Song Tags: Jesus Redeems Tamil Cross Songs

Maenmai Paaratuven – மேன்மை பாராட்டுவேன்

Maenmai Paaratuven
மேன்மை பாராட்டுவேன் நான்
மேன்மை பாராட்டவேனே – 2
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன் – என்
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன்

சிலுவை எந்தன் மேன்மை
சிலுவை எந்தன் அடைக்கலம் – 2
ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
சிலுவைநாதரே ஸ்தோத்திரம் – 2

1. சிலுவையில் அரையுண்டேன் நான்
சிலுவையில் அரையுண்டேன் – இனி
நானல்ல இயேசுவே என்னில்
என்றும் அவரைக் காட்டிடுவேன்
– சிலுவை எந்தன்

2. சிலுவையை சுமந்திடுவேன் நான்
சிலுவையை சுமந்திடுவேன் – இனி
இயேசுவின் மகிமைக்காய் நானே
என்றும் பாடுகள் சகித்திடுவேன் – சிலுவை எந்தன்

Kalvariyin Karunai Ithae -கல்வாரியின் கருணையிதே

Kalvariyin Karunai Ithae
கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே! – 2

விலையேறப் பெற்ற திருரத்தமே – அவர்
விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய்
உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே

1. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
இவ்வன்புக் கிணையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே

2. சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே

4. எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பினையே
சிந்தித்தே சேவை செய்வேன்

5. மனுஷனை நீர் நினைக்கவும்
அவனை விசாரிக்கவும்
மண்ணில் அவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே

Kalvaariyin Karunnaiyithae
Kaayangalil Kaanuthae
Karththan Yesu Paar Unakkaay
Kashdangal Sakiththaarae

Vilaiyaerap Petta Thiruraththamae – Avar
Vilaavinintu Paayuthae
Vilaiyaerap Pettronaay
Unnai Maatta Vilaiyaaka Eenthanarae

1. Pon Velliyo Mannnnin Vaalvo
Ivvanpuk Kinnaiyaakumo
Annaiyilum Anpu Vaiththae
Tham Jeevanai Eenthaarae

2. Sinthaiyilae Paarangalum
Ninthaikal Aettavaraay
Thongukintar Paathakan Pol
Mangaa Vaalvalikkavae

3. Enthanukkaay Kalvaariyil
Inthap Paadukal Pattir
Thanthaiyae Um Anpinaiyae
Sinthiththae Sevai Seyvaen

4. Manushanai Neer Ninaikkavum
Avanai Visaarikkavum
Mannnnil Avan Emmaaththiram
Mannavaa Um Thayavae

Nalla Kalam Porakuthu – நல்ல காலம் பொறக்குது

Nalla Kalam Porakuthu
நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது – 3

மகனே நல்ல காலம் பொறக்குது
மகளே நல்ல காலம் பொறக்குது

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

பாவங்கள் சாபங்கள் மாறுது இயேசுவாலே – 2
பயங்கள் குழப்பங்கள் நீங்குது இயேசுவாலே – 2
கவலைகள் கண்ணீர்கள் மாறுது
வறுமைகள் வேதனைகள் நீங்குது இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது

கடன்சுமை கஷ்டங்கள் மாறுது இயேசுவாலே – 2
நிந்தைகள் அவமானம் நீங்குது இயேசுவாலே – 2
போட்டிகள் பொறாமைகள் மாறுது
தடைபட்ட காரியங்கள் வாய்க்குது இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது

சிலுவையில் உனக்காக மரித்த இயேசுவாலே – 2
தீமைகள் நன்மையாக மாறுது இயேசுவாலே – 2
இயேசுவின் நாமத்தில் வேண்டிடு
வாழ்வில் நலம் வளம் பெற்றிடு இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது – 2

மகனே நல்ல காலம் பொறக்குது
மகளே நல்ல காலம் பொறக்குது

Karthar Thuyar Dhoniyai – கர்த்தர் துயர் தொனியாய்

Karthar Thuyar Dhoniyai
கர்த்தர் துயர் தொனியாய்
கதறி முகங்கவிழ்ந்தே
இருள் சூழ்ந்த தோட்டத்தில்
இதயம் நொறுங்கி ஜெபித்தார்

1. மரணத்தின் வியாகுலமோ
மனிதர் துணை இல்லையோ
தேவ தூதன் தோன்றிடவே
தருணம் நெருங்க ஒப்படைத்தார்
துன்ப சுமை சுமந்தார் – கர்த்தர்

2. துக்கத்தால் தம் சீஷர்களே
தலை சாய்த்து தூங்கினாரே
தம்மை மூவர் கைவிடவே
தூரமாய் கடந்தே திகிலடைந்தார்
தன்னந்தனிமையிலே – கர்த்தர்

3. பிதாவே இப்பாத்திரத்தின்
பங்கினை நான் ஏற்றுக்கொண்டேன்
ஆகட்டும் உமது சித்தம்
அது நீங்கிடுமோ என்றுரைத்தார்
ஆ! இரத்த வேர்வையுடன் – கர்த்தர்

4. திறந்த கெத்சமெனேயில்
துணிந்து வந்த பகைஞன்
என்ன துரோகம் செய்திடினும்
எந்தன் சிநேகிதனே என்றழைத்தார்
என்ன மா அன்பிதுவோ – கர்த்தர்

5. பரமன் ஜெப சத்தமே
பூங்காவினில் கேட்கிறதே
பெருமூச்சுடன் அழைக்கும்
அவரோடிணைந்தே கண்ணீருடன்
ஆவியுடன் ஜெபிப்பேன் – கர்த்தர்

6. இயேசு தாங்கின துன்பங்கள்
என்னைத் தாண்டியே செல்லாதே
எனக்கும் அதில் பங்குண்டே
சிலுவை மரணப் பாடுகளால்
சீயோனில் சேர்ந்திடுவேன் – கர்த்தர்

 

Karthar Thuyar Dhoniyai
Kathari Mukangavilnthae
Irul Soolntha Thotathil
Ithayam Norungi Jepithaar

1. Maranathin Viyaakulamo
Manithar Thunai Illaiyo
Dhaeva Thoothan Thondidavae
Tharunam Nerunga Oppataithaar
Thunba Sumai Sumanthaar – Karthar

2. Thukathaal Tham Seesharkalae
Thalai Saaithu Thoonginaarae
Thammai Moovar Kaividavae
Thooramaai Kadanthae Thikilatainthaar
Thananthanimaiyilae – Karthar

3. Pithaavae Ippaathirathin
Panginai Naan Yettukontaen
Aakatum Umathu Sitham
Athu Neengidumo Enturaithaar
Aa! Iraththa Vaervaiyudan – Karthar

4. Thirantha Kethsamenaeyil
Thuninthu Vantha Pakainjan
Enna Thurokam Seithitinum
Enthan Sinaekithanae Entalaithaar
Enna Maa Anpithuvo – Karthar

5. Paraman Jeba Sathamae
Poongaavinil Kaetkirathae
Perumoochchudan Alaikkum
Avarotinnainthae Kanneerudan
Aaviyudan Jebipaen – Karthar

6. Yesu Thaangina Thunpangal
Ennaith Thaantiyae Sellaathae
Enakkum Athil Pangunntae
Siluvai Marana Paadukalaal
Seeyonil Sernthiduvaen – Karthar

Magimai Adaiyum Yesu – மகிமையடையும் இயேசு

Magimai Adaiyum Yesu
மகிமையடையும் இயேசு ராஜனே
மாறாத நல்ல மேய்ப்பனே
உந்தன் திருநாமம் வாழ்க
உலகெங்கும் உம் அரசு வருக – வருக

1. உலகமெல்லாம் மீட்படைய
உம் ஜீவன் தந்தீரையா

2. பாவமெல்லாம் கழுவிடவே
உம் இரத்தம் சிந்தினீரே

3. சாபமெல்லாம் போக்கிடவே
முள்முடி தாங்கினீரே

4. என் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
என் துக்கம் சுமந்தீரையா

5. கசையடிகள் உனக்காக
காயங்கள் உனக்காக

6. நோய்களெல்லாம் நீக்கிடவே
காயங்கள் பட்டீரையா