Diyalo Diyalo Diyalo
டியாலோ டியாலோ டியாலோ டியாலோ டியாலோ டியாலோ (2)
டியாலோ டியாலோ டமுக்கு டப்பா (4)
இயேசு சாமி ரொம்ப ரொம்ப நல்ல சாமிங்கோ நமக்கு
அற்புதங்கள் ஏராளமாய் செய்யும் சாமிங்கோ
மரித்தவரை உயிரோடு எழுப்பும் சாமி (2)
உயிர் உள்ள நமக்கும் உதவி செய்யும் நல்ல சாமி
டியாலோ ……
1. எங்களுக்காய் இரத்தம் சிந்தி
மரித்தார் எங்கள் இயேசு சாமி
பாவத்தை மன்னித்து விட்டாரே – எங்க
சாபத்தையும் கூட நீக்கி விட்டாரே எங்க (2)
2. மனுஷராலே தள்ளப்பட்டோம்
மனுஷராலே வெறுக்கப்பட்டோம்
எங்களையும் தேடி வந்தாரே- அந்த
இயேசு சாமி எங்களையும் சேர்த்து கொடண்டாரே (2)
3. ஊர் ஊராய் சுற்றி வருவோம்
ஊர் கதையை பேச மாட்டோம்
இயேசுவை பற்றி சொல்லுவோம் – நாங்க
இயேசுவின் அன்பை பற்றி எடுத்து சொல்லுவோம் (2)
இயேசப்பா நான் உந்தன் பிள்ளையாய் மாற
கிருபைகள் தந்திடுமே (2)
உந்தன் இரத்தத்தால் என்னை கழுவி
முற்றிலும் தூய்மையாக்கிடுமே
உந்தனின் வசனத்தாலே நாள்தோறும்
என்னை நடத்துமே
வாழ்நாளெல்லாம் உம் சித்தம் போல் வாழ
கிருபைகள் தந்திடுமே – ஆமென்
Yesappaa Nan Unthan Pillayaai Maara
Kirubaigal Thanthidumey (2)
Undhan Raththathaal Ennai Kazhuvi
Muttrilum Thooymayaakidumey
Undhanin Vasanathinaaley Naalthorum
Ennai Nadathumey
Vazhnaalelaam Um Siththam Pol Vaazha
Kirubaigal Thanthidumey – Amen
Melae Vanathil Parakum
மேலே வானத்தில் பறக்கும் பட்டாம்பூச்சி
ஒன்றுக்கும் கவலை படல
அந்த மரத்திலே இருக்கும் சிட்டுக்குருவி
ஒன்றுக்கும் கவலை படல
அதுக்குத்தான் நன்றாகத் தெரியுமே
இயேசு அதை காண்கின்றார் (2)
அதன் தேவைகளை சந்திக்கின்றார்- 2
துன்பத்திலே வாடும் தம்பி, தங்கச்சி
ஒன்றுக்கும் கவலை படாதே
உதவி செய்வார் யாருமில்லையே
என்று நீயும் கவலை படாதே
உனக்கொன்னு தெரியுமா? தம்பி, தங்கச்சி
இயேசு நம்மை காண்கின்றார்(2)
நம் தேவைகளை சந்திக்கின்றார் – 2
Maram Vitu Maram Thavum
மரம் விட்டு மரம் தாவும் அம்மா குரங்கு
அதை கெட்டியாக பிடிச்சிருக்கு குட்டி குரங்கு
பயப்படவில்லை அது பயப்படவில்லை
அம்மா மேலே நம்பிக்கை தான் வச்சிருக்குது
குதித்து குதித்து வேகமாக ஓடும் கங்காரு
அதின் பைக்குள்ளே தான் இருக்குதே குட்டி கங்காரு
பயப்படவில்லை அது பயப்படவில்லை
அம்மா மேலே நம்பிக்கை தான் வச்சிருக்குது
அன்பு தம்பி, தங்கையே- உன்னை
அழகாய் தேவன் படைத்தார் (2)
அவரை நீயும் பிடித்துக் கொண்டால்
அஞ்சிடாமல் வாழ்ந்திடலாம் – 2
Maram Vittu Maram Thaavum Amma Kurangu
Adhai Kettiyaaga Pidichuruku Kutty Kurangu
Bayapadavillai Adhu Bayapadavillai
Amma Meley Nambikai Than Vechirukuthu
Kuthithu Kuthithu Vegamaaga Odum Kangaaru
Adhin Paikullaye Than Irukuthey Kutty Kangaaru
Bayapadavillai Adhu Bayapadavillai
Amma Meley Nambikai Than Vechirukuthu
Payapadathey Naan Unnodu Irukiren
பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன்
கலங்கிடாதே நான் உன்னை பாதுகாப்பேன்
திகையாதே நான் உன்னை கரம்பிடித்திடுவேன்
பதறாதே பதறாதே என்று கர்த்தர் சொல்கிறார்
1. உன் வாழ்வில் அதிசயம் காணச் செய்வார் இயேசு
அனுதினமும் நடத்திச் சொல்வார் இயேசு
புதுவாழ்வை தந்திடுவார் வெற்றி உனக்கு தந்திடுவார்
பதறாதே பதறாதே – நீயும் (2)
2. தாயின் கருவில் தெரிந்து கொண்டவர் இயேசு
தாழ்வில் உன்னை உயர்த்திடுவார் இயேசு
ஞானம் உனக்குத் தந்திருவார் நித்திய வாழ்வை தந்திடுவார்
பதறாதே பதறாதே – நீயும் (2)
கவலையோடு வரும் நீ Happyயாக போகலாம்
குழப்பத்தோடு வரும் நீ நிம்மதியாய் போகலாம்
இயேசு உனக்குள் வந்திட்டால் பயமில்லாம் வாழலாம்
பாவ வாழ்வை விட்டு நீ பரிசுத்தமாய் வாழலாம்
என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே – 2
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
ஆவியினாலே நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
(உம்) வல்லமையாலே நிரப்பிடுங்க
1. நிழலை தொடுவோர் சுகத்தை பெறனும்
கச்சயை தொடுவோர் அற்புதம் பெறனும் – என் – 2
பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
பவுலை போல் பயன் படுத்திடுங்க – 2 (…நிரப்பிடுங்க)
2. காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
முடிவுக்கு வரணும் – நான் – 2
மூழ்கணுமே நான் மூழ்கணுமே
(உம்) ஆவியின் நதியிலே மூழ்கணுமே – 2
நிரம்பணுமே நான் நிரம்பணுமே
(உம்) பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே – 2
3. தெருவெல்லாம் உம் அக்கினி நதியை
என்னை கொண்டு பாய்ந்திட செய்யும் – என் – 2
செய்திடுங்க ஐயா செய்திடுங்க
நதியாய் பாய்ந்திட செய்திடுங்க – 2 (…நிரப்பிடுங்க)
Enna Nirappungappaa Um Vallamayaale
Enna Nirappungappaa Um Akkiniyaale – 2
Stanza 1
Fill me Father with your power
Fill me, Father, with your fire(2)
Chorus
Fill me with your Holy Spirit
Fill me with your power
Stanza 2
Those who touch my shadow be healed
Those who touch my kerchief receive a miracle(2)
Fill me like Peter
Use me like Paul(2)
Stanza 3
The life I lived as an empty vessel should come to an end(2)
Let me drown in the river of your Holy Spirit(2)
Let me be filled with your Holy Spirit(2)
Stanza 4
You will let me flow through the streets like a river of fire(2)
Do it Lord do it let me flow like a river of fire(2)
Kalvari Anbu Marrinadhennai
கல்வாரி அன்பு மாற்றினதென்னை
கல்வாரி அன்பு – நொருக்கினதே என்னை
எனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
எனக்காகவே – 2 அவதி எல்லாம்
என் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே
இயேசுவின் காயங்களால், சுகமுண்டு
சாபங்கள் போக்கும், பாவங்கள் நீக்கும்
பூரண சுகமுண்டு இயேசுவண்டை மாத்ரமே
கல்வாரி அன்பு மாற்றிடும் உன்னை
கல்வாரி அன்பு நொறுக்கிடுமே உன்னை
உனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம்
உனக்காகவே – 2 அவதி எல்லாம்
உன் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே