Song Category: Tamil

Kartharai Thuthipathum – கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்

Kartharai Thuthipathum
கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம்
பண்ணுவதும் பலியிலும் மேலானது
அவரின் நாமத்தை பாடிக் கொண்டாடுங்கள்
அதுவே நலமானது

1. நம்முடைய ஆண்டவர் பெரியவராவார்
மகா பெலமுள்ளவர்
அவரின் அறிவு அளவில்லாதது
அவரையே புகழ்ந்திடுவோம்

2. தண்ணீரைக் கடந்தும் தீயினில் நடந்தும்
சேதமின்றிக் காத்தவர்
சேனையின் தேவன் நம்முடனிருந்து
ஜெயமுடன் நடத்திடுவார்

3. துதித்தலே இன்னமும் ஏற்றதுமாகும்
துதித்தே மகிழ்ந்திருப்போம்
எருசலேமே உன் கர்த்தரை ஸ்தோத்திரி
சீயோனே உன் தேவனைத் துதி

Irangume En Yesuve – இரங்குமே என் இயேசுவே

Irangume En Yesuve
இரங்குமே என் இயேசுவே
இரக்கத்தின் ஐஸ்வரியமே
கூவி கதறியே ராவும் பகலுமே
கெஞ்சும் ஜெபம் கேளுமே

நித்தம் எமக்காய் பரிந்து பேசும்
நள்ளிரவின் நண்பனே – அன்பின்
பிதா முன்னில் இன்று ஜெபித்திடும்
அன்பர் ஜெபங்கேளுமே

அன்று நினிவே அழிவைக் கண்டே
அன்பே இரங்கினீரே – யோனா
உரைத்த தம் ஆலோசனை தந்து
ஏழை ஜெபங்கேளுமே

எத்தனை துன்பம் சகித்து மீட்டீர்
எல்லாமே வீணாகுமோ
அத்தி மரத்திற்கு அன்று இரங்கினீர்
அந்த ஜெபங்கேளுமே

சோதனையினின்று இரட்சித்தீரே
சோதோமின் பக்தனையே
ஆபிரகாம் அன்று வேண்டி ஜெபித்ததோர்
ஆதி ஜெபங்கேளுமே

தாரும் உயிர் மீட்சி சபைதனில்
சோரும் உள்ளம் மீளவே
கர்த்தாவே உம் ஜனம் செத்த நிலை மாற
பக்தர் ஜெபங்கேளுமே

Aarathanai Thuthi Aarathanai – ஆராதனை துதி ஆராதனை

Aarathanai Thuthi Aarathanai
ஆராதனை துதி ஆராதனை
என்றென்றும் யேசுவுக்கே -2
எல்லா துதிக்கும் கனத்திற்கும் நீர் பாத்திரரே
எல்லா மகிமைக்கும் மாட்சிமைக்கும்
பாத்திரரே – (2) – ஆராதனை

1. நீரே கர்த்தர் – நீரே தேவன்
ராஜாதி ராஜா நீரே -2 – எல்லா துதிக்கும்

2. வல்லவரே – நீர் நல்லவரே –
மகத்துவமானவரே -2 – எல்லா

3. நீரே வழி .. நீரே சத்தியம்
நீரே என் ஜீவனுமே -2 – எல்லா
என்றென்றும் யேசுவுக்கே (3)

Nanmaigal Seithu – Nanmaigal – நன்மைகள் செய்து நலிந்துபோன நண்பனே!

Nanmaigal Seithu
நன்மைகள் செய்து
நலிந்துபோன
நண்பனே!… (மகனே!.. || மகளே!..)
நன்மையின் நாயகர் இயேசு உன்னை மிக நேசிக்கிறார் – (2)
நீ சோர்ந்துவிடாதே – மனம்
தளர்ந்து போகாதே -2

1. நேசித்தவர் உனக்கெதிராய் பேசினரோ….
நன்மைபெற்றவர் உந்தன் முதுகில் குத்தினரோ..(2)
பெற்ற பிள்ளைகள் உன்னை வெறுத்துத் தள்ளினரோ (2)-நீ
வளர்த்துவிட்டவர் உந்தன் மார்பில் பாய்ந்தனரோ- நீ
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் -2
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே.. – நிந்தைகளை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – அவமானம்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – துரோகங்கள்
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…

2. ஊழியத்தின் பாதையிலே வேதனையோ…
சுமந்திட முடியாத பாரங்களோ… (2)
கண்ணீரும் இரத்தமாகிப் போனதுவோ…. – உன்
ஏன் மறந்தீர் என்றுக் கதறும் சூழ்நிலையோ – தேவா
உனைக்காட்டிலும் மிக அதிகப்பாடுகள் – 2
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – வேதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – சோதனை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே… – கண்ணீரை
அனுபவித்தவர் இயேசு என்பதை மறவாதே…

Nanmaikal Seidhu Nalindhu Pona Nanbanae…(Maganae…/Magalae…)
Nanmaiyin Naayagar Yesu Unnai Miga Naesikiraar – (2)
Nee Soernthuvidaadhae – Manam
Thalarndhu Pokaadhae…

1. Nesithavar Unackethiraai Pesinaroe…
Nanmai Petravar Undhan Mudhukil Kutthinaroe…
Pettra PillaigaL Unnai Verutthu Thallinaroe… – Nee (2)
Valartthu Vittavar Undhan Maarbil Paainthanaroh.. – Nee (2)
Unnai Kaattilum Miga Athiga PaadugaL -2
Anubavitthavar Yesu EnbadhaiMaravaadhae..Ninthaikalai
Anubavitthavar Yesu EnbadhaiMaravaadhae..Avamaanam
Anubavitthavar Yesu Enbadhai Maravaadhae..Dhrogangal
Anubavitthavar Yesu Enbadhai Maravaadhae..

2. Voozhiyatthin Paathaiyilae Vaethanaiyoh..
Sumanthida Mudiyaadha BaarangaLoh… (2)
KaNNeerum Iratthamaagi Poenadhuvoh – Un (2)
Yaen Marandheer Yendru Katharum Soozhlnilaiyow – Deva(2)
Unai Kaatilum Miga Adhika Paadugal – 2
Anubavitthavar Yesu Enbathai Maravaadhae…Vaethanai
Anubavitthavar Yesu Enbathai Maravaadhae…Soedhanai
Anubavithavar Yesu Enbathai Maravaadhae…KaNNeerai
Anubavitthavar Yesu Enbathai Maravaadhae

Shistipin Athipathiyae – சிருஷ்டிப்பின் அதிபதியே

Shistipin Athipathiyae
சிருஷ்டிப்பின் அதிபதியே
எந்தன் கன்மலையானவரே
கல்வாரி நாயகனே
கறையில்லா தூயவரே
உம் பாதம் வந்து சரணடைந்தால்
கண்ணீரை துடைப்பீரன்றோ- என்
கண்ணீரை துடைப்பீரன்றோ.

வெள்ளம் போல் சத்துரு வரும்போது
என்னோடு ஜெயக்கொடி பயமில்லையே
ஆழ்கடலோ புயலோ எதுவானாலும்
என் புகலிடமே துணை நீரன்றோ..

கண்ணீரின் பள்ளத்தாக்கு எதிர் நின்றாலும்
ஆணி பாய்ந்த கரம் உண்டு துன்பமில்லையே..
செங்கடலோ யோர்தானோ எதுவானாலும்
என் மேசியாவே துணை நீரன்றோ..

Thuthiyungal Nam Devanai – துதியுங்கள் நம் தேவனை

Thuthiyungal Nam Devanai
துதியுங்கள் நம் தேவனை
போற்றுங்கள் நம் இராஜனை
வாழ்த்துங்கள் நம் கர்த்தரை
போற்றுவோம் வாழ்த்துவோம்
இன்றும் என்றென்றுமாய்

ஆ ஹா ஹா அல்லேலூயா
ஓஹோ ஹோ ஓசன்னா
அதிசயம் செய்யும் தேவன் பெரியவர்
நாம் ஆராதிக்கும் இயேசு வல்லவர்
நமக்காய் யாவும் செய்து முடித்தார்
நன்றியோடு ஆராதிப்போம்

நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்
நாம் பாரம் நீக்கும் வல்ல தேவன் சிறந்தவர்
கண்ணீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார்
கரங்களைத் தட்டி ஆர்ப்பரிப்போம்

நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்
நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை
கரங்களை உயர்த்தி துதித்திடுவோம்

Thuthiyungal Nam Devanai
Pottungal nam iraajanai
Vaalththungal nam karththarai
Pottuvom vaalththuvom
Intum ententumaay

Aa haa haa allaelooyaa
Oho ho osannaa

Athisayam seyyum thaevan periyavar
Naam aaraathikkum Yesu vallavar
Namakkaay yaavum seythu mutiththaar
Nantiyodu aaraathippom

Nam paavam pokkum jeeva thaevan nallavar
Naam paaram neekkum valla thaevan siranthavar
kannnneer kavalai viyaathi yaavum maattuvaar
Karangalaith thatti aarpparippom

Namakkaay iraththam sinthi mariththaar
Moontam naalil uyirodu elunthaar
Naettum intum maaridaa nam Yesuvai
Karangalai uyarththi thuthiththiduvom

Seeyonile En Thida Asthiparam – சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே

Seeyonile En Thida Asthiparam

சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே
அவர் நான் என்றும் நம்பும் கன்மலை (2)

1. கலங்கிடுவேனோ ?பதறிடுவேனோ ?
கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே
அசையா என் நம்பிக்கை நங்கூரமே
இயேசுவில் மாத்திரமே (2)

2. புயலடித்தாலும் அலை மோதினாலும்
எவர் எனக்கெதிராய் எழும்பினாலும்
எனக்கு எட்டாத உயரத்திலே
எடுத்தவர் நிறுத்திடுவார் (2)

3. வியாதியினாலே காயம் வருந்தி
வாடியே மரண நிழல் சூழினும்
விசுவாசத்தின் கரத்தாலவர்
வாக்கை நான் பற்றிடுவேன் (2)

4. மா பரிசுத்த விசுவாசத்தாலே
மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே
திரை வழியாம் தன் சரீரத்தினால்
திறந்தாரே தூய வழி (2)

5. நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன்
என்னையே படைத்திட்டேன்
அவர் கரத்தில் முடிவுவரை
நடத்திடுவார் முற்றுமாய் இரட்சிப்பாரே (2)

Seeyoanile En Thida Asthipaaram Kristhuvae – Avar

Naan endrum nambum kanmalai (2)

1. Kalangiduvaenoa? Padhariduvaznoa?
Kartharil visuvaasam irukkaiyilae
Asaiyaa en nambikkai nangooramae
Yaesuvil maathiramae (2)

2. Puyal adithaalum alai moadhinaalum
Evar enakkedhiraai ezhumbinaalum
Enakku ettaadha uyarathilae
Eduthavar niruthiduvaar (2)

3. Vyaadhiyinaalae kaayam varundhi
Vaadiyae marana nizhal soozhinum
Visuvaasathin karathaal Avar
Vaakkai naan pattriduvaen (2)

4. Maa parisutha visuvaasathaalae
Maa parisutha sthalam aegidavae
Thirai vazhiyaam Tham sareerathinaal
Thirandhaarae thooya vazhi (2)

5. Naan visuvaasippoar innar endrarivaen
Ennaiyae padaithittaen Avar karathil
Mudivu varai ennai nadathiduvaar
Muttrumaai ratchippaarae (2)

Yesuvin Namathinal Oru Arputham – இயேசுவின் நாமத்தினால் ஒரு அற்புதம்

Yesuvin Namathinal Oru Arputham

இயேசுவின் நாமத்தினால் ஒரு அற்புதம் உனக்கு நடக்கும்
இயேசுவின் நாமத்தினால் ஒரு புது வழி உனக்கு திறக்கும்

1. மூடிய கதவு திறக்கும், முன் நிற்கும் தடைகள் விளகும்
இருளின் நாட்கள் நீங்கும் மாவெளிச்சம் உன்மேல் உதிக்கும்

2. சூழ்னிலை எனக்காய் மாறும் நீ சந்தித்த தோல்வி மறையும்
சத்துரு கோட்டை உடையும் நீ ஜெபித்தது வந்து சேரும்

3. தேவன் தந்த தரிசனம் அவை நிச்சயம் நடந்தே தீரும்
கர்த்தரின் வாக்குத்தத்தம் அதை நிச்சயம் என்னை உயர்த்தும்

4. தூதர்கள் சேனை இறங்கும் ஒர் யுத்தம் எனக்காய் நடக்கும்
சிலுவையின் வெற்றி யாவும் உன் சொந்தமாய் வந்து சேரும்

Christuvin Yutha Veerar Naangal – கிறிஸ்துவின் யுத்த வீரர் நாங்கள்

Christuvin Yutha Veerar Naangal
கிறிஸ்துவின் யுத்த வீரர் நாங்கள்
உயர்த்துவோம் இயேசுவின் நாமத்தை
ஒன்றிணைந்து நாம் செயல்படுவோம்
கட்டுவோம் தேவ இராஜ்யத்தை (2)

யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம்
கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம்(2)

1. எழும்பிடு எழும்பிடு சேனையாய்
புறப்படு பரிசுத்த ஜாதியாய்
முறித்திடு தேசத்தின் சாபத்தை
ஜெயித்திடு இயேசுவின் நாமத்தால் (2) – யுத்தம் செய்வோம்

2. பெற்றிடு அக்கினி அபிஷேகத்தை
நிரம்பிடு தேவ பெலத்தாலே
துரத்திடு எதிரியின் சேனையை
வென்றிடு தூய ஆவியினால் (2) – யுத்தம் செய்வோம்

3. போரிடு நல்ல சேவகனாய்
தொடர்ந்திடு ஓட்டத்தை ஜெயத்துடன்
காத்திடு என்றும் விசுவாசத்தை
சூடிடு நீதியின் கிரீடத்தை (2) – யுத்தம் செய்வோம்

Christuvin yutha veerar naangal
Uyarthuvom Yesuvin naamathai
Onrinainthu naam seyalpaduvom
Kattuvom Deva raajiyathai (2)

Yutham seivom nangal yutham seivom
Christhuvukkai enrendrum yutham seivom (2)

1. Elumbidu elumbidu senaiyaai
Purappadu parisutha jaathiyaai
Murithidu thesathin saapathai
Jeyithidu yesuvin naamathal (2) – Yutham

2. Petridu akkini abhisegathai
Nirambidu Deve belathaalae
Thurathidu ethiriyin senaiyai
Venridu Thooya Aaviyinaal (2) – Yutham

3. Poridu nalla sevaganaai
Thodarnthidu otathai jeyathudan
Kaathidu enrum visuvasathai
Soodidu neethiyin greedathai (2) – Yutham

Devathi Devanukku Aarathanai – தேவாதி தேவனுக்கு ஆராதனை

Devathi Devanukku Aarathanai
தேவாதி தேவனுக்கு ஆராதனை
கர்த்தாதி கர்த்தனுக்கு ஆராதனை
இராஜாதி இராஜனுக்கு ஆராதனை
மன்னாதி மன்னனுக்கு ஆராதனை

ஆராதனை துதி ஆராதனை
ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை

1. ஆவியான தேவனுக்கு ஆராதனை
அபிஷேக நாதனுக்கு ஆராதனை
தேற்றரவாளனுக்கு ஆராதனை
தூயாதி தூயனுக்கு ஆராதனை – ஆராதனை

2. ஆத்தும நேசருக்கு ஆராதனை
இம்மானுவேலனுக்கு ஆராதனை
மணவாளன் இயேசுவுக்கு ஆராதனை
மகிமையின் இராஜனுக்கு ஆராதனை – ஆராதனை

3. அப்பா பிதாவே உமக்கு ஆராதனை
அனாதி தேவனுக்கு ஆராதனை
யேகோவா தேவனுக்கு ஆராதனை
காருண்ய கர்த்தனுக்கு ஆராதனை – ஆராதனை

Devathi Devanukku Aarathanai
Karthaathi Karthanukku aarathanai
Raajaathi Rajanukku aarathanai
Mannaathi Mannanukku aarathanai

Aarathanai thuthi aarathanai
Aaviyodum unmayodum aarathanai

1. Aaviyaana Devanukku aarathanai
Abhishega Naathanukku aarathanai
Thetraravalanukku aarathanai
Thooyathi Thooyanukku aarathanai – Aarathanai

2. Aathuma Nesarukku aarathanai
Immanuvelanukku aarathanai
Manavaalan Yesuvukku aarathanai
Magimayin Raajanukku aarathanai – Aarathanai

3. Appa Pithaavae umakku aarathanai
Anaathi Devanukku aarathanai
Yegova Devanukku aarathanai
Kaarunya Karthanukku aarathanai – Aarathanai