All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Unthan Naamam Magimai – உந்தன் நாமம் மகிமை பெற

Unthan Naamam Magimai
உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே
உந்தன் அரசு விரைவில் வரவேண்டும் கர்த்தாவே
– ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம்

1. இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமே
இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே

2. சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே
சாபம் நீங்கி சமாதானம் வரணுமே

3. கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்
கரம்விரித்து உம்மை நோக்கி பார்க்கிறோம்

4. சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே
ஜீவநதி பெருகியோட வேண்டுமே

5. ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமே
உபவாச கூட்டம் பெருக வேண்டுமே

Undhan Naamam Magimai Pera Vendum Karththaave
Undhan Arasu Viraivil Varavendum Karththaave
Jebikkirom Naangal Thuthikkirom – 2

1. Inthiyaa Ratchagarai Ariya Vendume
Irulil Ullor Velichchaththaiye Kaana Vendume

2. Saaththaan Kottai Thagarnthu Vizha Vendume
Saabam Neengi Samaathaanam Varanume

3. Kanneer Sindhi Kathari Naangal Azhukirom
Karamviriththu Ummai Nokki Paarkkirom

4. Siluvai Raththam Thelikkappada Vendume
Jeevanadhi Perugiyoda Vendume

5. Jebasenai Engum Elumba Vendume
Ubavaasa Koottam Peruga Vendume

Anbe En Yesuve – அன்பே என் இயேசுவே ஆருயிரே

Anbe En Yesuve
அன்பே என் இயேசுவே ஆருயிரே
ஆட்கொண்ட என் தெய்வமே

1. உம்மை நான் மறவேன்
உமக்காய் வாழ்வேன்
2. வாழ்வோ சாவோ
எதுதான் பிரிக்க முடியும்
3. தாயைப் போல் தேற்றினீர்
தந்தை போல் அணைத்தீர்
4. உம் சித்தம் நான் செய்வேன்
அதுதான் என் உணவு
5. இரத்தத்தால் கழுவினீர்
இரட்சிப்பால் உடுத்தினீர்
6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா

Oppukoduthir Ayya – ஒப்புக் கொடுத்தீர் ஐயா

Oppukoduthir Ayya
ஒப்புக்கொடுத்தீர் ஐயா
உம்மையே எனக்காக
உலகின் இரட்சகரே
உன்னத பலியாக

1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்
நோக்கிப் பார்த்ததினால்
பிழைத்துக் கொண்டோம் ஐயா

2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாற
ஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர்

3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாக
உள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட

4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திட
உம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர் ஐயா

5. என்னையே தருகிறேன் ஜீவ பலியாக
உகந்த காணிக்கையாய் உடலைத் தருகிறேன்

Oppukoduthir Ayya
Ummaiyae Enakkaaka
Ulakin Iratchakarae
Unnatha Paliyaaka

1. Engalai Vaalavaikka Siluvaiyil Thongineer
Nnokkip Paarththathinaal
Pilaiththuk Konntoom Aiyaa

2. Niththiya Jeevan Pera Neethimaanaay Maara
Jeevantharum Kaniyaay Siluvaiyil Thongineer

3. Suththikariththeerae Sontha Janamaaka
Ullaththil Vantheer Aiyaa Umakkaay Vaalnthida

4. Paavaththirku Mariththu Neethikkup Pilaiththida
Um Thiru Udalilae En Paavam Sumantheeraiyaa

5. Ennaiyae Tharukiraen Jeeva Paliyaaka
Ukantha Kaannikkaiyaay Udalaith Tharukiraen

Priyamanavale Un Athuma – பிரியமானவனே உன் ஆத்துமா

Priyamanavale Un Athuma
பிரியமானவனே – உன்
ஆத்துமா வாழ்வது போல் -நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே (மகளே)

1. வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவிதரும் பட்டயத்தை
எடுத்து போராடி வெற்றி பெறு
2. பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான்கால்கள் உனக்குண்டு மறவாதே
3. ஓட்டப்பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓட மகனே
நெருங்கிவரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே

Deiviga Koodaramae – தெய்வீகக் கூடாரமே

Deiviga Koodaramae
தெய்வீகக் கூடாரமே – என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே

மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே

1. கல்வாரி திருப்பீடமே
கறைபோக்கும் திரு இரத்தமே
உயிருள்ள ஜீவ பலியாக
ஒப்புக் கொடுத்தோம் ஐயா
2. ஈசோப்புலால் கழுவும்
இன்றே சுத்தமாவோம் உறைகின்ற பனிபோல
வெண்மையாவோம் ஐயா
உம் திரு வார்த்தையால்
3. அப்பா உம் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா
எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட
ஏங்கித் தவிக்கின்றோம்
4. உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரியவிடும்
5. துபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்
எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்
6. ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா
மகா பரிசுத்த கூடாரத்திற்குள்
மகிமையில் நுழைந்துவிட்டோம்

Vatratha Neerutru – வற்றாத நீருற்று

Vatratha Neerutru
வற்றாத நீருற்று போலிருப்பாய்
வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்
கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்
காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்

1. வாய்க்கால்கள் ஓரம் நடப்பட்ட மரமாய்
எப்போதும் கனி கொடுப்பாய்
தப்பாமல் கனி கொடுப்பாய்
2. ஓடும் நதி நீ பாயும் இடத்தில்
உயிரெல்லாம் பிழைத்திடுமே
சுகமாக வாழ்ந்திடுமே
3. பலநாட்டு மக்கள் உன் நிழல் கண்டு
ஓடி வருவார்கள் பாடி மகிழ்வார்கள்
4. பஞ்ச காலத்தில் உன் ஆத்துமாவை
திருப்தியாக்கிடுவார் தினமும் நடத்திடுவார்
5. கோடை காலத்தில் வறட்சி காலத்தில்
அச்சமின்றி இருப்பாய் – நீ
ஆறுதலாய் இருப்பாய்

Um Namam Padanume – உம் நாமம் பாடணுமே

Um Namam Padanume
உம் நாமம் பாடணுமே ராஜா
உம்மையே துதிக்கணுமே
உம்மைப் போல் வாழணுமே

1. ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம்
ஓடி வர வேணுமே
உமது வசனம் தியானம் செய்து
உமக்காய் வாழணுமே

2. இரவும் பகலும் ஆவியிலே நான்
நிரம்பி ஜெபிக்கணுமே
ஜீவ நதியாய் பாய்ந்து பிறரை
வாழ வைக்கணுமே

3. பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி
பிரசங்கம் பண்ணணுமே
சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி
சீடர் ஆக்கணுமே

Um naamam paadanumae raajaa
Ummaiyae thudhikkanumae
Ummai poal vaazhanumae

1. Ovvoru naalum umthiru paadham
Oadi vara vaenumae
Umadhu vasanam dhiyaanam seidhu
Umakkaai vaazhanumae

2. Iravum pagalum aaviyilae naan
Nirambi jebikkanumae
Jeeva nadhiyaai paaindhu pirarai
Vaazha vaikanumae

3. Peigal oatti noigalai poaki
Pirasangam pannanumae
Siluvai anbai eduthu solli
Seedar aakkanumae

Magimayin Nambikkaiye – மகிமையின் நம்பிக்கையே

Magimayin Nambikkaiye
மகிமையின் நம்பிக்கையே
மாறிடாத என் இயேசையா
உம்மையல்லோ பற்றிக்கொண்டேன்
உலகத்தில் வெற்றி கொண்டேன்

துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
தூயவர் உம்மை நான் பாடுவேன்

1. ஆத்துமாவின் நங்கூரமே
அழிவில்லா பெட்டகமே
நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற
நிம்மதியின் கன்மலையே

2. பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பயமில்லை பாதிப்பில்லை
உம் குரலோ கேட்குதையா
உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா

3. நல் மேய்ப்பரே நம்பிக்கையே
நானும் உந்தன் ஆட்டுக்குட்டி
உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்
உம் தோளில் தான் நானிருப்பேன்

4. பிரகாசிக்கும் பேரொளியே
விடிவெள்ளி நட்சத்திரமே
உம் வசனம் ஏந்திக் கொண்டு
உலகெங்கும் சுடர்விடுவேன்

Magimaiyin nambikkaiyae
Maaridaadha en yaesaiyaa
Ummaiyalloa patrikkondaen
Ulagaththil vetri kondean

Thudhiththu thudhiththu magizhndhu pukazhndhu
Thooyavar ummai naan paaduvaen

1. Aathumaavin nangooramae
Azhivillaa pettagamae
Naetrum indrum jeevikkindra
Nimmadhiyin kanmalaiyae

2. Pallathaakkil nadandhaalum
Bayamillai paadhippillai
Um kuraloa kaetkudhaiyaa
Ullamellaam anbaal pongudhaiyaa

3. Nal meipparae nambikkaiyae
Naanum undhan aattukkutti
Ummai thaanae pin thodarndhaen
Um thoalil thaan naaniruppaen

4. Piragaasikkum paeroliyae
Vidivelli natchathiramae
Um vasanam aendhi kondu
Ulagengum sudarviduvaen

Ennai Aatkonda Yesu – என்னை ஆட்கொண்ட இயேசு

Ennai Aatkonda Yesu
என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே – என்றும்
நன்மைகள் செய்பவரே

1. மனிதர் தூற்றும்போது – உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத் தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே

2. தனிமை வாட்டும்போது – நம்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே

3. வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே

Ennai aatkonda yaesu
Ummaiyaarendru naanarivaen
Unmai ullavarae – endrum
Nanmaigal seibavarae

1. Manidhar thootrumpoadhu – ummil
Magizha seibavarae
Adhai thaangida belan koduthu
Dhayavaai anaippavarae

2. Thanimai vaattumpoadhu – nam
Thunaiyaai iruppavarae
Um aaviyinaal thaetri
Abhishaegam seibavarae

3. Vaazhkai payanaththilae
Maegaththoonaai varubavarae
Um vaarthaiyin thiruvunavaal
Valamaai kaappavarae

Kuthuhalam Kondattame – குதூகலம் கொண்டாட்டமே

Kuthuhalam Kondattame

குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்தில் – 2
ஆனந்தம் ஆனந்தமே
என் அன்பரின் திருப்பாதத்தில் – 2

1. பாவமெல்லாம் பறந்தது.. நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால் – 2
கிறிஸ்துவுக்குள் வாழ்வு.. கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால் – 2 (…குதூகலம்)

2. தேவாதி தேவன்.. தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே – 2
ஆவியான தேவன்.. அச்சாரமானார்
அதிசயம் அதிசயமே – 2 (…குதூகலம்)

3. வல்லவர் என் இயேசு.. வாழ வைக்கும் தெய்வம் (தேவன்)
வெற்றிமேலே வெற்றி தந்தார் – 2
ஒருமனமாய் கூடி.. ஓசான்னா பாடி
ஊரெல்லாம் கொடியேற்றுவோம் – வாங்க – 2 (…குதூகலம்)

4. எக்காள சப்தம் தூதர்கள் கூட்டம்
இயேசு (நேசர்) வருகின்றார் – 2
ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்
மகிமையில் பிரவேசிப்போம் – நாம – 2 (…குதூகலம்)

Kuthookalam Kondaattame
En Yesuvin Sannithaanaththil – 2
Aanantham Aananthame
En Anbarin Thiruppaathaththil – 2

1. Paavamellaam Paranthathu.. Noigalellaam Theernthathu
Yesuvin Raththaththinaal – 2
Kristhuvukkul Vaazhu.. Kirubaiyaal Meetpu
Parisuththa Aaviyinaal – 2 (…Kuthookalam)

2. Devaathi Devan.. Thinamthorum Thangum
Devaalayam Naame – 2
Aaviyaana Devan.. Achchaaramaanaar
Athisayam Athisayame – 2 (…Kuthookalam)

3. Vallavar En Yesu.. Vaazha Vaikkum Deivam (Devan)
Vettrimele Vettri Thanthaar – 2
Orumanamaai Koodi.. Osaannaa Paadi
Oorellaam Kodiyettruvom – Vaanga – 2 (…Kuthookalam)

4. Ekkaala Saptham Thoothargal Koottam
Yesu (Nesar) Varukindraar – 2
Orunodi Pozhuthil Maruroopamaavom
Magimaiyil Pravesippom – Naama – 2 (…Kuthookalam)