Song Tags: Christmas Carol Songs

Kaarirul Velayil – காரிருள் வேளையில் கடுங்குளிர்

Kaarirul Velayil
காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்த மன்னவனே உம்
மாதயவே தயவு

1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிடனானது
மாதயவே தயவு – காரிருள்

2. விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மானுடரில் பிரியம் மலர்ந்தது உந்தன்
மாதயவே தயவு – காரிருள்

3. விந்தை விதந்தனில் வந்தவனே,
வானவனே, நாங்கள்
தந்தையின் அன்பைக் கண்டதும் உந்தன்
மாதயவே தயவு – காரிருள்

Kaarirul velayil kadung kulir nearathil
Yealai koalamathaai
Paarinil vantha mannavanee um
Maathayavee thayavu

1. Vinnulakil simmaasanathil
Thootharkal paadidave
veetirukkaamal maanidanaanathu
Maathayavea thayavu – Kaarirul

2. Vinnil theavanukkee magimai
Mannil samaathaanam
Maanudaril piriyam malarnthathu unthan
Maathayavea thayavu – Kaarirul

3. Vinthai vithanthanil vanthavanee
Vaanavanee, naangkal
Thanthaiyin anpai kandathum unthan
Maathayavea thayavu – Kaarirul

Bakthare Vaarum – பக்தரே வாரும்

Bakthare Vaarum
Oh come all ye faithful – பக்தரே வாரும்

1. பக்தரே வாரும்
ஆசை ஆவலோடும்
நீர் பாரும், நீர் பாரும்
இப்பாலனை;
வானோரின் ராஜன்
கிறிஸ்து பிறந்தாரே!

சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை.

2. தேவாதி தேவா,
ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்.
தெய்வ குமாரன்,
ஒப்பில்லாத மைந்தன்;

3. மேலோகத்தாரே,
மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப்
போற்றுமேன்;
விண்ணில் கர்த்தா நீர்
மா மகிமை ஏற்பீர்!

4. இயேசுவே, வாழ்க!
இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;
தந்தையின் வார்த்தை
மாம்சம் ஆனார் பாரும்.
Oh come all ye faithful in tamil

Bethalayil Piranthavarai – பெத்தலையில் பிறந்தவரைப்

Bethalayil Piranthavarai
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும்

1. சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில்

2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில்

3. முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில்

4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில்

5. இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில்

Bethalayil Piranthavarai
Potri Thuthi Manamae – Innum

1. Saruvathayum Padaithaanda Saruva Vallavar – Ingu
Thaalmayulla Thaai Madiyil Thalai Saaykalaanaar – Bethalayil

2. Singaasanam Veetirukum Deva Mainthanaar – Ingu
Pangamutta Pasu Thotillil Paduthirukiraar- Bethalayil

3. Munbu Avar Sonnapadi Mudipatharkaaga – Ingu
Moatcham Vittu Thaalchiyulla Munnanaiyile – Bethalayil

4. Aavikalin Poattuthalaal Aananthang Kondoor – Ingu
Aakkalooda Sathathukul Aluthu Piranthaar – Bethalayil

5. Ethadaivaai Anbu Vaitha Emperumaanai – Naam
Ennamudan Poai Thuthika Yegiduvomay – Bethalayil