Song Category: Tamil

Manthai Aayar – மந்தை ஆயர் மனம்

Manthai Aayar
1. மந்தை ஆயர் மனம் மகிழவே
மழலை உருவாய் வந்தவரே
மண்ணின் மாந்தரை மீட்பதற்காக
மாசற்ற ஜோதியாய் வந்தவரே
மரணத்தை ஜெயித்த மன்னவே
மனுவின் ஜோதியாய் வந்தீரே

வா வா என் நேசர்
வா இந்நேரம் வந்தாசீர் தந்தருள் அன்பாய்
நீ அன்பாய் — (2)

2. வாக்குகட்கு பங்காளிகளாக்கி
நோக்கமாய் நம்மை ரட்சித்தாரே
ஏக்கங்கள் எல்லாம் அவர் நீக்கி
நாடும் நம்மை தம் சரீரமாக்கி
சஞ்சலம் தவிப்பையும் நீக்கிடவே
சமாதான பிரபுவாய் உதித்தவரே

Deva Kumaran Yesu – தேவக் குமாரன் இயேசு

Deva Kumaran Yesu
தேவக் குமாரன் இயேசு
புவியில் வந்தார் மானிடனாய்

1. அதிசயமாம் அவர் நாமம்
ஆலோசனைக் கர்த்தாராமே
புல்லனையாம் முன்னணையில்
பிறந்திருக்கும் இப்பாலகனை – தேவ

2. ஆதரவற்றோரின் தஞ்சம்
ஆயல்களின் நேயராமே
வல்லமையுள்ள கர்த்தராமே
சமாதானப் பிரபுவும் இவரே – தேவ

3. இராஜாதி ராஜன் இவரே
கர்த்தாதி கர்த்தனும் இவரே
சாரோனின் ரோஜா புஷ்பம் இவர்
வாரேன் என்றவரும் இவரே – தேவ

Anburuvai Vantha Engal – அன்புருவாய் வந்த எங்கள்

Anburuvai Vantha Engal
அன்புருவாய் வந்த எங்கள் ஏசுபாலனே
எங்கள் அன்பின் பாலனே
எங்கள் தெய்வ பாலனே

1. வானதூதர் மகிழ்ந்துபாட உதித்த பாலனே
வான சாஸ்திரிகளும் கண்டு துதித்த பாலனே
ஆவலாய் ஆட்டிடையர்களும் பாடி
பணிந்த பாலனே

2. ஈசாயின் அடிமரத்தில் துளிர்த்த பாலனே
ஈனப் பேயை வெல்ல வந்த ஜெயபாலனே
ஈன சிலுவையில் மரித்துயிர்த்த
மகிமைப் பாலனே

3. தாழ்மை காட்ட முன்னணையில் பிறந்த பாலனே
தாழ்ந்தோரின் அடைக்கலமாய் வந்த பாலனே
தாகம் தீர்க்கும் ஜீவ நதியாய் வந்த
இயேசு பாலனே

Kanneeral Nandri Solgiren – கண்ணீரால் நன்றி சொல்கிறேன்

Kanneeral Nandri Solgiren
Deva Kanakkillaa Nanmai Seidheerae

Nandri Nandri Ayya
Yesaiyya Pala Kodi Nanmai Seidheerae
Nandri Nandri Ayya
Yesaiyya Pala Kodi Nanmai Seidheerae

1. Thazhvil Ennai Ninaitheerae
Dhayavaai Ennai Uarthineerae
Undhan Anbai Enna Solluvaen
Thaayin Karuvil Therindhu Kondeer
Ullangkaiyil Varaindhu Vaitheer
Undhan Anbai Ennip Paaduvaen
Undhan Anbai Ennip Paaduvaen – Nandri

2. Pokkilum Varathilum Kaathukkondeer
Undhan Siragaal Moodi Maraiththeer
Undhan Anbai Enna Solluvaen
Kaalgal idaraamal Paadhugaatheer
Kanmalayin mel ennai Niruthineer
Undhan Anbai Ennip Paaduvaen
Undhan Anbai Ennip Paaduvaen – Nandri

3. Undhan Raththam Enakkai Sindhe
Siluvayil Enakku Jeevan Thandeer
Undhan Anbai Enna Solluvaen
Paavamellaam Pokkineerae Sabamellaam Neekkineerae
Undhan Anbai Ennip Paaduvaen
Undhan Anbai Ennip Paaduvaen – Nandri

கண்ணீரால் நன்றி சொல்கிறேன்

Ulagin Pava Barathal – உலகில் பாவப் பாரத்தால்

Ulagin Pava Barathal
உலகில் பாவப் பாரத்தால் சோரும் – இளைப்
பார்ந்த நரரே வந்து சேரும்

அலைசடி பட்டவரே வாரும் – எந்தன்
ஆறுதலால் அவற்றை தீரும் – பொல்லா

1. பாவி என்றெண்ணி திகைப்போரும் – எந்தன்
பாவம் தீராதென்றிப்போரும்
ஆவலாய் ஓடிவந்து சேரும் – நான்
ஆகாமியர்க்காக வந்ததோரும் – பொல்லா – உலகில்

2. இளமை என்றே எண்ணி நில்லாதே – சாவும்
இளமை என்று சொல்லிச் செல்லாதே;
வளமாய் வருவதைத் தள்ளாதே – கெட்ட
வழக்கமதையே கைகொள்ளாதே – பொல்லா – உலகில்

3. வாலிபப் பிராயமிதில் நாளும் – இன்ப
வாழ்வு சுகிக்கவென்று மாளும்;
சீலரே, இன்றென்னுரை கேளும், அவை
சேர்க்கும் நரகத்தில் எந்நாளும் – பொல்லா – உலகில்

4. காலம் கடந்த கிழவோரே – வீணாய்க்
காலம் கழித்தே உழல்வோரே,
காலமே தேட மறந்தோரே – உங்கள்
கவலையைத் தீர்ப்பேன் அறிவீரே – பொல்லா – உலகில்

Ulagor Unnai Pagaithalum – உலகோர் உன்னை

Ulagor Unnai Pagaithalum
1. உலகோர் உன்னைப் பகைத்தாலும்
உண்மையாய் அன்பு கூறுவாயா? (2)
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயா? (2)

உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் (2)

2. உலக மேன்மை அற்பம் என்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும்
உள்ளத்தினின்று கூறுவாயா?
ஊழியம் செய்ய வருவாயா? (2) – உனக்காக

3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்கிறார் பாவப்புல் வெளியில் (2)
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி ஓடுகின்றாயோ? (2) – உனக்காக

4. இயேசு என்றால் என்ன விலை
என்றே கேட்டிடும் எத்தனை பேர் (2)
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
ஜீவ அப்பம் கொடுப்பாயோ? (2) – உனக்காக

5. ஐந்து சகோதரர் அழிகின்றாரே
யாரையாவது அனுப்பிடுமே (2)
யாரை நான் அனுப்பிடுவேன்
யார் தான் போவார் எனக்காக (2) – உனக்காக

Ponnana Neram – பொன்னான நேரம்

Ponnana Neram
பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்
தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்

1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக
பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க
பிறந்து வந்தார்
உலகை ஜெயிக்க வந்தார்
அல்லேலுயா பாடுவோம்
மீட்பரை வாழ்த்துவோம்

2. உண்மையின் ஊழியம் செய்திடவே
வானவர் இயேசு பூவில் வந்தார்
வல்லவர் வருகிறார்
நம் மீட்பர் வருகிறார்

3. வானமும் பூமியும் அண்டமும் படைத்து
வேதத்தின் ஓளியை பரப்பினாரே
இருளை அகற்றுவார்
நம்மை இரட்சித்து நடத்துவார்

Sabaiyin Asthibaram – சபையின் அஸ்திபாரம்

Sabaiyin Asthibaram
1. சபையின் அஸ்திபாரம்
நல் மீட்பர் கிறிஸ்துவே
சபையின் ஜன்மாதாரம்
அவரின் வார்த்தையே
தம் மணவாட்டியாக
வந்ததைத் தேடினார்
தமக்குச் சொந்தமாக
மரித்ததைக் கொண்டார்

2. எத்தேசத்தார் சேர்ந்தாலும்
சபை ஒன்றே ஒன்றாம்
ஒரே விசுவாசத்தாலும்
ஒரே ரட்சிப்புண்டாம்
ஒரே தெய்வீக நாமம்
சபையை இணைக்கும்
ஓர் திவ்விய ஞானாகாரம்
பக்தரைப் போஷிக்கும்

3. புறத்தியார் விரோதம்
பயத்தை உறுத்தும்
உள்ளானவரின் துரோகம்
கிலேசப்படுத்தும்
பக்தர் ஓயாத சத்தம்
எம்மட்டும் என்பதாம்
ராவில் நிலைத்த துக்கம்
காலையில் களிப்பாம்

4. மேலான வான காட்சி
கண்டாசீர் வாதத்தை
பெற்று போர் ஓய்ந்து வெற்றி
சிறந்து மாட்சிமை
அடையும் பரியந்தம்
இன்னா உழைப்பிலும்
நீங்காத சமாதானம்
மெய்ச் சபை வாஞ்சிக்கும்

5. என்றாலும் கர்த்தாவோடு
சபைக்கு ஐக்கியமும்
இளைப்பாறுவோரோடு
இன்ப இணக்கமும்
இப்பாக்கிய தூயோரோடு
கர்த்தாவே, நாங்களும்
விண் லோகத்தில் உம்மோடு
தங்கக் கடாட்சியும்

1. Sabaiyin aashthibaram
Nam meetpar kirishthuve- sabaiyin
Jenmaathaaram avarin vaarththaiye
Tham manavaaitiyaaga vandhathai thedinaar
Thamakku sondhamaaga mariththadai kondar

2. Eththesaththar serndhalum sabai ondre ondram
Ore vishvasaththaalum ore
Iratchippundam – ore theyivega
Naamam sabaiyai inaikkum
Or thivya gnaaggaram baktharai poshikkum

3. Puraththiyaar virotham bayanthai oruththum
Ullanavarin thurogam kilesapaduththum
Bakthar ooyatha saththam emmaitum enbatham
Iraavil nilaithtga thukkam kaalaiyil kalippaam

4. Melaana vaana kaaitchi kandaasirvaaththai
Peitru poor oindhu verri sirandhu maaichimai
Adaiyum pariyandham innaa uzhappilum
Ninghaatha samaathaanam mei sabai vaanjikkum

5. Endraalum karththaavodu sabaikku
Aikkiyamum – ilaippaaruvooroodu
Inba inakkamum – ippaakya
Thuyorodu karththaave naangalum – vin
Loogaththil ummoodu thanga kadaaitchiyum

Enkuthe Ennakanthan Thuyar – ஏங்குதே என்னகந்தான்

Enkuthe Ennakanthan Thuyar
ஏங்குதே என்னகந்தான், துயர்
தாங்குதில்லை முகந்தான்
பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட
ஓங்கியே உதிரங்கள்
நீங்கியே துயர்கண்டு – ஏங்குதே

1. மேசியாவென்றுரைத்து யூத
ராஜனென்றே நகைத்து
தூஷணித்தே அடித்து நினைக்குட்டி
மாசுகளே சுமத்தி
ஆசாரமின்றியே ஆசாரியனிடம்
நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு – ஏங்குதே

2. யூதாஸ் காட்டிக்கொடுக்க சீமோன்
பேதுரு மறுதலிக்க
சூதா யேரோதே மெய்க்க வெகு
தீதாயுடை தரிக்க
நாதனே இவ்விதம் நீதமொன்றில்லாமல்
சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு – ஏங்குதே

3. நீண்ட குரு செடுத்து, எருசலேம்
தாண்டி மலையெடுத்து,
ஈண்டல் பின்னே தொடுத்து, அவரின்மேல்
வேண்டும் வசை கொடுத்து
ஆண்டவர் கை காலில் பூண்டிடும் ஆணியால்
மாண்டதினால் நரர் மீண்ட தென்றாலுமே – ஏங்குதே

Enkuthe Ennakanthan Thuyar
Aenguthae Ennakanthaan, Thuyar
Thaanguthillai Mukanthaan
Poongaavilae Kaninthaengi Neer Mantada
Ongiyae Uthirangal
Neengiyae Thuyarkanndu – Aenguthae

1. Maesiyaaventuraiththu Yootha
Raajanente Nakaiththu
Thooshanniththae Atiththu Ninaikkutti
Maasukalae Sumaththi
Aasaaramintiyae Aasaariyanidam
Neesarkal Sey Kodum Thoshamathu Kanndu – Aenguthae

2. Yoothaas Kaattikkodukka Seemon
Paethuru Maruthalikka
Soothaa Yaerothae Meykka Veku
Theethaayutai Tharikka
Naathanae Ivvitham Neethamontillaamal
Sothanaiyaaych Seyyum Vaethanaiyaik Kanndu – Aenguthae

3. Neennda Kuru Seduththu, Erusalaem
Thaannti Malaiyeduththu,
Eenndal Pinnae Thoduththu, Avarinmael
Vaenndum Vasai Koduththu
Aanndavar Kai Kaalil Poonndidum Aanniyaal
Maanndathinaal Narar Meennda Thentalumae – Aenguthae

Yen Intha Padukal – ஏன் இந்தப் பாடுதான்

Yen Intha Padukal
ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமி
என்ன தருவேன் இதற்கீடுநான்?

ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமிய

1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்
கெழு மலர்க் காவிடை போகவும்
அச்சயனே, மனம் நோகவும் – சொல்
அளவில்லாத் துயரமாகவும்

2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்
முறை முகம் தரைபட வீழவும்
மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடு
மரண வாதையினில் மூழ்கவும்

3. அப்பா, பிதாவே என்றழைக்கவும், – துயர்
அகலச் செய்யும் என்றுரைக்கவும்
செப்பும் உன் சித்தம் என்று சாற்றவும், – ஒரு
தேவதூதன் வந்து தேற்றவும்

4. ஆத்துமத் துயர் மிக நீடவும், குழம்
பாக உதிர வேர்வை ஓடவும்
சாத்திர மொழிகள் ஒத்தாடவும், – உந்தன்
தாசரும் பதந்தனை நாடவும்