1. காற்றும் கடலும் உம் வார்த்தைக்
கேட்டு அடங்கும்
வறண்ட நிலம் உம்மை துதித்துப் பாடிடும்
அசைவாடும் இடமெல்லாம் – நீர்
உம் ஆசீர் உண்டாகும்
நீர் சொன்னால் போதுமே
உம் தயவு என்னை தாங்கிடும்-2
அல்லேலூயா பேரன்பு கொண்டவரே
அல்லேலூயா மாறாத நேசரே
2. உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழும்பும்
பெரிய சேனையாய் ஆயத்தமாகும்
ஆவியானவரே என்னை – ஓ நிரப்புமே இயேசுவே
ஒரு வார்த்தைச் சொல்லுமே
பலத்த சேனையாய் மாறுவேன்-2
அல்லேலூயா பேரன்பு கொண்டவரே
அல்லேலூயா மாறாத நேசரே
3. தேவ ராஜ்யத்தை ஒன்று சேர்ந்து கட்டுவோம்
தடுக்கும் எரிகோவை முற்றுகை போடுவோம்
துதியிலும் ஜெபத்திலும்
நீர் அக்கினியாய் வாருமே
மகிமையின் மேகமாய்
நீர் என்னை மூடுமே -2
1. Father Abraham had many kids,
many kids had Father Abraham.
I am one of them, and so are you,
so let’s all praise the Lord. *Right arm!
(clench fist, bend and extend right arm upward repeatedly throughout song)
Repeat song, adding motions :
2. … left arm! (add left arm in same motion as right)
3. … right foot! (add right foot stepping up and down)
4. … left foot! (add left foot stepping up and down)
5. … chin up! (start a continuous chin-bobbing motion)
6. … turn around! (add turning in place while continuing other motions)
7. … sit down! (sit down)
1. பரலோக கீதம் பாடும் அந்த நாள்
துன்பங்கள் என்னை விட்டு அகலும் அந்த நாள்
மனபாரங்கள் பறந்து ஓடி மறையும் நாள்
இயேசுவைச் சந்திக்கும் மகிமையான நாள் – அது (2)
ஆனந்தம் (2) ஆனந்தமே
இயேசுவைச் சந்திக்கும் நாள் ஆனந்தமே
அல்லேலூயா பாடி போற்றிடுவேன்
இயேசுவைக் கண்டு நான் மகிழ்ந்திடுவேன்
2. தூதர்கள் என்னை வரவேற்கும் நாள்
பரிசுத்தர் கூட்டத்தில் நானும் சேரும் நாள்
என் நேசரை முகமுகமாய் தரிசிக்கும் நாள்
இயேசுவைச் சந்திக்கும் இன்பமான நாள் -அது (2)
3. நீதி என்னும் ஆடை தரிக்கும் அந்த நாள்
ஜீவ நதி ஓரமாய் உலாவும் அந்த நாள்
ஜீவ கனி புசித்து மகிழும் அந்த நாள்
இயேசுவைச் சந்திக்கும் விந்தையான நாள் – (2)
4. கிரீடங்கள் எனக்குச் சூட்டப்படும் நாள்
வெகுமதிகள் வெகுவாய் பெற்று மகிழும் நாள்
ஜீவ புஸ்தகத்தில் என் பெயரைக் காணும் நாள்
இயேசுவைச் சந்திக்கும் மகிழ்ச்சியான நாள் – (2)