Nandriyal Padiduvom – நன்றியால் பாடிடுவோம்

Nandriyal Padiduvom
நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே

1. செங்கடல் தனை நடுவாய் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியே இந்நாள் வரையும்
தயவாய் மா தயவாய் – ஆ (2)

2. உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்திரராய் இருக்க
கிருபையின் மகா தானமது வருங்
காலங்களில் விளங்க – ஆ (2)

3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்
சேவையில் மரித்தார்
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம் – ஆ (2)

4. மித்ருக்களான பலர் நன்றியிழந்தே
சத்ருக்களாயினாரே
சத்தியத்தை சார்ந்து தேவ
சித்தம் செய்திடுவோம் – ஆ (2)

5. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய மா பெருங் கிருபை மா நிலத்தோர்க் கீந்தாரேசு சுவிசேஷ ஒளியால் – ஆ (2)

6. அழைக்கப்பட்டோரே நீர் – உன்னத அழைப்பினை அறிந்தே வந்திடுவீர் அளவில்லாத் திரு ஆக்கமிதனை அவனியோர் வாக்களிப்பீர் – ஆ (2)

7. சீயோனைப் பணிந்துமே
கிறிஸ்தேசு ராஜனாய் சீக்கிரம் வருவ சிந்தை வைப்போம் சந்திக்கவே சீயோனின் ராஜனையே – ஆ

Nandriyaal Paadiduvoam
Nallavar Yaesu Nalgiya Ellaa
Nanmaigalai Ninaithae

1. Sengadal Thanai Naduvaai Piritha
Engal Dhaevanin Karamae
Thaangiyadhae Innaal Varaiyum
Dhayavaai Maa Dhayavaai – Aa (2)

2. Uyirpithae Uyarthinaar Unnadham Varai
Udan Sudhandhiraraai Irukka
Kirubaiyin Magaa Dhaanamadhu Varung
Kaalangalil Vilanga – Aa (2)

3. Jeevanai Thiyaagamaai Vaitha Palar Kadum
Saevaiyil Maarithaar
Saerndhu Vandhu Saevai Purindhu
Soarndhidaadhu Nirpoam – Aa (2)

4. Mithrukkalaana Palar Nandriyizhandhae
Sathrukkalaayinaarae
Sathiyathai Saarndhu Dhaeva
Sitham Seidhiduvaom – Aa (2)

5. Manarathai Neekkiyae Jeevanai Aruliya
Maa Perung Kirubai
Maa Nilathoarkkeendhaar Yaesu
Suvisaesha Oliyaal – Aa (2)

6. Azhaikkapattoarae Neer Unnadha Azhaippinai
Arindhae Vandhiduveer
Alavillaa Thiru Aakkamithanai
Avanaiyaarkalippeer – Aa (2)

7. Seeyoanai Panindhumae Kiristhaesu Raajanaai
Seekkiram Varuvaar
Sindhai Vaippoam Sandhikkavae
Seeyoanin Raajanaiyae – Aa (2)

Thudippade Enn Thaguthiyallo – துதிப்பதே என் தகுதியல்லோ

Thudippade Enn Thaguthiyallo
துதிப்பதே என் தகுதியல்லோ
துதித்திடுவேன் என் இயேசுவை

வேதம் நிறைந்த இதயம் தந்தார்
ஜெபம் நிறைந்த நேரம் தந்தார்
கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்
கருணை நிறைந்த கரங்கள் தந்தார் – துதிப்பதே

வியாதி நேரத்தில் வல்லமை தந்தார்
சோதனை நேரத்தில் ஜெயம் தந்தார்
கைவிட்ட நேரத்தில் ஜீவன் தந்தார்
ஆரோக்கிய நேரத்தில் அடக்கம் தந்தார் – துதிப்பதே

மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்
பார்வை நிறைந்த தூய்மை தந்தார்
சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்
செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார் – துதிப்பதே

ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்தார்
பெலவீன நேரத்தில் பெலன் தந்தார்
செய்தி நேரத்தில் தூது தந்தார்
பாடிய நேரத்தில் பரவசம் தந்தார் – துதிப்பதே

வளம் நிறைந்த வாழ்வு தந்தார்
மகிமை நிறைந்த தாழ்மை தந்தார்
அன்பு நிறைந்த ஆட்கள் தந்தார்
ஆவி நிறைந்த அறிவு தந்தார் – துதிப்பதே

சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார்
சத்தியம் நிறைந்த சபை தந்தார்
இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார்
ஒழி நிறைந்த வழி திறந்தார் – துதிப்பதே

Ennodu Pesum Yesuve – என்னோடு பேசும் இயேசுவே

Ennodu Pesum Yesuve
என்னோடு பேசும் இயேசுவே
நீர் வந்து பேசாதிருந்தால்
என் வாழ்க்கை தொலைந்துபோகுமே
என் வாழ்க்கை சிதைந்து போகுமே

தந்தை தன் குழந்தை கூட பேசாதிருப்பாரோ
தாயும் குழந்தை கேட்க கொஞ்சாதிருப்பாளோ
நான் உந்தன் குழந்தை அல்லவோ
என்னோடு பேசமாட்டீரோ ?

உம் வார்த்தையாலே கடல் தலைகுனிந்தது
உம் வார்த்தையாலே காற்று திரும்பிப் போனது
அவைகளோடு பேசினீரே
என்னோடு பேசமாட்டீரோ ?

Eliyavin Devan Nam Devan – எலியாவின் தேவன் நம் தேவன்

Eliyavin Devan Nam Devan
எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன்
தாசர்களின் ஜெபம் கேட்பார்
வல்ல பெரும் காரியம் செய்திடுவார்

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே ஆர்ப்பரிப்போம் – 2

1. வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே
பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன்
பஞ்ச காலத்தில் விதவை வீட்டில்
பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார்

2. சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்
வீரமுடன் முழங்கினார் தேவ மனிதன்
அக்கினியால் பதிலளிக்கும்
தேவனே தேவன் என்றார் தேவ மனிதன்

3. தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்
பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார்
கேட்டருளும் கேட்டருளும்
என்றே கதறினார் தேவ மனிதன்

4. வானங்களை திறந்தே வல்ல தேவன்
அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன்
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள்

In English

Eliyavin Devan Nam Devan
Vallamayin devan nam devan
Thaasarkalin jebam ketpaar
Valla perum kaariyaam seithiduvar
Karthare devan karthare devan
Endre aarparipom – 2

1. Vendidum baktharkalin jebam kette
Panimalai niruththinar valla devan
Panja kaalaththil vithavai veettil
Paathirangalai avar aaseervathiththar

2. Saththurukal munnilaiyil deva manithan
Veeramudan mulanginaar  deva manithan
Akkiniyaal pathilalikum
Devane devan enkirar deva manithan

3. Deva janam kootti serththe Deva manithan
Balipeedam seppanittu Baliyumeenthar
Kettarulum kettarulum
Endre katharinar deva manithan

4. Vaanangalai thiranthe valla devan
Akkiniyaaal pathil thathaar Jeeva devan
Karththare devan karththare devan
Endre paniththanar deva janangal

Paavathin Baarathinaal – பாவத்தின் பாரத்தினால்

Paavathin Baarathinaal
பாவத்தின் பாரத்தினால்
தவித்திடும் பாவி என்னை
நின் கிருபை பிரவாகத்தால்
தேற்றிடும் ஏசு நாதா (2)

கெட்ட குமாரனைப் போல்
துஷ்டனாய் அலைந்தேன் அப்பா
நின் அன்பை உணராமல்
துரோகம் நான் செய்தேனே

கள்ளனாயினும் நான்
நீர் பெற்ற பிள்ளை அல்லோ
கள்ளனுக்கருள் செய்த நீ
தள்ளாதே சிலுவை நாதா

தந்தையை விட்ட பின்பு
தவிடு தான் ஆகாரமோ
மனம் கசிந்து நொந்தேன்
கண்ணீரை துடைத்திடுமே

தந்தை தாய் தாமரெல்லாம்
என்னைக் கைவிடுவார்கள்
சாகும் நாளில் தாங்குவார்
நீர் அல்லால் யாருமில்லை

Yella Magimaikum Pathiraray – எல்லா மகிமைக்கும் பாத்திரரே

Yella Magimaikum

எல்லா மகிமைக்கும் பாத்திரரே
எல்லா கனத்திற்கும் பாத்திரரே – 2

அசைவாடும் தெய்வமே (4)
எங்கள் மேலே அசைவாடுமே (2)

1. செங்கடல் மேல் அசைவாடினீர்
எல்லா தடைகளை மாற்றினீரே – 2
எங்கள் தடைகள் மேல் அசைவாடுமே (2) (…அசைவாடும்)

2. உலர்ந்த எலும்பிற்கு உயிர் தந்தீரே
என் வாழ்க்கையில் அசைவாடுமே – 2 (2) (…அசைவாடும்)

3. எரிகோ மதில் மேலே அசைவாடினீர்
எல்லாத் தடைகளை மாற்றினீரே – 2
எங்கள் மேலே அசைவாடுமே (2) (…அசைவாடும்)

4. பவுலும் சீலாவும் பாடும்போது
சிறைச்சாலையில் அசைவாடினீர் – 2
எங்கள் மேலே அசைவாடுமே (2) (…அசைவாடும்)

Ellaa Makimaikkum Paaththirare
Ellaa Kanaththirkum Paaththirare – 2

Asaivaadum Deivame (4)
Engal Mele Asaivaadume (2)

1. Sengadal Mel Asaivaadineer
Ellaa Thataikalai Maattrineere – 2
Engal Thataikal Mel Asaivaadume (2) (…Asaivaadum)

2. Ularntha Elumpirku Uyir Thantheere
En Vaazhkkaiyil Asaivaadume – 2 (2) (…Asaivaadum)

3. Eriko Mathil Mele Asaivaadineer
Ellaath Thataikalai Maattrineere – 2
Engal Mele Asaivaadume (2) (…Asaivaadum)

4. Pavulum Seelaavum Paadumpothu
Siraichchalaiyil Asaivaadineer – 2
Engal Mele Asaivaadume (2) (…Asaivaadum)

En Devan En Velicham – என் தேவன் என் வெளிச்சம்

En Devan En Velicham

என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்

1. தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
அன்பர் இயேசென்னை ஏற்றுக் கொள்வார்
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
தலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார் – என்

2. தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார்
என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே – என்

Tholugirom Yenkal Pithaavae – தொழுகிறோம் எங்கள் பிதாவே

Tholugirom Yenkal Pithaavae

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

1. வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர்
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம் சரணம் — தொழுகிறோம்

2. தலை தங்க மயமானவர்
தலை மயிர் சுருள் சுருளானவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவர்
பதினாயிரமாம் சரணம் சரணம் — தொழுகிறோம்

3. கண்கள் புறாக்கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல
சின்னங்கள் சிறந்ததாலே
எண்ணில்லாத சரணம் சரணம் — தொழுகிறோம்

4. கரங்கள் பொன் வளையல்கள் போல
நிறங்களும் தந்தத்தைப் போல
கால்களும் கல் தூண்கள் போல
காண்பதாலே சரணம் சரணம் — தொழுகிறோம்

5. சமஸ்த சபையின் சிரசே
நமஸ்காரம் எங்கள் அரசே
பிரதானம் எம் மூலைக்கல்லே
ஏராளமாய் சரணம் சரணம் — தொழுகிறோம்

6. அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம்
கூடி வந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம் — தொழுகிறோம்

7. பார்த்திபனே கன தோத்திரம்
கீர்த்தனம் மங்களம் நித்தியம்
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென் — தொழுகிறோம்

Naan Anaathai Endru Aluthaen – நான் அனாதை என்று அழுதேன்

Naan Anaathai Endru Aluthaen

நான் அனாதை என்று அழுதேன்
நீ அனாதையில்லை எந்தன்
சொந்தம் என்றீர் ஐயா
அனாதை என்று அழுதேன்

1. காணாமற் போன ஆடாய் அலைந்தேன்
கர்த்தாவே உந்தன் கண்கள் கண்டது
மார்போடு அணைத்தீர் மந்தையில் சேர்த்தீர்
மகிமை செலுத்திடுவேன்

2. கண்ணீரின் பள்ளத்தாக்கில் கிடந்தேன்
நான் கதறி முறையிட்டு அழுதேன்
கருத்தாய் விசாரித்தீர் கண்ணீரை மாற்றினீர்
மகிமை செலுத்திடுவேன்

3. மாராவின் தண்ணீர் போன்ற வாழ்க்கை
அது மதுரமாக மாறாதென்று மலைத்தேன்
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினீர்
மகிமை செலுத்திடுவேன்

Inba Yesu Raja Vai Naan Parthal Pothum – இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்

Inba Yesu Raja Vai Naan Parthal Pothum
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தாள் போதும் (2)

1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2)
கறைதிரை அற்ற பரிசுத்தரோடு
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2)

2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது (2)
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2)

3. முள் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2)
வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து
ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (2)

4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2)

5. ஆஹா! எக்காலம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ (2)
அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் (2)

Inba iyeasu raajaavai naan paarththaal poadhum
Magimaiyil avaroadu naan vaazhnthaal poadhum (2)
Niththiyamaam moatcha veettil saerndhaal poadhum
Allaelooyaa koottaththil naan magizhndhaal poadhum (2)

1. Yaesuvin raththathaalae meetkappattu
Vasanamaam vaeliyaalae kaakkappattu (2)
Karaithirai atra parisuththaroadu
Aezhaiyaan pon veedhiyil ulaaviduvaen (2)

2. Thoodhargal veenaigalai meettum poadhu
Niraivaana jeya koasham muzhangum poadhu (2)
Allaelooyaa geetham paadi kondu
Anbaraam yaesuvoadu agamagizhvaen (2)

3. Mul kreedam sooddappatta thalaiyai paarppaen
Porkreedam sooddi naanum pugazhndhiduvaen (2)
Vaarinaal adippatta muthugai paarththu
Ovvoru kaayangalaal muththam seivaen (2)

4. Ennullam nandriyaal niraindhidudhae
Endhanin baakkiya veettai ninaikkaiyilae (2)
Allaelooyaa aamen allaelooyaa
Varnikka endhan naavu poadhaadhaiyaa (2)

5. Aahaa! ekkaalam endru muzhangidumoa
Aezhai en aaval endru theerththidumoa (2)
Appaa! en kanneer endru thudaikkiraaroa
Aavalaai aengidudhae enadhullamum (2)