Song Tags: Uthamiyae Song Lyrics

Thiruchabaiyae Elumbidu – திருச்சபையே எழும்பிடு

Thiruchabaiyae Elumbidu
திருச்சபையே எழும்பிடு
உன் வல்லமையை தரித்துக்கொள்
(நேசர்) இயேசுவின் உத்தமியே
உன் மேன்மையை அறிந்துக்கொள் (2)

1. உலகம் தோன்றும் முன்னே
முன் குறித்தார் உன்னையே (2)
ஜீவனை கிரயமாய்
ஈந்துனை கொண்டாரே (2) – திருச்சபையே

2. என் சபையை கட்டுவேன்
அது கிறிஸ்துவின் வாக்கல்லோ (2)
பாதாள வாசல்கள் உன்னை
மேற்கொள்ள முடியாதே (2) – திருச்சபையே

3.ஆவியானவர் என்றுமே
உன்னுடன் இருக்கின்றார் (2)
அவர் அபிஷேகம் உன்னையே
தினம் தழைக்க செய்யுமே (2) – திருச்சபையே

4. உன் நடுவில் மணவாளன்
என்றென்றும் உலாவுவார் (2)
உன் அழகில் பிரியமாய்
தினம் மகிழ்ந்து பூரிப்பார் (2) – திருச்சபையே

5. எக்காள தொனியுடன்
உன்னை சேர்த்திட வருவாரே (2)
ஆட்டுக்குட்டியின் மணநாளில்
மணவாட்டி நீ மகிழ்வாயே (2) – திருச்சபையே

Thiruchabaiyae Elumbidu
Un vallamaiyai tharithukol
(Nesar) Yesuvin uthamiyae
Un menmayai arinthukol (2)

1.Ulagam thonrumunne
Mun kurithaar unnaiyae
Jeevanai kirayamai
Yeenthunai kondarae (2) – Thiruchabaiyae

2.En sabaiyai kattuven
Athu Kiristhuvin vakkallo
Pathala vasalgal unnai
Maerkolla mudiyathe (2) – Thiruchabaiyae

3. Aaviyanavar enrume
Unnudane irukkintar
Avar abishegam unnaiyae
Thinam thalaikka Seiyumae (2) – Thiruchabaiyae

4. Un naduvil manavalan
Enrendrum ulaavuvaar
Un alagil piriyamai
Thinam magilnthu poorippaar (2) – Thiruchabaiyae

5. Ekkala thoniyudan
Unnai saerthida varuvare
Aattukuttiyin mananalil
Manavatti nee magilvayae (2) – Thiruchabaiyae