Karthar Uyirthelunthaar
கர்த்தர் உயிர்த்தெழுந்தார் – இன்னும்
கல்லறை திறந்திருக்க
நற்செய்தி தரிசனங்கள்
சாற்றி கீர்த்தனம் பண்ணிடுவோம்
1. காரிருளில் கண்ணீருடன்
கல்லறை நோக்கியே சென்றனரே
அற்புதக் காட்சியும் கண்டிட ஸ்திரீகள்
ஆச்சர்யம் அடைந்தனரே
2. மரியாளே என்ற சத்தம்
மா திகைப்பாய் அவள் கேட்டிடவே
ரட்சகர் தரிசனம் கண்டு முன்னோடி
ரபூனி என்றழைத்தான்
3. பயந்திடவே சீஷர்களே
பூட்டின உள்ளறை தங்கினரே
மெய்ச் சமாதானத்தின் வாக்குகள் கூறி
மேசியா வாழ்த்தி சென்றார்
Karthar Uyirthelunthaar – Innum
Kallarai Thiranthirukka
Narseythi Tharisanangal
Saatri Keerthanam Panniduvom
1. Kaarirulil Kannnneerudan
Kallarai Nokkiyae Sentanarae
Arputha Kaatchiyum Kantida Sthirekal
Aacharyam Adainthanarae
2. Mariyalae Endra Satham
Maa Thikaipaai Aval Kaetidavae
Ratchakar Tharisanam Kandu Munnodi
Rapooni Endralaithaan
3. Payanthidavae Sesharkalae
Pootina Ullarai Thanginarae
Mei Samaathaanathin Vaakkukal Koori
Messiyaa Vaalthi Sendaar