Song Tags: Pr. Lucas Sekar Songs

Pesungappaa Engalodu Pesungappaa – பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா

Pesungappaa Engalodu Pesungappaa

பேசுங்கப்பா எங்களோடு பேசுங்கப்பா
நீங்க பேசினா எங்க வாழ்க்கை மாறும் – 2

துதிக்கணும்பா ஜெபிக்கணும்பா
உம் நாமம் உயர்த்தணும்பா (2) (…பேசுங்கப்பா)

1. பகல் முழுவதும் உங்க பாதபடியில
என் கண்ணீர வடிக்கணும்பா – 2
ரா முழுவதும் தியானம் செய்து
பாக்கியவானாய் மாற்றுங்கப்பா (2) (…துதிக்கணும்பா)

2. பரிசுத்தத்தில் மகத்வமுள்ள
தேவாதி தேவன் நீரே – 2
பரிசுத்தமாய் வாழ்ந்திடவே
உங்க கிருபையினால் நிரப்புங்கப்பா (2) (…துதிக்கணும்பா)

3. ஒவ்வொரு நாளும் பெலனடைந்து
ஆவியிலே நிறையணும்பா – 2
பெலத்தின் மேல பெலனடைந்து
சீயோனை பார்க்கணும்பா (2) (…துதிக்கணும்பா)

4. உண்மையான ஊழியனாய்
அனுதினமும் விளங்கணும்பா – 2
நன்மைகள் செய்யணுமே
நாள்தோறும் உம்ம பார்க்கணுமே (2) (…துதிக்கணும்பா)

Pesungappaa Engalodu Pesungappaa
Neenga Pesinaa Enga Vazhkai Maarum – 2

Thuthikkanumpaa Jebikkanumpaa
Um Naamam Uyarththanumpaa (2) (…Pesungappaa)

1. Pagal Muzhuvathum Unga Padhapadiyila
En Kanneera Vadikkanumpaa – 2
Raa Muzhuvathum Thyaanam Seithu
Baakkiyavaanaai Maattrungappaa (2) (…Thuthikkanumpaa)

2. Parisuththaththil Magathvamulla
Dhevaathi Devan Neere – 2
Parisuththamaai Vaazhnthidave
Unga Kirubaiyinaal Nirappungappaa (2) (…Thuthikkanumpaa)

3. Ovvoru Naalum Belanadainthu
Aaviyile Nirambanumpaa – 2
Belaththin Mela Belanadainthu
Seeyonai Parkkanumpaa (2) (…Thuthikkanumpaa)

4. Unmaiyaana oozhiyanaai
Anuthinamum Vilanganumpaa – 2
Nanmaigal Seiyanume
Naalthorum Umma Parkkanume (2) (…Thuthikkanumpaa)

Yaar Iruntha Yenakenna – யார் இருந்தால் எனக்கென்ன

Yaar Iruntha Yenakenna
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதுமப்பா -2
எல்லோரும் இருப்பார்கள்
இல்லாமல் போவார்கள்
உலகத்தின் முடிவு வரை
என்னோடு இருப்பவரே -2

(ஓ..ஓ..) விலகாத தேவ கிருபை
மாறாத தேவ கிருபை -2
என் தகப்பனே தகப்பனே இயேசுவே -2
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதுமப்பா -2

1. தாயின் வயிற்றினிலே
என் கருவை கண்டவரே
அவயங்கள் உருவாகும் முன்
என்னை குறித்து அறிந்தவரே -2
உலக தோற்றம் முதல்
முன் குறித்து வைத்தவரே
உள்ளங்கையிலே-என்னை
வரைந்த தெய்வம் நீரே -2 – விலகாத

2. உடைந்த மண்பாண்டம்
வீதியிலே கிடந்தேனே
அழகும் இல்லாமல்
உறுவற்று போனேனே -2
என்னை மீட்டெடுக்க
இறங்கி வந்த தெய்வம் நீரே
அழகும் சவுந்தர்யமும்
எனக்காக இழந்தவரே -2 – விலகாத

3. துவக்கமும் முடிவும்
எல்லாமே நீர் தானே
ஆதியும் அந்தமும்
எல்லாமே நீர் தானே -2
உமக்கு மறைவான
சிருஷ்டி ஏதும் இல்லையப்பா
உம்மை விட்டால் உலகத்திலே
வாழ எனக்கு வழி இல்லப்பா -2 – விலகாத

Ennai Jenipithavarum Neer – என்னை ஜெனிப்பித்தவரும் நீர் தானே

Ennai Jenipithavarum Neer
என்னை ஜெனிப்பித்தவரும் நீர் தானே
என்னை பெற்றெடுத்தவரும் நீர் தானே
எனக்கு பேரு வச்சவரும் நீர் தானே
என்னை வளர்த்தவரும் நீர் தானே -2
கன்மலையே கன்மலையே -2
உமக்கே ஆராதனை -4

1. தாயின் அன்பிலும் மேலான அன்பு
அளவே இல்லாத உண்மையான அன்பு
எனக்காக அடிக்கப்பட்டீர்
எனக்காக நொறுக்கப்பட்டீர்
நான் வாழ மரித்தீரே -2
எனக்காக உயிர்த்தீரே -4
– உமக்கே ஆராதனை

2. என் மேல் கிருபை வைத்து
இரட்சிப்பை தந்தவரே
இதற்கு ஈடு இணை
பூமியிலே இல்லையப்பா -2
என் மேலே அன்பு வைத்து
பரிகாரம் செய்தீரே
பாவமில்லை மரணமில்லை -2
நித்திய ஜீவனை தந்தீரே -4
– உமக்கே ஆராதனை

3. உமக்கு நிகரான தெய்வம்
ஒன்றும் இல்லைப்பா
அகில உலகத்திற்க்கும்
ஆணடவரும் நீர் தானே -2
முடிவில்லா இராஜ்ஜியத்தை
அரசாளும் தெய்வம் நீரே
கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர் -2
நித்திய மகிழ்ச்சியே நீர் தானே -4
– உமக்கே ஆராதனை

Aattukkutti Rathathai Kaiyil – ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் – Rathamae Rathamae

Aattukkutti Rathathai Kaiyil
ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம்
அந்தகார வல்லமையை துரத்திடுவோம்
சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவோம்
(நம்) எல்லையெல்லாம் ஜெயக்கொடி ஏற்றிடுவோம் -2

சிறைப்பட்டு போன சபையோரே
சிறைப்பட்டு போன சீயோனே
உன் சிறையிருப்பை திருப்பும் நாள் இதுவே

இரத்தமே இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே -2
விலையேறப்பெற்ற இரத்தமே -2 -ஆட்டுக்குட்டி

1. உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்க
திரும்பவும் உயிர்ப்பித்து மகிழ்ச்சியாக்கும் -2
இரட்சண்ய சந்தோஷத்தால் நிரப்பி
ஆவியின் நிறைவை திரும்பத்தாரும் -2 -இரத்தமே

2. சுத்தமான ஜலத்தை தெளித்திடுமே
பரிசுத்த இரத்தத்தாலே கழுவிடுமே -2
சபைகள் எல்லாம் மீட்படைந்து
சபைகளில் தேவன் எழுந்தருளும் -2 -இரத்தமே

3. பலத்த அபிஷேகம் ஊற்றிடுமே
கிருபையின் வரங்களால் அலங்கரியும் -2
பரிசுத்தம் ஒன்றே அலங்காரம்
சபைகளில் எல்லாம் ஜொலிக்கணுமே -2 -இரத்தமே

Aattukkutti Rathathai Kaiyil Eduppom
Anthagara Vallamayai Thurathiduvom
Saatchiyin Vasanathaal Jeyithiduvom
(Nam) Ellayellam Jeyakkodi Yetriduvom -2

Siraipattu Pona Sabayorae
Siraipattu Pona Siyonae
Un Sirayiruppai Thiruppum Naal Idhuve

Rathamae Rathamae Yesu Kristhuvin Rathamae -2
Vilayerappetra Rathamae -2 -Aattukkutti

1. Umathu Janangal Ummil Magizhnthirukka
Thirumbavum Uyirppithu Magizhchiyaakkum -2
Ratchanya Santhoshathaal Nirapppi
Aaviyin Niraivai Thirumba Thaarum -2 -Rathamae

2. Suthamana Jalathai Thelithidumae
Parisutha Rathathaalae Kazhuvidumae-2
Sabaigal Ellam Meetpadainthu
Sabaigalil Devan Ezhuntharulum -2 -Rathame

3. Balatha Abishegam Ootridumae
Kirubayin Varangalal Alangariyum -2
Parisutham Ondrae Alangaaram
Sabaigalil Ellam Jolikkanumae -2 -Rathamae

Palaivanamaa Iruntha – பாலைவனமாய் இருந்த

Palaivanamaa Iruntha
பாலைவனமாய் இருந்த எங்கள
சோலைவனமாய் மாற்றினீரய்யா – 2

1. அறுந்த கொடியைப் போலிருந்தோமே
எங்கள செடியோடு இணைத்துவிட்டீரே – 2
செடியோடு இணைத்துவிட்டீரே – எங்கள (2)

2. கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே
எங்கள களிப்பாக மாற்றினீரையா – 2 (2)

3. வறண்ட நிலத்தை போலிருந்தோமே
எங்கள வயல்வெளியாய் மாற்றினீரையா – 2 (2)

4. நம்பிக்கையற்றவராய் இருந்தோமே
எங்கள நங்கூரமாய் மாற்றிவிட்டீரே – 2 (2)

Paalaivanamaa Iruntha Engala
Solaivanamaa Maattrineeraiyaa – 2

1. Aruntha Kodiyai Polirunthome
Engala Sediyodu Innaiththuvitteere – 2
Sediyodu Innaiththuvitteere – Engala (2)

2. Kanneerile Moozhgiyirunthome
Engala Kalippaaga Maattrineeraiyaa – 2 (2)

3. Varanda Nilaththai Polirunthome
Engala Vayalveliyaai Maattrineeraiyaa – 2 (2)

4. Nambikkaiyattravaraai irunthome
engala nangooramaai maattrivitteere – 2 (2)