Song Tags: Marriage Songs

Indha Mangalam Selikavea – இந்த மங்களம் செழிக்கவே

Indha Mangalam Selikavea

இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்
எங்கள் திரித்துவ தேவனே
சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து

1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகி
நிற்க உலகத்தில் விடுத்தாய்
மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த

2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மன
துக்குள் எலியேசா் கொண்டனன்
முக்ய ஆரான் நிலத்தண்டினன் – நினைத்தபடி
சக்கியமதாகக் கண்டனன்
பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல

3. சத்திய வேதத்தின் வாசனே – அருளுபரி
சுத்த சுவிசேட நேசனே
பக்தர்கள் பவ விமோசனே – பழுதணுவும்
அற்ற கிறிஸ்தேசுராஜனே
வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய்

Bayanthu Kartharin – பயந்து கர்த்தரின் பக்தி

Bayanthu Kartharin
பயந்து கர்த்தரின் பக்தி வழியில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
முயன்று உழைத்தே பலனை உண்பான் (2)
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்

1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் (2)
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்

2. ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போல
மெலிவிலா நல்ல பாலகருன்பாலே (2)
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே

3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதை
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் (2)
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை

Aabiragamai Aasirvathitha – ஆபிரகாமை ஆசீர்வதித்த

Aabiragamai Aasirvathitha
ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

1. செல்வி மணமகள் – XXXXXம்
செல்வன் மணமகன் – YYYYYம் -ஆ…
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனி
இணைந்து வாழவே!

2. கல்லின் மனைபோல கணவனும்
இல்லின் விளக்கென காகையும் – ஆ…
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே
நன்கலமாம் பல நன்மக்களைப் பெற்று
நானிலந்தனிலே நல்லோர் நலம் நாடி
நல்வாழ்வு வாழவே!

Aabiragamai Aasirvathitha
Aabiragaamai Aaseervathiththa Aanndavaa Arulumae

1. Selvi Manamakal – XXXXX im
Selvan Manamakan – YYYYY im – Aaa…
Entum Aasi Pettu Inithu Vaalavae
Vaalavae! Vaalavae!! Vaalavae!!!
Entum Aasipettu Innainthu Vaalavae
Illaramaam Inpa Nallarach Solaiyil
Innisai Yeluppi Ingithamaay Ini
Innainthu Vaalavae!

2. Kallin Manaipola Kanavanum
Illin Vilakkena Kaakaiyum – Aa…
Entum Aasi Pettu Inithu Vaalavae
Vaalavae! Vaalavae!! Vaalavae!!!
Entum Aasipettu Innainthu Vaalavae
Nankalamaam Pala Nanmakkalaip Pettu
Naanilanthanilae Nallor Nalam Naati
Nalvaalvu Vaalavae!

Manavaazhvu Puvi – மணவாழ்வு புவி வாழ்வினில்

Manavaazhvu Puvi
பல்லவி

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கள வாழ்வு
வாழ்வினில் வாழ்வு
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு

சரணங்கள்

1. துணை பிரியாது, தோகையிம்மாது
சுப மண மகளிவர் இதுபோது
மனமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது – நல்ல

2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண வலங்காரா
தேவகுமாரா, திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல

3. குடித்தன வீரம் குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
அடக்கமாசாரம் அன்பு, உதாரம்
அம்புவிதனில் மனைக்கலங்காரம் – நல்ல

Mangalam Sezhikka – மங்களம் செழிக்க கிருபை

Mangalam Sezhikka
பல்லவி

மங்களம் செழிக்க கிருபை
அருளும் மங்கள நாதனே

சரணங்கள்

1. மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ

2. மங்கள மணமகன் xxxxxx-க்கும்
மங்கள மணமகள் xxxxx-க்கும்
மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்

3. சங்கை நித்திய நாதனும் நீ
பங்கமில் சத்திய போதனும் நீ
மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ
இத்தரை இத் திருமணத்தின் இருவர்
ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே

Mangalam Sezhikka Kirubai Aruzhum
Mangala Naadhane — 2

1. Mangalam Nithiya Mangalame
Mangalam Muthiyum Naadanum nee — (2)
Engal Pungavane, Engal Thungavane
Uthama Sathiya, Nithiya Thathuva, Metha Magathuva
Athanukathanama, Aaviram Thevane — (2) — Mangalam

2. Mangala Manamagan XXXX -ukkum
Mangala Manamagal XXXX – ukkum — (2)
Mannuvelarkum, Maganubavarkum
Bakthiyudan Buthi, Mukthiyalithidum
Nithiyane Ummai, Thuthiyam
Seithidum Sathiya Vetharkum — (2) — Mangalam

Rojapoo Vasamalargal – ரோஜாப்பூ வாசமலர்கள்

Rojapoo vasamalargal
ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)

1. மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல்மணமக்கள் மீது நாம்…
எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜாப்பூ

2. மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன்
அன்றிலும் தேனும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க…
நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜாப்பூ

3. புத்திர பாக்கியம் புகழும் நல் வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவரென்றும்…
பக்தியை வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜாப்பூ

4. கறை திரை அற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு கண்ணுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணி இப்போ…
நேச மணாளர் மேல் தூவிடுவோம் – ரோஜாப்பூ

Ethenil Aathi Manam – ஏதேனில் ஆதி மணம்

Ethenil Aathi Manam
1. ஏதேனில் ஆதி மணம்
உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம்
மாறாதிருக்குமே

2. இப்போதும் பக்தி யுள்ளோர்
விவாகம் தூய்மையாம்
மூவர் பிரசன்னமாவார்
மும்முறை வாழ்த்துண்டாம்

3. ஆதாமுக்கு ஏவாளை
கொடுத்த பிதாவே
இம்மாப்பிள்ளைக்கிப்பெண்ணை
கொடுக்க வாருமே

4. இரு தன்மையும் சேர்ந்த
கன்னியின் மைந்தனே
இவர்கள் இரு கையும்
இணைக்க வாருமே

5. மெய் மணவாளனான
தெய்வ குமாரர்க்கே
சபையாம் மனையாளை
ஜோடிக்கும் ஆவியே

6. நீரும் இந்நேரம் வந்து
இவ்விரு பேரையும்
இணைத்து அன்பாய் வாழ்த்தி
மெய்ப் பாக்கியம் ஈந்திடும்

7. கிறிஸ்துவின் பாரியோடே
எழும்பும் வரைக்கும்
எத்தீங்கில் நின்றும் காத்து
பேர் வாழ்வு ஈந்திடும்