Unga Vasanam
உங்க வசனம் மனமகிழ்ச்சியா
இல்லாமல் போனா என் துக்கத்திலே
அழிந்து போயிருப்பேன்
பாதைக்கு வெளிச்சமல்லோ
பேதைக்கு தீபமல்லோ
மரண இருளில் நடக்கினற போது-கோலும்
தடியுமாக தேற்றுதையா உம் வசனம்
துன்பத்தின் பாதையிலே நடக்கின்ற போது
உயிர்பித்து உயர்த்துதையா
உம் வசனம் தானையா
உமது வேதத்தை இரவும் பகலும்
தியானம் செய்வதினால்
பாக்கியமாய் உயர்த்துதையா
பச்சையான மரமாக இலை உதிராமல்
காலமெல்லாம் கனிகொடுத்து
உயர்த்துதையா உம் வசனம்
உமது வசனம் உட்கொள்ளும்போது
இதயம் அனலாகி கொழுந்து
விட்டு எரியுதையா
உலர்ந்த எலும்பெல்லாம் உயிர்பித்து
எழும்புதையா-சேனையாய் எழும்பி
நின்று சத்துருவை துரத்துதையா