயாதீன எருசலேமே

5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
மரணமில்லை மனநோயின் துயரமில்லை
அலறலில்லை அழுகையின் சோகமில்லை – தலைகராம் எருசலேமே

Neeye Nirantharam – நீயே நிரந்தரம்

Neeye Nirantharam

நீயே நிரந்தரம், இயேசுவே
என் வாழ்வில் நீயே நிரந்தரம்

1. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2)
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2)

2. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2)
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன்

3. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் – (2)
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன்

Neeye Nirantharam Yesuve
En vazhvil neeye nirandharam

1. Ammaiyappan undhan anbe Nirantharam
Maarum ulagil maaraa um urave Nirantharam
Immai vazhvil marumai iruppadhu Nirantharam (2)
Naan maanda pinbum ummil uyirppadhu Nirantharam
Nirantharam Nirantharam Neeye Nirantharam (2)

2. Thaayin anbu seikku inge Nirantharam
Thaayum thandhaiyum emakku neeye Nirantharam
Thaeyum vaazhvil nambikkai neeye Nirantharam
Naan saayumbaodhu kaapadhu neeye Nirantharam (2)
Nirantharam Nirantharam Neeye Nirantharam (2)

3. Selvangal konarum inbathil illai Nirantharam
Padhaviyum pugazhum tharuvathu illai Nirantharam
Nilai vaazhvu ennum nijamaana neeye Nirantharam
Adhan vilaiyaaga enai nee unnil inaippaai Nirantharam (2)
Nirantharam Nirantharam, Neeye Nirantharam (2) Ammaiyappan

Athisayam Arputham – அதிசயம் அற்புதம் உம்

Athisayam Arputham
அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு
சிலுவையில் உம் கிருபையை கண்டேன்
உம் அழகினை என் வாழ்வினில் புரிய இயலாது
நீர் மகிமையும் அழகுமானவர்

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

1. உம் மகிமையின் வல்லமை பூமி எங்கிலும்
உம் கிரியைகள் இவ்வுலகு காணுதே
உம் மாட்சிமையின் அழகினால் என் ஆத்மா பாடுமே
நீர் சிறந்தவர் அற்புதமானவர்

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

2. உம் அற்புதத்தை கான செய்தீர்
உம் அன்பினால் கவர்ந்தீர்
இவ்வுலகிலே உம்மைப் போல் அழகில்லை (2)

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

Athisayam Arputham um maghaa anbu
Siluvaiyil um kirubaiyai kandaen
Um azhaginai en vaazhvinil puriya iyalaadhu
Neer magimaiyum azhagumaanavar

Azhage anbukooruven azhage aaraadhipaen
Azhage enaathmaa ummai paadum (2)

1. Um magimaiyin vallamai boomi engilum
Um kiriyaigal ivvulagu kaanudhae
Um maatchimaiyin azhaginaal en aathmaa paadumae
Neer Sirandhavar arpudhamaanavar

Azhage anbu kooruven azhage aaraadhipaen
Azhage enaathmaa ummai paadum (2)

2. Um arppudhaththai kaana seidheer
Um anbinaal kavarndheer
Ivvulagilae ummai paol azhagillai (2)

Azhage anbu kooruven azhage aaraadhipaen
Azhage enaathmaa ummai paadum (2)

Ennai Tharugiren Tharugiren – என்னைத் தருகிறேன் தருகிறேன்

Ennai Tharugiren Tharugiren
என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (2)

உருவாக்குமே என்னை உருவாக்குமே (2)

1. குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும் (2)
என் சித்தமல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே (2)

2. உம் சேவைக்காய் எனை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம்போல் (2)
உம் சித்தம் செய்திடவே
உம் சத்தம் கேட்டிடவே (2)

உருவாக்குமே என்னை உருவாக்குமே (2)
என்னைத் தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னைப் படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் (2)

குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும்

3. உமக்காகவே நான் வாழ்கிறேன்
வனைந்திடும் உம் சித்தம்போல் (2)
எனக்காக வாழாமல்
உமக்காக வாழ்ந்திட (2)

உருவாக்குமே என்னை உருவாக்குமே (2) – என்னைத் தருகிறேன்

Ennai tharugiren tharugiren um karathil
Ennai padaikkiren padaikkiren um paadhathil (2)
Uruvaakkume ennai uruvaakkume (2)

Kuyavanae um kaiyil kaliman naan
Udaithu uruvaakkum (2)
En sithamalla um siththam naadha
Tharugiren um kaiyile (2)

Um saevaikkaai enai tharugiren
Vanaindhidum um siththam poal (2)
Um siththam seidhidave
Um saththam kaettidave (2)

Uruvaakkume ennai.. Uruvaakkume (2)

Ennai tharugiren tharugiren um karathil
Ennai padaikkiren padaikkiren um paadhathil (2)

Kuyavanae um kaiyil kaliman naan
Udaiththu uruvaakkum

Umakkaagavae naan vaazhgiraen
Vanaindhidum um siththam pol (2)
Enakkaaga vaazhaamal
Umakkaaga vaazhndhida (2)

Uruvaakkume enai Uruvaakkume (2)

Ennai tharugiren tharugiren um karathil
Ennai padaikkiren padaikkiren um paadhathil (2)
Uruvaakkume enai Uruvaakkume (2)

Karthar En Belanum – கர்த்தர் என் பெலனும்

Karthar En Belanum
கர்த்தர் என் பெலனும் என் கீதமும்
நான் நம்பும் கன்மலையுமானவர் – கர்த்தரின் கிருபை
என்றைக்கும் நான் பாடுவேன்
நான் போற்றிடுவேன்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

1. அவர் கரமும் அவர் புயமும்
மகிமையும் மகத்வமும்
அதிசயங்கள் செய்தது
கிருபையும் சதியமும் இரக்கமும்
அவர் அன்பும் வழி நடத்தியது – அல்லேலூயா – கர்த்தர்

2. அவர் மேய்ப்பர் அவர் மீட்பர்
என் நேசர் பரிசுத்தர்
தாழ்ச்சி அடைகிலேனே
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்தே நாடிடுவேன் – அல்லேலூயா – கர்த்தர்