Song Category: Tamil

Christhaesu Uyirthezhunthar – கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார்

Christhaesu Uyirthezhunthar
1. கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார்
கல்லறை விட்டெழுந்தார்
மகிமையோடு வல்லமையாய்
வெற்றி சிறந்தெழுநதார்

அல்லேலூயா அல்லேலூயா (2)

2. மரணத்தின் கூர் ஒடித்து
பாதாளத்தை வென்று
சத்துரு சேனை நடுநடுங்க
இரட்சகர் உயிர்த்தெழுந்தார் – ஆ-ஆ -ஆ- அல்

3. சபையாம் நம் சரீரம்
மகிழ்ந்து களிகூற – மன்னாதி
மன்னன் இயேசு கிறிஸ்து
மகிமையாய் எழுந்தார் – ஆ -ஆ -ஆ- அல்

4. உன்னத ஆவியோடும்
உற்சாக மனதுடனும்
உயிர்த்தெழுந்த உன்னதரை
உயர்த்தி பாடிடுவோம் – ஆ -ஆ -ஆ- அல்

Paavi Naan Kirubai Tharum – பாவி நான் கிருபை காட்டும்

Paavi Naan Kirubai Tharum

பாவி நான் கிருபை காட்டும்
மண்டும் ஓர் தருணம் தாரும்
சுயத்தை முற்றும் வெறுத்துவிட்டு
உண்மையாய் உந்தன் வழிநடக்க

1. பாதை தோறும் வேதம் ஏந்தி
பரிசுத்தன் என்று காட்டுகின்றேன்
வேதம் காட்டும் பாதை செல்ல
உள்ளமே இன்றி வாழ்கின்றேன் – பாவி

2. கள்ளர் அடித்து மடியும் மனிதன்
பாதை ஓரம் கிடக்கும்போது
என்னைக் காத்தால் போதும் என்று
ஒதுங்கி ஒதுங்கி ஓடுகின்றேன் – பாவி

3. ஆயிரம் ஆயிரம் ஜாதிகள் வாழும்
இந்திய தேசம் மட்பைக் காண
நித்தம் உந்தன் சத்தம் கேட்டும்
பித்தன் போல வாழ்ந்துவிட்டேன் – பாவி

Kalvariyin Karunai Ithae -கல்வாரியின் கருணையிதே

Kalvariyin Karunai Ithae
கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே! – 2

விலையேறப் பெற்ற திருரத்தமே – அவர்
விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே

1. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே

2. சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே

4. எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன்

5. மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே

Kalvaariyin Karunnaiyithae
Kaayangalil Kaanuthae
Karththan Yesu Paar Unakkaay
Kashdangal Sakiththaarae

Vilaiyaerap Petta Thiruraththamae – Avar
Vilaavinintu Paayuthae
Vilaiyaerap Pettronaay
Unnai Maatta Vilaiyaaka Eenthanarae

1. Pon Velliyo Mannnnin Vaalvo
Ivvanpuk Kinnaiyaakumo
Annaiyilum Anpu Vaiththae
Tham Jeevanai Eenthaarae

2. Sinthaiyilae Paarangalum
Ninthaikal Aettavaraay
Thongukintar Paathakan Pol
Mangaa Vaalvalikkavae

3. Enthanukkaay Kalvaariyil
Inthap Paadukal Pattir
Thanthaiyae Um Anpinaiyae
Sinthiththae Sevai Seyvaen

4. Manushanai Neer Ninaikkavum
Avanai Visaarikkavum
Mannnnil Avan Emmaaththiram
Mannavaa Um Thayavae

Nalla Kalam Porakuthu – நல்ல காலம் பொறக்குது

Nalla Kalam Porakuthu
நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது – 3

மகனே நல்ல காலம் பொறக்குது
மகளே நல்ல காலம் பொறக்குது

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

பாவங்கள் சாபங்கள் மாறுது இயேசுவாலே – 2
பயங்கள் குழப்பங்கள் நீங்குது இயேசுவாலே – 2
கவலைகள் கண்ணீர்கள் மாறுது
வறுமைகள் வேதனைகள் நீங்குது இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது

கடன்சுமை கஷ்டங்கள் மாறுது இயேசுவாலே – 2
நிந்தைகள் அவமானம் நீங்குது இயேசுவாலே – 2
போட்டிகள் பொறாமைகள் மாறுது
தடைபட்ட காரியங்கள் வாய்க்குது இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது

சிலுவையில் உனக்காக மரித்த இயேசுவாலே – 2
தீமைகள் நன்மையாக மாறுது இயேசுவாலே – 2
இயேசுவின் நாமத்தில் வேண்டிடு
வாழ்வில் நலம் வளம் பெற்றிடு இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது – 2

மகனே நல்ல காலம் பொறக்குது
மகளே நல்ல காலம் பொறக்குது

Uyirthezhunthar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு

Uyirthezhunthar Yesu
உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்
உன்னையும் என்னையும் மீட்டிட
உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்
வேதாளம் பாதாளம் நடுங்கிட – 2

அல்லேலூயா கீதம் பாடி
ராஜாவை உயர்த்திடுவோம் – 2

1. கல்லறை கதவும் திறந்திட
காவலர் யாவரும் திகைத்திட – 2
உயிர்த்தார்.. ஜெயித்தார்..
சொன்ன வாக்கை செயலாக்கினார் – 2

2. ஐீவனின் அதிபதி இயேசுவை
பாதாளம் தாங்கிட முடியுமோ
மரித்தார்.. உயிர்த்தார்..
பாவ பலியாகி வாழ்வளித்தார் – 2

3. மரணத்தை வென்ற மகிபனை
மனதில் உண்மையாய் ஏற்றிட்டால்
மகனாவாய்.. மகளாவாய்
அவர் உரிமைக்கு சொந்தமாகுவாய்

Uyirthezhunthar Yesu Jaithezhunthar
Unnaium Ennaium Metida
Uyirthezhunthar yesu Jaithezhunthar
Vedalam Padalam Nadungida

Alleluyaah Getham Padi
Rajavai Uyarthiduvom

1. Kallarai kathavum Thiranthida
Kaavalar yavarum Thigaithida
Uyirthaar… Jaithaar…
Sonna Vaarthaiyai Seyallakinaar

2. Jevanin Athibathi Yesuvai
Pathalam thangida Mudiumo
Marithaar… Uyirthaar…
Pava Baliyagi Valvazhithaar

3. Maranathai Vendra Magibanai
Manathil Unmaiyaai Yaetrital
Maganavaai.. Magalavaai..
Avar Urimaiku Sonthamaguvaai

Alleluyaah Getham Padi
Rajavai Uyarthiduvom
Nesarai Uyarthiduvom

Thanthalum Yesuve Um – தந்தாளும் இயேசுவே உம்

Thantharulum Yesuve Um

தந்தாளும் இயேசுவே உம் சமுகம் தேவ மைந்தர்கள் கூடிடும் இந்நேரமிதில்

1. பத்மு தீவில் பரிசுத்தக் காட்சி ஈந்த வண்ணமே புத்திரர்கள் மத்தியிலும் உந்தன் திவ்விய தரிசனம் இத்தினத்தில் இங்கு ஈந்திடும் — தேவா! – தந்தாளும்

2. நல்வழியை நாடிடாமல் ஓடும் நரர் யாவர்க்கும் கல்வாரியின் அன்பை இன்று கர்த்தனே நீர் காட்டியே நற்குணம் அவர்க்கு நல்கிடும் — தேவா! – தந்தாளும்

3. சத்தி இல்லை எங்களுக்கு, சாம்பலும் தூசியும் கர்த்தனே கருணை கூர்ந்து தந்திடும் சர்வாயுதம் புத்தியாக யுத்தம் செய்த — தேவா! – தந்தாளும்

4. என்னை நோக்கிக் கூப்பிடில் அளித்திடுவேன் உத்தரம்,
பின்னும் நீ அறிந்திடாத வல்லமைகள் காட்டுவேன் என்றவா! இந்நேரம் காட்டுமே — தேவா! – தந்தாளும்

5. சதா காலங்களிலும் இருப்பேன் உங்கள் கூடவே சத்துருவின் வல்லமைகள் ஒன்றும் அணுகாதென்றீர் ஆதலால் அனந்தம் ஸ்தோத்திரம் — தேவா!
– தந்தாளும்

En Nilamai Nandrai – என் நிலைமை நன்றாய்

En Nilamai Nandrai

என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
பாவி என்னை அழைத்தவர்
மீறின பின்பும் வெறுக்காதவர் – 2

உம்மைப்போல் நேசிக்க ஒருவரும் இல்லை
நேசித்தவரில் இது போல்
அன்பை இன்னும் காணவில்லை – 2

விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை
உம் அன்பை மட்டும் என்னவென்று
சொல்ல தெரியவில்லை – 2

தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே
உம் அன்பில் ஒன்றே
உண்மை உண்டென்று கண்டேன் -2 – என் நிலைமை

Sarvaathikaari Sarva Valla – சர்வாதிகாரி சர்வ வல்ல

Sarvaathikaari Sarva Valla Thevane
சர்வாதிகாரி சர்வ வல்ல தேவனே
சர்வாதிபதியாம் என் இயேசுவே
அல்லேலூயா (4)

1. அடிமையாக வாழ்ந்தவர்க்கு
விடுதலை ஈந்தார்
உரிமையிழந்து தவிப்பவருக்கு
நியாயமே செய்தார்

2. நாவு எல்லாம் அறிக்கை செய்யும்
நம் இயேசு தேவனை
முழங்கால் யாவும் முடங்கிடுமே
அவரின் நாமத்தில்

3. பாவம் வியாதி மரணமெல்லாம்
ஜெயித்து உயிர்த்தவர்
மனந்திரும்பும் பாவியை
மார்பில் அணைப்பவர்

4. வானத்திலும் பூமியிலும்
பூமியின் கீழும்
சர்வாதிகாரியாக என்றும் இருப்பவர்

5. ராஜாதி ராஜாவாய் மேகத்தில் வருவார்
அவரோடு நாமும் இங்கே
ஆளுகை செய்வோம்

Ennai Munnarindhu – என்னை முன் அறிந்து

Ennai Munnarindhu
என்னை முன் அறிந்து முன் குறித்தவரே
என்னை இறுதி வரை தாங்கி கொள்பவரே-2

வேறொன்றையும் நான் கேட்கவில்லை
வேறெதையும் எதிர் பார்க்கவில்லை
முற்றிலும் தந்துவிட்டேன் இயேசுவே
முழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே

என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே
இறுதி வரை உம்மில் மாற்றமில்லை-2

ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில்
அதிசயமே என்னை நீர் அழைத்தது-2
தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னை
தகுதி படுத்த உம்மிடமாய் இழுத்துக்கொண்டீரே-2

என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே
இறுதி வரை உம்மில் மாற்றமில்லை-2-என்னை

Ennai Munnarindhu Munkurithavarae
Ennai irudhivarai thaangi kolbavarae
Vaer ondraiyum naan kaetkavillai
Vaeredhaiyum edhirpaarkavilai
Mutrilum thandhuvittaen yesuvae
Muzhuvadhum saarndhuvittaen ummaiyae

Chorus:
Ennai azhaithavarae
Ennai nadathuveerae
Irudhivarai ummil maatramillai – 2

Verse:
Aayiram padhinaayiram janangal vaazhum boomiyil
Adhisayamae ennai neer azhaithadhu – 2

Thagudhi Illai endru odhungi nindra ennai
Thagudhipadutha ummidamaai izhuthu kondeerae – 2

Ummai Padava Iyya – உமை பாடவா அய்யா

Ummai Padava Iyya
உமை பாடவா – அய்யா உமை பாடவா
என்னை அழைத்தீரய்யா
உத்தமனே உன்னதனே
உயர்ந்த அடைக்கலமே
ஒன்றுக்கும் உதவா எனக்கு
உம் அருளை தந்தீரே — உமை

தாயின் அய்யா தாயின் கர்பத்திலே
தெரிந்திடுத்தீரோ — அய்யா -தாயின் !
தாயின் (அய்யாதாயின்) கர்பத்திலே
தெரிந்திடுத்தீரோ

காணாத வென்காசை கண்டெடுத்தீரே அய்யா
கடல் போன்ற மணலிலே
துரும்பாக கிடந்த என்னை
கடல் போன்ற ..
கசப்பான இருதயத்தை கரும்பாக மாற்றினீரே – உமை

மரண ..அய்யா மரண பள்ளத்தாக்கில்
நான் நடந்த போதேல்லாம் – மரண
அய்யா மரண ..மரண பள்ளத்தாக்கில்
நான் நடந்த போதேல்லாம்

கரம் பிடித்து வழி நடத்தி கண்மணிபோல் காத்தீரே
அலை போன்ற சோதனைகள்
அழிக்க வந்த வேளையெல்லாம்
அலை போன்ற சோதனைகள்
அழிக்க வந்த வேளையெல்லாம்
கனமலையின் வெடிப்பினிலே மறைத்து என்னை உயர்த்தினீரே – உமை