All Songs by Saral Navaroji

Santhosha Vinnoliye – சந்தோஷ விண்ணொளியே

Santhosha Vinnoliye

சந்தோஷ விண்ணொளியே
இயேசு சாந்த சொரூபியவர்
பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா
பாரில் மலர்ந்துதித்தார்

இன்ப பரலோகம் துறந்தவர்
துன்பம் சகித்திட வந்தவர்
பாவ மனிதரை மீட்டவர்
பலியாகவே பிறந்தார்

பூலோக மேன்மைகள் தேடாதவர்
பேரும் புகழும் நாடாதவர்
ஒன்றான மெய் தேவன் இயேசுவே
என் ஆத்ம இரட்சகரே

ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்
தேவாதி தேவன் சுதன் இவர்
இயேசுவல்லால் வேறு யாருமில்லை
இரட்சண்யம் ஈந்திடவே

ஆடம்பர வாழ்வை வெறுத்தவர்
அண்ணல் எளிமையாய் வாழ்ந்தவர்
எம்மையும் தம்மைப் போல் மாற்றிடும்
இயேசுவைப் பின்பற்றுவோம்

எங்கள் சமாதானப் பிரபு இவர்
இயேசு அதிசயமானவர்
வேதம் நிறைவேறும் காலமே
வேகம் வருகின்றாரே

Paraloga Raajiya Vaasi – பரலோக இராஜ்ஜிய வாசி

Paraloga Raajiya Vaasi
பரலோக இராஜ்ஜிய வாசி
பரன் இயேசுவின் மெய் விசுவாசி
புவி யாத்திரை செய் பரதேசி
பரன் பாதம் நீ மிக நேசி

சரணங்கள்

ஆபிரகாம் ஈசாக்குடனே
ஆதிப் பிதாக்கள் யாவருமே
தேவனுண்டாக்கின மெய் ஸ்தலமே
தேடியே நாடியே சென்றனரே
அந்நியரே பரதேசிகளே – பரலோகமே

திரும்பியே பாரோம் மறந்த தேசம்
தீவிரம் செல்வோம் சுய தேசம்
தூதர்கள் வாழும் பரமதேசம்
துயப் பிதா ஒளி வீசும் தேசம்
மேலாக பக்தரின் சொந்த தேசம் – பரலோகமே

தனித்தனியே யாத்திரை செல்லுவோம்
கூட்டங்கலாகத் திரண்டு செல்லுவோம்
குடும்பம் குடும்பமாகச் செல்வோம்
ஜாதி ஜனங்களும் கூடிச் செல்வோம்
சேனாதிபதி கர்த்தர் பின் செல்வோம் – பரலோகமே

நன்மையையும் மேன்மையுமாம் நகரம்
நல அஸ்திபார புது நகரம்
வாக்குத்தத்தத்தின் திட நகரம்
விசுவாசத்தால் அடையும் நகரம்
ஏறுகின்றோம் சீயோன் சிகரம் – பரலோகமே

சாவு துக்கம் அங்கே இல்லையே
சாத்தானின் சேனை அங்கில்லையே
கண்ணீர் கவலை அங்கில்லையே
காரிருள் கொஞ்சமும் அங்கில்லையே
பஞ்சம் பசி ஒன்றும் அங்கில்லையே – பரலோகமே

வெண் வஸ்திரம் பவனி நடக்க
வெண் குருத்தோலை கொடி பறக்க
பேரிடி ஸ்தோத்திர தொனி முழங்க
பெருவெள்ளம் ஓசைப்பட்டொலிக்க
கர்த்தரைக் காண்போம் கண் ஜொலிக்க – பரலோகமே

பொன் பொருள் வேண்டாம் இயேசு போதும்
மண் ஆசை வேண்டாம் இயேசு போதும்
பாவமே வேண்டாம் இயேசு போதும்
லோகமே வேண்டாம் இயேசு போதும்
ஆத்தும இரட்சகர் இயேசு போதும் – பரலோகமே

நம்பிக்கை பொங்கப் பாடிடுவேன்
நல மனச் சாட்சி நாடிடுவேன்
இத்தரை யாத்திரை கடந்திடுவேன்
அக்கறை சேர்ந்து வாழ்ந்திடுவேன்
அந்த தினம் என்று கண்டிடுவேன் – பரலோகமே

Siluvai Sumantha Uruvam – சிலுவை சுமந்த உருவம்

Siluvai Sumantha Uruvam
சிலுவை சுமந்த உருவம்
சிந்தின ரத்தம் புரண்டோடியே நதி போலவே போகின்றதே
நம்பியே இயேசுவண்டை வா

1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை
காணாய் நிலையான சந்தோசம் பூவினில் கர்த்தாவின் அன்பண்டை வா………

2. ஆத்தும மீட்பை பெற்றிடாமல் ஆத்மா நஷ்டம் அடைந்தால்
உலகம் முழுவதும் ஆதாயம் ஆக்கியும் லாபம் ஒன்றும் இல்லையே

3. பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார்
பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர் பாவமெல்லாம் சுமந்தார்

4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ நித்திய மோட்சவாழ்வில்
தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம் தேவை அதை அடைவாய்

5. தாகமடைந்தோர் எல்லோருமே தாகத்தைத் தீர்க்க வாரும்
ஜீவத்தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர் ஜீவன் உனக்களிப்பார்

6. உந்தன் பெலத்தில் வாழ்ந்திடாதே நிம்மதி நீ இழப்பாய்
கர்த்தரே தஞ்சம் என்று நீ வந்துட்டால் நிம்மதி நீ பெறுவாய்

Siluvai Sumandha Uruvam
Sindhina Rattham Purandoadiyae
Nadhi Poalavae Poagindradhae
Nambiyae Yesuvandai Vaa

1. Pollaa Ulaga Sitrinbangal Ellaam Azhiyum Maayai – 2
Kaanaai Nilaiyaana Sandhoasham Poovinil Kartthaavin Anbandai Vaa – 2

2. Aatthuma Meetpai Pettridaamal Aathmaa Nashtam Adaindhaal – 2
Ulagam Muzhuvadhum Aadhaayam Aakkiyum Laabam Ondrum Illaiyae – 2

3. Paava Manithar Jaadigallai Pasamai Mitka Vandaar – 2
Paava Parigari Karthar Yesunathar Pavam Ellam Sumandar – 2

4. Nithya Jeevan Vangipayo Nithiya Motchavallvil – 2
Thedi Vaarayo Parisutha Jeeviyam Thevai Athai Adaivai – 2

5. Taagam Adainthor Ellorume Tagathai Tirkevarum – 2
Jeeva Tanerane Karthar Yesu Nathar Jeevan Unakaalipaar- 2

6. Undhan Belatthil Vaazhndhidaadhae Nimmadhi Nee Izhappaai – 2
Karttharae Thanjam Endru Nee Vandhu Vittaal Nimmadhi Peruvaai – 2

Tham Kirubai Perithallo – தம் கிருபை பெரிதல்லோ

Tham Kirubai Perithallo
தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை, கிருபை தாருமே

1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாள் எல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்யக் கிருபை தாருமே – தம் கிருபை

2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்று கொண்டேன்
காத்துக் கொள்ள கிருபை தாருமே – தம் கிருபை

3. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே – தம் கிருபை

4. மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய்ச் சகாயம் பெற
தேடி வந்தேன் கிருபை தாருமே – தம் கிருபை

5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியம் உம் கிருபை
என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
நீதியுமே சமாதானமுமே
நிலை நிற்கும் கிருபை தாருமே – தம் கிருபை

6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெப வரம் கிருபை தாருமே – தம் கிருபை

7. கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை
காத்திருந்தே அடைந்திடவே
இயேசுவே உம்மைச் சந்திக்கவே
இரக்கமாய்க் கிருபை தாருமே – தம் கிருபை

Tham kirubai peridhalloa
Em jeevanilum adhae
Immattum kaaththadhuvae
Innum thaevai, kirubai thaarumae

1. Thaazhmai ullavaridam thangidudhae kirubai
Vaazhnaal ellaam adhu poadhumae
Sugamudan tham belamudan
Saevai seiyya kirubai thaarumae – Tham kirubai

2. Nirmoolamaagaadhadhum nirpadhumoa kirubai
Neesan en paavam neenginadhae
Niththiya jeevan petru kondaen
kaaththu kolla kirubai thaarumae – Tham kirubai

3. Dhinam adhikaalaiyil thaedum pudhukirubai
Manam thalarndha naeraththilum
Belaveena sareeraththilum
Poadhumae um kirubai thaarumae – Tham kirubai

4. Maa parisuththa sthalam kandadaivaen kirubai
Moodum thirai kizhindhidavae
Dhairiyamaai sagaayam pera
Thaedi vandhaen kirubai thaarumae – Tham kirubai

5. Ondrai ondru sandhikkum saththiyam um kirubai
Endrum maravaen vaakkuththaththam
Needhiyumae samaadhaanamumae
Nilai nirkum kirubai thaarumae – Tham kirubai

6. Sthoaththira jebaththinaal perugudhae kirubai
Aathuma baaram kanneeroadae
Soarvindri naanum vaendidavae
Jeba varam kirubai thaarumae – Tham kirubai

7. Karththar velippadum naal aliththidum kirubai
Kaathirundhae adaindhidavae
Yaesuvae ummai sandhikkavae
Irakkamaai kirubai thaarumae – Tham kirubai

Kirubai Emmai Solthu Kollum – கிருபை எம்மை சூழ்ந்து

Kirubai Emmai Solthu Kollum
கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் தம் கிருபை
கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம்
கண்டடைந்தோம் கிருபை

சரணங்கள்
யோர்தானைக் கடந்து வந்தோம் – எங்கள்
இயேசுவின் பெலம் அடைந்தோம்
சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
சோர்வின்றிக் காத்துக் கொண்டார் – கிருபை

1. தேசமே பயப்படாதே எங்கள்
தேவன் கிரியை செய்கிறார்
தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்
தாசகர்கள் வேண்டிடுவோம் – கிருபை

2. கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங்
காரியம் செய்திடுவார்
கால் வைக்கும் தேசம் ஏசு தருவார்
காத்திருந்தே அடைவோம் – கிருபை

3. ஆண்டுகள் நன்மையினால் – முடி
சூண்டு வளம் பெருக
தேசத்தின் மீதே கண்களை வைத்தே
பாசமாய் நோக்கிடுவார் – கிருபை

4. ஜாதி ஜனங்களையும் – வந்து
மோதி அசைந்திடுவார்
காத்து தவிக்கும் உள்ளமகிழும்
கர்த்தரே வந்திடுவார் – கிருபை

5. உண்மையும் நேர்மையுமாய் – இந்த
ஊழியம் செய்திடுவோம்
தூய கற்புள்ள தேவ சபையாய்
தீவிரம் சேர்ந்திடுவோம் – கிருபை

Deva Sayal Aga Mari – தேவ சாயல் ஆக மாறி

Deva Sayal Aga Mari

தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் நானும்

1. அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே தம்
விண்ணவர் சாயல் அடைவேன் – தேவ சாயல்

2. பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே
கைவேலை யல்லாத பொன் வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன் – தேவ சாயல்

3. சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலமடைய
ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார் – தேவ சாயல்

4. ஆவியின் அச்சாரமீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே – தேவ சாயல்

5. காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவயாத்திரை ஓடி முடித்து
ஜீவ கிரீடம் பெற்றிடுவேன் – தேவ சாயல்

6. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை
முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே – தேவ சாயல்

7. உன்னத சீயோன் மலைமேல்
எனதருமை இயேசுவுடன்
ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்
ஜீவீப்பேனே நீடுழியாய் – தேவ சாயல்