நல்ல செய்தி ஒன்று சொல்லட்டா?
பாட்டாய் அத்தனை பாடட்டா?
தாளம் போட்டு அடட்டா? – 2
1. இயேசு எந்தன் பாவங்களை போக்கினார்
பாவசேற்றினின்று என்னை தூக்கினார்
அவரின் இரத்தத்தால் என்னை கழுவியே
அவரின் பிள்ளையாக என்னை மாற்றினார்
2. இயேசு உந்தன் உள்ளத்தினில் வந்திட்டால்
உந்தன் பாவங்களை அவர் மன்னிப்பார்
நோய்கள் பேய்கள் எல்லாம் பறந்தொடிடும்
சந்தோஷம் என்றும் உள்ளத்தில் தங்கிடும்