Song Tags: Pr. Lucas Sekar Song Lyrics

Pesungappaa Engalodu Pesungappaa – பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா

Pesungappaa Engalodu Pesungappaa

பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா
நீங்க பேசினா எங்க வாழ்க்கை மாறும் – 2

துதிக்கணும்பா ஜெபிக்கணும்பா
உம் நாமம் உயர்த்தணும்பா (2) (…பேசுங்கப்பா)

1. பகல் முழுவதும் உங்க பாதபடியில
என் கண்ணீர வடிக்கணும்பா – 2
ரா முழுவதும் தியானம் செய்து
பாக்கியவானாய் மாற்றுங்கப்பா (2) (…துதிக்கணும்பா)

2. பரிசுத்தத்தில் மகத்வமுள்ள
தேவாதி தேவன் நீரே – 2
பரிசுத்தமாய் வாழ்ந்திடவே
உங்க கிருபையினால் நிரப்புங்கப்பா (2) (…துதிக்கணும்பா)

3. ஒவ்வொரு நாளும் பெலனடைந்து
ஆவியிலே நிறையணும்பா – 2
பெலத்தின் மேல பெலனடைந்து
சீயோனை பார்க்கணும்பா (2) (…துதிக்கணும்பா)

4. உண்மையான ஊழியனாய்
அனுதினமும் விளங்கணும்பா – 2
நன்மைகள் செய்யணுமே
நாள்தோறும் உம்ம பார்க்கணுமே (2) (…துதிக்கணும்பா)

Pesungappaa Engalodu Pesungappaa
Neenga Pesinaa Enga Vazhkai Maarum – 2

Thuthikkanumpaa Jebikkanumpaa
Um Naamam Uyarththanumpaa (2) (…Pesungappaa)

1. Pagal Muzhuvathum Unga Padhapadiyila
En Kanneera Vadikkanumpaa – 2
Raa Muzhuvathum Thyaanam Seithu
Baakkiyavaanaai Maattrungappaa (2) (…Thuthikkanumpaa)

2. Parisuththaththil Magathvamulla
Dhevaathi Devan Neere – 2
Parisuththamaai Vaazhnthidave
Unga Kirubaiyinaal Nirappungappaa (2) (…Thuthikkanumpaa)

3. Ovvoru Naalum Belanadainthu
Aaviyile Nirambanumpaa – 2
Belaththin Mela Belanadainthu
Seeyonai Parkkanumpaa (2) (…Thuthikkanumpaa)

4. Unmaiyaana oozhiyanaai
Anuthinamum Vilanganumpaa – 2
Nanmaigal Seiyanume
Naalthorum Umma Parkkanume (2) (…Thuthikkanumpaa)

Yaar Iruntha Yenakenna – யார் இருந்தால் எனக்கென்ன

Yaar Iruntha Yenakenna
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதுமப்பா -2
எல்லோரும் இருப்பார்கள்
இல்லாமல் போவார்கள்
உலகத்தின் முடிவு வரை
என்னோடு இருப்பவரே -2

(ஓ..ஓ..) விலகாத தேவ கிருபை
மாறாத தேவ கிருபை -2
என் தகப்பனே தகப்பனே இயேசுவே -2
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதுமப்பா -2

1. தாயின் வயிற்றினிலே
என் கருவை கண்டவரே
அவயங்கள் உருவாகும் முன்
என்னை குறித்து அறிந்தவரே -2
உலக தோற்றம் முதல்
முன் குறித்து வைத்தவரே
உள்ளங்கையிலே-என்னை
வரைந்த தெய்வம் நீரே -2 – விலகாத

2. உடைந்த மண்பாண்டம்
வீதியிலே கிடந்தேனே
அழகும் இல்லாமல்
உறுவற்று போனேனே -2
என்னை மீட்டெடுக்க
இறங்கி வந்த தெய்வம் நீரே
அழகும் சவுந்தர்யமும்
எனக்காக இழந்தவரே -2 – விலகாத

3. துவக்கமும் முடிவும்
எல்லாமே நீர் தானே
ஆதியும் அந்தமும்
எல்லாமே நீர் தானே -2
உமக்கு மறைவான
சிருஷ்டி ஏதும் இல்லையப்பா
உம்மை விட்டால் உலகத்திலே
வாழ எனக்கு வழி இல்லப்பா -2 – விலகாத

Palaivanamaa Iruntha – பாலைவனமாய் இருந்த

Palaivanamaa Iruntha
பாலைவனமாய் இருந்த எங்கள
சோலைவனமாய் மாற்றினீரய்யா – 2

1. அறுந்த கொடியைப் போலிருந்தோமே
எங்கள செடியோடு இணைத்துவிட்டீரே – 2
செடியோடு இணைத்துவிட்டீரே – எங்கள (2)

2. கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே
எங்கள களிப்பாக மாற்றினீரையா – 2 (2)

3. வறண்ட நிலத்தை போலிருந்தோமே
எங்கள வயல்வெளியாய் மாற்றினீரையா – 2 (2)

4. நம்பிக்கையற்றவராய் இருந்தோமே
எங்கள நங்கூரமாய் மாற்றிவிட்டீரே – 2 (2)

Paalaivanamaa Iruntha Engala
Solaivanamaa Maattrineeraiyaa – 2

1. Aruntha Kodiyai Polirunthome
Engala Sediyodu Innaiththuvitteere – 2
Sediyodu Innaiththuvitteere – Engala (2)

2. Kanneerile Moozhgiyirunthome
Engala Kalippaaga Maattrineeraiyaa – 2 (2)

3. Varanda Nilaththai Polirunthome
Engala Vayalveliyaai Maattrineeraiyaa – 2 (2)

4. Nambikkaiyattravaraai irunthome
engala nangooramaai maattrivitteere – 2 (2)