Song Category: Tamil

Unthan Samugam Endakuandandam – உந்தன் சமுகம்

Unthan Samugam Endakuandandam
உந்தன் சமுகம் எனக்கானந்தமே
உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன்
நீரே போதும் -3
என் வாழ்விலே
உம்மையன்றி யாரும் இல்லை

கண்ணீரின் வாழ்க்கையே
என் வாழ்க்கை ஆனதே
எந்தன் கண்ணீரை துடைப்பது
நீரன்றி யாருண்டு

தனிமை நேரங்களில்
துனையாய் வந்தீரே
என் வேதனை நேரத்தில்
உம் வார்த்தையால் தேற்றீனீர்

என் வாழ்க்கையில் யாரும் இல்லா
அனாதை ஆனேனே
நானுண்டு உன் துனையே
என்றீரே என் ஏசுவே

Ummai Arathikindrom – உம்மை ஆராதிக்கின்றோம்

Ummai Arathikindrom
உம்மை ஆராதிக்கின்றோம்
ஏசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேரு தெய்வம் இல்லை
ஹாலேலூயா ஹாலேலூயா -2

1. பாவியான என்னையும்
உம் பிள்ளையாய் மாற்றீனீர்

2. என்னை அழைத்தவரே
நீர் உண்மை உள்ளவரே

3. உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே

4. என்னை மறுரூபமாக்கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும்

Um Naamam Thenilum – உம் நாமம் தேனிலும்

Um Naamam Thenilum
உம் நாமம் தேனிலும் மதுரமையா
சொல்ல சொல்ல இனிக்குதையா

அடொனா எங்கள் தெய்வமே
ரபூனி நல்ல போதகரே

எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயீ என்னை காண்பவரே

தந்தையே ஏசுவே ஆவியானவரே
ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை

பாத்திரரே பாத்திரரே
பாத்திரரே பாத்திரரே- மகிமைக்கு

எல் எலியோன் உன்னதரே
இம்மானுவேல் கூட இருப்பவரே

மேசியா எங்கள் ஏசுவே
கிறிஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே

Innum Naam Azhiyala – Kiruba Kiruba Kiruba – கிருப கிருப கிருப

இன்னும் நான் அழியல
இன்னும் தோற்று போகல
ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
போராட்டங்கள் முடியல
பாடுகளும் தீரல
ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } – 2

கிருப கிருப கிருப கிருப – 4
நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாளந்து இல்ல எல்லாம் கிருப } – 2 – கிருப

1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல
ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன்
ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் – கிருப

2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது
வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் – 2
பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது
பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் – கிருப

Innum Naam Azhiyala
Innum Thotrupogala
Aanalum vazhgirenae
Yaen yaen yaen
poratamum mudiyala
Paadugalum theerala
Annalum irukiranae
Yaen yaen yaen } – 2

Kiruba kiruba kiruba kiruba – 4
Naan illa en belam illa
en thalanthilla Ellam Kiruba } – 2 -Kiruba

1. Padikkala uyarala pattadariya ahala
Annalum vazhgiraenae yaen yaen yaen
Nikkiraen nirmulam ahamalae irukiraen
Annalum neerkiraen yaen yaen yaen } – 2 – Kiruba

2. Arputhangal nadakuthu adisayangal nadakkuthu
Vyathiellam marinathu yaen yaen yaen
Paavamellam marainthathu sabaellam udainthathu
Parisuthama maarinathu yaen yaen yaen } – 2 – Kiruba

Neer Mathram Enakku – நீர் மாத்ரம் எனக்கு

Neer Mathram Enakku
நீர் மாத்ரம் எனக்கு – 2
நீர் அல்லால் உலகில்
யாருண்டு எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு – 2

மாயையான உலகில்
நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில்
நீர் மாத்ரம் எனக்கு – 2

1. அரணும் என் கோட்டையும்
நீர் மாத்ரம் எனக்கு
கோட்டையும் துருகமும்
நீர் மாத்ரம் எனக்கு – 2

துருகமும் கேடகமும்
நீர் மாத்ரம் எனக்கு
கேடகமும் கன்மலையும்
நீர் மாத்ரம் எனக்கு – 2

2. ஆசை வேறு உம்மையன்றி
யாருமில்லை எனக்கு
ஆதரவு உம்மையன்றி
யாருமில்லை எனக்கு – 2

ஆனந்தம் உம்மையன்றி
ஒன்றுமில்லை எனக்கு
எண்ணங்களில் உம்மையன்றி
யாருமில்லை எனக்கு – 2

Prasannam Tharum Devane – பிரசன்னம் தாரும் தேவனே

Prasannam Tharum Devane
பிரசன்னம் தாரும் தேவனே
உந்தன் சமூகம் தாருமே
இயேசுவே உந்தன் நாமத்தில்
இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் – 2
பிரசன்னம் தாரும் தேவனே

1. பக்தர்கள் போற்றும் நாதா
பரிசுத்த தேவன் நீரே
கேருபீன்கள் சேராபீன்கள் துதி பாடிடும்
பரனே நின் பாதம் பணிகின்றோம்

2. நீரல்லால் இந்த பாரில்
தஞ்சம் வேறாருமில்லை
உந்தனின் சமூகத்தில் இளைப்பாறிட
சந்ததம் உம் அருள் ஈந்திடும்

3. நல்மேய்ப்பர் இயேசு தேவா
துன்பங்கள் நீக்கிடுமே
ஆதி அன்பு என்னில் குன்றிடாமல்
நிலைக்க நல் அருள் ஈந்திடுமே

4. தேவா உந்தன் சமூகம்
முன் செல்ல வேண்டுகிறேன்
பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே
உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன்

5. வானத்தில் தோன்றும் நாளில்
உம்மைப் போல் மாறிடவே
ஆவி ஆத்மா தேகம் மாசற்றதாய்
காத்திட கர்த்தரே கெஞ்சுகிறேன்

Vallamai Undu Undu Arputha Vallamai – வல்லமை உண்டு உண்டு

Vallamai Undu Undu Arputha Vallamai
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
இயேசுவின் இரத்தத்தில்!
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்!

Vallamai Unndu Unndu Arputha Vallamai
Yesuvin Irathaththil!
Vallamai Unndu Unndu Arputha Vallamai
Aattukkuttiyin Iraththaththaal!

There is power, power, wonder-working power
In the blood of the Lamb
There is power, power, wonder-working power
In the precious blood of the Lamb.

Vallamai Thevai Deva – வல்லமை தாரும் தேவா

Vallamai Thevai Deva

வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை

1. மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்கதரிசனம் சொல்வாரே – பொழிந்திடும்

2. பெந்தேகோஸ்தே நாளின் போல
பெரிதான முழக்கத்தோடே
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும் – பொழிந்திடும்

3. மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையான ஆவியைத்தாரும்
பிதாவே என்று அழைக்க
புத்ர சுவிகாரம் ஈந்திடும் – பொழிந்திடும்

Vallamai Thevai Thaevaa
Vallamai Thaarum Thaevaa
Indre Thaevai Thaevaa
Ippo Thaarum Thaevaa

Polinthidum Vallamai Unnathathin Vallamai
Aaviyin Vallamai Akkiniyin Vallamai

1. Maamsamaana Yaavar Maelum
Aaviyai Oottuvaen Endreer
Mooppar Vaalibar Yaavarum
Theerkkatharisanam Solvaarae – Polinthidum

2. Penthaekosthae Naalin Pola
Perithaana Mulakkathodae
Vallamaiyaaga Irangi
Varangalinaalae Nirappum – Polinthidum

3. Meetkappadum Naalukkendru
Muthiraiyaana Aaviyaithaarum
Pithaavae Endru Alaikka
Puthra Suvikaaram Eenthidum – Polinthidum

Neere Ellam Neere Ellam – நீரே எல்லாம் நீரே எல்லாம்

Neere Ellam Neere Ellam
நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம் இயேசுவே-2
உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ

1. நீரே எல்லாம் இயேசுவே -2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசுவே -2
இன்பமோ துன்பமோ
சுகமோ வியாதியோ
ஆராதிப்பேன் இயேசுவே -2

2. நேசிப்பேன் நேசிப்பேன்
நேசிப்பேன் இயேசுவே -2
நன்மையோ தீமையோ
செல்வமோ வறுமையோ
நேசிப்பேன் இயேசுவே -2

3. பின்தொடர்வேன் பின்தொடர்வேன்
பின்தொடர்வேன் இயேசுவே -2
வெற்றியோ தோல்வியோ
நிந்தையோ புகழ்ச்சியோ
பின்தொடர்வேன் இயேசுவே -2

Isravelin Thuthigalil – இஸ்ரவேலின் துதிகளில்

Isravelin Thuthigalil
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே
ஓஹோ.. வாக்குகள் பல தந்து அழைத்துவந்தீர்
ஒரு தந்தை போல எம்மை தூக்கி சுமந்தீர்

இனி நீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர்
உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம்

1. எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்
காலத்தைப் படைத்தவர் தேடிவந்தீர்
சிறையிருப்பை மாற்றி தந்தீர்
சிறுமையின் ஜனம் எம்மை உயர்த்திவைத்தீர் – இனி நீர் மாத்ரமே

2. செங்கடலைக் கண்டு சோர்ந்துபோனோம்
யோர்தானின் நிலை கண்டு அஞ்சி நின்றோம்
பயப்படாதே முன் செல்லுகிறேன்
என்றுரைத்து எம்மை நடத்திவந்தீர் – இனி நீர் மாத்ரமே

3. எதிரியின் படை எம்மை சூழும்போது
ஓங்கிய புயங் கொண்டு யுத்தம் செய்தீர்
பாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர்
எரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர் – இனி நீர் மாத்ரமே

Isravelin Thuthigalil Vasam Seyyum
engal devan neer parisuthare – 2
o..vakkugal pala thandu alaittu vandeer
oru thantai pola emmai thukki sumandeer
ini neer mathrame.. neer mathrame…
neer mathrame… en sondamaneer..

ummai aradhippom arpparippom
um namathinal enrum jeyam eduppom
– Isravelin Thuthigalil
1. Edhir kalam illamal engi ninrom
kalathai padaithavar thedi vandeer
Siraiyiruppai matrithandeer
sirumaiyin janam emmai uyarthi vaitheer
– ine neer mathrame
ummai aradhi… – isravelin

2. Sengadalai kandu sorndhu ponom
yordhanin nilaikandu angi ninrom
bayappadadhe mun selgiren enruraithu
emmai nadathi vandeer
– ine neer mathrame
ummai aradhi… – isravelin

3. Etireeyin padai emmai soolumpodu
ongiya puyam kondu yuttam seideer
pada seideer thuthikka Seideer
Erigovin madhilgalai Idikka Seideer
– ine neer mathrame
ummai aradhi… (2) – isravelin