Song Category: Tamil

Thanthaiyum Thayum – தந்தையும் தாயும் ஆன

Thanthaiyum Thayum
தந்தையும் தாயும் ஆன நல்லவரே இறைவா
பிள்ளைகள் கூடி வந்தோம்
எந்த இனம் என்ன குலம் என்று யாம் அறியோம் தந்தாய்
பிள்ளைகள் ஆகி நின்றோம்
இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்
எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும்

எங்களுக்கு தீமை செய்தோர்களை
மன்னிக்கும் மனம் வளர்த்தோம்
அன்புடன் அரவணைத்தோம்

அனுதின உணவை எங்களுக்கு என்றும்
உறுதி செய்தருளும் வறுமை நீங்க செய்யும்
இங்கு வாரும் வல்லமையோடு வரங்களைத் தாரும்
எங்கள் பூமி புதுமை காணும் மனிதம் உயர்வு பெறும்

உன்னததத்தில் உம் மகிமை ஆள்வது போல்
இங்கும் எங்கும் எங்கிலும் உம் அரசே
எம் இறைவா இவ்வுலகில் காணும் நாள் வருக
வல்லவரே தலைவா சந்நிதி சரணடைந்தோம்
நல்லவரே இறைவா வாழ்வு தந்திடுவீர்
வல்லவரே தலைவா மன்னிக்கும் மனம் தருவீர்
பிள்ளைகள் கூடி வந்தோம்

Nallavare En Yesuve – நல்லவரே என் இயேசுவே

Nallavare En Yesuve
நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!!

நன்மைகள் எதிர் பார்த்து உதவாதவர்
ஏழையாம் என்னை என்றும் மறவாதவர்
துதி உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே

1. எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா
ஒருவரும் உம்மை போல் இல்லை ஐயா
நீரின்றி வாழ்வே இல்லை
உணர்ந்தெனய்யா…
உந்தனின் மாறா அன்பை மறவேன் ஐயா

2. என் மனம் ஆழம் என்னை நீர் அறிவீர்
என் மன விருப்பங்கள் பார்த்துக்கொள்வீர்
ஊழிய பாதையில் உடன் வருவீர்
சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர்
துதி உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே

Aayiramai Perugavendum – ஆயிரமாய் பெருகவேண்டும்

Aayiramai Perugavendum
ஆயிரமாய் பெருகவேண்டும் தேவா நாங்கள்

அதிசயங்கள் காணவேண்டும் தேவா

உம் நாமம் எங்கும் வெல்ல வேண்டுமே

உமது இராஜ்யம் துரிதமாய் வரவேண்டுமே

1. ஜீவ தேவனே உம்மை வாஞ்சிக்கின்றோம்

ஜீவ நாயகா உம்மை சேவிக்கின்றோம்

ஜீவாதிபதியே உம்மில் மூழ்கிறோம்

ஜீவ மலர்களாய் நித்தம் மலர்ந்திடச் செய்யும்

2. அன்பின் ஆழம் காணவேண்டும் என்றும் நாங்கள்

மன்னிக்கும் சிந்தையால் நிறைய வேண்டும்

கீழ்படிதல் ஆனந்தம் ஆகிட வேண்டும்

எதிராளி தந்திரத்தை வெல்வதே இன்பம்

3. ஒளிவீசும் தீபமாக வேண்டும் நாங்கள்

வாழ்வின் ஜீவ வாசனையாய் வலம்வர வேண்டும்

மலர்ச்சிபெற்ற சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

பாரதமே பரலோகமாய் மாறிட வேண்டும்

Naan Orupodhum – நான் ஒருபோதும் உன்னை

Naan Orupodhum
நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை

என்றுறை செய்தேனன்றோ

கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்

உன்னை காத்திடும் பெலவானன்றோ

விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ

பயம் வேண்டாம் உன் அருகில் நான்

என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்

ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்

1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை

என்ன வந்தாலும் பயமே இல்லை

மாறாத இயேசு உண்டெனக்கு

மனது ஒருபோதும் கலங்கவில்லையே

ஏழை எனக்கு அடைக்கலமே அவர்

புயலில் என் கன்மலையே

என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்

ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்

2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ

தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே

நல்வசனத்தின் வல்லமையாய்

வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே

எலியாவின் தேவன் எங்கே என்ற

அற்புதம் நடந்திடுமே

என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்

ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்

Naan orupodhum

Naan orupoadhum unnai kaividuvadhillai
Endrurai seidhaenandroa
Kadal aazhatthilum akkini soolaiyilum
unnai kaatthidum belavaanandroa
Visha sarbangaloa singa koottangaloa
Bayam vaendaam un arugil naan
Endrunai seidhavarai aaraadhipoam
Aaviyil aaraadhanai – Naan orupoadhum

1. Aarudhal thara oru vaartthai illai
Enna vandhaalum bayamae illai
Maaraadha yaesu undenakku
Manadhu orupoadhum kalangavillaiyae
Aezhai enakku adaikkalamae avar
Puyalil en kanmalaiyae
Endrunai seidhavarai aaraadhipoam
Aaviyil aaraadhanai – Naan orupoadhum

2. Nindhaigal unnai soozhgindrathoa
Tham karangal endrum uyarndhidumae
Nalvasanatthin vallamaiyaai
Vallavarin samugam niraindhidumae
Eliyaavin dhaevan engae endra
Arpudham nadandhidumae
Endrunai seidhavarai aaraadhipoam
Aaviyil aaraadhanai – Naan orupoadhum

Ejamaanane – எஜமானனே

Ejamaanane Um
எஜமானனே (2)
உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2

அழியும் என் கைகளை கொண்டு
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்
அழியும் என் உதடுகள் கொண்டு
அழியா உம் வார்த்தையை சொல்ல
எத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்)

ஆராதிப்பேன் அதை எண்ணியே
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன்

என்னில் என்ன நன்மை கண்டீர்
என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்

உம் சித்தத்தை நான் செய்வதே
அனுதினமும் என் போஜனம் – அழியும்

Ejamaanaanae(2)
Um Sevaikaai Ennai Azhaitheer – 2

Azhiyum En Kaigal Kondu
Azhiyaa Um Raajiyam Katta
Paithiyamaana Ennai Therinthedutheer
Azhiyum En Uthadugal Kondu
Azhiyaa Um Vaarthai Solla
Ethanaai Vaazhntha Ennai Therinthedutheer (Pirithedutheer)

Aaraathipaen Athai Enniyae

Ennil Enna Nanmai Kandeer
Ennai Azhaithu Uyarthi Vaitheer

Um Sithathai Naan Seivathae
Anuthinamum En Pojanam

Song Sung by Robert Roy, John Jebaraj and Joel Thomas Raj

Neer Illatha Naalellam – நீ இல்லாத நாளெல்லாம்

Neer Illatha Naalellam
நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்
உண்மையின் வழியே நீ ஆவாய்
உறவின் பிறப்பே நீ ஆவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்

2. எனது ஆற்றலும் நீ ஆவாய்
எனது வலிமையும் நீ ஆவாய்
எனது அரணும் நீ ஆவாய்
எனது கோட்டையும் நீ ஆவாய்

3. எனது நினைவும் நீ ஆவாய்
எனது மொழியும் நீ ஆவாய்
எனது மீட்பும் நீ ஆவாய்
எனது உயிர்ப்பும் நீ ஆவாய்

Neer Illatha Naalellam Naalaguma
Nee illatha vaalvuellam vaalva aguma

1. Uyirin uttrae nee aavai
Unmaiyin valiye nee aavai
Uravin pirape nee aavai
Ulathil magilve nee aavai

2. Yenathu aatralum nee aavai
Yenathu valimaiyum nee aavai
Yenathu aranum nee aavai
Yenathu kottaiyum nee aavai

3. Yenathu ninaivum nee aavai
Yenathu mozhiyum nee aavai
Yenathu meetpum nee aavai
Yenathu uyirupum nee aavai

En Nesar Ennudayavar – என் நேசர் என்னுடையவர்

En Nesar Ennudayavar
என் நேசர் என்னுடையவர்
நான் என்றென்றும் அவருடையவன்

சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
என்னையும் கவர்ந்து கொண்டவரே
தம் நேசத்தால் என்னையும்
கவர்ந்து கொண்டவரே

அவர் வாயின் முத்தங்களால்
என்னை அனுதினமும் முத்திமிடுகிறார்

திராட்சை ரசத்திலும் உங்க நேசமே
அது இன்பமும் மதுரமானது

அவர் முற்றிலும் அழகுள்ளவர்
இவரே என் சிநேகிதர்

விருந்துசாலைக்குள்ளே என்னை
அழைத்து செல்கிறார்
என்மேல் பறந்த கொடி நேசமே

Nalla Nanban Yesu – நல்ல நண்பன் இயேசு

Nalla Nanban Yesu
நல்ல நண்பன் இயேசு என்னை என்றும் காப்பார்
கை விடாமலே காத்து நடத்துவார்
கண்மணிப் போல் காப்பார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கடந்ததெல்லாம் மறக்க செய்வார் (2)

மாயையே இந்த உலகம் மாயையே
மாயையே உலகில் எல்லாம் மாயையே
போதுமே இயேசு ஒருவர் போதுமே
போதுமே இயேசு மட்டும் போதுமே (2)

1. கண்ணீரோடு நடந்த நாட்கள் மாயையானதே
கவலையோடு திரிந்த நாட்கள் கடந்து போனதே (2)
உலக பாடுகள் உலக வேதனை (2)
இயேசு வந்தால் தீருமே
இயேசு வந்தால் மாறுமே – நல்ல நண்பன்

2. ஒளி வீசும் சூரியனும் இருளாகுமே
சுவாசிக்கும் காற்றுக் கூட நின்று போகுமே (2)
சேர்த்த ஆஸ்தியும் பாச ஜனங்களும் (2)
உன்னை விட்டு போகுமே
உன்னை விட்டு விலகுமே – நல்ல நண்பன்

Sathikalam Neva Nanbane – சாதிக்கலாம் நீ வா நண்பனே

Sathikalam Neva Nanbane
சாதிக்கலாம் நீ வா நண்பனே
உன்னை பெலப்படுத்து நேசர் இயேசுவாலே
நீயும் சாதனை செய்திடலாம்

1. காலையில் மலர்ந்து மாலையில் மறையும்
மலர்கள் மணம் வீசுதே
உறவுகள் இல்லாத பறவைகள் கூட
மகிழ்வுடன் வாழ்கின்றதே
உன்னால் ஏன் முடியாது
உள்ளத்தில் சிந்தனை செய் நண்பா
எல்லாம் செய்ய பெலன் உண்டு
உன் ஆண்டவர் இயேசுவினால்

2. தேவன் சொல்லாலே உலகினில் உதிக்கும்
ஆதவன் ஓளி வீசுதே
வானத்தில் மின்னிடும் விண்மீன்கள் கூட
தினமும் ஒளிர்கின்றதே
உன்னால் ஏன் முடியாது
உள்ளத்தில் சிந்தனை செய் நண்பா
எல்லாம் செய்ய பெலன் உண்டு
உன் ஆண்டவர் இயேசுவினால்

Sathikalam Neva Nanbane

Saadhikalaam neevaa nanbanae
Unnai belapaduthu neasar yaesuvaalae
Neeyum saadhanai seidhidalaamae

1.Kaalaiyil malarndhu maalaiyil maraiyum
Malargal manam veesudhae
Uravugal illaadha paravaigal kooda
Magizhvudan vaazhgindradhae
Unnaal aen mudiyaadhu
Ullathhil sindhanai sei nanbaa
Ellaam seiyya belan undu
Un aandavar yaesuvinaal

2.Dhaevan sollaalae ulaginil udhikkum
Aadhavan oli veesudhae
Vaanatthil minnidum vinmeengal kooda
Dhinamum olirgindradhae
Unnaal aen mudiyaadhu
Ullathhil sindhanai sei nanbaa
Ellaam seiyya belan undu
Un aandavar yaesuvinaal

Unnai Valakamal Yesu – உன்னை வாலாக்காமல் இயேசு

Unnai Valakamal Yesu
உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்
உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார்
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

இஸ்ரவேலே நீ பயப்படாதே – 2
கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் -2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

செங்கடலும் யோர்தானும் -2
உம்மை கண்டு விலகி ஓடுமே -2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

சிறியவனை குப்பையிலிருந்து -2
உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர்-2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

ஒன்றும் இல்லாத என்னை அழைத்தீரே
பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும்
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

பாலும் தேனும் ஓடுகின்ற-2
தேசத்தை போல் உன்னை மாற்றிடுவார் -2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)