Entha Nilayil Naan Irunthalum – எந்த நிலையில் நீ இருந்தாலும்

Entha Nilayil Naan Irunthalum
எந்த நிலையில் நீ இருந்தாலும் – உன்னை
வெறுக்காதவர் இயேசு ஒருவரே – என் தேவன் நடுவரே

1.நோயாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
உன் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள் – எந்த

2.கடனாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
கடனதையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் – எந்த

3.ஏழையாக நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
ஏழ்மையையே சொல்லி சொல்லி ஏங்க வைப்பார்கள் – எந்த

4.பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள்
உன்னை பட்ட மரம் என்று சொல்லி பரிகசிப்பார்கள் – எந்த

5.அனாதையாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
அன்பை உனக்குத் தருவேன் என்று அலைய வைப்பார்கள் – எந்த

2 thoughts on “Entha Nilayil Naan Irunthalum – எந்த நிலையில் நீ இருந்தாலும்

  1. ஆமென் இந்த பாடல் உள்ள எல்லாம் என்னுடைய வாழ்க்கையில் உள்ள பாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *