Yaar Iruntha Yenakenna – யார் இருந்தால் எனக்கென்ன

Yaar Iruntha Yenakenna
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதுமப்பா -2
எல்லோரும் இருப்பார்கள்
இல்லாமல் போவார்கள்
உலகத்தின் முடிவு வரை
என்னோடு இருப்பவரே -2

(ஓ..ஓ..) விலகாத தேவ கிருபை
மாறாத தேவ கிருபை -2
என் தகப்பனே தகப்பனே இயேசுவே -2
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதுமப்பா -2

1. தாயின் வயிற்றினிலே
என் கருவை கண்டவரே
அவயங்கள் உருவாகும் முன்
என்னை குறித்து அறிந்தவரே -2
உலக தோற்றம் முதல்
முன் குறித்து வைத்தவரே
உள்ளங்கையிலே-என்னை
வரைந்த தெய்வம் நீரே -2 – விலகாத

2. உடைந்த மண்பாண்டம்
வீதியிலே கிடந்தேனே
அழகும் இல்லாமல்
உறுவற்று போனேனே -2
என்னை மீட்டெடுக்க
இறங்கி வந்த தெய்வம் நீரே
அழகும் சவுந்தர்யமும்
எனக்காக இழந்தவரே -2 – விலகாத

3. துவக்கமும் முடிவும்
எல்லாமே நீர் தானே
ஆதியும் அந்தமும்
எல்லாமே நீர் தானே -2
உமக்கு மறைவான
சிருஷ்டி ஏதும் இல்லையப்பா
உம்மை விட்டால் உலகத்திலே
வாழ எனக்கு வழி இல்லப்பா -2 – விலகாத

2 thoughts on “Yaar Iruntha Yenakenna – யார் இருந்தால் எனக்கென்ன

  1. நல்லா பாடல் சார் இன்னும் புது புது பாடலை பாட கர்த்தர் உதவி செய்வார் ஆமென்

  2. உங்க பாடலை விரும்பி கேப்பா சார் எத்தனை முறை கேட்டாலும் சகிக்காத பாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *