All Songs by Moses Rajasekar

Enna Ennaku Illamal Poonallum – என்ன எனக்கு இல்லாமற் போனாலும்

Enna Enakku Illamal Poonalum

என்ன எனக்கு இல்லாமல் போனாலும்
உம் கிருபை எனக்கு போதுமைய்யா
அன்னந்தண்ணி ஆகாரம் இல்லாமல் போனாலும்
உம் மகிமை எனக்கு போதுமைய்யா
என் இயேசு நாதா
உம் மகிமை எனக்கு போதுமைய்யா

சுற்றத்தாரும் உற்றத்தாரும் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லையே
தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும்
உள்ளகையில் என்னை வரைந்தீரே
உம் மகனாக மாற்றி விட்டீரே

சிங்கக்குட்டிகள் தாழ்ச்சி அடைந்து பட்டினியாக கிடைக்கும்
உம்மை நம்பினோருக்கு குறைவுமில்லையே
எளியவனை நீர் மறப்பதில்லை
நம்பினோரை கைவிடுவதில்லை
அவன் உம்மை விட்டு விலகுவதில்லை

உயர்வே ஆனாலும் தாழ்வே ஆனாலும்
அன்பை என்னில் பிரிப்பதில்லையே
மரணமே ஆனாலும் ஜீவனே ஆனாலும்
நீரின்றி எவரும் இல்லையே
உம் துணை இன்றி வாழ்வு இல்லையே

Kristavanai Disturb Pannathe – கிறிஸ்தவனை Disturb பண்ணாதே

Kristavanai Disturb Pannathe
கிறிஸ்தவனை Disturb பண்ணாதே
அவனை Assault எண்ணி விடாதே

அவன் வெட்ட வெட்ட வளருவான்
கொட்ட கொட்ட உயருவான்

1. திட்டம் போட்டு மிரட்டிடலாம் என்று எண்ணாதே
கட்டிப் போட்டு மடக்கிடலாம் என்று கனவு காணாதே
முட்டி போட்டு ஜெபிச்சான்னா – நீ
முதுகைக் காட்டி ஓடிடுவே – அவன்
ஆழம் அகலம் தெரியாமல் காலை விடாதே – அவன்
நீளம் உயரம் தெரியாமல் மாட்டிக் கொள்ளாதே

2. மாம்சத்தோடு இரத்தத்தோடும் போரிடாதவன்
வீணான செயல்களுக்கு எதிர்த்து நிற்பவன்
நிந்தனைகள் போராட்டம் வந்தால் – அதை
பொறுமையோடு சகித்துக் கொள்பவன் – அவன்
கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்து செல்பவன் – அவன்
தண்ணீரை தரைபோல வழி நடப்பவன்

3. கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பவன்
பாடுகளை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்பவன்
உயர்வோ தாழ்வானாலும் மரணமோ ஜீவனானாலும்
பசியோ பட்டினியோ நாசம் வந்தாலும்
நண்பர்களால் அன்பர்களால் துன்பம் வந்தாலும்

Yacob Ennum Siru – யாக்கோபு என்னும் சிறு

Yacob Ennum Siru
யாக்கோபு என்னும் சிறு பூச்சியே
நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே நீ எதற்கும் கலங்கி விடாதே
உன்னை உண்டாக்கினவர் உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாது

பலவீனன் ஆவதில்லை சுகவீனம் தொடர்வதில்லை
சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை
சாபம் உன்னை அணுகுவதில்லை
உன்னை உண்டாக்கினவர் உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாது

Naan Nirpathum Nirmulam – நான் நிற்பதும் நிர்முலமாகாததும்

Naan Nirpathum Nirmulam
நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும்
கிருபையே தேவகிருபையே தேவகிருபையே தேவகிருபையே -2

1. காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே
போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் – 2
பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே – உன் – 2

2. கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே
ஆழியின் நடுவிலும் சீறிடும் புயலினிலும் – 2
நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே – 2

Sollal Aguma – சொல்லால் ஆகுமா

Sollal Aguma
சொல்லால் ஆகுமா இதை சொன்னால் புரியுமா
என் இயேசு ராஜன் புகளைச் சொன்னால் உலகம் தாங்குமா
முக்கோடி எழுத்தாலும் தக்கி முக்கி எழுதினாலும்
மன்னவன் புகழ் தனையே எழுதிட முடியுமா

1. மரித்தவன் வீட்டை மிதித்த தேவன் நீத்த உயிரை உயிர்த்து தந்தார்
கதறின குருடனின் கண்களைத் திறந்து வாழ்வை ஒளி மயமாக்கின தேவன்

2. கவலை கண்ணீரோடு கடந்து வந்திடும் யாரையும் வெறுத்து தள்ளாத தேவன்
வாடி நின்றிடும் மக்களின் குரலுக்கு வார்த்தையை அனுப்பி சுகம் தர வல்லவர்

Marum Iv Ulaginilae – மாறும் இவ் உலகினிலே

Marum Iv Ulaginilae
மாறும் இவ் உலகினிலே மாறாத உம் கிருபை
மாறிடும் மனிதன் மாறிடுவான்
மாறாத தேவன் இயேசுவன்றோ

1. பட்டது போதும் சுட்டதும் போதும்
கண்ணீரும் போதும் கவலையும் போதும்
உம் கிருபை எனக்கு போதும் போதும்
மன்னவா எனக்கு நீர் தான் வேணும்

2. காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் நியாயம்
ஒரு நாள் கை விட்டு ஓடும்
ஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்பு
ஆண்டவரின் பாதம் அதுவே எனக்கு போதும்

Marum Iv Ulaginilae Maradhu Um Kirubai
Maaridum Manidhan Maariduvaan
Maaradha Devan Yesuvandro

1. Pattadhu Podhum Suttadhum Podum
Kanneerum Podum Kavalayum Podhum
Um Kirubai Eakku Podhum Podhum
Mannava Enakku Neerthan Venum

2. Kaalangal Maarum Kolangal Maarum
Gnalam Orunal Kaivittu Odum
Aazham Agalam Neelam Ellai Kaana Anbu
Aandavarin Paadham Adhuvae Enakku Podhum -2

Ullamellam Uruguthaiyoo – உள்ளமெல்லாம் உருகுதையோ

Ullamellam Uruguthaiyoo
1. உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மையல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே
சொந்தமாக்கிக் கொண்டீரே

2. எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் ஏசையா
எத்தனையாம் துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமன்றோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் உம்மையே சேவிப்பேன்

3. மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் வரும் நாள் என்றோ
லோகமீதில் காத்திருப்போர்
ஏக்கமெல்லாம் தீர்ந்திட
தியாக ராஜன் இயேசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் எப்போ

Thikkatra Pillaikalukku – திக்கற்ற பிள்ளைகளுக்கு

Thikkatra Pillaikalukku
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2

1. என்றைக்கும் மறைந்திருப்பீரோ
தூரத்தில் நின்றுவிடுவீரோ
பேதைகளை (ஏழைகளை) மறப்பீரோ
இயேசுவே மனமிரங்கும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2

2. கர்த்தாவே எழுந்தருளும்
கைதூக்கி என்னை நிறுத்தும்
தீமைகள் (தீயவர்) என்னை சூழும் நேரம்
தூயவரே இரட்சியும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2

3. தாயென்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
ஏழையின் ஜெபம் கேளும் – 2
இயேசுவே மனமிரங்கும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2
பக்கப்பலம் நீரே அல்லவோ
ஜீவ ஒளி நீரே அல்லவோ – 2

Thikkatra pillaigalukku sagaayayar neerae allavoa
Ekkaalam thunaiyavarkku nirpavarum neerae allavoa
Thanimaiyaana enakku sagaayayar neerae allavoa
Aadharavatra enakku pakkabalam neerae allavoa – 2

1. Enraikkum maraindhiruppeeroa
Thoorathil ninruviduveeroa
Paedhaigalai (aezhaigalai) marappeeroa
Yaesuvae manamirangum
Thikkatra pillaigalukku sagaayayar neerae allavoa
Ekkaalam thunaiyavarkku nirpavarum neerae allavoa – 2

2. Karthaavae ezhundharulum
Kaithookki ennai niruthum
Theemaigal (theeyavar) ennai soozhum naeram
Thooyavarae ratchiyum
Thikkatra pillaigalukku sagaayayar neerae allavoa
Ekkaalam thunaiyavarkku nirpavarum neerae allavoa – 2

3.Thaayennai marandhaalum
Neer ennai marappadhillai
Aezhaiyin jebam kaelum – 2
Yaesuvae manamirangum

Thikkatra pillaigalukku sagaayayar neerae allavoa
Ekkaalam thunaiyavarkku nirpavarum neerae allavoa
Thanimaiyaana enakku sagaayayar neerae allavoa
Aadharavatra enakku pakkabalam neerae allavoa – 2
Pakkabalam neerae allavoa
Jeeva oli neerae allavoa – 2