Song Category: Tamil

Sathikalam Neva Nanbane – சாதிக்கலாம் நீ வா நண்பனே

Sathikalam Neva Nanbane
சாதிக்கலாம் நீ வா நண்பனே
உன்னை பெலப்படுத்து நேசர் இயேசுவாலே
நீயும் சாதனை செய்திடலாம்

1. காலையில் மலர்ந்து மாலையில் மறையும்
மலர்கள் மணம் வீசுதே
உறவுகள் இல்லாத பறவைகள் கூட
மகிழ்வுடன் வாழ்கின்றதே
உன்னால் ஏன் முடியாது
உள்ளத்தில் சிந்தனை செய் நண்பா
எல்லாம் செய்ய பெலன் உண்டு
உன் ஆண்டவர் இயேசுவினால்

2. தேவன் சொல்லாலே உலகினில் உதிக்கும்
ஆதவன் ஓளி வீசுதே
வானத்தில் மின்னிடும் விண்மீன்கள் கூட
தினமும் ஒளிர்கின்றதே
உன்னால் ஏன் முடியாது
உள்ளத்தில் சிந்தனை செய் நண்பா
எல்லாம் செய்ய பெலன் உண்டு
உன் ஆண்டவர் இயேசுவினால்

Sathikalam Neva Nanbane

Saadhikalaam neevaa nanbanae
Unnai belapaduthu neasar yaesuvaalae
Neeyum saadhanai seidhidalaamae

1.Kaalaiyil malarndhu maalaiyil maraiyum
Malargal manam veesudhae
Uravugal illaadha paravaigal kooda
Magizhvudan vaazhgindradhae
Unnaal aen mudiyaadhu
Ullathhil sindhanai sei nanbaa
Ellaam seiyya belan undu
Un aandavar yaesuvinaal

2.Dhaevan sollaalae ulaginil udhikkum
Aadhavan oli veesudhae
Vaanatthil minnidum vinmeengal kooda
Dhinamum olirgindradhae
Unnaal aen mudiyaadhu
Ullathhil sindhanai sei nanbaa
Ellaam seiyya belan undu
Un aandavar yaesuvinaal

Unnai Valakamal Yesu – உன்னை வாலாக்காமல் இயேசு

Unnai Valakamal Yesu
உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்
உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார்
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

இஸ்ரவேலே நீ பயப்படாதே – 2
கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் -2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

செங்கடலும் யோர்தானும் -2
உம்மை கண்டு விலகி ஓடுமே -2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

சிறியவனை குப்பையிலிருந்து -2
உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர்-2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

ஒன்றும் இல்லாத என்னை அழைத்தீரே
பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும்
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

பாலும் தேனும் ஓடுகின்ற-2
தேசத்தை போல் உன்னை மாற்றிடுவார் -2
ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)

En Kirubai Unakku Pothum – என் கிருபை உனக்கு போதும்

En Kirubai Unakku Pothum
என் கிருபை உனக்கு போதும்
இந்த மண்ணில் வேறு என்ன வேண்டும் சொல்
ஒருபோதும் உன்னை மறவேன்
உன் நிழலைப் போல உன்னை தொடர்வேன் நான்

1. அமைதி தோட்டமாக நானும் உலகை உனக்கு கொடுத்தேன்
ஜாதி பூக்கள் வளர்த்தாய் நீயும் யுத்தம் நாளும் தொடுத்தாய்
கண்ணீருக்கும் செந்நீருக்கும் உன்னை நீ அடகு வைத்தாய் – (2)
சிலுவையின் வழி மீட்பு என்றேன் சிந்தையில் நீ ஏற்கவில்லை
விழுதுகள் என்று நான் நினைத்த மனிதர்கள் என்னை சார்ந்ததில்லை
என்ன நடந்தாலும் ஜெபிப்பதில்லை என்னை நீ நினைப்பதில்லை – என்

2. ஒளியை ஏற்றி வைத்தேன் நீயோ இருளை தேடிச் சென்றாய்
வழியை திறந்து வைத்தேன் நீயோ விழிகள் மூடிக்கொண்டாய்
என் ராஜ்ஜியம் எங்கே என்று மண்ணில் நீ தேடுகின்றாய் – (2)
தந்தைக்கு நான் கீழ்ப்படிந்தேன் நிந்தைகளை ஏற்றுக்கொண்டேன்
என்றைக்குமே ஆட்சி செய்வேன் நீதியை நிலை நாட்டச் செய்வேன்
போனது போகட்டும் மறந்துவிடு இன்றோடு மாறிவிடு – என்

Koodum Ellam Koodum – கூடும் எல்லாம் கூடும்

Koodum Ellam Koodum
கூடும் எல்லாம் கூடும்
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
கூடும் எல்லாம் கூடும்
அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில்லை

அவர் வார்த்தை என்றும் வெறுமையாக திரும்புவதேயில்லை
இயலாததென்பது அவர் அகராதியில் இல்லை – கூடும்

1. அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானது
அவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானது
அவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்தது
அவர் வார்த்தையினாலே செவிடன் காது கேட்டது

அவர் வார்த்தை ஒன்று போதும்
உன் நிலைமையை மாற்ற
அவர் வார்த்தை ஒன்று போதும்
உன் துக்கத்தை போக்க } – 2 – கூடும்

2. அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானது
அவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானது
அவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்தது
அவர் வார்த்தையினாலே செவிடன் காது கேட்டது

ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை
ஒன்றும் இல்லவே இல்லை
ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை

3. கடனா அதை அடைக்கக்கூடும்
கடினம் அதை முறிக்கக்கூடுமோ
வியாதிக்கு சுகம் அளிக்கக்கூடுமோ
கூடாதது ஒன்றுமில்லை

சோர்வை தோற்றக்கூடும்
கண்ணீரை மாற்றக்கூடும்
பிரிவை சேர்க்கக்கூடும்
கூடாதது ஒன்றுமில்லை) – 2 – கடனா
– கூடும்

Neere Ennai Kaividaadhavar – நீரே என்னைக் கைவிடாதவர்

Neere Ennai Kaividaadhavar
நீரே என்னைக் கைவிடாதவர்
விட்டு விலகிடாதவர்
வழியில் காத்து நிற்பவர்
நீரே என்னை முற்றும் காத்தவர்
என்னில் அன்பு கூர்ந்தவர்
என்றும் மாறிடாதவர்

உந்தன் நாமம் என்றும் மேன்மையானதே
உலகை என்றும் ஆளுமே
எம்மை காக்க வல்லதே
உந்தன் நாமம் இருளை ஒளிரச் செய்ததே
கவலை மறையச் செய்ததே
என்னை வாழவைத்ததே – நீரே

எனக்காய் பாவம் சுமந்தீர்
துயரம் அடைந்தீர்
முழுதும் சகித்தீர்
நிலையற்ற என் வாழ்வை மீட்டீர்
என்னை அளவில்லா அன்பு செய்தீர்
கரம் உயர்த்தி துதிபாடி
உம் பாதம் நான் பணிகின்றேன்
என் கரம் உயர்த்தி துதிபாடி
உம் பாதம் நான் பணிகின்றேன்

அன்பால் என்னை நீர் கவர்ந்தீர்
ஜீவனைத் தந்தீர்
உம்மை துதித்திடுவோம் (2)

நீதி என்றும் நிலைக்கும்
உந்தன் நாமம் மேன்மையாகும்
நீரோ என்னை அழைத்த
இந்த அழைப்பும் மேன்மையாகும்
உம் கண் எதிரே துதி பாட
ஓர் நாளை நான் காண்பேனோ
உம் கண் எதிரே துதி பாட
ஓர் நாளை நான் காண்பேனோ – நீரே

For Song CD/DVD please call/WhatsApp David @+91-9025658484(will be send via Postal/Courier)

Neer Ennai Thedi – நீர் என்னை தேடி

Neer Ennai Thedi

நீர் என்னை தேடி வராதிருந்தால்
நான் என்றோ மரிச்சிருப்பேன்
உம் கிருபை என்னில் தராதிருந்தால்
நான் என்றோ அழிஞ்சுருப்பேன்

என் தேவா.. என் ராஜா..
உம் கிருபை போதுமே – (2)

1. தட்டு தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன்
என்னை தொட்டு தூக்கிவிட நீர் ஓடோடி வந்தீரே
சொத்தோ சுகமோ தேவை இல்ல
சொந்தம் பந்தம் நாடவில்ல (..என் தேவா)

2. உளையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன்
உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே
பேரோ புகழோ தேவை இல்ல
பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும் (..என் தேவா)

3. தாயின் கருவினிலே என்னை தெரிந்து கொண்டீரே
தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே
அன்பே எந்தன் ஆருயிரே
ஆயுள் முழுதும் ஆராதிப்பேன் (..என் தேவா)

Neer Ennai Thedi Varaathirunthaal
Naan Endro Marichchiruppen
Um Kirupai Ennil Tharaathirunthaal
Naan Endro Azhinjuruppen

En Devaa.. En Raajaa..
Um Kirubai Pothume

1. Thattu Thadumaari Naan Thallaadi Nadanthen
Ennai Thottu Thookkivida Neer Ododi Vantheere
Soththo Sugamo Thevai Illa
Sontham Bantham Naadavilla (..En Devaa)

2. Ulaiyaana Settrinile Naan Uzhandru Kidanthen
Unnathaththin Devaa Ennai Uyarththi Vaiththeere
Paero Pugalo Thevai Illa
Paer Solli Azhaiththavar Neer Pothum (..En Devaa)

3. Thaayin Karuvinile Ennai Therinthu Kondeere
Thaangi Thaangi Ennai Unthan Tholil Sumantheere
Anbe Enthan Aaruyire
Aayul Muzhuthum Aaraathippen (..En Devaa)

Yacob Ennum Siru – யாக்கோபு என்னும் சிறு

Yacob Ennum Siru
யாக்கோபு என்னும் சிறு பூச்சியே
நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே நீ எதற்கும் கலங்கி விடாதே
உன்னை உண்டாக்கினவர் உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாது

பலவீனன் ஆவதில்லை சுகவீனம் தொடர்வதில்லை
சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை
சாபம் உன்னை அணுகுவதில்லை
உன்னை உண்டாக்கினவர் உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாது

Yen Alugirai Yarai – ஏன் அழுகின்றாய் யாரை

Yen Alugirai Yarai
ஏன் அழுகின்றாய் யாரை நீ தேடுகின்றாய்
ஏக்கம் போக்க இயேசு இருக்க ஏன் நீ அழுகின்றாய்

1. கண்ணீர் பொங்கினதோ கவனிப்பார் இல்லையோ
காருண்ய கர்த்தர் இயேசு இருக்க ஏன் நீ அழுகின்றாய்

2. பெற்றோர் கைவிட்டாரோ பிள்ளைகள் பேணலையோ
யாரினும் மேலாய் காப்பவர் இருக்க ஏன் நீ அழுகின்றாய்

3. கனியற்ற மரம் ஆனாயோ வெட்டிட சொல்லிட்டாரோ
களை கொத்தி உரமிட உன்னதர் இருக்க ஏன் நீ அழுகின்றாய்

Kadalin Alathile – கடலின் ஆழத்திலே மூழ்கி

Kadalin Alathile
கடலின் ஆழத்திலே மூழ்கி போன யோனா நான்
கண்ணோக்கி பார்த்திடுமே இயேசையா
கண்ணோக்கி பார்த்திடுமே
நீர் இரக்கமும் உருக்கமும்
நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே
என் இயேசையா கிருபையும் உள்ளவரே

1. தர்ஷிசுக்கு ஓடி போன யோனாவை மீட்டிரே
என்னையும் மீட்டுக் கொள்ளும் என் இயேசையா
என்னையும் மீட்டுக்கொள்ளும்
அழிவில் இருந்து நினிவேயை ரட்சித்தீரே
எங்களையும் ரட்சித்து கொள்ளும்
என் இயேசையா எங்களையும் ரட்சித்து கொள்ளும்

2. மீனின் வயிற்றிலிருந்த யோனாவின் ஜெபத்தைக் கேட்டீர்
என் ஜெபமும் கேட்டருளும் என் இயேசையா
என் ஜெபமும் கேட்டருளும்
இரட்டுடுத்தி ஜெபித்த நினிவேயின் ஜெபம் கேட்டீர்
எங்கள் ஜெபம் கேட்டருளும் என் இயேசையா
எங்கள் ஜெபம் கேட்டருளும்

3. யோனாவின் சத்தத்தை நினிவே கேட்டது போல்
என் தேசம் கேட்கணுமே என் இயேசையா
என் ஜனம் கேட்கணுமே
நினிவேக்கு கிடைத்த கிருபை போல
எங்களுக்கும் கிருபை தாருமே
என் இயேசையா எங்களுக்கும் கிருபை தாருமே

Nigare Illatha Sarvesa – நிகரே இல்லாத சர்வேசா

Nigare Illatha Sarvesa
நிகரே இல்லாத சர்வேசா
திகழும் ஒளி பிரகாசா

துதிபாடிட இயேசு நாதா
பதினாயிரம் நாவுகள் போதா
துங்கன் ஏசு மெய் பரிசுத்தரே
எங்கள் தேவனைத் தரிசிக்கவே
துதிகளுடன் கவிகளுடன்
தூய தூயனை நெருங்கிடுவோம்
கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல
கையின் சித்திரம் தெய்வமல்ல
ஆவியோடும் உண்மையோடும்
ஆதி தேவனை வணங்கிடுவோம்

பொன் பொருள்களும் அழிந்திடுமே
மண்ணும் மாயையும் மறைந்திடுமே
இதினும் விலை பெரும் பொருளே
இயேசு ஆண்டவர் திருவருளே
தேவ மைந்தனாய் அவதரித்தார்

பாவ சோதனை மடங்கடித்தார்
மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
மாளும் மாந்தரை மீட்டெடுத்தார்
கொந்தளிக்கும் அலைகளையும்
கால் மிதிக்கும் கர்த்தரவர்
அடங்கிடுமே அதற்றிடவே
அக்கரை நாமும் சேர்ந்திடவே
ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்
மறுபடியும் வருவேனென்றார்
மாசந்தோஷ நாள் நெருங்கிடுதே