Song Tags: Jesus Reedems Song Lyrics

Theengai Kaanaathirupaai – தீங்கை காணாதிருப்பாய்

Theengai Kaanaathirupaai
தீங்கை காணாதிருப்பாய் – 4
என் மகனே என் மகளே – இனி – 2
தீங்கை காணாதிருப்பாய் – 4

அல்லேலுயா அல்லேலுயா என்றே பாடிடு
இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு – உன்
தீமைகள் நன்மையாய் மாறிடும் – 2 – தீங்கை

1. தீமைகள் தேசத்தில் பெருகிடும்
வறுமைகள் வியாதிகள் தாக்கிடும்
வல்லவர் இயேசுவின் கரங்களே
தீமையை விலக்கியே காத்திடுமே – உன் – தீங்கை

2. பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார்
உனக்கு தீமைகள் செய்ய பதிவிருப்பார்
உலகத்தை ஜெயித்த நம் இயேசு
பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார் – தீங்கை

3. எதிராக சாத்தான் எழும்பிடுவான்
உனக்கு தீங்குசெய்ய எத்தனிப்பான்
சாத்தானின் தலையை மிதித்தவர்
சத்துரு சேனையை சிதறடிப்பார் – தீங்கை

Kilakukum Maerkukum – கிழக்குக்கும் மேற்குக்கும்

Kilakukum Maerkukum
கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம்
அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே

திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கி
எந்தன் பாவம் நீங்க தன்னையே தந்தவரே – இயேசுவே

1. ஒண்ணு ரெண்டு தப்புகளில்லை
லட்சங்களுள் அடங்கவில்லை
ஆனால் என் நேசர் கணக்கில்
என் பெயரில் பாவம் ஒன்றில்லை

2. இவர் புகழ் சொல்லி முடிக்க
உலகத்தில் நாட்களுமில்லை
இயேசுவுக்கு நிகராக
உலகில் எந்த உறவுமில்லை
இயேசுவுக்கு நிகராய்
இவ்வுலகில் எந்த உறவுமில்லை

அல்லேலூயா ! போற்றிடுவேன்
அல்லேலூயா ! புகழ்ந்திடுவேன்
அல்லேலூயா ! உயர்த்திடுவேன்
மன்னாதி மன்னவனை !
அல்லேலூயா ! தொழுது கொள்வேன்
அல்லேலுயா ! பணிந்து கொள்வேன்
அல்லேலூயா ! ஆராதிப்பேன்
கர்த்தாதி கர்த்தரையே !

Maenmai Paaratuven – மேன்மை பாராட்டுவேன்

Maenmai Paaratuven
மேன்மை பாராட்டுவேன் நான்
மேன்மை பாராட்டவேனே – 2
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன் – என்
இயேசுவின் அன்பினையே
மேன்மை பாராட்டுவேன்

சிலுவை எந்தன் மேன்மை
சிலுவை எந்தன் அடைக்கலம் – 2
ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்
சிலுவைநாதரே ஸ்தோத்திரம் – 2

1. சிலுவையில் அரையுண்டேன் நான்
சிலுவையில் அரையுண்டேன் – இனி
நானல்ல இயேசுவே என்னில்
என்றும் அவரைக் காட்டிடுவேன்
– சிலுவை எந்தன்

2. சிலுவையை சுமந்திடுவேன் நான்
சிலுவையை சுமந்திடுவேன் – இனி
இயேசுவின் மகிமைக்காய் நானே
என்றும் பாடுகள் சகித்திடுவேன் – சிலுவை எந்தன்

Kattupuravin Satham – காட்டு புறாவின் சத்தம்

Kattupuravin Satham
காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்று
கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று

உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன் -2

1. தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே
நீர் எந்தன் நேசர் தானே
நீர் எந்தன் நண்பர்தானே
என்றென்றும் உந்தன் அன்பை என்னவென்று சொல்லிடுவேன்
–உம் வருகைவரை

2. கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்
நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே
நீரின்றி நானும் இல்லை
நீர்தானே எந்தன் எல்லை
என்றென்றும் எந்தன் நாவால் உம்மையே பாடுவேன்
–உம் வருகைவரை

3. பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே
நீர் எந்தன் ஜீவன்தானே
நான் உந்தன் சாயல்தானே
என்றென்றும் எந்தன் மூச்சு உந்தன் பெயர் சொல்லிடுதே
–உம் வருகைவரை

Kaatupuraavin Saththam Kaetkirathae
En Nesar Ennai Thedi Varuvarendru
Kaana Kuyilin Kaanam Isaikindrathae
Mannavar Singaramaai Varuvar Endru
Um Varugaivarai Naan Kathirupaen
En Vili Erandal Endrum Viliththirupaen – 2

1. Thayinum Melaai Unthan Anbu Ullathae
Thanthaiyaga Neer Ennil Valginrerae
Neer Enthan Naesarthanae
Neer Enthan Nanbarthanae
Endrendrum Unthan Anbai Enavendru Nan Soluvaen
– Um Varugai

2. Kanavellaam Endrum Ummaiyae Kanginraen
Ninaivellam Endrum Ummaiyae Sutruthae
Neerinri Naanu Millaiyae
Neerthanae Enthan Ellai
Endrendrum Enthan Naval Ummaiyae Paadiduvaen
– Um Varugai

3. Poorana Aazhagu Ullavarum Neerthanae
Ummaku Negarai Yaarum Inguillaiyae
Neer Enthan Jeevan Thanae
Naan Unthan Saayal Thanae
Endrendrum Enthan Muuchu Unthan Paeyar Solliduthae
– Um Varugai

En Mugan Vekatpattu – என் முகம் வெட்கப்பட்டு

En Mugan Vekatpattu
என் முகம் வெட்கப்பட்டு போவதேயில்ல
ஒரு நாளும் தலைகுனிவு எனக்கு இல்ல

இல்ல இல்ல தோல்வி இல்ல
இல்ல இல்ல கலக்கம் இல்ல – என் முகம்

1. நீதிமானை சோதித்து அறிகிறீர் -என்றும்
பொன்னாக ஜொலித்திட செய்கிறீர்
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை – இல்ல இல்ல

2. என் மீட்பர் உயிரோடு இருக்கிறீர்
எனக்காக யாவையும் செய்கிறீர்
உம் முகம் பார்ப்பதினால்
நீர் எனக்குள் இருப்பதினால் – இல்ல இல்ல

Vetkappattu Povathillai – வெட்கப்பட்டு போவதில்லை

Vetkappattu Povathillai

வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
மகனே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை – என்
மகளே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை

நஷ்டங்கள் வந்தாலும்
இழப்புகள் நேர்ந்தாலும்
நிந்தைகள் சூழ்ந்தாலும்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான் – வெட்கப்பட்டு

குடும்பமே இகழ்ந்தாலும்
உறவுகள் பழித்தாலும்
உலகமே எதிர்த்தாலும்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான் – வெட்கப்பட்டு

என் ஜனம் ஒரு போதும்
வெட்கப்பட்டு போவதில்லை
வெட்கத்திற்கு பதிலாக – இரட்டிப்பான
நன்மைகளை தருவேன் நான்
நன்மைகளை தருவேன் நான் – வெட்கப்பட்டு

Nalla Kalam Porakuthu – நல்ல காலம் பொறக்குது

Nalla Kalam Porakuthu
நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது – 3

மகனே நல்ல காலம் பொறக்குது
மகளே நல்ல காலம் பொறக்குது

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

பாவங்கள் சாபங்கள் மாறுது இயேசுவாலே – 2
பயங்கள் குழப்பங்கள் நீங்குது இயேசுவாலே – 2
கவலைகள் கண்ணீர்கள் மாறுது
வறுமைகள் வேதனைகள் நீங்குது இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது

கடன்சுமை கஷ்டங்கள் மாறுது இயேசுவாலே – 2
நிந்தைகள் அவமானம் நீங்குது இயேசுவாலே – 2
போட்டிகள் பொறாமைகள் மாறுது
தடைபட்ட காரியங்கள் வாய்க்குது இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது

சிலுவையில் உனக்காக மரித்த இயேசுவாலே – 2
தீமைகள் நன்மையாக மாறுது இயேசுவாலே – 2
இயேசுவின் நாமத்தில் வேண்டிடு
வாழ்வில் நலம் வளம் பெற்றிடு இயேசுவாலே – 3

இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2
என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2

நல்ல காலம் பொறக்குது
உனக்கு நல்ல காலம் பொறக்குது – 2

மகனே நல்ல காலம் பொறக்குது
மகளே நல்ல காலம் பொறக்குது

Siluvai Naadhar Yesuvin – சிலுவை நாதர் இயேசுவின்

Siluvai Naadhar Yesuvin
சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களை பார்க்கின்றன

1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே – சிலுவை நாதர்

2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் – சிலுவை நாதர்

3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் – சிலுவை நாதர்

4. திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் – சிலுவை நாதர்

Siluvai Naadhar Yaesuvin
Paeroli Veesidum Thooya Kangal
Ennai Noakki Paarkkindrana
Tham Kaayangalai Paarkkindrana

1. En Kaiyaal Paavangal Seidhittaal
Tham Kaiyin Kaayangal Paarkkindraarae
Theeya Vazhiyil En Kaalgal Sendraal
Tham Kaalin Kaayangal Paarkkindraarae – Siluvai Naadhar

2. Theettulla Ennam En Idhayam Kondaal
Eetti Paaindha Nenjai Noakkukindraar
Veenperumai Ennil Idampetraal
Mulmudi Paarththida Aengukindraar – Siluvai Naadhar

3. Avar Rattham En Paavam Kazhuvidum
Avar Kanneer Ennai Merugaetridum
Kalangarai Vilakkaaga Oli Veesuvaen
Kalanguvoarai Avar Mandhai Saerpaen – Siluvai Naadhar

4. Thirundhidaa Paavikkaai Azhukindraar
Varundhidaa Pillaikkaai Kalangukindraar
Tham Kanneer Kaayaththil Vizhundhida
Kanneerum Ratthamum Sindhukindraar – Siluvai Naadhar