Vetkama Unakku Vetkama
வெட்கமா உனக்கு வெட்கமா
இயேசு பத்தி சொல்ல உனக்கு வெட்கமா
வெட்கமா உனக்கு வெட்கமா
இயேசு பத்தி சொல்ல உனக்கு வெட்கமா
ஊரு கதைய பேச உனக்கு வெட்கமில்ல
கட்டு கதைய பேச உனக்கு வெட்கமில்ல
உயிர் கொடுத்த இயேசு பத்தி சொல்ல வெட்கமா
தன்னையே இழந்த இயேசு முக்யமா
1. ரெண்டு காலு ரெண்டு கையு எதற்காக
உனக்கிருக்கும் பேச்சு மூச்சு எதற்காக
இயேசு பத்தி சொல்லு ஆத்துமாவ வெல்லு
துன்பத்திலும் இன்பத்திலும் யேசுகாக நில்லு
Selvam Gnanam Ithu
செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது
ஐஸ்வரியம் சௌந்தர்யம்
இது எல்லாமே நீர் தந்தது
தந்தவரே திருப்பி தருகிறோம்
உம்மையே உயர்த்துகிறோம்
1. உம் ராட்சியம் கட்டவே செல்வம் தந்தீரே
அதை நான் அறிவேன் ஐயா
உம் வார்த்தை சொல்லவே ஞானம் தந்தீரே
அதை நான் அறிவேன் ஐயா
பரலோகம் நிரம்பனும்
பாவி மனம் திரும்பனும்
அதற்காய் என்னையே தந்தேன் ஐயா
2. எனக்குள்ளே நானல்ல நீர் தானே வாழ்கிரிரீர்
அதை நான் அறிவேன் ஐயா
நான் வாழும் சரீரமே நீர் வாழும் ஆலயம்
அதை நான் மறவேன் ஐயா
பரிசுத்தமாய் வாழனும்
உங்க முகம் பாக்கணும்
பரிசுத்தமே எந்தன் வாஞ்சை ஐயா
1. தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா ஆஸ்தியை கேட்கவில்லை
அந்தஸ்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா
நான் தேடி போகவில்லை என்னைத் தேடி வந்தாரைய்யா -2
எந்தன் இயேசுவே – 4
2. தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார் நண்பர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார் – 2
எந்தன் இயேசுவே – 4