Song Category: Tamil

Unmaiyum Kirubaiyum Ullavar – உண்மையும் கிருபையும் உள்ளவர்

Unmaiyum Kirubaiyum Ullavar
உண்மையும் கிருபையும் உள்ளவர்
வேற்றுமையின் நிழல் இல்லையே
பாவியான என்னை மீட்க
இவ்வுலகம் வந்தீர்
கிருபையால் மீட்டு கொண்டீரே(2)

கை தட்டி உம்மை பாடுவேன்
கரம் உயர்த்தி ஆராதிப்பேன்
உம் கிருபை என் வாழ்வில் போதுமே(2)

உம் கிருபை போதுமே(3) எந்நாளுமே
உம் கிருபை போதுமே(3) என் வாழ்விலே

1. உம் அன்பிற்கு இணை இல்லையே
உம் கரம் குருகவில்லையே
உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதித்தீர்
என்னையும் உம் பிள்ளையாய் மாற்றினீர்(2)-கை தட்டி

2. வாக்கில் என்றும் மாறிடாதவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
கரம் பிடித்து என்னை என்றும் நடத்தி செல்வீர்
கன்மலை மேல் உயர்த்திடுவீர்(2)-கை தட்டி
Unmaiyum Kirubaiyum Ullavar
Vetrumaiyin Nizhal Ilaye
Paaviyaana Ennai Meetka Ivvulagam Vandheer
Kirubaiyal Meetu Kondeere(2)

Kai Thatti Ummai Paaduven
Karam Uyarthi Aarathipen
Um Kirubai En Vaazhvil Podhume(2)

Um Kirubai Podhume(3) Ennalume
Um Kirubai Podhume(3) En Vaazhvile

1. Um Anbirku Inai Ilaye
Um Karam Kurugavillaiye
Um Karam Neeti Ennai Aaseervathitheer
Ennaiyum Um Pillaiyaai Maatrineer(2)

2. Vaakkil Endrum Maaridadhavar
Sonnadhai Seidhu Mudippavar
Karam Pidithu Ennai Endrum Nadathi Selveer
Kanmalai Mel Uyarthiduveer(2)

Oyamal Thuthippom Kaalamellaam – ஓயாமல் துதிபோம் காலமெல்லாம்

Oyamal Thuthippom Kaalamellaam
ஓயாமல் துதிபோம் காலமெல்லாம் பாடுவோம்
ராஜாதி ராஜாவாம் இயேசுவையே- என்றும்

பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

சத்திருவை மிதிப்பார் எதிரி அடங்குவான்
இயேசுவே ஜெயிப்பார் ராஜரீகம் பண்ணுவார்
நீயோ கரங்களைத் தட்டியே துதித்துக்கொண்டிரு

கட்டுகளை அறுப்பார் சாபங்களை முறிப்பார்
வேதனையை மாற்றுவார் புதுபெலன் தருவார்
நீயோ கரங்களை அசைத்து துதித்துக்கொண்டிரு

விண்ணப்பத்தைக் கேட்பார் கிருபையை பொழிவார்
வாக்குத்தத்தம் செய்தார் நிறைவேற்றி முடிப்பார்
நீயோ கரங்களை உயர்த்தி துதித்துக்கொண்டிரு

Naan Unaku Sollavillaiya – நான் உனக்கு சொல்லவில்லையா

Naan Unaku Sollavillaiya

நான் உனக்கு சொல்லவில்லையா

நீ விசுவாசித்தல் என் மகிமையை
காண்பாய் என்று சொல்லவில்லையா (2)
வாக்கு பண்ணினவர் நானே
வாக்கு மாறிட மாட்டானே
சொன்னதை செய்யுமளவும்
கைவிட மாட்டேன் உன்னை
கைவிட மாட்டேன் உன்னை

நாறிப்போன உன் வாழ்வை
நறுமண மாக்கிடுவேன்
வியாதியில் கிடந்த உன் உடலை
சொஸ்தப்படுத்திடுவேன் (2)

கலங்கின உன் கண்கள் இனி அழ தேவையில்லை
உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் உனக்குள் இருக்கிறேனே (2)

வாய்விட்டு கேட்டதெல்லாம்
உனக்கு தந்திடுவேன்
உன் மனதின் விருப்பங்கள்
நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன் (2)
என் பாதம் அமர்ந்து நீ எனக்காக காத்திருந்தால்
புத்திக்கு எட்டாத காரியம் செய்திடுவேன் (2)

பயப்படாதே பயப்படாதே
மறுபடி சொல்கின்றேன்
திகையாதே திகையாதே
திரும்பவும் கூறுகின்றேன் (2)
உன்னோடு நான் இருப்பதால்
உன்னில் நான் மகிமை அடைகின்றேன் (2)

நான் எனக்கு சொல்லவில்லையா
நீ விசுவாசித்தல் என் மகிமையை
காண்பாய் என்று சொல்ல வில்லையா

நீர் எனக்கு சொல்லவில்லையா
நீ விசுவாசித்தல் என் மகிமையை
காண்பாய் என்று சொல்ல வில்லையா

வாக்கு பண்ணினவர் நீரே வாக்கு மாறிட மாட்டேனென்றீர்
சொன்னதை செயுமளவும் கைவிட மாடீர் என்னை
கைவிட மாடீர் என்னை
சொன்னதை செயுமளவும் கைவிட மாடீர் என்னை
கைவிட மாடீர் என்னை

 

Naan Unakku Sollavillaiyaa
Nee Visuvaasithaal En Magimaiyai
Kaanbaai Endru Sollavillaiyaa (2)
Vaakkupanninavar Naanae
Vaakku Maarida Maataenae
Sonnadhai Seiyumalavum
Kaivida Maataen Unnai
Kaivida Maataen Unnai

Naaripoana Un Vaazhvai
Narumanamaakkiduvaen
Viyaadhiyil Kidandha Un Udalai
Sosthapaduthuvaen (2)
Kalangina Un Kangal Ini Azha Thaevai Illai
Uyirthezhudhalum Jeevanumai Unakul Irukindraenae (2)

Vaaivittu Kaetadhellam
Unaku Thandhiduvaen
Un Manadhin Virupangal
Niraivaetri Magizhndhiduvaen (2)
En Paadham Amardhu Nee Enakkaaga Kaathirundhaal
Buthikku Ettaadha Kaariyam Seidhiduvaen (2)

Bayapadaadhae Bayapadaadhae
Marubadi Solgindraen
Thigaiyaadhae Thigaiyaadhae
Thirumbavum Koorukindraen(2)
Unnodu Naan Iruppadhaal
Unnil Naan Magimai Adaigindraen (2)

Naan Unakku Sollavillaiyaa
Nee Visuvaasithaal En Magimaiyai
Kaanbaai Endru Sollavillaiyaa

Neer Enakku Sollavillaiyaa
Nee Visuvaasithaal En Magimaiyai
Kaanbaai Endru Sollavillaiyaa

Vaakkupanninavar Neerae
Vaakku Maarida Maataenendreer
Sonnadhai Seiyumalavum Kaivida Maateer Ennai
Kaivida Maateer Ennai
Sonnadhai Seiyumalavum Kaivida Maateer Ennai
Kaivida Maateer Ennai

Yennaku Yaarumilla Endru Solli – எனக்கு யாருமில்ல என்று சொல்லி

Yennaku Yaarumilla Endru Solli

எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க
ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்
எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க (2)

நீங்க இல்லாம நான் வாழ முடியுமா
உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா
உங்க அன்பு இல்லாம மூச்சி காத்து சுவாசிக்க முடியுமா
உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா

நேசித்த உறவுகள் நெனைச்சு கூட பாக்கல
நெனைச்சே பாக்காத உறவாக வந்தீங்க (2)
உம்மை நான் மறந்த போதும் நீங்க மறக்கல
ஆ ஆ ஆ…. – நீங்க இல்லாம

சின்ன சின்ன தேவைக்காக ஏங்கி நின்ற நாட்கள் உண்டு
அளவே இல்லாம உயர்த்தி என்ன வெச்சீஙக (2)
தேவை எல்லாமே நீங்கதானப்பா
ஆ ஆ ஆ….

நீங்க இல்லாம நான் வாழ முடியுமா
உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா
உங்க அன்பு இல்லாம மூச்சி காத்து சுவாசிக்க முடியுமா
உங்க சித்தம் இல்லாம என்னால வாழ முடியுமா

யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க
ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்
எனக்காக முற்றிலுமாக உம்மையே தந்தீங்க

நீங்க இல்லாம நான் வாழ முடியுமா
உங்க கிருபை இல்லாம ஒரு அடி நடக்க முடியுமா

Enakku Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhaen
Naan Irukkaennu Thaedi Vandhu Katti Pidicheenga
Ondrum Illa Endru Solli Verumaiyaa Kidandhaen
Enakkaaga Mutrulumaaga Ummaiyae Thandheenga (2)

Neenga Illaama Naan Vaazha Mudiyumaa
Unga Kiruba Illaama Oru Adi Nadakka Mudiyumaa
Unga Anbu Illaama Moochi Kaathu Swaasikka Mudiyumaa
Unga Sitham Illaama Ennaala Vaazha Mudiyumaa

Naesitha Uravugal Nenachu Kooda Paakkala
Nenachae Paadaadha Uravaaga Vandheenga (2)
Ummai Naan Marandha Poadhum Neenga Marakkala
Aa Aa Aa… – Neenga Illaama

Chinna Chinna Thaevaikkaaga Aengi Nidra Naatkal Undu
Alavae Illaama Uyarthi Enna Vecheenga (2)
Thaevai Ellaamae Neengathaanappaa
Aa Aa Aa…

Neenga Illaama Naan Vaazha Mudiyumaa
Unga Kiruba Illaama Oru Adi Nadakka Mudiyumaa
Unga Anbu Illaama Moochi Kaathu Swaasikka Mudiyumaa
Unga Sitham Illaama Ennaala Vaazha Mudiyumaa

Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhaen
Naan Irukkaennu Thaedi Vandhu Katti Pidicheenga
Ondrum Illa Endru Solli Verumaiyaa Kidandhaen
Enakkaaga Mutrulimaaga Ummaiyae Thandheenga (2)

Neenga Illaama Naan Vaazha Mudiyumaa
Unga Kiruba Illaama Oru Adi Nadakka Mudiyumaa

Thevaiyellam Santhikum Deivam – தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம்

Thevaiyellam Santhikum Deivam

தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம்
யெகோவா யீரே

வேண்டிக்கொள்வதற்கும் நான் நினைப்பதற்கும்
அதிகமாய் கிரியை செய்ய வல்லவரே

என் கண்கள் அதை பார்க்கவில்லை
காதுகள் அதை கேட்கவில்லை
இதயத்தில் தோன்றவுமில்லை
நீர் எனக்காய் செய்கிறதை

யெகோவா தெய்வமே
தேவையெல்லாம் தருபவரே
யெகோவா யீரெ
எனக்காய் யாவும் செய்பவரே

Thevaiyellam Santhikum Deivam
Yehova Yirey

Vendikolvatharkum Naan Ninaipatharkum
Athigamai Kiriyai Seiya Vallavarey

En Kangal Athai Paarkavillai
Kaathugal Athai Ketkavillai
Idhayathil Thondravumillai
Neer Enakkai Seikirathai

Yehova Deivame
Thevaiellam Tharubavarey
Yehova Yirey
Enakaai Yavum Seibavarey

Karuvile Thaiyin Uruvaana – கருவிலே தாயின் உருவான

Karuvile Thaiyin Uruvaana
கருவிலே தாயின் உருவான நாள்முதலாய்
கண்மணிபோலக் காத்துவந்தீரே
என்ன தவம் செய்தேனோ தெரியலையே
என்னில் இவ்வளவாய் அன்புவைத்தீரே

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் நான்
ஆயுள்நாளெல்லாம் ஆராதிப்பேன் நான்

இரட்சித்தீரே கிருபையால்
காத்தீரேதயவினால்
மீட்டீரே இரத்தத்தால்
தூக்கினீர் இரக்கத்தால்
அன்பே தெய்வீக அன்பே
உம் அன்பை என்மேல்
ஊற்றினீரே – ஆராதிப்பேன் நான்

என் ஆசை நாயகா
இனிய மணவாளா
எப்போது உம்முகத்தை
நேரில் காண்பேனோ
ஏக்கமே என் எண்ணமே
நித்திய இல்லம் நோக்கி
தொடருகிறேன் – ஆராதிப்பேன் நான்

குனிந்து தூக்கினீரே – பெரியவனாக்கினீரே
அளவேயில்லாமல் ஆசீர்வதித்தீரே
மறப்பேனோ மறந்தே போவேனோ – அதை
என்ன சொல்லி பாடிடுவேன் – ஆராதிப்பேன் நான்

Yesuvin Namamae – இயேசுவின் நாமமே

Yesuvin Namamae

இயேசுவின் நாமமே
மேலான நாமமே
வல்லமையின் நாமமே
மகிமையின் நாமமே -2

1. வாசல்களை திறந்திடும்
இயேசுவின் நாமமே
வழிகளை திருத்திடும்
இயேசுவின் நாமமே -2
வானம் பூமி யாவும் படைத்த
சிருஷ்டிப்பின் நாமமே
மேலான நாமமே
இயேசுவின் நாமமே -2

2. அடைக்கலமாகிடும்
இயேசுவின் நாமமே
அற்புதங்கள் செய்திடும்
இயேசுவின் நாமமே -2
வாதை துன்பம் நோய்கள் யாவும்
நீக்கிடும் நாமமே
வல்லமையின் நாமமே
எங்கள் இயேசுவின் நாமமே -2

3. தடைகளை தகர்த்திடும்
இயேசுவின் நாமமே
தாபரமாகிடும்
இயேசுவின் நாமமே -2
அகில உலகை இரட்சித்திடும்
இரட்சகர் நாமமே
மகிமையின் நாமமே
இயேசுவின் நாமமே -2 -இயேசுவின்

Yesuvin Namamae
Melana Namamae
Vallamaiyin Namamae
Magimaiyin Namamae -2

1. Vasalgalai Thiranthidum
Yesuvin Namamae
Vazhigalai Thiruthidum
Yesuvin Namamae -2
Vanam Boomi Yaavum Padaitha
Srishtippin Namamae
Melana Namamae
Yesuvin Namamae -2

2. Adaikalamagidum
Yesuvin Namamae
Arputhangal Seithidum
Yesuvin Namamae -2
Vathai Thunbam Noigal Yaavum
Neekidum Namamae
Vallamaiyin Namamae
Yesuvin Namamae -2

3. Thadaigalai Thagarthidum
Yesuvin Namamae
Thaparamagidum
Yesuvin Namamae -2
Agila Ulagai Ratchithidum
Ratchakar Namamae
Magimaiyin Namamae
Yesuvin Namamae -2 -Yesuvin

Kappar Unnai Kappar – காப்பார் உன்னைக் காப்பார்

Kappar Unnai Kappar
காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார்
இன்னும் இனிமேலும் காத்திடுவார்
கலங்காதே மனமே காத்திடுவார்

1. கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்
உன்னைக் கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
ஆசிகளை எண்ணிப்பார்
எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
என்றும் அதை எண்ணிப்பார்

2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி
இன்பக் கானான் அளிக்கவில்லையோ
இப்போது இவர்களை நிர்மூலம்
செய்வதென்றும் பின்னும்
இரங்கவில்லையோ
இல்லையோ, இல்லையோ, இல்லையோ
மனஸ்தாபம் கொள்ளவில்லையோ

3. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்
இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
சிற்சில வேளையில்
சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
ஜெயமும், கனமும், சுகமும்
உனக்கென்றும் அளிப்பவரே

3. தாயின் கட்டில் வருமுன்
உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது
கை கொடுத்தெடுத்தவரே
அன்பு கொண்டு மணந்தவரே

4. ஆதரவாய் பல ஆண்டுகளில் பரன்
அடைக்கலமாயிருந்தார்
காதலுடனவர் கைப்பணி செய்திட
கனிவுடன் ஆதரித்தார்
தரித்தார் தரித்தார் தரித்தார்
பரிசுத்தத்தில் அலங்கரித்தார்

Kaappaar Unnai Kaappaar
Kaaththavar Kaappaar
Innum Inimaelum Kaaththiduvaar
Kalangaathae Manamae Kaaththiduvaar

1. Kanndunnai Alaithavar Karamathaipaar
Unnai Kaividaathirupaar
Aandugal Thorum Unakkavar Alitha
Aasigalai Ennipaar
Ennipaar Ennipaar Ennipaar
Endrum Athai Ennipaar

2. Isravaelukku Vaakuppadi
Inba Kaanaan Alikkavillaiyo
Ippothu Ivargalai Nirmoolam
Seyvathendrum Pinnum
Irangavillaiyo
Illaiyo, Illaiyo, Illaiyo
Manasthaabam Kollavillaiyo

3. Veelchiyil Vilithunai Meetpavarum
Igalinthuvidaathu Serpavarum
Sirsila Vaelaiyil
Sitchayinaalunnai Kittiyiluppavarum
Jeyamum, Kanamum, Sukamum
Unakentum Alippavarae

4. Thaayin Kattil Varumun
Unakkaayth Thaamuyir Koduththavarae
Kaayeenaip Polunaith Thallividaathu
Kai Koduththeduththavarae
Anbu Kondu Mananthavarae

5. Aatharavaai Pala Aandukalil Paran
Adaikkalamaayirunthaar
Kaathaludanavar Kaipanni Seithida
Kanivudan Aaadarithaar
Tharithaar Tharithaar Tharithaar
Parisuthathil Alangarithaar

Kaappavarae Ennai – காப்பவரே என்னை காப்பவரே

Kaappavarae Ennai
காப்பவரே என்னை காப்பவரே
சோதனைக்கு விலக்கி காப்பவரே
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே -2

1. போக்கையும் வரத்தையும் காப்பவரே
பொழுதெல்லாம் காத்து நடத்துமையா -2
இரவும் பகலும் காப்பவரே
எப்போதும் காத்து நடத்துமையா -2
எப்போதும் காத்து நடத்துமையா-காப்பவரே

2. உறங்காமல் தூங்காமல் காப்பவரே
உமக்காக வாழ உதவுமய்யா
தீமைகள் விலக்கியே காப்பவரே
தீயவன் செயல்களை முடக்குமையா -2
தீயவன் செயல்களை முடக்குமையா-காப்பவரே

3. ஆவி ஆத்மாவை காப்பவரே
பரிசுத்த வாழ்வை தாருமையா -2
வழுவாமல் தினமும் காப்பவரே
வருகையில் உம்மோடு சேருமையா -2
வருகையில் உம்மோடு சேருமையா-காப்பவரே

Kaappavarae Ennai Kappavarae
Sothanaikku Vilakki Kappavarae
Sthothiram Umakku Sthothiramae
Ennaalum Umakku Sthothiramae -2

1. Pokkayum Varaththayum Kappavarae
Pozhuthellam Kaaththu Nadaththumayya -2
Iravum Pagalum Kaappavarae
Eppothum Kaaththu Nadaththumayya -2
Eppothum Kaaththu Nadaththumayya – Kappavare

2. Urangaamal Thoongaamal Kappavarae
Umakkaga Vaazha Uthavumayyaa -2
Theemaikal Vilakkiyae Kappavarae
Theeyavan Seyalkalai Mudakkumaiya -2
Theeyavan Seyalkalai Mudakkumaiya – Kappavarae

3. Aavi Aathmavai Kappavarae
Parisutha Vazhvai Thaarumayya -2
Vazhuvaamal Thinamum Kappavarae
Varugayil Ummodu Serumayya -2
Varugayil Ummodu Serumayya – Kappavare

Maravaamal Ninaitheeraiya – மறவாமல் நினைத்தீரையா

Maravaamal Ninaitheeraiya
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே

நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
கோடி கோடி நன்றி ஐயா

1. எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்

2. பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே

3. தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே

4. குறைவுகள் அனைத்தையுமே
மகிமையிலே நிறைவாக்கினீரே – என்
ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து
மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்

Maravaamal Ninaitheeraiya
Manathaara Nandri Solven
Iravum Pagalum Enai Ninaithu
Ithuvarai Nadathineere

Nandri Nandri Aiya
Kodi Kodi Nandri Aiya

1. Ebenezer Neer Thanaya
Ithu Varai Uthavineere
Eloree Eloree Ennaium Kandeere
Eppadi Nan Nadri Solven

2. Belaveena Nerangalil
Belan Thanteeraya
Sugamaanen Sugamaanen Thzlmbugalal Sugamaanen
En Kudumba Maruthuvar Neere

3. Thadailgalai Udaitheeraya
Thallada Vid Villaye
Sornthu Pona Neramellam Thooki Enai Sumanthu
Vaaku Thanthu Thetrineere

4. Kuraivugal Anaithaiyume
Magimaiyile Niraivaakkineere – En
Oozhiyam Seivatharkku Pothumaana Panam Thanthu
Meetham Meetham Edukka Cheitheer