Selvam Gnanam Ithu
செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்தது
ஐஸ்வரியம் சௌந்தர்யம்
இது எல்லாமே நீர் தந்தது
தந்தவரே திருப்பி தருகிறோம்
உம்மையே உயர்த்துகிறோம்
1. உம் ராட்சியம் கட்டவே செல்வம் தந்தீரே
அதை நான் அறிவேன் ஐயா
உம் வார்த்தை சொல்லவே ஞானம் தந்தீரே
அதை நான் அறிவேன் ஐயா
பரலோகம் நிரம்பனும்
பாவி மனம் திரும்பனும்
அதற்காய் என்னையே தந்தேன் ஐயா
2. எனக்குள்ளே நானல்ல நீர் தானே வாழ்கிரிரீர்
அதை நான் அறிவேன் ஐயா
நான் வாழும் சரீரமே நீர் வாழும் ஆலயம்
அதை நான் மறவேன் ஐயா
பரிசுத்தமாய் வாழனும்
உங்க முகம் பாக்கணும்
பரிசுத்தமே எந்தன் வாஞ்சை ஐயா