Naam Gragika Kudatha
நாம் கிரகிக்கக் கூடாத காரியங்கள் செய்திடுவார்
நாம் நினைத்து பார்க்காத அளவில் நம்மை உயர்த்திடுவார்
பெரியவர் எனக்குள் இருப்பதினால்
பெரிய காரியங்கள் செய்திடுவார்
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்திடுவார்
எண்ணி முடியாத அற்புதங்கள் செய்திடுவார்
1
எவரையும் மேன்மைப்படுத்த
உம் கரத்தினால் ஆகுமே
எவரையும் பெலப்படுத்த
உம் கரத்தினால் ஆகுமே
மனிதனால் கூடாதது
தேவனால் இது கூடுமே
2
கர்த்தர் என் வலப்பக்கம் இருப்பதினால்
ஒருவரும் அசைப்பதில்லை
நேர்த்தியான இடங்களிலே
எனக்கு பங்கு கிடைத்திடுமே
Naam Gragikka Kudadha
Kaariyangal Seidhiduvar
Naam Ninaithu Paarkadha Alavil Nammai Uyarthiduvar
Vazhi Thirakkumae Puthu
வழி திறக்குமே புது வழி திறக்குமே
இயேசுவின் நாமத்தில் வழி திறக்குமே-2
வாசல்களெல்லாம் தலை உயர்த்திடுங்களே
மகிமையின் இராஜா வந்திடுவாரே
முந்தினதெல்லாம் இனி நினைக்க வேண்டாமே
புதிய காரியம் செய்திடுவாரே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
எங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா-2
2. யோர்தான் பின்னிட்டு திரும்பி போகுமே
எரிகோ முன்பதாக நொறுங்கி விழுமே
பர்வதங்கள் மலைகள் எல்லாம் கெம்பீரிக்குமே
வெளியின் மரங்கள் எல்லாம் கை கொட்டுமே -2
புது வழி நமக்காக திறந்திடுவாரே-2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
எங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா-2
3. கர்த்தரின் மகிமையான பிரசன்னத்தால்
சத்துருக்கள் முற்றிலுமாய் நொறுங்கி போவாரே
இரவில் அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பமும்
தமது ஜனத்தின் முன்னே கடந்து செல்வாரே
தமது ஜனத்தின் மேலே பிரியம் வைத்ததால்-2
வாக்குத்தத்த தேசத்துக்கு கொண்டு செல்வாரே-2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
எங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா-2-வழி
Varanda Nilangal Neerrutragum
வறண்ட நிலங்கள் நீரூற்றாகும் கர்த்தர் என் பட்சம் இருந்தால் வனாந்திரம் புல்
வெளியாகிடும் கர்த்தர் என்னோடு நடந்தால்
தீமை தொடருவதில்லை, வாதை அணுகுவதில்லை – 2
மேய்ப்பனே நல் மேய்ப்பனே
நீர் என்னோடிருந்தால் தாழ்ச்சி இல்லையே – 2
நெரிந்த நாணலை முறித்து போடாதவர்
மங்கி எரியும் திரியை அனைந்திடாமல் காப்பவர் – 2
இதயம் நெருக்கப்படுகையில் இதமாய் என்னை தாங்கினீர்
ஆத்துமா தொய்ந்து போகையில்
காயம் கட்டி குணமாக்கினீர் — மேய்ப்பனே
கால்கள் இடறுகையில் நீர் என்னை தாங்கினீர்
சேதமனுகாமல் தூதரை அனுப்பி என்னை ஏந்துனீர் – 2
பொல்லாங்கன் எய்திட்ட அம்புக்கும் கர்த்தனே என்னை தப்புவித்தீர்
மறைவாய் வைத்த கண்ணிக்கும்
விலக்கி என்னை மீட்டெடுத்தீர் — மேய்ப்பனே
Varanda Nilangal Neeruttraahum Karthar En Patcham Irunthaal
Vanaanthiram Pul Veliyaahidum Karthar Ennodu Nadanthaal
Theemai Thodaruvathillai Vaathai Anuhuvathillai – 2
Avar Thoolgalin
அவர் தோள்களின் மேலே
நான் சாய்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்
நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே
அவர் வார்த்தையின் மேலே
நான் சார்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே
யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே-2
1. மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே
பயப்படமாட்டேன்-2
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
பதினாயிரங்கள் எழுந்தாலும்
அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே
2. நெருக்கத்திலே கர்த்தரை
நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டு வந்து
மீட்டுக்கொண்டாரே-2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான்
அசைக்கப்படுவதில்லையே-2-யெகோவாயீரே
Maenmai Paaratuven
மேன்மை பாராட்டுவேன் நான்
மேன்மை பாராட்டவேனே – 2
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன் – என்
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன்
Ilavasamaai Kirubayinaal
இலவசமாய் கிருபையினால்
என்னை நீதிமானாக்கினீரே
நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்தது
அப்பா உம் கிருபைதானே
நன்றி(2) ஐயா, கோடி நன்றி ஐயா
1. உலகத்தின் பின்னே ஓடிக்கொண்டிருந்தேன்
தேடி வந்தீரய்யா
ஆஸ்தியும் ஐசுவரியமும் அழிந்திடும்
ஒருநாள் அறிவை தந்தீரய்யா
கீழானதையல்ல மேலானதை நாடு
என்று சொன்னீரய்யா
(நன்றி(2) ஐயா…)
3. என் சுயநீதியெல்லாம் அழுக்கான
கந்தை உணர செய்தீரய்யா
அழுக்கு உடை அகற்றி அழகான
வெண்ணாடை எனக்கு தந்தீரய்யா
மானத்தை காத்திடும் உன் வஸ்திரம்
காத்திடு என்று சொன்னீரய்யா
(நன்றி(2) ஐயா…)