All Songs by Augustine Jebakumar

Kalvari Sneham – கல்வாரி சிநேகம்

Kalvari Sneham

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை (என்றும்)
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் – 2

1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு என்றும் (இன்னமும்) – 2
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் – 2
கும்பிடுவோரை குணமாக்கும் வேகம் (…கல்வாரி)

2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண – 2
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில் – 2
என்னை காணுவோர் உம்மை காணட்டும் (…கல்வாரி)

3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா – 2
நான் சிறுகவும் நீர் பெருகவும் – 2
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும் (…கல்வாரி)

Kalvaari Snegam Karaiththidum Ennai (Endrum)
Kalmanam Maattri Karainthoda Seiyyum – 2

1. Kaalangal Thorum Kaavalil Ullor
Kaanattum Ummai Kalippodu Endrum (Innamum) – 2
Kurusathin Raththam Kural Kodukkattum – 2
Kumbiduvorai Kunamaakkum Vegam (…Kalvaari)

2. Irundathor Vaazhvil Innamum Vaazhvor
Iniyaavathu Um Thirumugam Kaana – 2
Naathaa Um Snegam Perugattum Ennil – 2
Ennai Kaanuvor Ummai Kaanattum (…Kalvaari)

3. Arpamaana Vaazhvu Arputhamaai Maara
Anaiththaiyum Thanthen Aatkollum Devaa – 2
Naan Sirugavum Neer Perugavum – 2
Theebaththin Thiriyaai Eduththaatkollum (…Kalvaari)

Sinthika Varir – சிந்திக்க வாரீர் செயல்

Sinthika Varir
சிந்திக்க வாரீர் செயல் வீரரே சிந்திய இரத்தம் கூப்பிடுதே -2
சிந்திய இரத்தம் கூப்பிடுதே -3

சபையே நீ திரும்பிப் பார்
சபையே நீ குனிந்துப் பார்
சபையே நீ நிமிர்ந்துப் பார்
முன்னேப் பார் -3

1.பூர்வ நாட்களை நினைத்துப் பார்
பூர்வ பாதைகளை விசாரித்து அறி
இளைப்பாறுதல் அதுவே ஆத்துமாவுக்கு
களைப்பை போக்கிடுமே போதுமதுவே

2.தாழ்மை உள்ளோருக்கு தரும் கிருபை
முழங்கால் முடக்கிக் குனிந்துபார்
வணங்காக் கழுத்துனக்கு வேண்டாமே
வனாந்தரத்தில் அதினால் அழிவாமே

3.வானத்தின் சத்துவங்கள் அசைவதைப்பார்
வானவரின் வருகை சமீபமே
நிமிர்ந்து பார் உன் மீட்பு நெருங்குதே
நிலைத்திருப்பவைகளையே நாடு நீயே

4.கண்களை ஏறெடுத்துப் பார் வயல்தனை
கண்டிப்பாய் செயல்பட வேண்டுமே
அழியும் கணிகளைப் பொறுக்காவிடில்
அழுகை தான் தங்கிடுமே வருகையிலே

Vanam Pollinthathu – வானம் பொழிந்தது மதகுகள்

Vanam Pollinthathu
வானம் பொழிந்தது மதகுகள் திறந்தன
கனவும் கலைந்தது மடமையும் ஓய்ந்ததே
பணமும் பதவியும் செல்லா காசானதே -2
மனதில் கொண்டோமா? வாழ்வின் நோக்கமதை-2
வாழ்வின் நோக்கமதை -2

1. வங்கி பணமும் வரவில்லை உதவிட
பங்கு விலையும் உதவலை பிரட் வாங்கிட
பவனி வந்த சொகுசு கார்களும-2
அவரே அன்றி அனைத்தும் வீண் என்றனொ -2

2. குடும்ப உறவும் குலைந்து போனதே
குலம் மறந்தோம் கொள்கையும் பறந்ததே
சொல்ல முடியா துக்கமும் துயரமும்.-2
சொல்ல ஒரை ஒரு இடம் கல்வாரியே -2

3. அதிகாரியும் அரசும் முழித்து நின்றனர்
அறியனையை தக்கவே போட்டியும் போட்டனர்
அறியா மாந்தரின் அலறல் நம்மையும் -2
அமர்ந்திரு பாதம் என்றது என் மனம் -2

4. பூமியும் பூதலழும் நடுங்குமே அந்நாள்
பூமகன் இயோசுவின் வருகையின் நாள்
புறப்படு வேகம் (வேதம்) அறிவிக்க
பரலோக குரல் கேட்குதே காலம் இதுவே -2

Yelumbiduvir Valibare – எழும்பிடுவீர் வாலிபரே

Yelumbiduvir Valibare
எழும்பிடுவீர் வாலிபரே
எழும்பிடுவீர் கன்னியரே -2
எழும்பிடுவீர் (எல்லா) வாலிபரே
எழும்பிடுவீர் (இப்போ) கன்னியரே – 2

1.உல்லாசம் தந்திடும் உலகம் இது
ஆடம்பரம் தந்திடும் அலகு இன்று -2
ஆர்ப்பாட்டம் செய்திடும் மனது இங்கு
வாடி வதங்கிடும் வருகை அன்று

2.எத்தனை முறை கேட்டோர் இங்கு உண்டு
ஒருமுறை கேளாதோர் அங்கு உண்டு -2
திருவிழா பெருவிழா தெருவுக்கொன்று
திருமறை சொல்வதை கேட்பவர் யார்?

3.தற்புகழ் பாடிடும் மாந்தர் மத்தியில்
தம்மைதந்த தேவனை அறிவிப்போர் யார் -2
நரகத்தின் பாதை செல்லும் மாந்தரை
தடுத்திட தம்மை தந்தவர் யாரோ?

Vanjagan Valaivusukiraan – வஞ்சகன் வலை வீசுகிறான்

Vanjagan Valaivusukiraan
வஞ்சகன் வலை வீசுகிறான் சபைக்கு எதிராக – 2
வசமாக மாட்டிக் கொண்டவர்கள் உண்டு
விடுதலை பெற துடிக்கும் சிலரும் உண்டு
விதையை அறியாமல் அதை
பொறுக்குவாரும் உண்டு – 2

1.எழுப்புதல் என்ற பெயரில் ஆர்ப்பரிப்பு ஓசை ஒலித்தது
போதனை என்ற பெயரில் வேதனை சபைக்குள் நுழைந்தது
சுவிசேஷத் தீ அனைந்தது நற்செய்தி முடங்கி போனது
மனிதனின் வலையில் சிக்கிடும் கனிகள் அழிந்து போனது
அற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசனம் ஓய்ந்து போனது -2

2.சந்தையில் கேட்கும் சத்தம் சபையில் கேட்கிறது
சரித்திரம் கூறும் வேத முறைகள் புறக்கணிக்கப்படுகிறது
சவால்கள் நிதம் உண்டு எனினும் சபல புத்தியை
உபயோகிக்க எந்த வேதம் இடம் கொடுத்தது
அற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசன ஓய்ந்து போனது -2

3. தேவனே தேசம் சுகிக்கும் இந்த நேரத்தில்
இறைவனை சந்திப்போர் எழும்புவதை தடுக்கும்
இந்த வஞ்சகர்களையும் நயவசனிப்பாளர்களையும்
இச்சகவார்த்தைக் கூறி வேசியைப் போல
சபையை மாற்றிவிடும் முறைகளையும்
வெட்டவெளிச்சத்தில் கொண்டு வந்து
திருத்த மாட்டிரோ, திருத்த மாட்டிரோ. . .